Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal
Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal
Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal
Ebook263 pages2 hours

Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

விக்கிரமாதித்தன் என்பதற்கு பொருள் தான் இந்த முன்னுரைக்கான தலைப்பு. சிறுபிராயத்தில் வாய் மொழியாக அறிந்து கொண்ட முதல் இலக்கிய பரிட்சயம் விக்ரமாதித்தன் கதைகள் தான். அந்நாட்களில் இலக்கியம் என்று ஒரு வார்த்தை இருப்பது கூடத் தெரியாத ஒரு சூழலில், எங்கோ ஒதுங்கியிருக்கிற ஒரு கிராமத்தில், விக்கிரமாதித்தன் மட்டும் எப்படியோ புகுந்திருந்தான்.

அவனின் மதிநுட்பம், புத்திசாலித்தனம், சமயோஜிதம், பாரக்கிரமம், தைரியம், வீரம், தீரம் என்று எதன் பொருட்டோ விக்ரமாதித்தன் மீது ஒரு தனிப்பாசம். அய்யப்பாவிடம் எப்போது கதை சொல்லச் சொல்லிக் கேட்டாலும் விக்ரமாதித்தன் கதைகள் தான் சொல்வார். விக்ரமாதித்தன் கதைகள் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என்று எந்த பேதமுமின்றி அனைவரையும் கவரக்கூடிய வசிய சக்தி கொண்ட படைப்பு.

விக்ரமாதித்தன் கதைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே வாய் மொழியாக தமிழ் மக்களிடையே சொல்லப்பட்டு வந்த நாடோடிக் கதை வகையைச் சேர்ந்தது. அதன் சுருக்கம் இவ்வளவு தான். போஜ மகாராஜன் என்கிற அரசன் ஒரு அபூர்வசக்தி கொண்ட சிம்மாசனத்தை தோண்டி எடுக்கிறான். அந்த சிம்மாசனம் விக்ரமாதித்தன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அமர்ந்து ஆட்சி புரிந்த ஆசனம். அது தங்கத்தால் ஆனது. நவரத்தினங்கள் பதித்து அழகூட்டப்பட்டிருப்பது. அதில் முப்பத்திரண்டு படிக்கட்டுகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு அழகிய பெண் பதுமை வீற்றிருக்கும். அனைத்தும் தங்கம் அதில் நவரத்தின வேலைப்பாடுகள் என்று அமர்க்களமாயிருக்கும்.

மந்திரி பட்டி செய்கிற சமயோஜித உத்தியின் விளைவாக விக்ரமாதித்தன் காடாறு மாதம், நாடாறு மாதம் என இருந்து பட்டியின் உதவியோடு வெற்றிகரமாக இரண்டாயிரம் வருடம் திகட்டத் திகட்ட நல்லாட்சி புரிந்திருக்கிறான்.

அவன் காலத்திற்குப் பிறகு ஒரு பூகம்பத்தினாலோ, இன்ன பிற இயற்கைச் சீற்றத்தினாலோ அந்த சிம்மாசனம் பூமிக்குள் புதைவுண்டு விடுகிறது. அந்த இடத்திற்குச் சென்றாலே நம்முடைய இயற்கையான குணம் மாறி சாந்த குணமும், பிறருக்கு உதவக் கூடிய பரோபகாரக் குணமும் வந்து விடும். அதனாலேயே சந்தேகம் கொண்டு போஜன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க உத்தரவிடுகிறான்.

அப்போது தான் அவன் கைக்கு அந்த சிம்மாசனம் வந்தடைகிறது. அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து ஆட்சி புரிய அவனுக்கு ஆசை. ஆனால் அது விக்கிரமாதித்தன் அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாசனம் அல்லவா. அதனால் அந்தப் பதுமைகள் போஜ மகாராஜனிடம் தலைக்கு ஒரு கதை விதம் விக்ரமாதித்தனின் பல வகையான திறமைகளை இவன் புரிந்து கொள்ளும் விதம் சொல்லி அவனை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன.

