Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ver Pidikkum Mann
Ver Pidikkum Mann
Ver Pidikkum Mann
Ebook225 pages3 hours

Ver Pidikkum Mann

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403675
Ver Pidikkum Mann

Read more from Vaasanthi

Related to Ver Pidikkum Mann

Related ebooks

Reviews for Ver Pidikkum Mann

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ver Pidikkum Mann - Vaasanthi

    http://www.pustaka.co.in

    வேர் பிடிக்கும் மண்

    Ver Pidikkum Mann

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    கனவுலகத்தில் சஞ்சரிப்பது ரமேசுக்குச் சுகமாக இருந்தது. கிட்டத்தட்ட பொழுது போக்கும் சாதனமாக, எதிர்நோக்கும் விஷயமாகப் போய் விட்டது. பாதி நேரம் அது தூக்கத்தில் வரும் கனவா, அல்லது விழித்திருக்கும் நேரம் மனசு அசைபோடும் கற்பனையா என்று புரிவதில்லை. கனவாக ஆரம்பித்து பிறகு அதற்கு ஒரு வடிவமும் மனசுக்குச் சாதகமான முடிவும் ஏற்படுவது எப்படி என்பது விசித்திரம்.

    விடலைப் பருவத்தில் இப்படிப்பட்ட கற்பனைக் கனவுகள் நிறைய வரும். வகுப்பில் பாடம் நடக்கும்போது, காய்கறி வாங்க சந்தைக்குச் செல்லும்போது, ரேஷனுக்குக் க்யூவில் நிற்கும் போது என்று விவஸ்தை இல்லாமல் நேரம் கெட்ட நேரத்தில் வரும், ரம்யமான கனவுகள், அவற்றில் அவன் நிரந்தரக் கதாநாயகன், காதலன், கனவில் அவன் படு ஜாலியான பேர்வழி. சாமர்த்தியமாக, நகைச்சுவையாகப் பேசுபவன். அவனைப் பார்த்துக் கிறங்கும் பெண்கள் அவன் பேச்சைக் கேட்டுச் சொக்குவார்கள்; சிரிப்பார்கள். கனவில் வருவது வெவ்வேறு பெண்கள். அதில் நடிகைகள் விலக்கில்லை. அவர்களைத் தொடும் உரிமை கனவுகளில் உண்டு. அவர்கள் இவனுக்காகவே காத்திருப்பது போல் இணங்குவது கனவில் இயல்பாகத் தோன்றும். அந்தச் சமயங்களில் அவன் உதடுகளில் புன்னகைதோன்றும். இந்தக் கனவுகளினால் ஒருவித லாபம் உண்டு. பஸ்சுக்கும் சர்க்கரைக்கும் காத்து நிற்கும் நேரங்கள் அவனுக்கு அலுப்பூட்டியதில்லை. பக்கத்தில் நிற்பவர்கள் தான் ஒரு மாதிரியாக அவனைப் பார்ப்பார்கள். அதைப் பற்றி அவன் கண்டு கொண்டதில்லை.

    இந்திராவைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் கனவுகள் தொடர்ந்தன. ஆனால், அவற்றில் இந்திராவே கதாநாயகி. பாதி சல்லாபங்களை அவன் கனவிலேயே செய்து விடுவது சில சமயங்களில் விழித்திருக்கும் நேரத்தில் தகராறாகிப் போகும். கனவு இந்திராவிடம் கிறக்கமும் இணக்கமும் இருக்கும். அவன் பேச்சுக்கெல்லாம் சிரிப்பாள். நிஜ இந்திராவுக்குப் பாதி நாள் மூடு அவுட்டாகி இருக்கும். அவன் பேச்சு சுவாரஸ்யமானது என்று அவள் நினைப்பதாகத் தோன்றாது. அவன் ஏமாற்றத்துடன் திரும்பிப் படுத்து மறுபடி கனவு காண ஆரம்பிப்பான்.

    இப்பவும் ஒரு சுவாரஸ்யமான. ரம்யமான கனவில் ஆழ்ந்திருந்தபோது, என்ன, ஆபீஸ் இல்லையா இன்னிக்கு? என்ற இந்திராவின் குரல் மெல்லிய எரிச்சலை ஏற்படுத்திற்று. சற்றுமுன் ஏழு மணிக்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்தபோது அவன்தான் அதன் மண்டையில் ஒரு போடு போட்டு அடக்கியிருந்தான். உனக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் இல்லை என்னும் அலட்சியத்துடன் அவன் திரும்பிப் படுத்தான்.

