Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuthiraivaal Kuttrangal
Kuthiraivaal Kuttrangal
Kuthiraivaal Kuttrangal
Ebook135 pages1 hour

Kuthiraivaal Kuttrangal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kuthiraivaal Kuttrangal

Read more from Devibala

Related to Kuthiraivaal Kuttrangal

Related ebooks

Related categories

Reviews for Kuthiraivaal Kuttrangal

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuthiraivaal Kuttrangal - Devibala

    24

    1

    அவசரமாகத் தயாராகித் கொண்டிருந்தான், பாண்டியன்.

    முகத்தில் ஒரு வாரத்துக்கான கருமை மிஞ்சியிருந்தது. கண்களில் சின்னதாக சோர்வு.

    உடைகளை மாற்றிக்கொண்டு, பெட்டியை அவசரமாகத் திறந்தான்.

    காலடி ஓசை கேட்க, பெட்டியை டக்கென மூடினான்.

    கல்யாணி உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

    எ... என்ன கல்யாணி?

    உங்க அறைக்குள்ளே வர நான் அனுமதி கேட்கணுமா?

    அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கல்யாணி!

    எங்கே புறப்பாடு? அதுவும் இத்தனை சீக்கிரமா?

    நண்பர் ஒருத்தரை பார்க்கிறதுக்கு! பாண்டியன் வழியும் வியர்வையை அவசரமாக புறங்கையால் துடைத்தான்.

    நண்பர் இருக்கிற இடம் கிண்டியா? அவருக்கு நாலு கால், ஒரு வால் உண்டா?

    கல்யாணி?

    நீங்க திருந்தவே மாட்டீங்களா? மறுபடியும் குதிரைப் பந்தயமா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. எங்கிட்ட ஏது பணம்?

    ஏனில்லை? சேட்டு கிட்ட நூத்துக்கு அஞ்சு ரூபாய்னு நேத்து சாயங்காலம் மூவாயிரம் ரூபா நீங்கள் கடன் வாங்கினது எனக்குத் தெரியும். போனஸ்ல அதைத் திருப்பிக் கொடுக்கிறதா ஒப்பந்தம். அப்படித்தானே?

    இ... இல்... ஆமாம் கல்யாணி!

    இது உங்களுக்கே நல்லாயிருக்கா? உங்கள் குதிரைப் பந்தய வெறியால நம்ம குடும்பம் சீரழியத் தொடங்கியாச்சுனு உங்களுக்குப் புரியலையா? கல்யாண வயதில உங்களுக்கு ஒரு தங்கை இருக்கா. அவளைக் கரையேத்தி விடறது நம்ம பொறுப்பில்லையா? வேண்டாங்க. இன்னிக்கு கிண்டிக்கு நீங்கள் போகக்கூடாது. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்களேன்!

    இன்னிக்கு நிச்சயம் தோக்கமாட்டேன், நான்!

    குடிகாரன் சத்தியமும், குதிரைப் பந்தய வெற்றியும் நம்பகமானது இல்லீங்க. வேண்டாங்க!

    விடு, கல்யாணி!

    என்னங்க! காலைல பூங்கொடி கல்யாண விஷயமா தரகர் வர்றேன்னு சொல்லியிருக்காரு. நீங்க இல்லாமப் போனா எப்படி?

    ச்சே! அபசகுனம். நான் போகும்போதே ஒவ்வொரு வாட்டியும் நீ இப்படி குறுக்கே வர்றதாலதான் என்னால் ஜெயிக்க முடியறதில்லை!

    அண்ணி, அவரை விட்ருங்க!

    பூங்கொடி... நீ...

    எனக்காக நீங்க போராடி ஜெயிக்கப் போறதில்லை. அண்ணன் போகட்டும். எனக்குத் திருமணம் வேண்டாம். அவர் ஆசையாவது நிறைவேறட்டும்.