முடிவில் முப்பத்திரண்டு பதுமைகள் சொன்ன விக்ரமாதித்தனின் பன்முகத் தன்மைகளை உணர்த்தும் அந்த முப்பத்திரண்டு கதைகளில் அதாவது 24 கூட்டல் 31 ஆக மொத்தம் அந்த 55 கதைகளின் மூலம் விக்ரமாதித்தனின் பேராற்றலை முழுமையாகப் புரிந்து கொண்டு விடுகிற போஜ மகாராஜன் தான் தன்னையும் அறியாமல் தனக்குள் பதுங்கியிருந்த “தான்மை” நீங்கப் பட்டவனாய், இத்தனை பெயர் பெற்ற விக்ரமாதித்தன் அமர்ந்து ஆட்சி செய்த இந்த சிம்மாசனத்தில் அமர தான் உட்பட இங்கே யாருக்கும் தகுதி கிடையாது எனக் கருதி, அதற்குத் தர வேண்டிய அத்தனை மரியாதைகளையும் விமரிசையாகச் செய்து விட்டு, அதற்கு விமோசனம் தரும் விதத்தில் அது வந்த இடமாகிய தேவலோகத்திற்கே அதனை வழியனுப்பி வைக்கிறான். அவன் இதைச் செய்வதற்கு முன்னால் ஒவ்வொரு படியாக ஏறி விக்கிரமாதித்தன் பற்றி அறிந்து கொள்கிறான் அல்லவா? அப்படி அவன் காலடி முதல் படிக்கட்டில் பட்டதும் முதல் பதுமை விக்கிரமாதித்தன் வரலாறு பற்றிச் சொல்கிறது.

ஒரு முனிவனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு விக்கிரமாதித்தன் மயானத்தில் முறுங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிற வேதாளத்தைக் கொண்டு வந்து ஒப்படைப்பதாகக் கூறிச் சென்று வேதாளத்தை தோளில் போட்டுக்கொண்டு வருகிறான். வரும் வழியில் பொழுது போகட்டுமே என்று வேதாளம் கதை சொல்ல ஆரம்பத்து விடுகிறது.

இதில் வேதாளம் தான் சொல்கிற இருபத்து நான்கு கதைகளின் முடிவிலும் ஒரு புதிர் போடும். விக்ரமாதித்தன் அந்தப் புதிரின் அர்த்தம் தெரிந்திருந்தும் அதை அவிழ்க்கா விட்டால் அவன் தலை சுக்கல்சுக்கலாய் நொறுங்கிப் போய் விடும் என திகில் கொடுக்கிறது. அதற்கு விக்கிரமாதித்தன் எப்படிப்பட்ட பதில் சொன்னான்? எல்லாக் கதைகளுக்கும் சரியான பதில் சொன்னானா? இருபத்து நான்கு கதைகளும் சொல்லி முடித்த பிறகு என்ன நடந்தது போன்ற பல சுவையான கேள்விகளுக்குப் பதில் தருகிறது இந்தப் புத்தகம்.

குழந்தை மனதுடன், தி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003762
Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal

Read more from Kulashekar T

Related authors

Related to Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal

Related ebooks

Reviews for Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal - Kulashekar T

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்

    Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal

    Author:

