Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Verena Neeirunthai!
Verena Neeirunthai!
Verena Neeirunthai!
Ebook515 pages3 hours

Verena Neeirunthai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118503846
Verena Neeirunthai!

Read more from Uma Balakumar

Related to Verena Neeirunthai!

Related ebooks

Reviews for Verena Neeirunthai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Verena Neeirunthai! - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    அன்பே சிவம்

    Anbe Sivam

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.சிவம்

    2. சிவஸ்வரூபம் - ஈசனின் திருவுருவம் - சிவம்

    3. பிரபஞ்சம் - பஞ்சபூதம் - சிவம்

    4. பஞ்சாட்சரம் - சிவம்

    5. ஐந்தெழுத்தில் அனைத்தும் அடக்கம் - சிவம்

    6. வேதம் – உபநிடதம் - சிவம்

    7. அடியும் முடியும் - சிவம்

    8. பிரணவம் - சிவம்

    9. சக்தி - சிவம்

    10. விநாயகம் - சிவம்

    II. ஸ்கந்தம் - சிவம்

    12. ரிஷபம் - சிவம்

    13. வில்வம் - சிவம்

    14. ஆலயம் - சிவம்

    15. அபிஷேகம் - சிவம்

    16. ருத்ராட்சம் - சிவம்

    17. திருநீறு - சிவம்

    18. தாண்டவம் - சிவம்

    19. திருக்கயிலாயம் - சிவம்

    20. ஜோதிர்லிங்கம் - சிவம்

    21. பாஞ்சசன்யம் - சிவம்

    22. அஷ்டலிங்கம் - சிவம்

    23. சிவஸ்தலம் - சிவம்

    24. அட்டவீரட்டம் - சிவம்

    25. மகாசிவராத்திரி - சிவம்

    26. பிரதோஷம் - சிவம்

    27. திருவிளையாடல் - சிவம்

    28. சித்தர்கள் - சிவம்

    29. நாயன்மார்கள் - சிவம்

    30. பன்னிரு திருமுறை - சிவம்

    31. திருமந்திரம் - சிவம்

    32. இந்துமத தத்துவம் - சிவம்

    33. அஷ்டாஷ்ட மூர்த்தம் - 64 வடிவம் - சிவம்

    34. தியானம் - சிவம்

    35. விரதம் - சிவம்

    36. பூஜைகள் - சிவம்

    37. ஆகமம் - சிவம்

    38. சரணாகதி தத்துவம் - சிவம்

    39. உற்சவம் - சிவம்

    40. ஆன்மா முக்தி - சிவம்

    41. அன்பே சிவம்.

    என்னுரை

    "தோடுடைய செவியன் விடையேறி யோர்

    தூவெண் மதி சூடிக்

    காடுடைய சுடலைப் பொடி பூசி என்

    உள்ளம் கவர் கள்வன்!"

    மூன்று வயது பாலகனாய் சம்பந்தர் பெருமான் பாடிய இப்பாடல்... உலகிற்கே அம்மையப்பராய் விளங்கும் ஈசனின் சிறப்பை... அவர்மீது அடியார் கொண்ட அன்பினை... என் மனம் கவர்ந்த அன்புத் தந்தை பற்றி உணர்த்தும் உளம் கவர்ந்த இனிய வரிகள்!

    சிவம் என்றால் மங்கலம், அன்பு, ஞானம், கருணை, முக்தி என்று பொருள்!

    ஆதி அந்தமிலா அந்த இறைவனை...

    சொல்லுதற்கியலா குணங்கள் படைத்த நாதனை…

    வார்த்தைகளால் விவரிக்க இயலா அற்புதத்தை....

    எந்தன் உயிர்த் தந்தையாம் ஈசனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முனைந்தபோது, அதற்கு உதவியாக இருந்த அனைத்து ஆன்மிக அன்பர்களுக்கும், 'பதினெண் புராணங்கள்',

    'சிவபராக்கிரமம்', 'சிவஞானபோதம்', 'உண்மை விளக்கம்', 'பன்னிரு திருமுறைத் திரட்டு', 'சிவக் களஞ்சியம்', 'இந்து மத தத்துவங்கள்', 'தேவி பாகவதம்' போன்ற ஆன்மிக நூல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    "சிவம் அவர் என் சிந்தையில் நின்ற அதனால்

    அவரருளாலே அவர்தாள் வணங்கி..."

    யாவுமான அந்த சிவப்பரம் பொருளுக்கு...

    ஆசைகளை நீக்கி, மன அழுக்குகளைப் போக்கி,

    பாவங்களை அழித்து, நமக்குள் பக்குவத்தைச் சேர்த்து

    அனலின் வடிவாய் என் இதயத்துள் வாழும்

    என் ஆருயிர்த் தந்தையாம் சர்வேசுரனுக்கு...

    "அழகிய குளிர்நிலவை முடியில்

    அணிந்த எழிற்கோலனுக்கு...

    கொடும்பாம்பாம் நாகராஜனை

    கழுத்தில் சூடிய வேதராஜனுக்கு...

    பரிவேங்கை தோலணிந்த மூன்று நயனன்

    பரம் பொருளாம் மகாலிங்கத்துக்கு..."

    இந்த 'அன்பே சிவம்' எனும் நூலைக் காணிக்கையாக்கி சமர்ப்பணமும் செய்கிறேன்.

    நன்றி!

    - உமா பாலகுமார்

    அன்பே சிவம்

    1. சிவம்

    ஆயிரம் சூரியன் ஓருருவாகிய ஆனந்தப் பேரொளி... சிவம்!

    சிவம் என்றாலே மங்கலம் என்று பொருள். சிவகரம் என்றால் மங்கலத்தை உண்டாக்குவது!

