Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manas
Manas
Manas
Ebook264 pages1 hour

Manas

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580124103698
Manas

Read more from Ja. Ra. Sundaresan

Related to Manas

Related ebooks

Reviews for Manas

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manas - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    மனஸ்

    Manas

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    ###

    1

    காமோ காரின் மன்யூர கார் ஷன் நமோ நம:

    (காமமே செய்தது, கோபமே செய்தது. அந்தப் பாவங்கள்

    நீங்குவதற்காக மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.)

    அம்ருதபிந்து உபநிஷத்

    அப்படீன்னா?

    பவதாரிணி டிரெஸ்ஸிங் டேபிளின் பெல்ஜியத்தில் பிரதிபலித்த தன் உருவத்தை இரசித்தவாறு கேட்டாள்.

    மார்கழிக் குளிரின் சுனைகள், அவள் மேனிக்குப் போதையூட்டின. எதையும் போர்த்துக் கொள்ளவில்லை.

    இங்கே கவனிச்சீங்களா? எல்லாருக்கும் இப்படியா இருக்கும்? இது ரொம்ப ஸ்டுப்பிட் மாதிரியும் அது ரொம்ப இன்ட்டலிஜெண்ட் மாதிரியும் எனக்குத் தோணறது.

    மாஸ்ட்டர் அண்ட் ஜான்ஸனில் இலயித்திருந்த பிஷ்ணு - அவள் கணவன் - புத்தகத்திலிருந்து பார்வையை அவள்மீது சில கணங்கள் செலுத்த வேண்டியதாயிற்று.

    கமான் யா? என்று அவள் மோடாவிலிருந்து உடலைத் திருப்பியபோது அவையும் திரும்பின. முழு அர்ப்பணத்துக்கு வெகு சீக்கிரம் அவள் தயாராகி விடுவது வழக்கம். நிலைக்கண்ணாடியில் தெரிந்த அவளது ஒற்றை முகப்பருவின் அடிவாரம் சிவந்திருந்தது. பிஷ்ணு! என்றாள். நாகலிங்கப் பூவின் நடுவிலுள்ள சிவப்பு மாதிரி இல்லை இது? கம், ஹாவ் எ டச்

    அவன், அவள் அருகில் செல்லவில்லை.

    'பிஷ்ணு, நீ ரொம்ப ஸ்லோ. உன் லாபரெட்டிரியில் எலி, குரங்கு இவற்றின் சரஸங்களைக் கவனிக்கத்தான் உனக்குப் பிரியம். என்னை நிம்ஃப்போமானியக் என்றாயே, அப்படீன்னா?"

    அவளே அவனருகில் வந்தாள். திசைகளே அவளது ஆடையாக இருந்தன. கழுத்துச் சங்கிலி, தாலி உள்பட அவள் கழற்றிவிட்டுப் பச்சை இயற்கையாக இருந்தாள். அந்த மூடில் அப்படித்தான் இருக்க அவளுக்குப் பிடிக்கும்.

    என்ன பிஷ்ணு, அப்படி உற்றுப் பார்க்கிறே? ஏன் சிரிக்கிறே?

    நினைப்பு வந்தது.

    எது?

    பஜகோவிந்தம். நாரீஸ்தனபர நாபீ தேசம், த்ருஷ்டவா மாகா மோகாவேசம், ஏதன் மாம்ஸ வசாதி விகாரம், மனஸவி சிந்தய வாரம் வாரம்.

    பவதாரிணியும் சிரித்தாள் - அவனைவிடச் சற்று அடக்கமாக.

    அட, மூடமதே, பொம்மனாட்டியோட மேல் அழகைப் பார்த்து ஏண்டா மயங்கறே? மாமிசத்தாலும் கொழுப்பாலும் ஆன மேடு பள்ளம் என்று திரும்பத் திரும்பச் சிந்தனை செய்' என்கிறார், அதுதானே?

    ஏறக்குறைய சரியாச் சொல்லிட்டே.