    உன்னை எழுப்ப வைக்கிறேனா இல்லையா பார் என்கிற வீம்புடன் இந்திரா சமையல் அறையில் பாத்திரங்களை ஏகச் சத்தத்துடன் உருட்டிக் கொண்டிருந்தாள். வரவர இந்திராவின் செய்கைகள் அவனுக்கு மிகுந்த அலுப்பை ஏற்படுத்தி வந்தன. இங்கிதம் இல்லாதவளாக, தடித்தனம் மிகுந்தவளாகத் தோன்றினாள். எப்படி மாறி விட்டாள் என்று அவனுக்குத் தினமும் அவளது பிரசன்னமில்லாத முகத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது. அவன் அவளைப் பெண் பார்க்கச் சென்றபோது இருந்த இந்திரா வேற பிறவி. அவள் சிரித்தால் ஆயிரம் வாட் பல்பு மாதிரி கண்ணை கூசும். இரப்பைகள் படபடக்கக் கீழ்நோக்கி, 'டிவி' சீரியல் மிருநயனி போல பார்ப்பாள். அவனது இதயத்தில் பல பட்டாம் பூச்சிகள் சிறகடிக்கும். இப்போது முகத்தில் சிரிப்பே காணோம். பார்வை நிலைகுத்தினதாக இருக்கிறது. உல்லாசத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லாத மாதிரி. ரொம்ப நாளாகி விட்டது அவள் இப்படி ஆகி.

    அதற்கு நீ காரணமில்லை, என்று அவனுடைய ஆபீஸ் நண்பன் ரகு தெம்பூட்டினான். வீட்டுக்குள்ளே உட்கார்ந்திருக்கிற பொம்பளைங்க ரொம்ப பேர் இப்படித் தான். இது ஒரு தேக்க நிலை. மனோ வளர்ச்சி இல்லாததாலே அவங்கதான் என்ன பண்ணுவாங்க சொல்லு? சமையல் கட்டிலே வேலை, விலைவாசியோட போராட்டம், தூர்தர்ஷனுடைய அபத்தமான நாடகங்கள் – அப்படிங்கற உலகத்திலேயே உழண்டுகிட்டு இருக்கிறவங்களுக்குத் தேக்க நிலை வராம என்ன செய்யும்?

    ரகுவிடம் ரமேசுக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு. ரகு ஒரு இலக்கியவாதி. நவீன சோதனை நாடகங்களில் பங்கெடுத்துக் கொள்பவன். அறிவு ஜீவிகளின் கூட்டத்திற்குத் தவறாமல் செல்பவன். சோவியத் யூனியனில் கம்யூனிச வீழ்ச்சிக்கு முன் வரை தன்னை ஒரு தீவிர மார்க்சிய வாதி என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தவன். இப்பொழுது மார்க்ஸ் என்ற வார்த்தையை யாராவது சொன்னால் காதில் விழாதது போல் இருக்கிறான். ரமேசுக்குப் புரியாத விஷயங்களைப் பேசுவதில் சமர்த்தன். அதனாலேயே குரு ஸ்தானத்தில் இருப்பவன் 'தோழா' என்று எல்லோரையும் கூப்பிடுவது அவனுடைய ஸ்டைலாக இருந்தாலும்-

    அதுக்கு என்ன செய்யலாம் சொல்லு? என்று ரமேஷ் அப்பாவித்தனமாகக் கேட்ட போது, நீ என்ன செய்ய முடியும்? என்றான் ரகு கண்ணை மூடிக்கொண்டு. தொடர்ந்து நேசிக்கக் கற்றுக் கொள். என்றான் இலக்கியத் தமிழில். ரமேசுக்கு அது அலுப்பைத் தந்தது. மாறிப் போன இந்திராவிடம் நேசத்தைக் காண்பிப்பது சர்க்கஸ் வித்தையைப் போன்றது. சாண் ஏறினால் முழம் சறுக்கிற்று. அதைவிட கனவு காண்பது அதிக ரம்யமானது சுலபமானது.

    தடைபட்டுப் போன கனவுப் போர்வையில் தன்னை மறைத்துக் கொள்ளும் முயற்சியில் ஆழ்ந்தபோது விருக்கென்று இழுபட்டது போல அவன் அதிர்ந்து கண் திறந்தான். நெரித்த புருவங்களுடன் இந்திரா இடுப்பில் கையைப் பரதநாட்டிய பாணியில் வைத்தபடி நின்றிருந்தாள்.

    என்னது இது? ஆபீசுக்குப் போகப் போறதில்லையா இன்னிக்கு? சீட்டுக் கிழிச்சுட்டாங்களா?

    அவள் முதுகில் நான்கு மொத்து மொத்த வேண்டும் போல் அவனுக்கு ஆத்திரம் வந்தது. இவள் மேல் ஒரு காலத்தில் எப்படிக் காதல் இருந்தது என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, போர்வைக்குள் இருந்து முகத்தை நீட்டி, என்ன மணியாகுது? என்றான்.