    முழுமுதற்கடவுளான சர்வேஸ்வரனை, வேதங்கள் 'சம்பு' என்றும், 'சங்கரன்' என்றும் கூறுகின்றன. 'சம்' என்றால் ஆனந்தம், மங்கலம்!

    மங்கலத்தை உண்டாக்குகிறவராக, சம் - கரனாக, சிவன் ஆதி அந்தமில்லாது, அருவாய் உருவாய் இவ்வுலகில் நிறைந்திருக்கிறார்.

    அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நீக்கமற நிறைந்த பிரபஞ்ச சக்தியாகவும்...

    சகல உலகங்களுக்கும், எல்லா வித்தைகளுக்கும் ஈசனாகவும்...

    சரணாகதி என்று வருபவர்களுக்கு இன்பத்தையும் ஞானத்தையும் அருள்வதில், கருணாகரனாகவும்...

    பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும், சித்தர்களுக்கும், பூதகணங்களுக்கும், முனிபுங்கவர்களுக்கும், ஞானியருக்கும், தலைவனாய் வேதநாயகனாகவும்...

    பிரணவத்தைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவரும், வேதங்களின் மெய்ப்பொருளாகத் திகழ்பவருமான அந்த மகாதேவனே, பரப்பிரம்மம் ஆவார்.

    தன்னிலிருந்து பிறப்பித்த ஐந்து சக்திகளின் மூலமாக உலகில் ஐந்தொழில் புரியும் உயர்ந்த பரம்பொருள் ஈசனே!

    'ஈஸ்வரன்', 'ஈசன்' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தலைவன், முதல்வன், அரசன் என்று பொருள்!

    'ஈஸ்வரன்' எனும் ஆரிய மொழிச் சொல், 'இறைவன்' என்பதைக் குறிப்பதாகும்.

    'பரமசிவம்' ஒருவரே இறைவன்... மேலான பரம்பொருள், பரப்பிரம்மம் ஆவார்.

    இந்த உலகின் முதல்வன், அரசன், தலைவன், இறைவன், சிவபெருமானே ஆதலால், அவர் ஈசன், ஈஸ்வரன் என அழைக்கப்படுகிறார்.

    ஒருவன் என ஏத்தநின்ற நளிர்மதிச் சடையன் என்று நம்மாழ்வாரும் ஈசனைப் போற்றுகிறார்.

    'கடவுள்' என்ற சொல்லுக்கு... எல்லாவற்றையும் கடந்த, வரையறுக்க முடியாத, தோற்றம், அவதாரம், பிறப்பு, வளர்ப்பு, உருவம், அருவம் போன்ற எல்லாவற்றையும் கடந்த மெய்யான (சத்தியம்) செம்மையான (சிவம்) அழகிய பரம்பொருள் (சுந்தரம்) என்று பொருள்!

    எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட முக்கண் முதல்வனாகிய பரமசிவம், தாவரங்கள் முதல் ஜீவராசிகள் வரை, மும்மூர்த்திகளான, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரையும் படைத்த பரம் பொருள் ஆவார்.

    பரமசிவம், பரம்பொருள், பரப்பிரம்மம், பராபரம் என்பதற்கு எல்லாவற்றையும் கடந்த நிலை எனப் பொருள்!

    பரப்பிரம்மமே, படைத்தலில் பிரம்மாவாகவும், காத்தலில் திருமாலாகவும், அழித்தலில் ருத்ரனாகவும், அருளலில் சதாசிவமாகவும், மறைத்தலில் மஹேஸ்வரனாகவும் அருள்பாலிக்கிறார்.

    சிவபெருமான்... யாவுமாகவும் சிறந்ததாகவும் விளங்கும் பிரம்மம்!

    சர்வ வல்லமையுடைய ஈசன், உலக உயிர்களோடு ஒன்றியும், உடனாயும், அருவாகவும், உருவாகவும், அரு உருவாகவும் உயிர்களுக்கு அருள்பாலிப்பதை, வேதங்கள் அழகாக உரைக்கின்றன!

    உலக உயிர்கட்கு அம்மையப்பராகவும், அருள்தரும் அற்புத வடிவாகவும், உலகை அடக்கி ஆள்பவராகவும் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மா, சிவமேயாவார்.

    தவத்திலும், தியானத்திலும் சிறந்தோர்க்கு ஞானத்தை வாரி வழங்கி அழிவற்றவராய், மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை, இவற்றை போக்குபவராகவும் திகழ்கிறார், அந்த ஞானசங்கரன்!

    பாவங்களை நீக்கும் பரணநாதராய்... மகிழ்ச்சியைத் தருவதில் சதாசிவமாய்... நன்மைகளை அருள்வதால் சம்புவாய்... பிணிகளையும், துன்பங்களையும் நீக்குவதால் தயாபரனாகவும் விளங்குபவர் எம்பெருமான் அமிர்தகடேஸ்வரர்.

    ஈசன்... இறைவன் ஒருவரே என்பதில் ஒன்றானவர்... ஆதி சக்தியுடன் கலந்து இரண்டானவர்.

    நான்முகன், பிரம்மா, பாற்கடல் துயிலும் மால், ரெளத்ரமான ருத்ரன் என்ற மூன்று நிலைகளில் மூன்றானவர்...

    அறம், பொருள், இன்பம், வீரம் எனும் நான்கு நிலைகளை உணர்த்தியதால் நான்கானவர்!

    ஐம்புலன்களை வென்றதால் மெய், வாய், கண், நாசி, செவி ஐந்தானவர்!

    ஆறு ஆதாரச் சக்கரங்களில் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா) நிறைந்ததால் ஆறானவர்!

    அந்த ஆதாரச் சக்கரங்களின் நிறைவாய்க் கருதப்படும் சகஸ்ராரத்தில்... ஏழாவது இடத்தில் நிலைத்ததால், ஏழானவர்!