    குலசேகர். தி

    Kulashekar T

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1 பகூ சுருதன் கதை

    2 சிம்மாசனப் பதுமைகள் நகைத்த கதை

    3 முதல் பதுமை வினோத ரஞ்சிதா சொன்ன கதை

    4 பர்த்ரு ஹரி மணிமகுடம் துறந்த கதை

    5 விக்ரமாதித்தன் தலைநகர் உருவாக்கிய கதை

    6 விக்கிரமாதித்தன் அதிசய சிம்மாசனம் அடைந்த கதை

    7 நாடு ஆறு மாதம் காடு ஆறு மாதம் ஆளத் துவங்கிய கதை

    8 இரண்டாம் பதுமை

    மதன அபிசேகவல்லி சொன்ன வேதாள கதை

    9 விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன முதல் புதிர் கதை

    10 வேதாளம் சொன்ன இரண்டாவது புதிர் கதை

    11 வேதாளம் சொன்ன மூன்றாவது புதிர் கதை

    12 வேதாளம் சொன்ன நான்காவது புதிர் கதை

    13 வேதாளம் சொன்ன ஐந்தாவது புதிர் கதை

    14 வேதாளாம் சொன்ன ஆறாவது புதிர் கதை

    15 வேதாளம் சொன்ன ஏழாவது புதிர் கதை

    16 வேதாளம் சொன்ன எட்டாவது புதிர் கதை

    17 வேதாளம் சொன்ன ஒன்பதாவது புதிர் கதை

    18 வேதாளம் சொன்ன பத்தாவது புதிர் கதை

    19 வேதாளம் சொன்ன பதினோராவது புதிர் கதை

    20 வேதாளம் சொன்ன பன்னிரெண்டாவது புதிர் கதை

    21 வேதாளம் சொன்ன பதிமூன்றாவது புதிர் கதை

    22 வேதாளம் சொன்ன பதினான்காவது புதிர் கதை

    23 வேதாளம் சொன்ன பதினைந்தாவது புதிர் கதை

    24 வேதாளம் சொன்ன பதினாறாவது புதிர் கதை

    25 வேதாளம் சொன்ன பதினேழாவது புதிர் கதை

    26 வேதாளம் சொன்ன பதினெட்டாவது புதிர் கதை

    27 வேதாளம் சொன்ன பத்தொன்பதாவது புதிர் கதை

    28 வேதாளம் சொன்ன இருபதாவது புதிர் கதை

    29 வேதாளம் சொன்ன இருபத்தோறாவது புதிர் கதை

    30 வேதாளம் சொன்ன இருபத்திரண்டாவது புதிர் கதை

    31 வேதாளம் சொன்ன இருபத்தி மூன்றாவது புதிர் கதை

    32 வேதாளம் சொன்ன இருபத்தி நான்காவது புதிர் கதை

    33 வேதாளம் கூறிய சொந்தக் கதை

    பூர்வாந்திர கதை

    விக்கிரமாதித்தன் இரண்டாயிரம் வருடமாய் அரசாண்ட அபூர்வ வகை சிம்மாசனம் பூமிக்குள்ளிருந்து பல காதகாலம் கடந்து போஜ மகாராஜன் கைக்குக் கிடைக்கிறது. அதில் முப்பத்திரண்டு படிக்கட்டுகள் இருக்கின்றன. ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு அழகிய பதுமை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லி விக்ரமாதித்தன் புகழ் பாடுகிறது. அதன் மூலம் விக்ரமாதித்த மகாராஜாவின் பன்முகத்தன்மையறிந்து அவனையொத்த அரசன் இந்த அவணியில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவனாய் அந்த சிம்மாசனத்தை விக்ரமாதித்தன் நினைவாய் பூஜிக்கிறான்.

    உடனே எங்கிருந்து வந்ததோ அந்த இந்திரலோகத்திற்கே அது திரும்பிச் சென்று விடுகிறது. அதனைத் தொடர்ந்து போஜ மகாராஜன் விக்ரமாதித்தனின் அபாரமான கீர்த்தியை இத்தரணி எங்கும் இவ்வுலகம் இருக்கும் வரையில் அறிந்திருக்கும் வகையில் எடுத்துச் சொல்லி ஆனந்திக்கிறான்.

    விக்ரமாதித்தன் வரலாறு பற்றி முதல் பதுமை கூறுகிறது. மூன்றிலிருந்து முப்பத்திரண்டாம் பதுமை வரை அவனின் பன்முகத் தன்மைகளை உணர்த்தும் விதத்தில் பலவிதமான கதைகள் சொல்கின்றன.

    இந்நூலில் இடம் பெற்றிருப்பது இரண்டாம் பதுமை மதன அபிசேகவல்லி பதுமை சொன்ன கதைகள் இடம் பெற்றிருக்கிறது. அபிசேகவல்லி சொன்ன கதைக்குள் வருகிற கதைகள்தான் விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன புதிர் கதைகள். இதில் இருபத்து நான்கு கதைகளை வேதாளம் விக்ரமாதித்தனிடம் சொல்கிறது. ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு புதிர்க் கேள்வியைக் கேட்கிறது.