    ரொம்ப ஆகல்லே. ஒன்பதுதான் என்றாள் இந்திரா நையாண்டியுடன்.

    ஓ மை காட், என்று சடக்கென்று எழுந்து அவன் குளியலறைக்கு விரைந்தபோது, நா ஒருத்தி இல்லேன்னா என்னிக்கோ உங்களுக்குச் சீட்டுக் கிழிஞ்சிருக்கும், என்று அவள் சொல்வது கேட்டது.

    பல் தேய்த்த கையுடன் குளித்து உடை உடுத்தி காபியுடனேயே காலை உணவையும் அரக்க பரக்க உள்ளே திணித்து, அவள் தயாராக வைத்திருந்த டிபன் டப்பாவை ஆபீஸ் அட்டாச்சியின் நுழைத்து அவன் கிளம்பும்போது, அரை மணி முன்னாலே எழுந்திருந்தா இப்படிப் பறக்க வேண்டாமோ இல்லையோ? என்றாள் அவள் அவள் குரலில் இப்போது எட்டிப் பார்த்த மென்மையின் சாயலைக் காண நேரமில்லாததால் அவன் கிடைத்த ஆட்டோவைப் பிடித்து விரைந்தான்.

    ஆட்டோவில் செல்லும்போது தனது வாழ்வை நினைத்து அவனுக்குச் சலிப்பேற்பட்டது. இளைய பருவத்திலிருந்து இன்று வரை பெண்குலம். யாருடைய ரூபத்திலாவது தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதுபோல் தோன்றிற்று. என்னால்தான் நீ இந்த மட்டுக்கு ஆளாய் நிற்கிறாய் என்கிற தோரணையில் பேசி வந்திருக்கிறார்கள். பள்ளி நாட்களில் அம்மா இப்படித்தான் எழுப்பி விடுவாள். நா ஒருத்தி மட்டும் இல்லேன்னா நீ படிச்சு உருப்பட்டாப்பலேதான். இப்பொழுது இந்திரா அதே பல்லவியைப் பாடுகிறாள். ரகு சொல்வது சரிதான். இவர்களது இந்த விரட்டலுக்குக் காரணம் அவர்களது தேக்க நிலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த விரட்டல் வரும் வரை. அவனும் செயல்படுவதில்லை, அலாரம் அடித்த பிறகு எழுந்திருக்கலாம் என்கிற சோம்பல் போல, வாழ்நாள் முழுவதும் நான் இப்படியேதான் இருக்கப் போகிறேன்-. சாவி கொடுக்கப்பட்டாலே இயங்கும் பொம்மை போல – என்கிற கற்பனை பயங்கரமானதாக இருந்தது. அவனது கனவுப் பெண்களுக்கும் நிஜ வாழ்க்கைப் பெண்களுக்கும் இருக்கும் பேதம் சோகமானது என்று அவன் நினைத்துக் கொண்டான். காதல் என்பது அமரத்துவம் வாய்ந்தது என்று அவன் காதுபட ரகு சொன்னால் நீ ஒரு கிறுக்கன் என்று அவன் முகத்திற்கு நேராக சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான். காதல் என்பது அவன் பகல் கனவுகளில் காணும் வெறும் பாவனை. இனிய கற்பனை. நிஜ வாழ்வில் கிடைப்பது வெறும் கத்தரிக்காய்; அதுவும் சுருங்கிப் போன ரசமிழந்த கத்தரிக்காய்.

    ஆபீஸ் கட்டடத்துக்குள் நுழைந்ததும் வாசல் தர்வான் பகதூர், 'ஏன் சார் லேட்டு?’ என்று இந்திராவின் தோரணையில் கேட்டான். அது காதில் விழாதது போல் ரமேஷ் தன் சீட்டுக்கு விரைந்தான். அவசரமாகப் பைல்களுக்குள் மூக்கை நுழைத்து வேலையில் ஆழும் சமயத்தில் -

    ஏன் தோழா லேட்? என்ற குரல் கேட்டு நிமிர்ந்த போது, ரகுவின் தலை தடுப்புச் சுவருக்கு அப்பால் தெரிந்தது. வழக்கமாகக் குருவைப் போலக் காட்சி அளித்த ரகு இன்று இன்னொரு இந்திராவாகத் தெரிந்தான்.

    கோவிச்சுக்காதே, என்றான் ரகு அவன் முகம் போன போக்கைப் பார்த்து, எல்லாருக்கும் நேரறது தான். லேட் நைட் மூவி பார்த்திட்டு படுக்கப் போயிருப்பே!

    அதெல்லாம் இல்லே! என்றான் ரமேஷ் அலுப்புடன். என்னவோ எழுந்திருக்கப் பிடிக்கல்லே. படுத்தே இருக்கலாம் போல இருக்கு!