    நிலம், நீர், காற்று, ஆகாயம், அக்னி, சூரியன், சந்திரன், ஆத்மா எனப்படும் அஷ்டசக்திகளில் உறைந்ததால், எட்டானவர்!

    சிவம்... கற்பகோடிக் காலம் தவம் இயற்றினாலும் காண இயலாத ஒரு ஞானச்சுடர்.

    சிவன், சக்தியோடும் உயிர்களோடும் உலகத்தோடும், இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பே, அத்வைதமாகும்.

    சக்தி, சிவம் இருவருமே ஞான வடிவானவர்கள்... அம்மையும் அப்பனுமாகிய இருவரும் இணைந்து இயங்குவதே உலக இயக்கமாகும்!

    ஈசனுக்கு 'பஞ்ச கிருத்திய கர்த்தா' என்று பெயர்!

    ருத்ரன் என்றால் தீமையை அழித்து அடியார்களின் துன்பத்தை நீக்குபவன் என்று பொருள்.

    அன்பினாலேயே மிக விரைவில் திருப்தியுற்று அநுக்ரகம் செய்பவர் சிவன் என்பதால் அவருக்கு 'ஆசுதோஷி’ என்றும் பெயர்.

    சர்வ வித்தைகளுக்கும் அவரே அதிபதி ஆதலால், ஈச்வர சர்வ பூதானம் என்கிறது சுருதி வாக்கியம்!

    சிவன்... ஞானவடிவு கொண்டவர், ஆனந்த சொரூபி... அனைத்திற்கும் மூலாதாரமும் அவரே... முடிவற்றவரும் அவரே!

    உலகே, சிவனிடம் தோன்றி, சிவனில் இருந்து, சிவனில் ஒடுங்கி, சிவனிலேயே மீண்டும் பிறப்பெடுக்கிறது.

    உருவே இல்லாத அந்த அரூபமான பரம்பொருள், உலகையும், உயிர்களையும் ஜீவராசிகளையும் காக்கும் பொருட்டு, பல வடிவங்களில் தோன்றி, பூமியில் அருள்பாலித்து வருகிறார்.

    2. சிவஸ்வரூபம் - ஈசனின் திருவுருவம் - சிவம்

    ஆதி அந்தமில்லாத அருட்பெரும்சோதி, அன்புக்கடல், பிரணவஸ்வரூபம், ஞானசொரூபன் ஆகிய ஈசனின் தலை, சுவர்க்கமாகும்!

    ஆகாயமே நாபியாய், சூரிய, சந்திரர், அக்னியே மூன்று நயனங்களாய், திக்குகள் செவியாய், பாதாளமே திருவடியாய், விண்மீன்களே மணிமாலையாய், அலைகடல் ஆடையாய், ஞானமே பேரொளியாய், வாயுவே மூச்சுக்காற்றாய், விண்ணவர்களே புஜங்களாய், மேகங்களே ஜடாபாரங்களாய் ஒளிர்வதாய் புராணங்கள் கூறுகின்றன.

    அஷ்டமூர்த்தி

    இப்புவியில், சூரியன், சந்திரன், யாகம், நீர், வாயு, அக்னி, பூமி, ஆகாயம் எனும் அஷ்டமூர்த்தியாய் ஈசன் திகழ்கிறார்.

    வெப்பத்தை அளித்து உலகிற்கு ஒளியையும், உயிர்ப்பையும் தரும் சூரியன், சிவஸ்வரூபமே!

    தேவியின் அம்சமான சந்திரனிலும், வேதியர்கள் செய்யும் யாகங்களிலும், பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் உணவாய், உடல் வளர்ச்சிக்கு உதவும் நீரிலும், உடலின் உள்ளும், புறமும் இருந்து இயங்கும் மூச்சுக்காற்றாய், பிராணனான வாயுவிலும், ‘பவன்' எனும் பூமியின் சொரூபத்திலும், அகண்டவெளியாய் சஞ்சரிக்கும் ஆகாய உருவிலும், பரிபூரண சுத்தியளித்து புனிதப்படுத்தும் அக்னியிலும், அஷ்டமூர்த்தியாய் சிவபெருமானே உறைகிறார்.

    எம்பெருமான் ஈஸ்வரன், பாலசந்திரன், கங்கை, கொன்றை முதலியன சூடிய செஞ்சடாமுடியையும், ஐந்து திருமுகங்களையும், பத்து திருக்கரங்களையும், த்ரிநேத்ரங்களையும், இரு திருவடிகளையும், ஏக தேகத்தையும் உடையவராய்த் திகழ்வதால் சர்வேஸ்வரன் எனப்படுகிறார்.

    மான், மழு, வாள், அக்னி, வஜ்ரம், நாகம், பாசம், அங்குசம், கண்டாமணி, நீலோற்பலம், சூலம், பரிவட்டம், மாதுளை, கோல் தரித்து, வரதாபயமுடையவராய் கயிலாயத்திலும் காட்சி தருகிறார்.

    சங்கரலோஹிதம் என்றால் சிவப்பு! ஈசன் சிவந்த நிறமுடையவர் என்பதால் அவரை 'செம்பொன் மேனி அம்மான்' என அழைக்கிறோம்.

    பஞ்சபிரும்ம சொரூபம்

    1. ஈசான பிரும்மம்

    சகல ஜீவன்களிலும் ஆன்மாவாக இருக்கும் பரப்பிரும்மம்! விஸ்வரூப கற்பத்தில் பிரம்மனுக்காக நெற்றிக்கண் கொண்டு தோன்றிய உருவம்.

    2. தத்புருஷ பிரும்மம்

    ஆன்மாவை மறைக்கும் பிரகிருதியாகிய மகேஸ்வர சொருபம்! பீதகற்பத்தில் நான்முகனுக்குச் சடையில் இளம் மதி அணிந்து காட்சி தந்த உருவம்.

