Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellaikodi
Vellaikodi
Vellaikodi
Ebook107 pages55 minutes

Vellaikodi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903646
Vellaikodi

Read more from Pattukottai Prabakar

Related to Vellaikodi

Related ebooks

Related categories

Reviews for Vellaikodi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellaikodi - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    வெள்ளைக்கொடி

    Vellaikodi

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ஸ்வேதா லிப்ஸ்டிக்கால் தன் உதடுகளின் மேல் சிகப்புக் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள். ஓவல் வடிவக் கண்ணாடியில் இடம் - வலம் மாறியிருந்தாலும் அழகு குறையாமலிருந்த ஸ்வேதாவுக்கு வயது இருபத்தி நான்கு பாஸ்.

    அழகு நிலையத்தில் வெட்டிக் கொண்டு தீவுத் தீவாக ப்ளீச் செய்யப்பட்ட முடி ஸ்லீவ்லெஸ் ஜாக், இந்திய ஷேர் மார்க்கெட் போல சரிந்த இடுப்பு.

    ஸ்வேதா உங்களைக் கடந்து சென்றால் நீங்கள் உங்கள் நண்பரிடம், ம், என்ன சொல்லிட்டிருந்தேன்?' என்று கேட்பீர்கள். இன்னும் பற்ற வைக்காத சிகரெட்டில் புகை இழுக்க முயல்வீர்கள். உங்கள் பஸ்சை அல்லது பர்சை தவற விடுவீர்கள்.

    ஸ்வேதாவைப் பார்த்த திருமணமான இளைஞர்கள் கீழ்கண்ட படி தங்கள் மனைவிகளிடம் சொல்கிறார்கள். (மனைவிகள் சாதுக்களாக அமைந்தவர்கள் மட்டும்).

    இன்னிக்கு ஒரு பொண்ணைப் பார்த்தேன், சீசே அவசரப் பட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிட்டனேன்னு ரொம்ப வருத்தப் பட்டேன்.

    ரொம்பதான் பீற்றுப்படுகிற ஸ்வதாவை இதுவரை சந்திக்காத நபர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்யாத பாவிகள்.

    எனில் அவளை மானைவியாக அடைத்த ஜெயந்தன் எத்தனை ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்?.

    ஜெயந்தன் தற்சமயம் ஸ்வேதா செண்ட் பீய்ச்சிக் கொண்டிருக்கும் அதே பங்களாவின் கீழ்த்தளத்தில் தன் அலுவலக அறையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆபீசர்ஸ் மீட்டிங்கில் போட்டுக் காட்டப் போகிற ஸ்லைடுகளை சிறிய புரொஜெக்டரில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்து வரிசைப் படுத்திக் கொண்டிருந்தார்.

    அந்த ஸ்லைடுகளின் உள்ள சில காட்சிகளைப் பார்க்கலாம்.

    1. எலும்புக்கூடாகத் தோற்றமளிக்கும் ரயில்பெட்டி.

    2. வரிசையாகக் கிடத்தப்பட்டு வெள்ளைத் துணிகள் போர்த்தப்பட்ட மாட்டு சடலங்கள்.

    3. மேஜை முழுக்க பரப்பி வைக்கப்பட்டுள்ள செல்லட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் மற்றும் மொபெட் சைட் பாக்ஸ்கள்.

    4. தரையில் தேங்கி உறைந்த ரத்தம்.

    5. ரத்தம் சொட்டச் சொட்ட ஸ்ட்ரெட்ச்சரில் ஏற்றப்படுகிற சிறுவன்.

    6. மார்பில் அடித்துக் கொள்ளும் ஒரு தாய்.

    7. மறுபடியும் சடல வரிசைகள்.

    8. மறுபடியும் மேஜை முழுக்க வெடிகுண்டுகள்.

    ஜெயந்தன் புரொடெக்டரை அணைத்து விட்டு ஸ்லைடுகளின் விளிம்பில் பென்ஸிலால் 1,2,3 என்று எழுதினார்.