    விக்ரமாதித்தன் அதற்கு அளிக்கிற பதில்களின் மூலம் விக்ரமாதித்தன் எத்தகைய புத்திக் கூர்மை கொண்டவன் என்பதை இந்நூல் எளிய, இனிய, தமிழில் நகைச்சுவை ததும்பும் நடையில் உங்கள் முன் வைக்கிறது.

    இந்தக் கதைகளைச் சொல்லுவதற்கு முன்பே வேதாளம் ஒரு நிபந்தனை போட்டுவிடுகிறது. கதை சொல்லும்போது அவன் குறுக்கே பேசினால் உடனே வேதாளம் மறுபடி தான் எங்கிருந்ததோ அதே மயானகரையில் இருக்கும் முருங்கை மரத்திற்குச் சென்றுவிடும். அதனால் அவன் ஞானசீலன் என்கிற முனிவனுக்கு வேதாளத்தை பிடித்துக்கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்ன வாக்கை நிறைவேற்ற முடியாமல் போய்விடக்கூடும்.

    ஒவ்வொரு கதையின் முடிவில் வேதாளம் கேட்கும் புதிர்க்கேள்விக்கு சரியான பதில் சொல்லாவிட்டால் அவன் தலை சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறி விடும் என இன்னொரு நிபந்தனை விதிக்கிறது.

    இத்தனை நிபந்தனைகளையும் கடந்து கேட்கும் அந்த இருபத்து நான்கு கதைகளில் இருபத்து மூன்று கதைகளின் முடிவிலும் வேதாளத்தை நழுவவிட நேர்கிறது. அதற்கெல்லாம் விக்ரமாதித்தன் அசரவேயில்லை. தன் புத்திக்கூர்மையை அதிகப்படுத்திக்கொண்டே தன்னம்பிக்கையோடு சற்றும் மனம் தளராமல் தன்னுடைய அடுத்த அடியை வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டவனாய் இருக்கிறான். அவன் தான் வெற்றியைத் தவிர எதையும் அறியாதவன் ஆயிற்றே. பின் எப்படி அவனால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும். வெற்றிக் கனியை எட்டும் வரை அவன் எப்படித் தன்னம்பிக்கையோடு போராடி, மதிநுட்பத்தோடு செயல்பட்டு, மாற்றி யோசிக்கிற உத்தியைக் கையாண்டு எப்படி தனக்கான வெற்றியை ஸ்தாபிதப்படுத்துகிறான் என்பது நம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய சேதி.

    விக்ரமாதித்தன் அத்தனை கதைகளுக்கும் பதில் சொல்லி விட்டானா? இல்லையா? அப்படிச் சொல்லியிருந்தால் சொன்ன பிற்பாடு வேதாளம் என்ன ஆனது? அத்தனை கேள்விகளுக்கும் பதில் அறிந்து கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்திற்குள் உடனே பிரவேசிப்பது உசிதம்.

    வெற்றியை மட்டுமே

    அறிந்திருக்கும் சக்தி

    விக்கிரமாதித்தன் என்பதற்கு பொருள்தான் இந்த முன்னுரைக்கான தலைப்பு. சிறுபிராயத்தில் வாய் மொழியாக அறிந்து கொண்ட முதல் இலக்கிய பரிட்சயம் விக்ரமாதித்தன் கதைகள்தான். அந்நாட்களில் இலக்கியம் என்று ஒரு வார்த்தை இருப்பதுகூடத் தெரியாத ஒரு சூழலில், எங்கோ ஒதுங்கியிருக்கிற ஒரு கிராமத்தில், விக்கிரமாதித்தன் மட்டும் எப்படியோ புகுந்திருந்தான்.