    3. அகோர பிரும்மம்

    புத்தி வடிவில் தேகத்தில் உறையும் ஈசனின் உருவம்! நீலகற்பத்தில் நெருப்பும் வாளும் கைகளில் ஏந்தி கரிய ரூபத்துடன் தோன்றிய ரூபம்!

    4. வாமதேவ பிரும்மம்

    வேதங்களால் பிரம்மன் ஈசனை அர்ச்சிக்க, சடையில் பாம்பணிந்து கரங்களில் மான், மழு ஏந்தி அலங்கார வடிவாகக் காட்சி தந்த பிரம்மம்.

    5. சத்யோஜத பிரும்மம்

    மனமாய் விளங்கும் - சொரூபம். பிரமன் ஈசனை தியானித்தபோது அழகிய பாலகனாய்த் தோன்றிய உருவம்! நம் தேகத்தில் ஞானேந்திரியமாக பரப்பிரும்ம சொரூபியாக விளங்குபவர் பரமேஸ்வரனேயாவார்.

    சிவஸ்வரூபம்

    சிவபெருமானுடைய சடாமுடி, அகண்ட வான்வெளியையும், ஆற்றல்மிக்க வாயுவையும் உருவகப்படுத்துகிறது.

    ஆன்மாவின் பேரின்ப நிலையை, பரம சுகத்தை உருவகப்படுத்தும் பிறையைத் தன் முடியில் சூடி, குளிர் நிலவணிந்த எழிற்கோலனாய் காட்சியளிக்கிறார் ஈசன்.

    புலி, அகந்தையின் குறியீடென்பதால், ஆசைகளை வென்றதற்கு அடையாளமாகவும், நம் மனம் மிருக உணர்ச்சிக்கு ஆளாகாமல் உயர்வான குணம் கொள்ளவும், புலித்தோலை தன் ஆடையாக அணிந்திருக்கிறார் பரமன்!

    ஜடாதரனின், சடாமுடியில் இருக்கும் கங்கை, எப்போதும் தன்னைப் போல் ஒவ்வொருவரும் தூய்மையாக இருக்க வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்துகிறது. நீரைவிடக் குளிர்ந்து நமக்கு நன்மைகளை அளிப்பவர் அவர் என்றும் அறிவுறுத்துகிறது.

    சிவபெருமான் கையில் உள்ள மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாகும்.

    அந்த ஜகத்ரட்சகன்தான் வேதப் பொருளாக உள்ளார் என்பதை உலகிற்கு உணர்த்தவே மானைக் கையில் ஏந்திய ஈசன், தான் ஒரு வேதநாயகன் என்பதை உணர்த்துகிறார்.

    நடராஜ வடிவம்... உலகைப் படைத்து, அதைத் தமது பொற்கரத்தால் காத்து, அக்னி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, அழுத்தமாய் ஊன்றிய திருவடியின் கீழே அநுக்ரகம் செய்வதை உணர்த்துகிறது.

    ரிஷப வாகனம்... தருமதேவதை, தான் என்றும் அழியாது நித்தியமாக இருக்க விரும்பி, ரிஷப உருவம் கொள்ள சிவனிடம் வேண்ட, ஈசனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைத் தன் வாகனமாக்கி ரிஷபாரூடராய் மாறினார்.

    தருமத்திற்கு அழிவில்லை... தருமத்தையே வாகனமாகக் கொண்டவன் இறைவன் என்பதையே ரிஷப வாகனம் உணர்த்துகிறது.

    ஐந்து நாகங்களை ஈசன் சூடியிருப்பது, நாமும் நம்மைச் சுற்றி நாகங்களாய் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காகவே என்கின்றன புராணங்கள்.

    அதனாலேயே மரணத்தை வென்றவராய், மரண சோகம் நீக்குகின்ற தயாளனாய், கொடும் நாகத்தை செவியணியும் நாகாபரணராய்க் காட்சி தருகிறார் ஈசன்.

    மனித வாழ்க்கை நிலையற்றது என்பதைக் குறிக்கவும், உயிர் பிரிந்த பிறகு மனிதன் சாம்பலாவது மட்டுமே நிதர்சனம் என்றுணர்த்தவும், சாம்பலைத் திருநீறாய் நெற்றியில் சூடியிருக்கிறார் வேதராஜன்!

    தீமைகள், ஆணவம், கன்மம், மாயைகளை அழிக்கும் தொழிலைக் குறிக்க, கபாலத்தை பிட்சைப் பாத்திரமாய் ஏந்தியிருக்கிறார் பிட்சாடனர்!

    சிவசங்கரனார் ஏந்திய பாசாங்குசம், ஆன்மாவைப் பற்றிய மனத்தெளிவையும், எது நல்லதென்று தேர்வு செய்யும் மனத்திறனையும் அறிவுறுத்துகிறது.

    அந்த தேஜஸ்வரூபனுடைய ஆற்றலையும் வலிமையையும், சிறு கோடரி, மழுவாய் ஆயுதமாய்க் குறிக்கிறது.

    திரிசூலம்... ஆயுதமாய், படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று செயல்முறைகளையும், சமத்துவம், ராஜஸம், தாமஸம் எனும் முக்குணங்களின் குறியீடாகவும் திகழ்கிறது.

    ஓம்கார ஈசுவரனின் கையில் தவழும் தமருகம் எனும் உடுக்கை, நாத தத்துவத்தை, உலக நிகழ்வுகளின் ஆதாரமே அவர்தான் என்பதைப் பூடகமாக உணர்த்துகிறது.

    மகாகாளேஸ்வரரின் பாசக்கயிறு, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைக் கட்டும் ஆற்றலைக் குறிக்கிறது.

    திரியம்பகேஸ்வரரின் கத்தி, அவருடைய வீரத்தை எடுத்துரைக்கிறது.

    அவர் தீயைவிட வெம்மையாய் தீமையை அழிப்பவர் என்றும் உணர்த்துகிறது.