    பிஷ்ணு, ஸெளந்தர்ய லஹரியிலே அம்பாளைப் பற்றிய வர்ணணை வருது. அற்புதமான, அழகான கற்பனை. சிவனுடைய கோபாக்னி தாங்காமல் மன்மதன் எரியத் தொடங்கியதும், உஷ்ணம் தாங்காதவனாக அம்பாளின் நாபிக் கமலமாகிய குளிர்ந்த குளத்தில் குதித்தானாம். உஷ்ணத்தோடு அவன் நீரில் புகுந்ததாலே, மெல்லிய புகை மேலே கிளம்பறதாம். 'அந்தக் கொடிமாதிரியான மெல்லிய கோடுதான், உன் நாபியிலிருந்து ஸ்தனங்களுக்குச் செல்கிற ரோமங்களோன்னு பக்தர்கள் நினைக்கிறார்கள்' என்று வருகிறது. அந்த ஸ்லோகத்தையும் சங்கரர்தான் பிஷ்ணு அருளிச் செய்திருக்கிறார்.

    பிஷ்ணு கேட்டான்: உனக்கும் அப்படி ரோமாவளி இருக்கு. அதனால் நீயும் அம்பாளும் ஒண்ணா? மனுஷாளுக்கு ஏற்படற அழகு உணர்ச்சிங்களைத் தெய்வத்து மேலே ஏற்றிப் பாடும்போது, அழகு இன்னும் புனிதமாகிறது. மனத்திலே அழகு எந்த விகாரத்தையும் ஏற்படாதிருக்கிறதுக்காகப் பெரியவர்கள் அப்படிப் பாடியிருக்கிறார்கள்.

    மன்மதனின் படகு கவிழ்ந்தது போல் அவள் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டாள்.

    அவளுடைய அந்த நிலை, அவனைக் கவர்ந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். இன்று அவளுக்குச் சில விஷயங்கள் போதித்தே ஆகவேண்டும்.

    பவா, நீ ஒரு நிம்ஃப்போமேனியக் - அதாவது, ஹைபர் செக்ஸுவாலிடியானவள் - அதாவது, ரொம்ப ஆசைப்படறவள்.

    அலட்சியமாக, இருந்துட்டுப் போறேன், தப்பா? என்றாள் பவதாரிணி

    கஷ்டமில்லையா?

    எனக்குப் புரியலே, பிஷ்ணு. கல்யாணம் பண்ணிண்ட புருஷன்கிட்டே சந்தோஷமாயிருக்கணும்னு நினைக்கறதும் நடந்துக்கறதும் தவறுன்னு எனக்குத் தோணலை. பிஷ்ணு.

    அப்படியில்லே, பவா. ஆண் - பெண் சேர்க்கையைத் தவிர, உலகத்திலே என்ன இருக்கு என்கிறவன் தாமஸிகமான மூடன் என்கிறது கீதை. சதை உணர்ச்சிக்கு ஒரேயடியாக அடிமையாயிட்டா இந்திரியங்களை விஷயங்களிலிருந்து மீட்கறது கஷ்டம். வாஸனைகள் அழுத்தமா படிஞ்சுட்டா நீக்கிக்கிறது சிரமம்.

    படுக்கை அறையிலே பகவத் கீதையா, பிஷ்ணு? பேசு, பேசு. இன்னிக்குப் பூரா பேசறது மட்டுந்தான்னு தீர்மானிச்சுட்டே

    அப்படியில்லை. சில விஷயங்களை எப்பத்தான் பேசறது? ஒரு கோடீஸ்வரன் செலவழிச்சிட்டே இருக்கான்னு வை. பணமெல்லாம் போன பிறகு, 'அடடே, வீணா செலவழிச்சிட்டோமே, இனிச் சம்பாதிக்கறதுக்கு நமக்கு வயசும் இல்லையே'ன்னு வருத்தப்படக் கூடாதில்லையா? பட்டினத்தார், கரு உண்டாவதிலிருந்து மனுஷன் சாகிற வரைக்குமான பரிணாமத்தை வெகு அழகாகப் பாடியிருக்கார். வாலிபத்திலே அழகான பெண்களுடன் ஆட்டம் போட்டவன், கடைசியிலே வாலிபம் தாண்டி வயோதிகம் வந்ததும்..

