Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veliye Sonnaal Vetkam
Veliye Sonnaal Vetkam
Veliye Sonnaal Vetkam
Ebook56 pages30 minutes

Veliye Sonnaal Vetkam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465865
Veliye Sonnaal Vetkam

Read more from Devibala

Related to Veliye Sonnaal Vetkam

Related ebooks

Reviews for Veliye Sonnaal Vetkam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veliye Sonnaal Vetkam - Devibala

    6

    1

    காக்கிச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டான் அட்சயன். பெல்ட்டை எடுத்துக் கட்டிக் கொண்டு, கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்துக் கொள்ள, லாவண்யா வெளியே வந்தாள்.

    எல்லாம் எடுத்து வச்சிட்டியா லாவண்யா?

    ம்! தயாரா இருக்கு!

    இன்னிக்குக் கோர்ட்டுக்குப் போகணும். முடிச்சிட்டு வந்ததும் வெளியூர் கிளம்ப வேண்டியதுதான்.

    தூத்துக்குடில என்ன கேஸ் விஷயமாப் போறீங்க?

    ஷ்! பேசக்கூடாது.

    நான் பொண்டாட்டிதானே! எங்கிட்டக்கூட ரகசியமா?

    நான் க்ரைம் பிராஞ்ச்சோட ரகசியப் போலீஸ்! ரகசியத்தை வீட்லகூட சொல்லக்கூடாது. அதுதான் போலீஸ் சட்டம். புரியுதா? முதல் பொண்டாட்டி தொழில்! அடுத்ததுதான் நீ. வரட்டுமா?

    என்னங்க...

    திரும்பினான் அட்சயன்.

    நம்மகிட்ட சொந்தமா வீடு இருக்கு. கார் இருக்கு. பேங்க்ல நிறைய பணமும் இருக்கு. உங்க தாத்தா காலத்து சொத்து நிறையவே இருக்கு. நீங்க பத்து வருஷமா சம்பாதிக்கறதும் சேருது. போதாதா?

    யாரு போதாதுன்னு சொன்னது?

    இந்தப் போலீஸ் வேலையை விட்டுருங்க.

    நத்திங் டூயிங். பொண்டாட்டியை விட்டாலும் விடுவேன்... போலீஸ் உத்யோகத்தை விடமாட்டேன். புரியுதா? ரைட், வந்து பேசிக்கலாம்.

    வாசலில் இறங்கினான். புல்லட் சப்திக்க, போய் விட்டான். பெருமூச்சு விட்டபடி லாவண்யா உள்ளே வந்தாள்.

    கல்யாணமாகி ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவரை குழந்தைகள் இல்லை. பார்க்காத சிகிச்சையும் இல்லை. அட்சயன் உத்யோகம் தொடர்பாகப் பாதிநாள் வெளியூர் போய்விடுவான்.

    சங்கீதம், தையல், சமையல்கலை என்று பலவித வகுப்புகளில் தன் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள் லாவண்யா. அட்சயன் அவளை எதற்குமே தடை செய்யமாட்டான். காக்கி உடுப்பில் பார்வைக்குக் கொஞ்சம் கரடு முரடாக இருப்பான். உள்ளே... மென்மையான இதயமுள்ளவன்.

    லாவண்யா சமையலை முடித்துக் கொண்டாள்.

    அவளுக்குத் தோழி வீடு என்று எதுவும் சொல்லும் படியாக இல்லை. பெற்றவர்களும் இல்லை. அண்ணன் பராமரிப்பில் வளர்ந்தவள்.

    அன்றைக்கு கம்ப்யூட்டர் வகுப்பு இருந்தது. புறப்பட்டாள். அதையெல்லாம் முடித்துக்கொண்டு ஒரு மணிக்குத் திரும்பி விட்டாள்.

    அட்சயன் இரண்டு மணிக்கு வந்துவிட்டான்.

    பசிக்குது லாவண்யா. சாப்பாடு போடு.

    அவனுக்குப் பரிமாறிவிட்டு, அவளும் சாப்பிட உட்கார்ந்தாள்.

    தூத்துக்குடி போனா திரும்பி வர எத்தனை நாளாகும்?

    பத்து நாள் தாராளமா ஆகும்.

    முத்து வாங்கிட்டு வர்றீங்களா?

    கண்டிப்பா.

    கொஞ்சம் ரசம் ஊத்திக்குங்க.

    வேணாம், போதும். எழுந்துவிட்டான்.

    ஏன் நீங்க சரியாச் சாப்பிடவே இல்லை? உங்களுக்காக சிக்கன் பண்ணி வச்சேனே?

    இல்லைமா! மனசே சரியில்லை.

    ஏன்? என்ன காரணம்?

    அவளும் கையைக் கழுவிவிட்ட பின் எழுந்து வந்தாள்.

    இன்னிக்குக் காலைல ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு.

    என்ன?

    ஒரு தூக்குத் தண்டனைக் கைதி தப்பிட்டான்.

    அய்யோ...

    நாளைக்குக் காலைல அவனுக்குத் தூக்கு தண்டனை. இன்னிக்கு அவன் தப்பியாச்சு.

    அது எப்படீங்க?

    "தெரியலை. நிச்சயமா

    Enjoying the preview?
    Page 1 of 1