    இருக்கும் இருக்கும்! என்று ரகு கண்ணடித்துச் சிரித்தான். எல்லாத்துக்கும் லிமிட் வேணும்!

    நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்லே, என்றான் ரமேஷ் முகம் சிவந்து.

    அட இருந்தாத்தான் என்ன? அதிலே என்ன தப்பு? இளம் வயசிலே இப்படிப்பட்ட உணர்வு இல்லேன்னா நீ மனுசனே இல்லே. ஆபீஸ் முடிஞ்சதும் இன்னிக்கு நீ எங்கூட வர்றே. அதைச் சொல்லத்தான் இப்ப வந்தேன்!

    எங்கே உன் வீட்டுக்கா?

    இல்லே. ஒரு கூட்டத்துக்கு!

    இலக்கிய கூட்டமா? நான் வரலேப்பா!

    அட நீ பாட்டுக்குச் சும்மா வா கூட்டம் முக்கியமில்லே. அங்கே ஒரு ஆளை உனக்கு நா காண்பிக்கப் போறேன்!

    யாரு?

    நீ வாயேன்! என்று ரகு மெதப்பாகச் சிரித்தான். ஆபீஸ் முடிஞ்சதும் கரெக்டா கிளம்பிடலாம். லஞ்ச் டைம் போது நா வெளியிலே போறேன். அதனாலேதான் இப்பவே சொல்றேன்!

    ரகு கிளம்பிச் சென்ற பிறகும் வெகு நேரத்துக்கு ரமேசுக்கு வேலையில் கவனம் செல்லவில்லை. இந்த ரகுவுக்கு அலுப்போ சலிப்போ என்றும் ஏற்படுவதில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. பைல்களுக்கு நடுவே அவனுடைய சிரித்த முகம் வட்ட நிலா போல நின்றது. அதுவும் எப்படிப்பட்ட சிரிப்பு! நிர்விசாரமான சிரிப்பு. எந்தப் பெண்ணும் அவனை விரட்டுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். 'நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் ரொம்பவும் நேசிக்கிறோம். அதுதான் என் சந்தோஷத்துக்குக் காரணம்’ என்று ஒருமுறை சொன்னான். ரகு ரொம்பவும் அதிர்ஷ்டம் செய்தவன் என்று ரமேஷ் நினைத்துக் கொண்டான். அவனுக்குக் கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் இருக்கும். இன்னும் ஒரு காவியத் தலைவன் போல் பேசுகிறான். மனைவி திருச்சியில் இருக்கும் பிறந்தகத்துக்குச் சென்றாளானால் தினமும் ஆபீஸ் போனில் அவளுடன் விரகதாபத்துடன் பேசுவான், ஒரு வாரத்துக்கு மேல அவளுக்கு அங்க இருப்புக் கொள்ளாது. வந்துருவா, என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வது போல் சொல்வான். அவள் ஊரிலிருந்து திரும்பிய மறுதினம் அவனால் நிச்சயம் நேரத்துக்கு ஆபீசுக்கு வரமுடியாது.

    ஒரு வாரப் பிரிவை ஈடு செய்ய வேணாம்? என்பான் சீரியசாக.

    'அதிர்ஷ்டக்காரன், சந்தோஷமா இருக்கான்' என்ற வைராக்கியத்துடன் ரமேஷ் அவனையும் இந்திராவையும் மனதிலிருந்து ஒதுக்கிவிட்டு வேலையில் ஆழ்ந்தான்.

    மாலையில் ஐந்தரை மணிக்குச் சொல்லி வைத்தபடி ரகு வந்தான்.

    என்ன இன்னும் கிளம்பல்லியா? என்று துரிதப்படுத்தினான். ரகுவின் முகம் பளிச்சென்றிருந்தது. பாண்ட்ஸ் பவுடர் வாசனை அடித்தது. முகம் கழுவிப் பவுடர் போட்டு வந்திருக்கிறான் என்று தோன்றிற்று. தலை வாரி விடப்பட்டு ஒழுங்காக இருந்தது.

    ஏதாவது பார்ட்டிக்குப் போறமா என்ன? என்றான் ரமேஷ். சென்டெல்லாம் அமர்க்களப்படுது?

    ரகு லேசாகச் சிரித்தான்.

    காதலிக்கிறவளைப் பார்க்கப் போகும்போது நீ எப்படிப் போவே?

    ரமேஷ் சடக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தான்.

    என்னடா சொல்றே நீ?

    ரகுவின் முகத்தில் அமைதியான புன்சிரிப்புத் தவழ்ந்தது.

    "என்ன கேள்வி இது... நா ஏதோ கொலைக் குத்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1