    நான் சொல்றேன் மீதிப்பாட்டை வளமையும் மாறி, இளமையும் மாறி, வன்பல் விழுந்து, இரு கண்கள் இருண்டு, வயது முதிர்ந்து, நரை திரை வந்து... துயில் வரும் நேரம் இருமல் பொறாது, தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வரண்டு, துகிலும் இழந்து சுரணையுமிழந்து... கலகல என்று மலஜலம் வந்து, கால்வழி மேல் வழி சார நடந்து...

    நீ எப்போ படிச்சே?

    நீங்க எதையாவது சொன்னா நான் புரிஞ்சிக்கணுமே. விஞ்ஞானந்தான் புரியாது, உங்களாட்டம் அறிவு இல்லே. இது மெய்ஞ்ஞானந்தானே - பசிச்சா, வயிறு நிறையச் சாப்பிடறதுகூடக் காமந்தான் பிஷ்ணு உன் பாஷையிலே. என்னைக் காமவெறி பிடிச்சவள்னு நீ இன்ஸல்ட்டிங்காப் பேசிட்டே, பிஷ்ணு.

    நோ, நோ, நாட் அட் ஆல். ஐம் ஸாரி.. உன் மனசை ஹர்ட் பண்ணியிருந்தால் மன்னிச்சிக்கோ.

    இல்லே, பிஷ்ணு, நீ எனக்கு நல்லா உறைக்கணும்னு அழுத்தமாச் சொன்னே. யாருக்கு பிஷ்ணு காமம் இல்லே? இராவணனோட காமமே இராமாயணம்; துரியோதனனோட காமமே மகாபாரதம்; பாஞ்சாலியைச் சபையின் முன்னே நியூடாக்கிக் காட்டத் துரியோதனன் உத்தரவிட்டப்போ, கூடியிருந்த அத்தனை பேருக்கும் ஒரு சக்ரவர்த்தினியின் உடம்பை நாமும் பார்க்கலாமேன்னுதான் தர்மத்தின் தலையிலே பழியைப் போட்டுட்டுச் சும்மா இருந்தார்களோ! இளவரசி டயானா எங்கோ யாருடனோ கொட்டமடித்ததைப் புகைப்படமாகப் பத்திரிகைகளில் போட்டு, உலகம் பூரா உற்றுப் பார்த்த ஆண்களுக்குக் காமமில்லையா? பத்திரிகைகளிலே வருகிற அரசியல், சினிமாக் கிசுகிசுக்களிலே காமமில்லையா? கோயிலிலே சில அர்ச்சகர்கள் பூஜைக் கூடையை அழகான அம்மாமிகளின் கையிலே உரசினாப்போலத் தருகிறார்கள். அதுக்கு என்ன பேரு? சின்னப் பெண் குழந்தையை முத்தமிடறப்போ, அதனோட அக்காவை நினைச்சிண்டு அதற்கு முத்தம் கொடுக்கிறானே சில காலேஜ் பசங்க... இளம் டாக்டர்கிட்டே ஒரு விதந்துவான மொட்டைப் பாட்டி மார்வலின்னு வந்தவள்,' 'என்னைக் கைவிட்டு விடாதீங்கோ, டாக்டர்' னு ஆசையா டாக்டரின் கையைப் பிடிச்சுண்டதை நீயே சொல்லியிருக்கே, பிஷ்ணு. இருட்டில் சினிமா பார்த்துண்டே பக்கத்து ஸீட்டிலே எவ இருக்கான்னு தெரியாம் அவள் உடம்போடு உரசிண்டு கைகளால் அளைந்து இன்டர்வெலிலே முகம் பார்த்து அந்த அறிமுகமில்லாதவர்கள் சிரித்துக் கொண்டதில்லையா, ஒண்ணும் தெரியாததுகள் மாதிரி? அவளுக்கு மென்மையாக மூச்சிரைத்தது.

