Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjai Thottu Sollu
Nenjai Thottu Sollu
Nenjai Thottu Sollu
Ebook99 pages37 minutes

Nenjai Thottu Sollu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465773
Nenjai Thottu Sollu

Read more from Devibala

Related to Nenjai Thottu Sollu

Related ebooks

Reviews for Nenjai Thottu Sollu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjai Thottu Sollu - Devibala

    13

    1

    மேகாவுக்கு பொறிஇயல் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது! 12 -வது வகுப்பிலும், நுழைவுத் தேர்விலும் ஏராளமான மதிப்பெண்களைப் பெற்று விட்டதால் பொறிஇயல் கல்லூரியில் கேட்ட பிரிவு கிடைத்து விட்டது!

    இன்று மேகா கல்லூரிக்குப் புறப்படும் நாள்.

    வீடே பரபரப்பாக இருந்தது!

    மேகாவை தயார் செய்ய, அம்மா சந்திரிகா பரபரப்பில் இருந்தாள். அவளை சீக்கிரமே எழுப்பிக் குளிக்க வைத்து, அவளுக்கான உடைகளைத் தேர்ந்தெடுத்து...

    அப்பா கணபதிக்கு அதை விடப் பரபரப்பு!

    மேகா அவர்களுக்கு ஒரே மகள் என்பதால் அவளைத் தரையில் நடக்க விடாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

    மேகாவும் படிப்பு, அழகு எதிலும் சோடை போகவில்லை! மற்றவர்கள் பார்த்து அதிசயிக்கும் படிதான் இருந்தாள்.

    சிவசு உள்ளே நுழைந்தான்.

    மேகா ரெடியாக்கா?

    சந்திரிகா வெளியே வந்தாள்.

    ரெடி பண்ணிட்டே இருக்கேன் சிவசு!

    அவளுக்கு ஏதாவது சாப்பிடக் குடுங்க! இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல ராகுகாலம் தொடங்கிடும். அதுக்குள்ளே வண்டியை எடுத்தாகணும்!

    சரி சிவசு!

    கணபதி சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தார்.

    அம்மா தோசை, சட்னியை ஒரு பிளேட்டில் எடுத்து வர, அப்பா மேகாவுக்கு ஊட்டினார்.

    போதும்பா!

    சிவசு வந்து மிரட்டினான்.

    ஒழுங்கா சாப்பிடு! இல்லைனா ஒடம்புல தெம்பு இருக்காது! இப்படி குடுங்க மாமா! நான் சாப்பிட வைக்கறேன்!

    விடு சிவசு. ஏன் இப்படி கொடுமைப் படுத்தற? பதினைந்து நிமிடங்களுக்குள் சாமியை வணங்கி, பெற்றவர்களை மேகா நமஸ்கரித்தாள்.

    சிவசு அங்கிளை முதல்ல கும்பிட்டுக்கோ! உன் முன்னேற்றத்துக்கு அவரும் ஒரு காரணம்!

    சந்திரிகா சொல்ல, மேகா சிவசுவின் காலில் விழுந்தாள்.

    நல்லாருடா!

    நாலு பேரும் புறப்பட்டு வர, சிவசு டிரைவர் இருக்கையில் அமர்ந்தான்.

    நான் அங்கிள் பக்கத்துல!

    முன் கதவைத் திறந்து மேகா ஏறிக் கொண்டாள்.

    பின்னால் அப்பா - அம்மா!

    சான்ட்ரோ புறப்பட்டது! இவர்கள் கல்லூரியை எட்டுவதற்குள் கொஞ்சம் முன் கதை!

    கணபதி தனியார் விமானக் கம்பெனி ஒன்றில் உயர் அதிகாரி!

    சந்திரிகா பட்டதாரி - முறையாக சங்கீதம் கற்றவள். ஆனால் வேலைக்குப் போகவில்லை!

    கணபதிக்கு உடன் பிறந்தோர் ஐந்து பேர் - ரெண்டு தங்கைகள் - மூன்று தம்பிகள்.

    சிறு வயதில் தகப்பனாரை இழந்ததால் உடன் பிறப்புகளை கரையேற்றியவர் கணபதிதான்.

    கடனை வாங்கி சகல கடமைகளையும் முடித்தவர்.

    அதனால் திருமணம் தாமதம்.