    அய்யப்பா தினம் மதியம் அட்டகாசமாக கருங்கல்லை சோப்பாகப் பயன்படுத்தி ஒரு குளியல் போட்டதும், அய்யம்மா தயாரித்து வைத்திருக்கும் சாப்பாடு ஒரு கை பார்த்துவிட்டு அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கண்ணாடி எதுவும் இல்லாமல் அந்த விக்கிரமாதித்தன் கதைகள் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். கிட்டத்தட்ட பாராயணம் செய்வது போல அதை எப்போதும் அந்த ஒரே புத்தகத்தைப் படித்துக் கொண்டேயிருப்பார். வாழ்நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தையும், மகாபாரதத்தையும் படித்துக் கொண்டேயிருந்தார். அவை தான் அவரின் இலக்கியம்.

    அத்தனை பெயர் பெற்ற விக்ரமாதித்தனை அய்யப்பா மூலம் அறிந்து வைத்திருந்தேன். எப்படி திரைப்படத் துறையில் எம்ஜிஆர் மனதில் நீங்காத இடம் பிடித்துக் கொண்டிருந்தாரோ, அதே மாதிரி அந்நாட்களில் அய்யப்பா சொன்ன விக்ரமாதித்தன் கதைகள் மூலம் விக்ரமாதித்தன் மனதில் ஒரு நீங்காத படிமமாய் பதிந்து போயிருந்தான்.

    அவனின் மதிநுட்பம், புத்திசாலித்தனம், சமயோஜிதம், பாரக்கிரமம், தைரியம், வீரம், தீரம் என்று எதன் பொருட்டோ விக்ரமாதித்தன் மீது ஒரு தனிப்பாசம். அய்யப்பாவிடம் எப்போது கதை சொல்லச் சொல்லிக் கேட்டாலும் விக்ரமாதித்தன் கதைகள் தான் சொல்வார்.

    விக்ரமாதித்தன் கதைகள் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என்று எந்த பேதமுமின்றி அனைவரையும் கவரக்கூடிய வசிய சக்தி கொண்ட படைப்பு. அதில்

    அந்நாளைய வரலாறு இருக்கும். இறக்கை கட்டிப் பறந்து திரிகிற ஃபேன்டசியான குழந்தை மனதுகள் இருக்கும். புத்திசாலித்தனம் இருக்கும். சமயோஜிதம் இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். தன்னம்பிக்கை டானிக் இருக்கும். வாழ்வியலுக்குத் தேவையான ஆலோசனைகள் இருக்கும். பலவிதமான அனுபவங்கள் இருக்கும். விளையாட்டு இருக்கும். வேடிக்கை இருக்கும். நகைச்சுவை முதலான நவரசங்களும் இருக்கும். விசயமும் இருக்கும்.

    விக்ரமாதித்தன் கதைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே வாய் மொழியாக தமிழ் மக்களிடையே சொல்லப்பட்டு வந்த நாடோடிக் கதை வகையைச் சேர்ந்தது. அதன் சுருக்கம் இவ்வளவுதான். போஜ மகாராஜன் என்கிற அரசன் ஒரு அபூர்வசக்தி கொண்ட சிம்மாசனத்தை தோண்டி எடுக்கிறான். அந்த சிம்மாசனம் விக்ரமாதித்தன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அமர்ந்து ஆட்சி புரிந்த ஆசனம். அது தங்கத்தால் ஆனது. நவரத்தினங்கள் பதித்து அழகூட்டப்பட்டிருப்பது. அதில் முப்பத்திரண்டு படிக்கட்டுகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு அழகிய பெண் பதுமை வீற்றிருக்கும். அனைத்தும் தங்கம் அதில் நவரத்தின வேலைப்பாடுகள் என்று அமர்க்களமாயிருக்கும்.

    ஒரு முறை ரம்பா, ஊர்வசி இருவரில் யார் நடனத்தில் வல்லவர்கள் என்கிற போட்டி தேவலோகத்தில் நடைபெற்றபோது விக்கிரமாதித்தன் அதற்கு நடுவராக செயல்பட புஷ்பக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறான். அவன் ஊர்வசியே வெற்றி பெற்றவர் என அறிவித்ததோடு அதற்கான சரியான காரணத்தையும் சொன்னபடியால் அவனுக்கு அந்த அரிய பரிசு வழங்கப்படுகிறது. இந்திரன் அவன் பட்டம் சூடிய நாளில் அவனுக்கு தரப்பட்ட அந்த சிம்மாசனத்தைப் பரிசாகக் கொடுத்தனுப்புகிறான். ஆயிரம் வருடம் இதில் அமர்ந்து நேர்த்தியாக ஆட்சி புரியக் கடவாயாக என இந்திரன் வரம் தந்து அனுப்புகிறான்.