    பாண்டியன் அதைப் பொருட்படுத்தாமல் வாசலைக் கடக்க-

    திரும்பினான்.

    கன்னிப்பொண்ணு கண்ணீர் விட்டால், குடும்பத்துக்கு நல்லதில்லீங்க. நமக்கு ஏன் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை தெரியுமா? கல்யாணமாகி வருஷம் அஞ்சு முடிஞ்சாச்சே! இந்தக் குழந்தைக்கு ஒரு வாழ்க்கையை உண்டாக்கித் தராத பாவம்தான்!

    சரேலென வெளியேறிவிட்டான், பாண்டியன்.

    கல்யாணியின் வார்த்தைகள் அவனது தலைக்குள் உட்கார்ந்து தபேலா வாசித்துக் கொண்டிருந்தன.

    ஒரு நொடி ‘இந்த வெறியை விட்டுவிடலாமா?’ என்று கூடத் தோன்றியது.

    ‘ச்சே! விடக்கூடாது. ‘பஞ்சகல்யாணி’க்கு பத்துவாட்டி தர்றான். மூவாயிரத்தை அப்படியே ஆடினால் முப்பதாயிரம் வரும். பூங்கொடி கல்யாணத்தை முடிச்சிடலாம்!’

    மின்சார ரெயிலில் ஏறி உட்கார்ந்தான்.

    அடடே! வந்துட்டியா பாண்டியா?

    கோபால் இவன் தோளில் கை போட்டான்.

    ‘பஞ்சகல்யாணி’ தானே?

    சந்தேகம்தான்.

    ஏண்டா? பாண்டியன் பதறினான்.

    பஞ்ச கல்யாணியோட பழைய சரித்திரமெல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால் ‘மெட்ரோ’வை கவனிச்சியா? பெங்களூர்ல நாலு பந்தயம். ஊட்டியில் கோல்டன் பிளேட், ஐதராபாத்ல ரெண்டு பந்தயம்னு அடி அடின்னு சும்மா வாயுவேகம்தான். நான் மெட்ரோ மேலதான் ஆடப் போறேன்!

    என்னைக் குழப்பிட்ட கோபாலா, நீ!

    கிண்டி ரெயில் நிலையத்தில், பந்தயப் புத்தகங்கள் விற்கும் பையன்கள் துரித கதியில் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்க -

    மைதானத்தை நோக்கி மனசஞ்சலத்துடன் நடக்கத் தொடங்கினான், பாண்டியன்.

    டிக்கெட் பெற்று உள்ளே நுழைந்து ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டான்.

    பந்தயக் கடைகள் திறக்கப்பட -

    பரபரப்பான மக்கள், பணம் கட்ட அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    பஞ்சகல்யாணிக்கு பத்து முறையும், மெட்ரோவுக்கு பதினாலு முறையும் தந்திருந்தார்கள்.

    கோபால் சொன்னால் சரியாக இருக்கும். நிச்சயம் அந்தக் குதிரை ஜெயிக்கும். மெட்ரோவில் முழுமையாக ஆடிவிட வேண்டியதுதான். வெற்றியடைந்தால் ஏறத்தாழ அரை லட்சம்.

    கடவுளைத் துதித்துக் கொண்டு பணத்தைக் கட்டினான், ‘மெட்ரோ’ மீது.

    பந்தயம் தொடங்கிவிட்டது.

    படபடப்பில் கண்களை இருட்டியது.

    கமான் மெட்ரோ... கமான் மெட்ரோ... கூச்சல் உச்சகட்டத்தை அடைய, குபீரென்று எழுந்து நின்றான் பாண்டியன்.

    ‘மெட்ரோ’வும், ‘பஞ்சகல்யாணி’யும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஓடி... புகைப்பட விளிம்பில் பஞ்சகல்யாணி மூக்கை நுழைத்துவிட்டது.

    என்ன ஜெயிச்சிட்டியா பாண்டியா?

