Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Verin Vizhuthugal
Verin Vizhuthugal
Verin Vizhuthugal
Ebook164 pages38 minutes

Verin Vizhuthugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிதை என்பது கருத்து விதை. கவிதை என்பது பேசும் ஓவியம். கவிதை என்பது காலத்தின் கண்ணாடி. கவிதை என்பது கவிஞனின் நெஞ்சம்.

என் கண்கள் கண்ட காட்சிகள் என் செவிகள் கேட்ட செய்திகள், என் உள்ளம் உணர்ந்த உணர்வுகள் கவிதைகளாக உருப்பெற்று வேரின் விழுதுகள் என்ற தொகுப்பாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.

வேரின் விழுதுகள் என்ற இந்தக் கவிதைத்தொகுப்பு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. மொழி விழுதுகள் என்ற பகுதியில் தமிழ் மொழியின் மேன்மை, இன்றையநிலை, நாம் என்ன செய்யவேண்டும் போன்ற கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குமுக விழுது என்ற பகுதியில் சமுதாய அவலங்கள், வாழ்க்கை நிலை போன்ற கவிதைகள் அங்கம் வகிக்கின்றன. நேயவிழுதுகள் என்ற பகுதியில் இயற்கைச்சீற்றம், துயரம், மனிதநேயம் போன்ற கவிதைகள் அடங்கியுள்ளன.

அன்புடன், கருமலைத்தமிழாழன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580121602430
Verin Vizhuthugal

Read more from Karumalai Thamizhazhan

Related to Verin Vizhuthugal

Related ebooks

Reviews for Verin Vizhuthugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Verin Vizhuthugal - Karumalai Thamizhazhan

    http://www.pustaka.co.in

    வேரின் விழுதுகள்

    Verin Vizhuthugal

    Author:

    பாவலர் கருமலைத்தமிழாழன்

    Pavalar Karumalai Thamizhazhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/karumalai-thamizhazhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வேரின் விழுதுகள்

    அணிந்துரை

    கவிதை அழகானது அற்புதமானது இதமானது இனிமையானது பக்கம்பக்கமாக எழுதித் தன்னுடைய புத்தகத்தைப் புரட்டவைக்கிற உரைநடையாளர்களை விடவும் படிக்கிறவனையே புரட்டிப்போடுகிற உணர்வுக்குள் தள்ளுகிறவை கவிதைகள்.

    உணர்ச்சியை உள்ளடக்கியிருப்பது உணர்ச்சிகளை உருவாக்கவல்லதுவுமான அருமையும் ஆற்றலும் கவிதைக்கே அதிகமுண்டு. ராபர்ட் ஃபிராஸ்ட் கூறுவது போல கவிதை மானுடத்துக்குப் பயன்படுவதும் பயன்படுத்தத்தக்கதுவுமாகும். எனவே தான் பாட்டுத்திறத்தாலே வையத்தைப் பாலித்திடல் கவிதையால் முடியும் என மாக்கவி பாரதி நம்பினான்.

    கவிஞர்கள் தோன்றுவதும், மறைவதுவுமாய் காலம் கரைவதுபோல் கவிதைகளும் தோன்றியும் மறைந்துமிருக்கின்றன. ஆனால் அழியாப் புகழ் பெற்றக் கவிதைகளால் தம்மை நிலைத்தவர்களாக இந்த மண்ணில் நிரந்தரம் படுத்திக் கொண்டவர்களும் உண்டு. எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கவியரசர் கண்ணதாசன் உறுதியாயிருந்தது தாமெழுதிய பாட்டுத்திறத்தால் தான். அழியாக் கவிதைகளை அள்ளித் தரத் தக்க ஆற்றல் பொதிந்த கவிஞர்கள் சிலருள் மரபால் மணம் வீசுகிற என் நண்பர் கவிஞர் கருமலைத்தமிழாழன் அவர்களும் ஒருவர்.

    இவர் மரபில் ஊறித் திளைத்திருக்கிற மாண்பாளர். சொற்கள் தனித்தனியே சொற்கள் தாம் ஆனால் அவை சேர்கிறபோது கிடைக்கிற சுகானுபவமே கவிதை. இரண்டு சொற்களுக்கிடையே இடைவெளி இருப்பதாகத் தென்பட்டாலும் அவற்றிற்கிடையே உயிரும் உணர்வும் இருப்பதை உருவாக்குவது தான் கவிதை இந்த வாய்ப்பு புதுக்கவிதையை விடவும் மரபுக் கவிதைக்கே அதிகம். புதுக்கவிதை பளிச்சென்று ஒரு செய்தியைச் சுவையாகச் சொல்லிச் சென்று விடும். ஆனால் மரபு மெருகேற்றி அதைச் சொல்லும்.