    மந்திரி பட்டி செய்கிற சமயோஜித உத்தியின் விளைவாக விக்ரமாதித்தன் காடாறு மாதம், நாடாறு மாதம் என இருந்து பட்டியின் உதவியோடு வெற்றிகரமாக இரண்டாயிரம் வருடம் திகட்டத் திகட்ட நல்லாட்சி புரிந்திருக்கிறான்.

    அவன் காலத்திற்குப் பிறகு ஒரு பூகம்பத்தினாலோ, இன்ன பிற இயற்கைச் சீற்றத்தினாலோ அந்த சிம்மாசனம் பூமிக்குள் புதையுண்டு விடுகிறது. அந்த இடத்திற்குச் சென்றாலே நம்முடைய இயற்கையான குணம் மாறி சாந்த குணமும், பிறருக்கு உதவக் கூடிய பரோபகாரக் குணமும் வந்து விடும். அதனாலேயே சந்தேகம் கொண்டு போஜன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க உத்தரவிடுகிறான்.

    அப்போது தான் அவன் கைக்கு அந்த சிம்மாசனம் வந்தடைகிறது. அந்த சிம்மாசனத்தில்

    ஏறி அமர்ந்து ஆட்சி புரிய அவனுக்கு ஆசை. ஆனால் அது விக்கிரமாதித்தன் அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாசனம் அல்லவா. அதனால் அந்தப் பதுமைகள் போஜ மகாராஜனிடம் தலைக்கு ஒரு கதை விதம் விக்ரமாதித்தனின் பல வகையான திறமைகளை இவன் புரிந்து கொள்ளும் விதம் சொல்லி அவனை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன.

    முடிவில் முப்பத்திரண்டு பதுமைகள் சொன்ன விக்ரமாதித்தனின் பன்முகத் தன்மைகளை உணர்த்தும் அந்த முப்பத்திரண்டு கதைகளில் அதாவது 24 கூட்டல் 31 ஆக மொத்தம் அந்த 55 கதைகளின் மூலம் விக்ரமாதித்தனின் பேராற்றலை முழுமையாகப் புரிந்து கொண்டு விடுகிற போஜ மகாராஜன் தான் தன்னையும் அறியாமல் தனக்குள் பதுங்கியிருந்த தான்மை நீங்கப் பட்டவனாய், இத்தனை பெயர் பெற்ற விக்ரமாதித்தன் அமர்ந்து ஆட்சி செய்த இந்த சிம்மாசனத்தில் அமர தான் உட்பட இங்கே யாருக்கும் தகுதி கிடையாது எனக் கருதி, அதற்குத் தர வேண்டிய அத்தனை மரியாதைகளையும் விமரிசையாகச் செய்துவிட்டு, அதற்கு விமோசனம் தரும் விதத்தில் அது வந்த இடமாகிய தேவலோகத்திற்கே அதனை வழியனுப்பி வைக்கிறான்.

    அவன் இதைச் செய்வதற்கு முன்னால் ஒவ்வொரு படியாக ஏறி விக்கிரமாதித்தன் பற்றி அறிந்து கொள்கிறான் அல்லவா? அப்படி அவன் காலடி முதல் படிக்கட்டில் பட்டதும் முதல் பதுமை விக்கிரமாதித்தன் வரலாறு பற்றிச் சொல்கிறது.

    இரண்டாவது படிக்கட்டில் காலடி எடுத்து வைத்ததும், இரண்டாவது பதுமை தான் விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன இருபத்து நான்கு கதைகளைப் பற்றிச் சொல்லி, அதன் மூலம் விக்ரமாதித்தனின் மதிநுட்பம், நட்பிதம், தைரியம், பரோபகாரம், பராக்கிரமம் அத்தனையையும் எளிமையாய்ப் புரிந்து கொள்ளும்படி உணர்த்துகிறது.