    பவதாரிணி.. பிளீஸ் போதும். நான் தெரியாத்தனமா பகவத் கீதையையும் பட்டினத்தாரையும் படுக்கையறையிலே பேசிட்டேன்...

    அவள் அமைதியாகச் சொன்னாள். இல்லே பிஷ்ணு, நான் ஹிஸ்டீரிக்கா பேசறேன்னு தப்பா நினைச்சுடாதே. நீ பெரிய ஸெக்ஸாலஜிஸ்ட். கணவன் - மனைவி உறவு, உடல் கூறுபாடு பற்றியெல்லாம் ஆராய்ச்சி பண்ணற என்ட்டோ க்ரொனலாஜிஸ்ட். எனக்கு ஹார்மூனைப் பற்றித் தெரியாது. க்ரோஸம்ஸம், ஸெல்ஸும் தைராய்டும் என் புத்திக்கு எட்டாது. நான் ஒரு சாதாரண பி. ஏ. - ஹிஸ்ட்டரி பி. ஏ. - நம்முடையது அரேஞ்ச்ட் மாரேஜ் - ஹிந்து பேப்பரிலே நீ விளம்பரம் கொடுத்திருந்தே. இத்தனாம் தேதி நான் யு. எஸ்ஸிலிருந்து வந்து, இன்ன தேதிவரை இந்தியாவிலிருப்பேன். அதற்குள் கல்யாணத்தை முடிச்சுத் தரணும். பெண் கிராஜுவேட்டாக இருந்தால் போதும், ரொம்ப லட்சணமாக இருக்கணும். அவ்வளவுதான்னு போட்டிருந்தே. அறுநூறு, எழுநூறு கொரியர்ஸ் வந்திருந்ததிலே நாலே நாலை ஸெலக்ட் பண்ணி, ஒரே நாளிலே அந்த நாலு பெண்ணையும் பார்த்துட்டு, என்னை ஸெலக்ட் பண்ணிண்டே சாயந்தரமே பிக்ச்சருக்குக் கூட்டிண்டு போகலாமோல்லியோன்னு என் அம்மாகிட்டே கேட்டே. அப்படியே நீ தங்கியிருந்த அஞ்சு நட்சத்திர ஓட்டலுக்குக் கூட்டிண்டு போய், சாயந்தரமே இருட்டறதுக்குள்ளே என்னை மனைவி பண்ணிட்டுத்தான், சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போனே. என்னை நம்பறியா, நம்பறியான்னு நீ கேட்டே. நீ கைவுட்டுட்டாக்கூட உன்னை நம்பறேன்னு நான் - உன்னுடையவளாயிட்டேன். அதுக்குப் பேரு காமம்னு நீ கொச்சைப்படுத்தினாலும் படுத்துவே. புருஷன்கிட்டே சுகப்படாமல், ஒரு பொண்ணு எங்கே போய்ச் சுகப்படுவா? கும்பலா விடலைப் பொண்ணுகள் ஆண்களோடு வேலை செய்கிற கடைகளிலே, இடிக்காம போக மாட்டியேன்னு ஓர் ஆண் சிப்பந்தி ஒருத்தியைச் செல்லமாக் கடிஞ்சிக்கிறான். அதுக்கு அவள் 'நீ வழியிலேயே நின்னா வர்ரப்பவும் இடிப்பேன்னு' சொல்றாள். அதே மாதிரி, என்னைக் கூட்டமான இடத்துக்குப் போய் இடிபடச் சொல்றியா? என்ன பிஷ்ணு, நீ பேசறே?

    ப்ளீஸ், பவா, போறும், நம்ம ஆர்க்யூமெண்ட், கூல் டெளன் ப்ளீஸ் கூல் டெளன். ப்ரஹ்ம் எழுந்து கொண்டுடப் போறான்.

    அவன் சொல்லி வாய்மூடு முன், வாயிற்படியில் திரையை நகர்த்திக் கொண்டு, குட்டி உருவம் நின்றுகொண்டிருந்தது. நாலு வயது எல். கே. ஜி.,

    டாடி, மாம். இன்னும் நீங்கள்ளாம் தூங்கலையா?