    எழுந்து சென்று கம்ப்யூட்டரையும், பிரிண்ட்டரையும் உயிர்ப் பித்தார். சாவி போட்டு ஒரு டிராயரைத் திறந்து தேடி ஒரு குறிப்பிட்ட ஃபிளாப்பி டிஸ்க் எடுத்துச் சொருகினார். கீ போர்டில் தட்டித் தட்டி ஒரு குறிப்பிட்ட ஃபைலில் இருப்பதை பிரிண்ட் செய்ய உத்தரவு கொடுத்து விட்டு சிகரெட் பற்ற வைத்தார்.

    மூன்று பஃப் இழுப்பதற்குள், அடித்து முடித்து விட்டு அப்புறம்? என்றது கம்ப்யூட்டர்.

    மடங்கி விழுந்த வால் காகிதத்தை மடக்கி ஒரு வெதர் போல் டரில் வைத்துக் கொண்ட ஜெயந்தன் ஒரு சி.பி.ஐ அதிகாரி. டி.ஐ.ஜி ரேங்க்.

    ஜெயந்தன் பிறக்கும்போதே கோடீஸ்வரன். தாத்தா, அப்பாவின் உழைப்பு. ஓரே வாரிசு. இருமினால் இருபது டாக்டர்கள் வருவார்கள். சிணுங்கினால் சியல்லோ கிடைக்கும். திசையெல்லாம் பணம். திகட்டத் திகட்டப் பணம்.

    ஆனால், ஜெயந்தனை அந்தப் பணம் வேறு பாதைகளில் செலுத் தவில்லை. ஏதாவது சாதிக்க வேண்டுமென்கிற துடிப்பு. ஐ.பி.எஸ் எழுதி வெற்றி பெற்று, முதலில் டெல்லியில் போஸ்ட்டிங் ஆகி, பிறகு தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்து நான்கு வருடங்களாயிற்று.

    முப்பத்தெட்டு வயதுவரை கல்யாண சிந்தனையே இல்லாமல் இருந்து திடீரென்று ஒரு ரிசப்ஷணில் சந்தனம் நீட்டிய ஸ்வேதாவைப் பார்த்த விநாடியில் பிடித்துப் போய் மறுநாளே விசாரித்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போய் அவள் அப்பாவைச் சந்தித்தார்.

    வணக்கம். என் பேர் ஜெயந்தன். வயது முப்பத்தெட்டு, சொந்த ஊர் இதே மெட்ராஸ்தான். கோடிக் கணக்கில் சொத்து இருக்கு. ஆனா எனக்குப் பிடிச்சது போலீஸ் உத்தியோகம். அதனால ஐ.பி.எஸ் படிச்சேன். இப்போ சி.பி.ஐ. தமிழ்நாடுல டி.ஐ.ஜி ரேங்க்ல உள்ள பொறுப்பான அதிகாரி தான். எங்க வீட்ல இப்ப நான் மட்டும் தான். இத்தனை நாளா நான் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சதில்லை. நேத்து பாம்குரோவ் ஹோட்டல்ல நடந்த என் ஃபிரண்டோட கல்யாண ரிசப்ஷன்ல உங்க பொண்னைப் பார்த்தேன். பிடிச்சிருந்தது. விசாரிச்சேன். பேரு ஸ்வேதான்னு சொன்னாங்க. அப்பா வாசுதேவன் லயோலா காலேஜ் புரொபசர்ன்னு சொன்னாங்க. காலேஜ்ல உங்க வீட்டு அட்ரஸ் வாங்கினேன். எனக்கு சம்பிரதாயம் எல்லாம் தெரியாது. தோணிச்சு, வந்துட்டேன். ஸ்வேதாவை தான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன். உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் சம்மதம் இருந்தா மத்த ஏற்பாடெல்லாம் நானே செய்றேன். கல்யானச் செலவு பூரா என்னோடது. உங்களுக்கு ஒரே ஒரு வேலைதான். அது ஆசீர்வாதம் செய்றது. இது என் கார்ட், ஒண்ணும் அவசரமே இல்லை. நிதானமா யோசிச்சி முடிவு செய்யுங்க.

    திருமணம் முடிந்து இருண்டு வருடங்களாகின்றன.

    ஜெயந்தன் தன் அலுவலக

    Enjoying the preview?
    Page 1 of 1