    புதுக்கவிதை பெரிதும் வரவேற்கப்பட்ட போதும் வேறுபக்கம் திரும்ப மாட்டோம் என்று விடாப்பிடியாக மரபின் பக்கம் வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறவர்களில் கவிஞர் கருமலைத்தமிழாழன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். உங்கள் கைகளில் தவழ்கிற வேரின் விழுதுகள் என்கிற இந்நூல் அதற்குச் சான்றாகவும் சாட்சியாகவும் திகழ்கிறது எண்ணற்ற வரிகள் என்னை ஈர்த்தன. என்னைச் சொல் என்று எத்தனையோ கவிதைகள் வேண்டின. என்றாலும் சிலவற்றை இங்கே சொல்லி மகிழத் தலைப்படுகிறேன்.

    தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் தனியே அவர்களுக்கிருக்கிற தன்மைகள் பற்றியும் தமிழகம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் எண்ணற்ற கவிதைகள் கவிஞரின் தமிழாற்றலையும் தமிழார்வத்தையும் புலப்படுத்தும். பலருக்குக் கவிதை அவர்தம் ஆற்றலின் வெளிப்பாடாக இருக்குமே தவிர ஆர்வத்தைப் புலப்படுத்துவதாக இராது. ஆனால் நமது பாவலர்க்கு ஆர்வமும், ஆதங்கமும், ஆத்திரமும் சிலஇடங்களில் ஆனந்தமும் நிரவிய பாக்கள் பிறப்பது நூலுக்கு நிறைவு சேர்க்கிறது.

    "முகத்திற்கு முன்நிற்கும் மூக்கைப் போலே

    முன்பிறந்த தமிழ்க்கிணையாய்ப் பிறிதெங் குண்டு?"

    என்ற வரிகளில் உவமைக் கவிஞராய் கருமலையாரும் உருவாகிற தன்மை இவ்வரிகளில் தெரிகிறது. தமிழை இப்படிச் சொல்கிற கவிஞர் தமிழர்களைச் சொல்ல வருகிற போது

    "இலக்கியங்கள் படைத்தவர்தாம் உலகம் போற்றும்

    இலக்கணங்கள் நடித்தவர்தாம் சங்கம் தன்னில்

    கலக்காடு வாழ்ந்தவர்தாம் கடையில் – ஏனோ

    கலக்கின்றி போனதாலே மொழியை நாட்டை …

    மறந்து போனதை மனம் வெதும்பிப்பாடுகிறார் இக்கவிதையைப் படிக்கிற ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவயப்படுவான். உருப்பட வேண்டுமென்கிற உள்ளம் பெறுவான். இத்தொகுதியில் உள்ள பல கவிதைகள் நம்மை உருப்பெறச் செய்யும் உயர்ந்த இலக்கிலேயே எழுதப்பட்டவை. தமிழில் குடமுழுக்குச் செய்தால் என்ன கெட்டுப்போனது என்பதை

    "தீந்தமிழில் குடமுழுக்கு நடந்த பின்பு

    தீச்சகுணம் எதுவுமிங்கே நடக்க வில்லை

    நீந்தமிழில் மந்திரங்கள் சொன்ன பின்பு

    தீப்பற்றிக் கோவிலேதும் எரிய வில்லை"

    பிறகெதற்கு தமிழை மறக்க வேண்டும் என்று வினவுவது நல்ல சாட்டையடி. இவையெல்லாம் மொழியுணர்வு என்றால் சமூகஉணர்வு செறிந்த கவிதைகளை பிறிதோர் பகுதியில் படைத்தளித்துள்ளார்.

    "ஆசைநெஞ்சில் அடுக்கடுக்காய் வைத்திருப்போர்

    அதற்கேற்றார் போல்நாளும் உழைக்க வேண்டும்"

    என்ற கருமலைத்தமிழாழன் அவர்களின் வைரவரிகளைத் தமிழர்கள் நடமாடும் பகுதிகளிலெல்லாம் அச்சிட்டு ஓட்டி வைத்து அகற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    படிக்கவேண்டும் என்றொரு பாட்டும் என்னுள் பெரிதும் பதிந்தது. படிக்கவேண்டும் என்று எல்லோரும் தான் சொல்கிறார்கள். ஆனால் படிக்கிற ஆர்வம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நம் நெஞ்சில் பாவலர் கருமலையார் பதியம் போடுகிற விதம் பாராட்டிற்குரியது.