    சும்மா கதை பேசிட்டிருந்தோம். பவதாரிணி நைட்டி அணிந்துகொண்டாள்.

    டாடி, நீ டில்லிக்கு எப்போ கான்ஃப்ரன்ஸ் போறே?

    காலையிலே ஃப்ளைட்றா, செல்லம்! குழந்தையை அணைத்துக்கொண்டான்.

    மறுநாள் கான்ஃப்ரன்ஸின்போது, பிஷ்ணுவுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. உடம்பில் வலி. லஞ்சில் சிக்கன் சுவைத்தபோது பல் வலித்தது. லேசாக இரத்தக் கசிவு.

    கனாட்பிளேஸிலுள்ள டென்ட்டிஸ்ட் நண்பனிடம் பிற்பகல் பல்லைச் சோதித்துக்கொள்ளச் சென்றபோது, இரத்தத்தைப் பரிசோதித்து ஸ்லைடைப் படித்த டென்ட்டிஸ்ட் அதிர்ச்சிக்குள்ளானான். வெள்ளை அணுக்களின் அடர்த்தி ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாயிருந்தது. பிளட் கான்ஸர். லுகீமியா.

    ஓ, மை டியர் யங் ஸெக்ஸாலஜிஸ்ட், யுவர் டேஸ் ஆர் நம்பர்டு. நீ சீக்கிரமே செத்துப் போயிடப் போறடா.

    பிஷ்ணுவே தெரிந்து கொண்டான். சிரித்தான். மை குட்னஸ். லுகீமியா எனக்கு ஃபிரண்ட் ஆகிவிட்டதா?

    பவதாரிணியின் படுக்கை அறை மேனி அவன் மனத்தில் சட்டென்று தோன்றியது. எனக்குப் பின் அவள் கதி? அவள் உணர்ச்சிகளின் கதி?'

    டில்லியின் பனிக்குளிர், கண்ணாடி ஜன்னல்களில் புகையாகத் தேங்கியிருந்தது. இன்னும் ஓர் அறுபது நாள் நான் உயிருடன் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதற்குள்...

    அதற்குள் என்ன, பிஷ்ணு?

    அடுத்த வாரம் சொல்கிறேன்.

    2

    எவனோ ஒருவன் இதை ஆச்சரியம்போல் காண்கிறான்; வேறொருவன் இதை ஆச்சரியம் போல் பேசுகிறான்; மற்றொருவன் இதை ஆச்சரியம் போல் கேட்கிறான்; எவனும் இதை அறியவே இல்லை.

    - ஆன்மாவைப்பற்றிப் பகவத்கீதை

    கான்ஃப்ரன்ஸிலே, என்னை எத்தனை தடவை நினைச்சிட்டே, பிஷ்ணு? விவரமா சொல்லணும்.

    'இப்படி மென்னியைப் பிடிக்கிற மாதிரி நெஞ்சு மேல் உட்கார்ந்திட்டுக் கேட்டால் எப்படிப் பதில் சொல்றது?' வாசனையில் திக்குமுக்காடியவன் கேட்க நினைத்தான். சிரிக்க மட்டுமே முடிந்தது. -

    விதவிதமான சென்ட்டுகள், விதவிதமான பாகங்களுக்குத் தேர்வதில் அவளுக்கு ஒரு த்ரில். –

    ஏன் சிரிக்கிறே? வந்ததுமே பிசாசு மாதிரி பிடிச்சிக்கிட்டாளேன்னா? பிஷ்ணு, உன்னைக் கடிச்சுத் தின்னுடட்டுமா?

    அவனுடைய காது மடல்களைக் கடித்து, உதடுகளைப் பற்கள் படக் கவ்வி, நாவால் துழாவி, மூக்கைக் கிள்ளி, கண்களை முத்தமிட்டு, கழுத்தை முகர்ந்து, நெஞ்சைக் கிள்ளி, கன்னத்தில் மலர்களை ஒத்தி, கிராப்பைப் பிய்த்து, நெற்றியோடு நெற்றி தேய்த்து, மூக்கொடு மூக்குச் சண்டையிட்டு, கண்ட இடமெல்லாம் எச்சில் செய்து...