    காலசம்ஹாரரின் மண்டையோடு பொருந்திய தண்டக்கோல், அவர் மறைவியலில் தேர்ந்தவர் என்பதை அறிவுறுத்துகிறது.

    சிவன் ஒரு விளங்காப் புதிர் என்பர் சிலர்...!

    ஆனால் உணர்ந்தோர்க்கு, அவர் ஒரு ஞானத் தெளிவு, அரிய பொக்கிஷம், அன்புக் கடல், கருணை வடிவம்!

    எனைப் போல் 'தந்தையே!' என்று அழைக்கும் பக்தர்களுக்கு, தாயுமாகி சாலப் பரிவு காட்டும் தந்தையுமானவர் என்பேன் நான்!

    லிங்கஸ்வரூபம்

    பிரம்மம், பரம்பொருள் என்றெல்லாம் அழைக்கப்படும் அரூபமான ஜோதிஸ்வரூபமான இறைவன், 'சிவம்' என்ற ஒளிவட்டமாய் சக்தியின் ஒளிச்சுடரைத் தன்னுள் அடக்கித் தோன்றினார்.

    இவ்வாறு ஜோதிக்குள் சுடரை அடக்கி உருவான ஆதி ஸ்வரூபமே சிவலிங்கஸ்வரூபம் ஆகும்.

    அவரே தவம்... அவரே ஞானம்... அவரே முக்தி!

    ஒப்பிலாத அந்த சிவலிங்க ஜோதிஸ்வரூபமாகிய இறைவன், தன்னிலிருந்து பிரம்மா, திருமால், ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற ஐந்து தெய்வங்களைப் படைத்தார்!

    லிங்கத்திலிருந்தே எல்லாமும் உண்டாயின. அதேபோல் அனைத்தும் லிங்கத்திலேயே ஒடுங்குகின்றன.

    படைப்பு, காப்பு, அழிப்பு என்ற முத்தொழிலும் லிங்கத்துள் அடங்கும்.

    அடி முடி காணா பிரம்மதேவரிடம், சிவனுக்கு நிகர் சிவமே! அவரைத் தவிர வேறு தலைவன் இல்லை. சகல ஜீவராசிகளுக்கும் அவரே உயிராக விளங்குகிறார் என்கிறார் திருமால்.

    காணா அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகமணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் என்கிறார் சேக்கிழார்.

    உலகமே சிவபெருமானுடைய அடையாளம்! லிங்கத்தின் பரந்து விரிந்த ஆவுடையர் நிலப்பகுதியாகவும், உயர்ந்த வானப் பெருவடிவம், லிங்கமாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.

    பேரொளியாய் விளங்கும் ஜோதிஸ்வரூபம் சிவம்! தமக்கென வித்து ஏதுமின்றி அனைத்து உயிருக்கும் வித்தாகி நிறைந்திருக்கும் பரம்பொருளிலிருந்து உருவானதே லிங்கஸ்வரூபமாகும்.

    சிவலிங்கம்... சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் எனும் கணித வடிவங்களைத் தம்முள் அடக்கியதாகவும், பஞ்சபூதங்களின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது.

    சிவசக்தி பீடமாகிய லிங்கஸ்வரூபியை எண்ணங்களில் நிறுத்தித் தியானம் செய்ய, மனக்குப்பைகள் அக்னியாய் எரிந்து உள்ளம் தூய்மையாகும். பல மடங்கு சக்தியடைந்து தேகமே ஒரு கோவிலாகும்.

    இந்த நிலையையே திருமூலர் அவர்கள்,

    "உள்ளம் கோவில்... ஊனுடம்பு ஆலயம்...

    நான் தெள்ளத் தெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்"

    என்று அறிவுறுத்துகிறார்.

    ஜீவன் சிவமாகி விட்டால், அந்த சிவம் புகழ், பணம், பதவி, செல்வம் என அழியும் பொருட்செல்வத்தை வேண்டாது.

    அழியாத ஞானம், முக்தி எனும் அருட்செல்வத்தையே நாடி நிற்கும்.

    "காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்

    நீள்நாகம் அணிந்தோர்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

    நாணாது நேடியாமல் நான்முகனும் காணா நடுச்

    சேணாகும் தழற்பிழம்பாய் தோன்றியது தெளிந்தாராய்"

    என்கிறார் சேக்கிழார்.

    லிங்கம் ஐந்து வகைப்படும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    ஆதிசங்கரர் கயிலையிலிருந்து கொண்டு வந்த ஐந்து லிங்கங்களை ஸ்தாபனம் செய்த இடங்கள்...

    திருக்கேதார் – முக்திலிங்கம்

    நேபாளம் – வரலிங்கம்

    சிதம்பரம் – மோட்சலிங்கம்

    சிருங்கேரி - போகலிங்கம்

    காஞ்சி – யோகலிங்கம்

    அவதாரம், பிறப்பு போன்ற மாசு, மலங்கள் அற்ற தூய பரம்பொருளாக, எல்லாவற்றையும் கடந்துள்ள பரப்பிரம்மமாக விளங்கும் பரமேஸ்வரன்... திருமேனி, தோற்றம், வளர்ப்பு, முடிவு இன்றி நிலைத்து நிற்கும் மெய்ப்பொருளாய் எங்கும் நிறைந்திருக்கிறார்.

    லிங்கஸ்வரூபமான ஈசன், பக்தர்களுக்குக் காட்சி தரும்போது மட்டும் ஆண் வடிவிலும், அர்த்தநாரீஸ்வரர் வடிவிலும் காட்சி தருகிறார்.

    ஆத்மா, பரமாத்மா தத்துவப்படி, சித்தர்கள், ஞானியர் தங்களுக்குள்ளே ஒளிச்சுடராய், ஆத்மாவாய் கண்டறிந்த வடிவே, ஆத்மலிங்கமாகும்.