    "ஏழையவன் செல்வத்தைச் சேர்க்க எண்ணும்

    ஏக்கம்போல் படித்தால்தான் அறிவு சேரும்."

    சமூக அல்லல்களையும் சமீபத்தில் நடந்த சோகங்களையும் கூடக் கவிதையில் செதுக்கியிருக்கிறார் கவிஞர். நம் எல்லோரையும் போலவே கும்பகோண நிகழ்வும், கடற்கரையெங்கும் சுனாமிப் பேரழிவும் தமிழகத்தைப் பெரிதும் பாதித்த நீர்ப்பஞ்சமும் இந்நூலில் பதிவாகியுள்ளது. சுடுகிறவரிகளும் நெஞ்சைத் தொடுகிற வரிகளும் மனத்தில் படுகிற வரிகளுமாய் இந்தநூல் முழுதும் பாக்கள் விரிந்துள்ளன. படிக்கப் படிக்கச் சுவையாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலைச் சொல்வதனால் கவிஞர் கருமலையார் கூறுவது போல,

    "உள்ளத்தின் உணர்வுகளை உரைப்ப தற்கே

    உயர்கவிதை வடிவத்தைத் தேர்ந்தெ டுத்தேன்

    உள்ளத்தில் வந்துவந்து மோது கின்ற

    உண்மைக்கே எழுத்துதனில் வடிவம் தந்தேன்

    வெள்ளம்போல் பெருகிவரும் கருத்தை ஏட்டில்

    வெளியிட்டே உணர்த்துதற்குப் பாடல் யாத்தேன்

    கள்ளத்தைக் கயமைதனைத் தோலு ரித்தல்

    கறையென்னும் நெறியாலே எழுது கின்றேன்."

    சமூக நோக்கோடும் அதற்கிணையாய் அவருள் பொதிந்துள்ள புலமையோடும் புனைந்து வழங்கியிருக்கிற இப்பாத்தொகுதி கவிஞருக்கு மேலும் புகழ் சேர்க்கும். மீண்டும் மீண்டும் கவிஞரைப் பாராட்டி மகிழ்கிறேன். இன்னும் பல தொகுதிகள் தரவல்ல தகுதியிருப்பதால் திறனிருப்பதால் வழங்குக வள்ளலே ... என் வாழ்த்தியும் மகிழ்கிறேன்.

    என்றும்அன்புடன்

    ஏர்வாடி.எஸ்.ராதாகிருட்டினன்

    என்னுரை

    கவிதை என்பது கருத்து விதை. கவிதை என்பது பேசும் ஓவியம். கவிதை என்பது காலத்தின் கண்ணாடி. கவிதை என்பது கவிஞனின் நெஞ்சம்.

    என் கண்கள் கண்ட காட்சிகள் என் செவிகள் கேட்ட செய்திகள், என்உள்ளம் உணர்ந்த உணர்வுகள் கவிதைகளாக உருப்பெற்று வேரின்விழுதுகள் என்ற தொகுப்பாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.

    வேரின் விழுதுகள் என்ற இந்தக் கவிதைத்தொகுப்பு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. மொழி விழுதுகள் என்ற பகுதியில் தமிழ் மொழியின் மேன்மை, இன்றையநிலை, நாம் என்ன செய்யவேண்டும் போன்ற கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குமுக விழுது என்ற பகுதியில் சமுதாய அவலங்கள், வாழ்க்கை நிலை போன்ற கவிதைகள் அங்கம் வகிக்கின்றன. நேயவிழுதுகள் என்ற பகுதியில் இயற்கைச்சீற்றம், துயரம், மனிதநேயம் போன்ற கவிதைகள் அடங்கியுள்ளன.

    இந்நூலிற்கு அணிந்துரை வழங்கிய என்கெழுதகை நண்பரும் கவிதை உறவு கவிதை இதழின் சிறப்பாசிரியருமான கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருட்டினன் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.

    நூலின் முகப்பினை வடிவமைத்துத் தந்த ஜீவா கணினி திரு. ஏஞ்சல் அவர்களுக்கு, நூலினைக் கணினியச்சு செய்தளித்த ஸ்டார்

    Enjoying the preview?
    Page 1 of 1