    உன் பேச்சைக் கேட்டு மூவாயிரம் போச்சு!

    ஆனால், கடைசி நேரத்துல நான் பஞ்சகல்யாணி மேல ரெண்டாயிரம் கட்டிட்டேன். இருபதாயிரம் கிடைச்சிருக்கு! கோபால் விசிலடித்தபடி விலக, முப்பதாயிரம் போன சோகம் - கோபாலின் மேல் கோபம் எல்லாமாக தலை கவிழ்ந்தபடி உட்கார்ந்தான், பாண்டியன்.

    அடுத்த பந்தயத்துக்காக மைதானம் ஆயத்தமாகிக் கொண்டிருக்க -

    மன்னிக்கணும்! ஓர் உதவி செய்ய முடியுமா?

    இனிமையான குரல் கேட்டு ‘விருட்’டென தலையை உயர்த்தினான், பாண்டியன்.

    அழகான பெண் ஒருத்தி எதிரே. வெளிநாட்டு சிங்கப்பூர் சேலை ஒன்று அவள் பட்டு மேனியில் படர்ந்திருக்க, நாசூக்காக இடுப்பை ஒடித்து ஒய்யரமாக நின்றாள். நல்ல டில்லி கோதுமை நிறத்தில் மினு மினுத்தாள்.

    அவளது பெரிய கண்கள் ஒரு பட்டாம்பூச்சி போல படபடக்க, ரோஜா நிற நாக்கால் பவள உதடுகளை ஒரு முறை தடவிக் கொண்டாள்.

    ஐந்தரையடி உயரம் இருக்கக்கூடும். நெடுநெடுவென ஏகமாக வளர்ந்திருந்தாள். லேசான பழுப்பு நிறத்தைப் பெற்றிருந்த கூந்தல், தோளோடு கத்தரிக்கப்பட்டு அவளது எழிலைக் கூட்டியது.

    நான்... நானா?

    நான் பந்தயத்துல பணம் கட்ட வந்திருக்கேன். எது நல்ல குதிரைன்னு சொல்ல முடியுமா?

    நான்... நான் எப்படி?

    உங்களைப் பார்த்ததும் விவரம் தெரிஞ்சவர்னு மனசுல பட்டதால அணுகினேன். உதவ முடியுமா?

    எவ்வளவு கட்டணும்?

    சும்மா பத்தாயிரம் ரூபாய்தான். பொழுது போகலை வீட்ல. விளையாட வந்தேன்! அவள் கண்ணடித்தது போலத் தோன்றியது.

    ‘ச்சே... பிரமையா?’

    சரி வாங்க!

    கடைகளை அணுகினான். ஏறத்தாழ மூடும் தறுவாய்.

    என்னை நம்பிட்டு, பணம் திரும்ப வரலைனா?

    வெற்றியும் தோல்வியும் சூதாட்டத்துல மாறி மாறி வரத்தான் செய்யும். நான் கவலைப்படலை. நீங்க சும்மா ஆடுங்க!

    ‘ராயல் கிங்’ குதிரைக்கு பதினைந்து முறை அளிக்கப்பட்டிருந்தது.

    அதைக் கழுதை என்றார்கள். யாரும் பணம் கட்ட நாதியில்லாமல் காலியாகக் கிடந்தது. ஒரு வெறியில் சடாரென அதன்மேல் பத்தாயிரத்தைக் கட்டிவிட்டான், பாண்டியன்.

    பந்தயம் தொடங்கிவிட்டது.

    என்னங்க, தோத்துட்டா?

    அட விடுங்க சார். நானே கவலைப்படலை!

    ராயல்கிங்... ராயல்கிங்... என்றொரு கூச்சல் கேட்க வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான், பாண்டியன்.

    மின்வெட்டும் நேரத்தில், கடைசி வினாடியில் ‘தம்’

    Enjoying the preview?
    Page 1 of 1