    தனக்குள் விளங்கும் ஆத்மலிங்கஸ்வரூபத்தை உணர்ந்தவர்கள், பூஜிப்பவர்கள், தான் யார் என்பதை உணர்வார்கள்.

    லிங்கத்தில் இருந்தே எல்லாம் உண்டாகி உருவாகி, லிங்கத்திலேயே ஒடுங்குகின்றன என்பதை லிங்கபுராணம் மூலம் அறிகிறோம்.

    படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலுக்கும் காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் விளங்குவதும் லிங்கமே ஆகும்.

    உறுப்புகள் இல்லாததால் லிங்கம் 'அரு’வாகிறது.

    தாணுவாய் தூண்போல் காணப்படுவதால் உருவாகிறது.

    உலகே சிவலிங்கம் என்கிறார் திருமூலர்.

    மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் எனும் பாடல் இதை உணர்த்துகிறது.

    உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று வகைத் திருமேனி கொண்ட சிவன், ஞானலிங்கமாவார்.

    ஆலயத்தில் உள்ள பலிபீடம், பத்ரலிங்கமாகவும், ஸ்தூபி தூலலிங்கமாகவும், சிவலிங்கம் சூட்சுமலிங்கமாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.

    லிங்கம் என்பது, லயம், ஞானம், பிரகாசம், வியாப்யம், அர்த்தபிரகாசம், அறிகுறி என்று அறியப்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    லிங்கங்கள் பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் என இருவகைப்படுகின்றன.

    பரார்த்த லிங்கமானது சுயம்பு லிங்கம், காணலிங்கம், ஆரிடலிங்கம், தைவிக லிங்கம், மானிடலிங்கம் என ஐவகைப்படும்.

    தானே தோன்றுவது சுயம்பு லிங்கம். இதுவே எல்லாவற்றிலும் உயர்வான லிங்கமாகும்.

    இறையம்சங்களான விநாயகர், முருகன் முதலியவர்கள் உருவாக்கியது, காணலிங்கம்!

    மும்மூர்த்திகளான விஷ்ணு முதலியவர்கள் ஸ்தாபித்தது தைவிக லிங்கம்!

    முனிவர்கள் அமைப்பது ஆரிடலிங்கம்!

    மனிதர்களால் உருவாக்கப்படுவது மானுடலிங்கம்!

    இட்டலிங்கத்தை... ஆன்மார்த்த லிங்கம், சகலிங்கம் எனவும் அழைப்பார்கள்.

    ஒரு குருவிடம் தீட்சை பெற்ற சீடன், குரு தனக்களித்த லிங்கத்தைப் பூசித்தால் அது இஷ்டலிங்கமாகும்!

    சிவலிங்கம் ஒலி, ஒளி வடிவிலான லிங்கஸ்வரூபம்... ஒன்று. லிங்கமாகிய சிவத்துடன் சக்தி இரண்டறக் கலப்பதால் அவர். இரண்டானவர்!

    மகாகணபதியோடு சேர்ந்து மூன்றானவர்!

    ஸ்கந்தனோடு இணைந்து நான்கானவர்!

    சாஸ்தாவோடு சேர்ந்து ஐந்தானவர்!

    நந்தி வாகனத்தோடு அமர்ந்து ஆறானவர்!

    நாகமதை செவியணிந்த வேதஸ்வரூபனாய் ஏழானவர்!

    கங்கையைச் சடையில் அணிந்ததால் எட்டானவர்!

    திரிசூலம் கையில் ஏந்தி நிற்க ஒன்பதானவர் என்கின்றன புராணங்கள்!

    சர்வேஸ்வரனின் லிங்க வடிவில் ஒன்று பாணலிங்கம்! பாணம் என்றால் நீர் என்றும் பொருள்! நர்மதை ஆற்றின் நீரிலிருந்து பிறப்பதாலும் பாணாசுரன் என்ற அசுரனால் பூஜிக்கப்பட்டதாலும், பாணலிங்கம் என்று இவை பெயர் பெறுகின்றன.

    பாணலிங்கங்கள் முட்டை வடிவில் கற்களாகக் கிடைக்கின்றன. மலையில் உற்பத்தியாகி அருவி வழியாகப் பயணித்து, பல புண்ணியத் தலங்களைக் கடந்து உராய்வுகள் மற்றும் ஓசைகளினால் முட்டை வடிவ லிங்கமாக இவை உருமாற்றம் பெறுகின்றன.

    இத்தகைய ஜீவ சுயம்பு லிங்கங்கள் நர்மதை நதியிலும், மற்றும் பல புனிதத் தலங்களிலும் தானே உற்பத்தியாகி இருப்பதாக ரிஷிகள் கூறுகின்றனர்.

    சிவலிங்கமலையிலும், ஸ்ரீசைலத்திலும், மகேந்திரமலையிலும், பொதிகை மலையிலும், நேபாளத்திலும், காளிகா தீர்த்தத்திலும், கனையாச்வயம் எனும் இடத்திலும் இந்த லிங்கங்கள் உருவாகின்றன.

    பல லிங்கஸ்வரூபங்கள் மனிதர்களால், காலத்தின் கட்டாயத்தால், இயற்கை சீரழிவுகளால் பூமியில் புதைந்துள்ளன. உரிய நேரம், காலம் வருகையில் இம்மூர்த்தங்கள் சுயம்புவாய் வெளிப்படும் எனப் புராணங்கள் புகல்கின்றன.

    3. பிரபஞ்சம் - பஞ்சபூதம் - சிவம்

    பிரபஞ்சம் எனும் பஞ்சபூதங்களை தம்முள் அடக்கிய உருவமே சிவமாகும்!

    ஆகாயம், காற்று, நீர், நெருப்பு, நிலமாகிய பஞ்சபூதங்களும் ஈசனின் வடிவங்களாகும்.