    முப்பத்தி மூன்று வயதில்தான் திருமணம். உத்யோகத்தில் இருந்த சந்திரிகாவை அதை விடச் சொல்லிவிட்டார். ரெண்டு பேரும் வேலைக்குப் போனா, குடும்பத்தை கவனிக்க முடியாது என்பதால் சந்திரிகாவை அனுப்பவில்லை!

    தவிர, வயதான விதவைத் தாயார்!

    கல்யாணமாகி இரண்டு வருடங்கள் கழித்துத் தான் மேகா பிறந்தாள்.

    அவள் ஒருத்தி போதும் என்று இருவருமே தீர்மானித்துவிட்டார்கள். குழந்தை பிறந்த ராசியில் மேலும் பதவி உயர்வும், சமூக அந்தஸ்த்தும் உயர, பணவரவு அதிகமானது! சொந்தமாக ஒரு வீட்டைக்கட்ட சந்திரிகா ஆலோசனை சொல்ல, கணபதி அதற்கான முயற்சியில் இறங்கி, ஒரே வருடத்தில் வீடு தயாராகிவிட்டது!

    உடன் பிறப்புகளை அழைத்து பிரமாதமாக புது மனை புகு விழாவை நடத்தினார்.

    வாடகை வீட்டில் இருக்கும்போதே, பக்கத்து வீட்டுக்கு நண்பனைப் பார்க்க அடிக்கடி சிவசு வருவான்.

    அதில் எப்படியோ பழக்கமாகி சிவசு நெருங்கிவிட்டான். சொந்த வீடு கட்டி இவர்கள் வந்ததும் அடிக்கடி சிவசு வரத் தொடங்கினான்.

    அக்கா, மாமா என அழைத்துக் கொண்டு அந்த வீட்டில் ஒருவனாக ஆகிவிட்டான்.

    கணபதியின் அம்மாவுக்கு ஏனோ சிவசுவைக் கண்டாலே பிடிப்பதில்லை!

    அதற்கு சந்திரிகா நேர் எதிர்.

    உட்கார வைத்துப் பரி மாறுவாள். அவனுக்குப் பிடித்ததைக் கேட்டுச் செய்வாள்.

    சிவசுவும் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருந்தான்.

    சந்திரிகாவுக்கு நிறைய சின்னச் சின்ன உதவிகளைச் செய்தான்.

    அவனுக்கு உறவென்று சொல்லிக் கொள்ள யாருமில்லை! 23 வயது இளைஞன்.

    அதனால் சொந்தத் தம்பி போல சந்திரிகாவுக்கு ஒரு வாஞ்சை!

    ஓட்டல் சாப்பாடு சேராமல் அடிக்கடி வயிற்று வலி வரும். பெரும்பாலும் இங்குதான் சாப்பாடு!

    ஒருமுறை முடியாமல் படுத்து கணபதிதான் கூட இருந்து கவனித்தார்.

    சொந்த வீட்டுக்கு வந்த பிறகும் இங்கே வர அவன் ஆசைப்பட்டான்.

    அதை நாசூக்காக சந்திரிகாவிடம் சொல்லியும் விட்டான். இரவு கணபதியிடம் அந்தப் பேச்சை சந்திரிகா எடுத்தாள்.

    மாடியில் ஒரு அறையும், தனியாக இணைப்புக் குளியலறையும் இருந்தது - விருந்தாளிகள் வந்தால் தங்கிக் கொள்ள!

    என்னங்க! எப்பவும் நமக்கு விருந்தாளிகள் வரப் போறதில்லை! சிவசுவை அங்கே தங்க வச்சிட்டா என்ன? நமக்கும் உதவியா இருக்கும்!

    சிவசு வருவதில் கணபதிக்கு எந்தத் தடையும் இல்லை!

    சரி! வரச் சொல்லு!

    மறுநாள் சிவசு வர, சந்திரிகா விவரத்தைச் சொல்லி விட்டாள்.

    என்ன வாடகைக்கா?

    உங்கிட்ட நான் பணம் கேட்டேனா சிவசு? எங்களை அவமானப்படுத்தறியா?

    "தப்புக்கா! உங்களுக்கும் குடும்பம் இருக்கு! வாடகை நீங்க வாங்கலைனா,

    Enjoying the preview?
    Page 1 of 1