    ஒரு முனிவனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு விக்கிரமாதித்தன் மயானத்தில் முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிற வேதாளத்தைக் கொண்டு வந்து ஒப்படைப்பதாகக் கூறிச் சென்று வேதாளத்தை தோளில் போட்டுக்கொண்டு வருகிறான். வரும் வழியில் பொழுது போகட்டுமே என்று வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்து விடுகிறது.

    இதில் வேதாளம் தான் சொல்கிற இருபத்து நான்கு கதைகளின் முடிவிலும் ஒரு புதிர் போடும். விக்ரமாதித்தன் அந்தப் புதிரின் அர்த்தம் தெரிந்திருந்தும் அதை அவிழ்க்காவிட்டால் அவன் தலை சுக்கல்சுக்கலாய் நொறுங்கிப் போய்விடும் என திகில் கொடுக்கிறது. அதற்கு விக்கிரமாதித்தன் எப்படிப்பட்ட பதில் சொன்னான்? எல்லாக் கதைகளுக்கும் சரியான பதில் சொன்னானா? இருபத்து நான்கு கதைகளும் சொல்லி முடித்த பிறகு என்ன நடந்தது போன்ற பல சுவையான கேள்விகளுக்குப் பதில் தருகிறது இந்தப் புத்தகம்.

    குழந்தை மனதுடன்,

    தி. குலசேகர்

    சமர்ப்பணம்

    இந்தக் கதைகளை வாய் மொழியாக சிறுபிராயத்தில் சொல்லித் தந்து முதல் இலக்கியம் விதைத்த கதை சொல்லிகள்

    அய்யப்பா டபிள்யு.பி.கே. சங்கரநாராயணன்

    மற்றும் அய்யம்மா பாப்பாத்தி என்கிற ஆவுடை

    ஆகியோருக்கு.

    அதிசய சிம்மாசனம் கிடைத்த கதை

    அது ஒரு காலம். உஜ்ஜயினி உலகின் தலைநகர் என்று சொல்லும் அளவிற்கு அனைத்து விசயத்திலும் செழித்தோங்கியிருந்த காலம். தர்மம் தலைத்தோங்கியிருந்த காலம் அது. அதனாலேயே அந்நகருக்கு தர்மபுரி என்று இன்னொரு செல்லப் பெயரும் ஏற்பட்டிருந்தது. அதற்கு காரணமானவன் போஜ மகாராஜன்.

    அங்கே குடிசைகள் கிடையாது. எங்கும் மாட மாளிகைகள்தான். எல்லோரும் வசதியோடும், வாய்ப்போடும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மக்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விருப்பம் கொண்டிருப்பார்களோ அத்தனையும் உஜ்ஜயினியில் நிறைவேற்றப்பட்டிருந்தது. கலைகள் செழித்தோங்கியிருந்தன. விவசாயத்திலிருந்து சகல வகையான தொழில்களும் பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்டிருந்தன.

    அங்கே திருட்டு என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கு வறுமை அறியாதிருந்தார்கள். நீதி மன்றங்கள் அவசியப்படாத அளவிற்கு அங்கே தர்மம் போஜனின் ரூபத்தில் தழைத்தோங்கி இருந்தது.

    பஞ்சம் என்ற சொல் அகராதியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு அங்கிருந்த மக்கள் போஜனின் தலைமையில் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவன் சதா மக்களின் நலன் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். மந்திரி நீதிவாக்கியன் போஜனின் எண்ணமாக கருத்தோடு செயல்பட்டு வந்தான்.

    இத்தனை இருந்தும் அங்கேயும் ஒரு குறை இருந்தது. அது காட்டு மிருகங்களின் தொல்லை. செழிப்பான, வளப்பமான இடத்தை நோக்கித் தானே அவை படையெடுக்கும். மக்கள் அசந்த நேரம் பார்த்து நகருக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1