    சி – சிவம்

    வ – சக்தி

    ய – உயிர்

    ந – முன்திரோதமலம்

    ம - பின் ஆணவாதிமலம்

    இந்த ஐந்தெழுத்து மந்திரம்... யோக நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் சதாசிவமும், சுவாதிட்டானத்தில் பிரம்மாவும், மணிபூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் ருத்ரனும், சகஸ்ராரத்தில் ப்ரணவ வடிவான சிவபெருமானும் இணைந்திருப்பதைக் குறிக்கிறது.

    அன்பே வடிவான ஈசனை வழிபடுவோர் வாழ்வில், பகையாவும் நீங்கி அமைதி மட்டுமே நிலவும்.

    அந்த பீம்சங்கரருடைய திருவடியைத் தொழுதால் அறியாமை அகன்று ஞானம் கைவசப்படும்.

    திருவாரூரில் பிறக்க முக்தி

    சிதம்பரத்தில் இருக்க முக்தி

    கிட்டே காசியில் இறக்க முக்தி

    திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி

    என்கின்றனர் ஞானிகள்!

    திரிபுராந்தகராகிய சிவபெருமான், இந்த உலகம் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! எனப் போற்றப்படுகிறார்.

    இறைவன்... பஞ்சபூதத் தலங்களில், 'ப்ருத்வி' எனப்படும் நிலமாய் காஞ்சியிலும், அப்பு எனப்படும் நீரின் உருவாய் திருவானைக்காவலிலும், வாயு என்ற காற்றின் அரூபமாய் காளஹஸ்தியிலும், தேயு என்கிற அக்னியின் ரூபமாய் திருவண்ணாமலையிலும், ஆகாயம் என்கிற வெட்டவெளியின் பதிவாய் சிதம்பரத்திலும் அரசபரிபாலனம் செய்து வருகிறார்.

    சிவம்...

    நிகரில்லாப் புனித நீராய் எழுந்து... திருவானைக்காவல் அரசாய் பரவிய தலம், திருவானைக்காவல்.

    காற்றான காளகண்டராய், காளத்தி நீலகண்டராய் ஞானப்பூங்கோதை நாதராய் நின்ற தலம், காளஹஸ்தி!

    ஆகாயமான அணுவாய், ஆனந்த நடனத் திருவாய் பதினாறு சடையாடும் நடராஜராய், அழகிய தில்லை மன்னனாய் ஆடல் புரிந்த தலம், சிதம்பரம்.

    புனிதமான மண்ணாய்க் குவிந்து, மங்கை காமாட்சியின் அணைப்பில் தழுவிக் குழைந்த பிரானாகி, ஏகம்பக் கச்சிநாதராய் எழுந்த நிலம், காஞ்சி.

    அக்னிப்பிழம்பாய், அழல் வடிவாய், அருளாய், 'செந்தூர் வண்ணா' எனும் அப்பர் திருவாக்காய், அழியா மலையாய் ஒளிர்ந்த சிவம், திருவண்ணாமலை!

    பிரபஞ்ச சக்தியாகிய கிருபாநிதியே, பல காலகட்டங்களில் மனிதரோடு மனிதராய் அவதரித்து, பலவிதமாகத் திருவிளையாடல் புரிந்ததை, திருவிளையாடற் புராணம் மூலம் நாம் அனைவருமே அறிவோம்.

    பிட்டுக்கு மண் சுமந்தது...

    கல்யானைக்கு உயிர் தந்து கரும்பு உண்ண வைத்தது...

    நரியைப் பரியாக்கியது...

    பாணபத்திரருக்காகப் பாட்டெழுதியது...

    நக்கீரரைத் தன் திரிபுரத்தால் எரித்தது...

    சோமசுந்தரக் கடவுளாய் அவதரித்தது...

    என அனைத்து திருவிளையாடல்களையும் எம்பெருமான் பரமேஸ்வரன் நிகழ்த்தியது, நம் தமிழ்நாட்டில்தான் என்பதில் மிகுந்த பெருமிதமும், பெருநெகிழ்வும் அடைகிறோம் நாம்!

    அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக விளங்கும் சர்வேஸ்வரன், அண்ட சராசரங்கள் எங்கும் சக்தியுடன் இணைந்து பரவி இருக்கிறார் என்பதை வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அதனாலேயே....

    "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

    ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது

    வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது

    நாதன் நாமம் நமச்சிவாயவே!"

    என நாவாரப் பாடி நெக்குருகித் துதிக்கிறார் திருஞானசம்பந்தர்.

    சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அவை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பவையாகும்.

    அருள்மொழியாக விழிபேசும் சிவநாதனின் சுடர் நயனம், பக்தர்களுக்கு என்றும் காருண்யம் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது.

    சிவபெருமான் நம்மை அழிக்கும் கடவுள் இல்லை... நம்மாயைகளை மட்டுமே அழிப்பவர்!

    சிவனை வழிபட அறியாமை அகலும். அவருக்கு இணையான தெய்வத்தை உள்ளும் புறமும் எங்கும் காண இயலாது.

    அவர் நம் ஜீவனோடு கலந்து மங்களகரமானவர் என்று திருமூலர் கூறுகிறார்.

    உலகில் உள்ள சிவன் கோவில்கள்

    சர்வேஸ்வரன் எனும் சிவபெருமான் உலகுக்கெலாம் ஈசனாக, இறைவனாக இருந்து அருள்பாலித்ததை

    "தென்னாடுடைய சிவனே போற்றி

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

    என்று போற்றுகின்றது தேவாரம்.

    அரபு நாடாகிய குவைத் என்ற ஊரில் பல சிவாலயங்கள் இருந்ததை குவைப்பதி மலிந்த கோவே போற்றி! என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்...