    நான் வெயிட் போட்டுட்டேனா, பிஷ்ணு? நிஜத்தைச் சொல்லணும். அவளுடைய கைவளை அவனது பிடரியின் அடியில் நன்றாக உறுத்தியது.

    "கேட்கறேனில்லே? நான் வெயிட் போட்டுட்டேனோ?

    தினமும் சமைக்கும் போது குக்கருக்குப் போடறியே, அந்த ஒரு வெயிட்தான் போட்டிருக்கிறே. பவா. நீ தலையணைகளின் தொகுப்பு.

    பின்னே ஏன் திணர்ற மாதிரி மூச்சு விடறே? நாற்பத்தெட்டு மணி நேரத்திலே என்னை நினைச்சிக்கவே இல்லியா, பிஷ்ணு? இங்கே வந்து பஸ்ஸரை அழுத்தும் போதுதான் நினைப்பு வந்ததா?

    அவள் முகத்தை அவன் அருகே அணைத்துக் கொண்டான்.

    மழைக்கு ஒதுங்கிய ஒரு சுவர்க்கோழி, படுக்கை அறையின் எந்த இடுக்கிலிருந்து கொண்டோ ஸ்வீங்ங்... ஸ்வீங்ங் என்று ஒலித்தது.

    தன் நெஞ்சுக் கூட்டில்கூட மரணம் இப்படித்தான் ஒளிந்துகொண்டு ஓசையிடத் தொடங்கியுள்ளது. அதற்குள் பவா, ப்ரஹ்மாவின் எதிர்காலம், அவனது லேபரட்டிரியில் அவன் செய்து வந்து ஏறக்குறைய வெற்றியை அடையவிருக்கும் ரிசர்ச்சுகள். இவற்றைப்பற்றியெல்லாம்

    பவா.... ஐ ஃபீல் ஹங்க்ரி. சாப்பிட ஏதாவது வெச்சிருக்கியா? பிளேனில் ஒண்ணும் சாப்பிடலை.

    மை காட்! துடித்துப்போய் எழுந்தாள். நான் எவ்வளவு பில்லி, உன்னைச் சாப்பிட்டியான்னு கேட்காமல்.. வெரி வெரி ஸாரி, பிஷ்ணு. ஓர் அவசர கிஸ் கொடுத்து விட்டு எழுந்து, ஃபிரிஜ்ஜைத் திறந்து, இருந்த சாப்பாட்டை மைக்ரோ அவனில் ஒரு நிமிடம் சூடு காட்டி, மூன்றே நிமிடத்தில் அவன் சாப்பிடத் தொடங்க, அவன் கழுத்தைப் பின்புறமிருந்து கட்டிக்கொண்டாள். பிஷ்ணு, உன் மடியில் உட்காரலாமா?

    பின்னே---, மடி எதற்குத்தான் இருக்கு?

    டைனிங் டேபிளுக்கும் நாற்காலிக்கும் இருந்த குறுகிய இடைவெளியில், பக்கவாட்டாகத் திரும்பி அவன் மடியில் முழுப்பாரமாக அமர்ந்து கொண்டபோது, அவனுக்குக் சாப்பிட அசௌகரியமாக இருந்தது. –

    ஆ காட்டினால், உனக்குக்கூட ஊட்டுவேன்.

    சாப்பாத்தித் துண்டை ஃபோர்க்கில் குத்தித்தான் விழுங்குவான்.

    நீ ஒரு பைட் பண்ணிட்டு அப்புறமாக் கொடு.

    அப்படியே தந்தான்.

    "பிஷ்ணு, நீ ஊரிலில்லாதபோது நான் ஒரு ப்ளு பார்த்தேன். ப்ரஹம் முழிச்சிண்டு என்னோடு கொட்டக்

    Enjoying the preview?
    Page 1 of 1