Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaadagai Kaadhali
Vaadagai Kaadhali
Vaadagai Kaadhali
Ebook106 pages53 minutes

Vaadagai Kaadhali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903740
Vaadagai Kaadhali

Read more from Pattukottai Prabakar

Related to Vaadagai Kaadhali

Related ebooks

Related categories

Reviews for Vaadagai Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaadagai Kaadhali - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    வாடகைக் காதலி

    Vaadagai Kaadhali

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் A

    அத்தியாயம் 2

    அத்தியாயம் B

    அத்தியாயம் 3

    அத்தியாயம் C

    அத்தியாயம் 4

    அத்தியாயம் D

    அத்தியாயம் 5

    அத்தியாயம் E

    அத்தியாயம் 6

    அத்தியாயம் F

    அத்தியாயம் 7

    அத்தியாயம் G

    அத்தியாயம் 8

    அத்தியாயம் H

    அத்தியாயம் 9

    அத்தியாயம் I

    அத்தியாயம் 10

    அத்தியாயம் J

    அத்தியாயம் 11

    அத்தியாயம் K

    1

    வேணாம்! கிட்டே வராதே! என்றாள் என்றவள் வியர்த்திருந்தாள். களைத்திருந்தாள். கலைந்திருந்தாள். வேற வழியில்ல கண்ணு. பழி வாங்கியாகனுமே நான் என்றான். என்றவன் தாடி வைத்திருந்தான். தொப்பி வைத்திருந்தான். துப்பாக்கி வைத்திருந்தான். தரையில் கண்ணீர் வழிய விட்ட கன்னி பின்னால் ஊர்ந்தாள். கெஞ்சினாள். ப்ளீஸ், என்னைக் கொன்னுடாதே. துப்பாக்கி முனையால் தாடியைச் சொறிந்து கொண்டு அவளை நோக்கி நகர்ந்தான். சொன்னான். என்ன செய்றது? இது சிக்ர குப்தன் எழுதினதாச்சே! எமன் என்னை ஒரு கருவியாத்தான் பயன் படுத்தறான். சுட்டுடறேன், வலிக்கும். கண்ணை மூடிக்கம்மா துப்பாக்கியை அவள் நெஞ்சுக்கு நேராய் உயர்த்தினான். ஒரு கண்ணை மூடி துல்லியமாய் குறி பார்த்தான். பதறினாள். உதறினாள். கதறினாள். ட்ரிகரில் விரலை வைத்தான். ரெடி, சாட், பூட், த்ரீ! சுட்டான். கட் இட்" என்றுவிட்டு கழுத்தில் மாட்டின் விசிலை ஊதினான் தியாகு.

    கேமிராவின் இயக்கம் நின்றது. பிரகாச விளக்குகள் அணைந்தன.

    துப்பாக்கியை மேஜைமேல் வைத்துவிட்டு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு எப்படி வந்திருக்குடா மச்சி? என்றான் நந்தா.

    தூள். மாடுலேஷன்ல சும்மா விளையாடறடா கண்ணா. என்ன பவ்யா, விட்டா அப்படியே தூங்கிடுவே போலிருக்கே. எந்திரி. அவன் சுடறதோட இந்த சீன் ஓவர். அடுத்து ஆஸ்பத்திரி ஸ்ட்ரெச்சர்லதான் உன்னைக் காமிக்கிறோம் என்ற தியாகு தரையில் இருந்து எழுந்து நிற்க பவ்யாவிற்குக் கை கொடுத்தான்.

    அப்ப நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கலாமா? அப்புறம் ஒரு பிட் விட்டுப் போச்சின்னு சொன்னே, திரும்ப புடவை கட்டணும். அதைவிட ராவடி வேற இல்லை. பாரேன். அஞ்சரை மீட்டர்! வேஸ்ட்! ஜீன்ஸ்ல உள்ள செளகரியம் வருமா?

    பவ்யா மேக்கப் அறைக்குள் செல்ல...

    தியாகு, ஒரு பஃப் கொடு என்று நந்தாவின் சிகரெட்டை வாங்கி இரண்டு இழுப்பு இழுத்து, திருப்பிக் கொடுத்து விட்டு, கையில் இருந்த பேடில் செருகின காகிதங்களைப் பார்த்தான்.