    இன்றும், ஜாவா தீவில் பல சிவன் கோவில்கள் பராமரிக்கப்படாத நிலையில் உள்ளன.

    சுமத்திரா தீவிலும், போர்னியாவிலுள்ள ஒரு மலைக் குகையிலும் சிவன் கோவில்கள் உள்ளன.

    கம்போடியாவிலும், சியாம் நாட்டிலும் பழமையான சிவன் கோவில்களைக் காணலாம்.

    தைமூர் என்ற சிவத்தலம் ரஷ்யாவில் இருந்ததாக பழைய புராணங்களின் மூலம் அறிய முடிகிறது.

    அமெரிக்காவில் உள்ள த்ரிநாட் எனும் இடத்தில் பழமையான மும்மூர்த்திகள் வழிபட்ட சிவாலயம் உள்ளது.

    வட அமெரிக்காவில், கொலராடோ எனும் நதிக்கரையில் ஒரு குன்றின் மீது பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியில், 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

    பாபிலோனியாவில் நடந்த தொல்பொருள் ஆய்வில் 6000 வருடங்களுக்கு முற்பட்ட தொன்மையான சிவலிங்கம் கிடைத்துள்ளது.

    சிரியா நாட்டில், சிவன் திருவுருவச் சிலையும், சிவ உருவம் பொறித்த தகடும் கிடைத்துள்ளன.

    இத்தகட்டில் உள்ள உருவம் ரிஷபத்தின் மேல் காட்சியளிக்க, அவ்வுருவை தந்தைக் கடவுளின் வடிவம் என்கின்றனர் அந்நாட்டு மக்கள்.

    கிரேக்க நாட்டிலும், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய இடங்களிலும் சிவாலயங்கள் புதைந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

    அலெக்சாண்டிரியாவில், நூற்று இருபத்தொன்பது அடி உயர லிங்கபரம்பொருள் உள்ளார்.

    எகிப்து நாட்டில் சிவாலயம் ஒன்று புகழ்பெற்று விளங்கியமையால், ஒரு ஊரும், பாலைவனமும் 'சிவன்' என்ற பெயருடன் வழங்கி வருகிறது.

    ஜப்பானிலும், சிறிய ஆசியாவிலும், திபெத், சீனா, பூடான், மெக்ஸிகோ முதலிய நாடுகளிலும் சிவ வழிபாடு சிறந்து விளங்கியுள்ளதற்கான சான்றுகள் உள்ளன.

    ஆஸ்திரேலிய நாட்டுப் பழங்குடியினர் நெற்றியில் கண் வரைந்து வணங்கி ஆடும் தெய்வீக நடனம் 'சிவநடனம்' என்றழைக்கப்படுகிறது.

    ரோமில் சிவலிங்கம் வழிபடப்பட்ட சான்றுகளும், கிரேக்கக் கடவுள் சீயஸ் எனும் இறைவன் மலையில் இருப்பவராகவும், முக்கண் உடையவராகவும் அறியப்படுவதால் 'சிவன்' என்றே கொள்ளலாம்.

    மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களிலும் எண்ணிலடங்கா லிங்கத் திருமேனிகள் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    மலேசியாவிலும் நடராஜமூர்த்தம் ஒன்று கிடைத்துள்ளது. சிவ' வழிபாடே உலகில் மிகப் பழமையானது என்கிறார் சர். ஜான் மார்ஷல்.

    4. பஞ்சாட்சரம் - சிவம்

    நமசிவாய...

    பஞ்சாட்சரமென்பது, திருஐந்தெழுத்துகளைக் கொண்ட ஒரு மகா மந்திரம்!

    சப்தகோடி மகா மந்திரங்களிலும் தலையாய மந்திரமாக விளங்குவதும், தன்னை குரு விதிப்படி தெரிந்து மனனஞ் செய்பவரை சகல துன்பங்களிலிருந்தும் காத்து ரட்சிப்பதும், பஞ்சாட்சர மந்திரத்தின் சிறப்பாகும்.

    வேதபுருஷராகிய பரமனுக்கு யஜுர் வேதம் சிரசாகவும், அதன் நடுவே உள்ள ஸ்ரீ ருத்திரம் முகமாகவும், அந்த ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியிலுள்ள 'சிவ' என்பது கண்மணியாகவும், ருத்ராட்சமாகவும் அமைந்து விளங்குகின்றன.

    இத்தகைய பஞ்சாட்சர வடிவே, நடராஜமூர்த்தியின் சொரூபமென்று புராணங்கள் கூறுகின்றன.

    இத்தகைய மகிமை வாய்ந்த பரமசிவத்தின் வாசகமாகிய பஞ்சாட்சர மந்திரத்தினை பக்தி விசுவாசத்துடன், பரிபூரண சரணாகதியோடு ஜபிப்பவர்கள், பிறப்பு எனும் பெரு வியாதியிலிருந்து நீங்கிப் பேரானந்த நிலையை அடைவாரென்பது வேதாகமங்கள் கூறும் ரகசியமாகும்.

    'நம' என்னும் சொல் ஜீவாத்மாவையும், 'சிவ' எனும் பதம் பரமாத்மாவையும், 'ஆய' எனும் சொல் ஐக்கியத்தையும் உட்பொருளாகக் கொண்டதாகும்.

    பஞ்சாட்சரத்தோடு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தைச் சேர்த்தால், அது 'ஷடாக்ஷரம்' என்று ஸதசம்ஹிதையில் கூறப்படுகிறது.

    பஞ்சாட்சர மந்திரம் ஐவகைப்படும். அவை:

    1. ஸ்தூல பஞ்சாட்சரம் - 'நமசிவாய'

    2. சூட்சும பஞ்சாட்சரம் - 'சிவாயநம'

    3. காரண பஞ்சாட்சரம் -

    Enjoying the preview?
    Page 1 of 1