    நந்தா, நீ ரூமுக்குள்ளே எண்ட்ரி கொடுத்து 'ஹலோ பாப்பா சௌக்யமா?'ன்னு கேக்கறே பாரு, அதை ஒரு தனி ஷாட்டா எடுத்தா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்.

    செய்யிம்மா. நானா மாட்டேங்கறேன். உன் ஸ்க்ரிப்ட். உன் டைரக்ஷன். உள்ளே நுழைஞ்சதும் ஒரு குட்டிக்கரணம் அடின்னு சொல்றியா, அதையும் செய்றேன்.

    என்னடா கிண்டலா?

    உடனே கோபம்யா. ஃப்ரன்ச் படம், அது என்ன எழவு பேரு, அன்னைக்கு ப்ரொஜக்ஷன் போட்டாங்களே, வில்லன் இதே மாதிரி கொல்ல வர்றான். ஒரு வயலின் இருக்கு அந்த ரூம்ல. உடனே வயலின் எடுத்து, பக்கத்திலே இருக்கிற கத்தரிக்கோல் எடுத்து ஒவ்வொரு கம்பியா கட் பண்ணிக்கிட்டே டயலாக் பேசறான். அவனோட முகத்தில் வில்லத்தனத்துக்கான எக்ஸ்ப்ரஷன் எதுவுமே கிடையாது. வயலின் கம்பியைக் கட் பண்ற செயல்லயே அவனோட கொடூரத்தன்மையைக் காட்டிடறான். அது மாதிரிகூட சீன் வச்சிக்கலாம்.

    காப்பி அடிக்கச் சொல்றியா?

    வயலினுக்கு பதிலா வீணைன்னு மாத்திடு. புரொஃபஸர் கேட்டா, இன்ஸ்பிரேஷன்னு ஒரு வார்த்தை என்னத்துக்கு இருக்கு?

    என் ஸ்க்ரிப்ட் முடிஞ்சது. இன்னும் ரெண்டே சீன்தான். இனிமே எதையும் சேர்க்க முடியாது. ஃபிலிம் தரமாட்டாங்க. உன் படத்தில வச்சிடு. இப்ப அந்த எண்ட்ரி ஷாட் மட்டும் எடுத்துடறேன்.

    டேய் கண்ணா, டேக் வாங்காதேப்பா. தாடி நமநமங்குது. சொல்லு, என்ன செய்யணும்? முடிந்த சிகரெட்டை தூரமாய் சுண்டினான் நந்தா.

    ஆக்ஷன்ல மாற்றம் இல்லை. அதேதான். பவ்யா கட்டில்ல உக்கார்ந்து புக் படிச்சிக்கிட்டிருக்கா. நீ கதவைப் படார்ன்னு திறந்துகிட்டு உள்ளே வந்து ஸ்டைலா நிக்கிறே! ஹலோ பாப்பா, சௌக்யமா?'ங்கறே. அவ்வளவுதான். இரு, பீட்டர்!

    வாழைப்பழம் தின்று கொண்டு தன் நண்பனிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பீட்டர் வந்தான்.

    அவனிடம் ஷாட், கோணம் விளக்க... பீட்டர் கேமிராவையும், விளக்குகளையும் செட் செய்ய ஆரம்பிக்க...

    நந்தா, பத்து நிமிஷம் ஆகும். இரு, இதோ வந்துட்டேன்.

    தியாகு பவ்யா சென்ற மேக்கப் அறையை நோக்கி நடக்க...

    உன் ஆளுதான்னாலும் கதவைத் தட்டிட்டுப் போடா மச்சி.

    அது மூணாவது மனுஷன் செய்ற வேலை.

    தியாகு சடாரென்று கதவைத் தள்ளி உள்ளே வந்தான்.

    ஹேய்... என்ன திமிரு இது! என்ற பவ்யா தன் முழுக்கை பனியனின் பட்டன்களை அணிந்து கொண்டிருந்தாள். ஜீன்ஸ் பாண்ட் அணிந்திருந்தாள். கீழே அவிழ்த்துப் போட்ட சேலை கிடந்தது.

    ஹெல்ப் பண்ணலாமேன்னுதான் வந்தேன் பவ்.

    "பவ்யாங்கிறது ரொம்ப பெரிய பேர் மாதிரி, அதையும், சுருக்கி பவ்! நாய் குரைக்கிற மாதிரி

    Enjoying the preview?
    Page 1 of 1