Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thevai Oru Thevathai
Thevai Oru Thevathai
Thevai Oru Thevathai
Ebook647 pages5 hours

Thevai Oru Thevathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thevai Oru Thevathai

Read more from Rajeshkumar

Related to Thevai Oru Thevathai

Related ebooks

Related categories

Reviews for Thevai Oru Thevathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thevai Oru Thevathai - Rajeshkumar

    1

    விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய் சூரியனின் விடியல் வெளிச்சத்தில் வங்கக் கடல் தங்கக் கடலாய் மினுமினுக்க, முட்டை வடிவ ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருந்த தீர்க்கா தன் தந்த நிற மணிக்கட்டில் அப்பியிருந்த வாட்சைப் பார்த்தாள். மணி ஏழு.

    விமானப் பணிப்பெண்ணின் செர்ரி பழக்குரல் ஸ்பீக்கரில் அழகான ஆங்கிலம் பேசியது.

    பயணிகளின் அன்பான கவனத்திற்கு... அடுத்த பத்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. பயணிகள் சீட்பெல்ட்களை அணிந்து கொள்ள வேண்டுகிறோம். புகை பிடிப்பதைத் தவிர்க்கவும்.

    தீர்க்கா சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு சாய்ந்து உட்கார்ந்த விநாடி பீங்கான் பொம்மை போல் அழகாயிருந்த அந்த ஏர்ஹோஸ்டஸ் ஒரு சிறிய டைரியோடு அவளை நெருங்கினாள்.

    ஆட்டோகிராப் ப்ளீஸ்...

    தீர்க்காவின் பெரிய கரிய விழிகளில் ஆச்சரியம் அலைபாய்ந்தது.

    ஆட்டோகிராப்...? மீ?

    அந்த பீங்கான் பொம்மை கண்களில் சிரித்தது.

    எஸ் மேடம்... நீங்களேதான்!

    நான் ஆட்டோகிராப் போடுற அளவுக்கு விஐபி கிடையாது. நான் ஒரு சாதாரண விமானப் பயணி...

    சாரி மேடம்... என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க விவிஐபி. நீங்க என்னதான் முகத்திரையைப் போட்டுக்கிட்டு உங்களை வெளிப்படுத்திக்காவிட்டாலும் நான் உங்களை கண்டு பிடிச்சுட்டேன்...!

    விமானம் இப்போது வெகுவாய் கீழே இறங்கி ரன்வேயைத் தொட்டு ஒரு பென்ஸ் காரைப்போல் வேகமாய் ஓடிக் கொண்டிருக்க விமான நிலையத்தின் கண்ணாடி கட்டிடமும், ரன்வேயில் நின்றிருந்த மற்ற விமானங்களும் விநாடி நேரத்துக்குள் பார்வையில் பட்டு காணாமல் போயிற்று.

    தீர்க்கா ஒரு புன்முறுவலோடு அந்த ஏர்ஹோஸ்டஸ் பெண்ணை ஏறிட்டாள்.

    இட்ஸ் ஓகே! நான் யார்னு சொல்லுங்க பார்ப்போம்.

    விமானப் பணிப்பெண்ணின் லிப்ஸ்டிக் பூச்சில் குளித்திருந்த உதடுகள் ஒரு புன்சிரிப்பில் மெள்ள விலகி அவளுடைய சீரான பல் வரிசையைக் காட்டியது.

    "மேடம்! உங்க உண்மையான பேரு தீர்க்கா. புனைப்பெயர் தீ. அதாவது உங்க உண்மையான பெயரில் இருக்கிற முதல் எழுத்தான ‘தீ’தான் உங்க புனைப்பெயர். இந்தப் பெயரில்தான். நீங்க அற்புதமான கதைகளை எழுதிட்டு வர்றீங்க.

    நீங்க உங்களை விளம்பரப் படுத்திக்க விரும்பாததால எந்த பத்திரிகைக்கும் உங்க போட்டோவைத் தர்றது இல்ல. நான் சொன்னதெல்லாம் சரியா மேடம்?"

    தீர்க்காவின் விழிகளில் வியப்பு பரவியது. அவளுடைய அழகான சின்ன நெற்றியில் மெலிதான கோடு ஒன்று உற்பத்தியாகி உடனே மறைந்தது.

    இதெல்லாம் உங்களுக்கு எப்படி...?

    "தெரியும்னு கேட்கறீங்களா மேடம்! என்னோட அப்பா ஹரிஹர சுப்ரமணியன், ஒரு அட்வர்டைசிங் கம்பெனியை நடத்திட்டு வர்றார். அவருக்கு உங்களைத் தெரியும். லாஸ்ட் டைம் புக்ஃபேர் நடந்த போது நானும் அப்பாவும் போயிருந்தோம். நீங்களும் வந்து இருந்தீங்க. ஆனா உங்களை அங்கிருந்த யாருக்கும் தெரியல. கூட்டத்தோடு கூட்டமாய் நின்னு புத்தகங்களை எடுத்து பார்த்துட்டு இருந்தீங்க. என்னோட அப்பா உங்களைக் காட்டி ‘அவங்க யார் தெரியுமா’ன்னு கேட்டார். நான் ‘தெரியாது’ன்னு சொன்னதும் பக்கத்து புக் ஸ்டாலில் இருந்த ஒரு நாவலை எடுத்துக் காட்டினார். அந்த நாவலின் தலைப்பு ‘கரைக்கு வராத அலைகள்’ - எழுதியவர் ‘தீ’னு போட்டிருந்தது. ‘இந்த ‘தீ’தான் அவங்க. முழுப்பேர் தீர்க்கா’ன்னு அப்பா சொன்னார். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஏன்னா நான் உங்க நாவல்களை சமீபகாலமாய் நிறைய படிச்சிருக்கேன்.

    நான் உங்களோட சின்சியர் அண்ட் டெடிகேட்டட் ஃபேன். ஸோ... ஐ... நீட்... யுவர் ஆட்டோகிராப்."

    தீர்க்கா சிரித்தாள்.

    உங்க அப்பாவினால நான் இன்னிக்கு மாட்டிக்கிட்டேன். உங்க பேர் என்ன?

    மணிமொழி.

    அழகான தமிழ் பேர்... ரொம்ப நாளைக்கப்புறம் காதுக்குள்ள தேன் பாயுது!

    ரன்வேயில் விமானத்தின் வேகம் குறைந்து நின்றது. மணிமொழியிடமிருந்து டைரியை வாங்கினாள் தீர்க்கா.

    ஏதாவது ஒரு வாசகம் எழுதி கையெழுத்து போடுங்க மேடம்!

    தீர்க்கா சில விநாடிகள் யோசித்து விட்டு டைரியின் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

    வாழ்க்கை என்னும்

    வானத்தில்

    உயர உயரப் பறந்து

    வெற்றிச் சிகரத்தைத் தொட

    என் வாழ்த்துக்கள்!

    - தீ

    மணிமொழி அதை வாங்கி படித்துவிட்டு, ஃபென்டாஸ்டிக் மேடம்... ஒரு ரைட்டராலதான் இப்படி சமயோஜிதமாய் எழுத முடியும்.

    தீர்க்கா மணிமொழியின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு தன்னுடைய சிறிய சூட்கேஸ் ஒன்றை எடுத்துக் கொண்டாள். பயணிகள், விமானத்தின் இடுப்போடு பொருத்தப்பட்டிருந்த ஸ்டேர்சில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

    நான் வரட்டுமா?

    ஒரு நிமிஷம் மேடம்.

    என்ன?

    உங்களுக்கு நேட்டிவ் சென்னையா?

    இல்ல... கோவை...

    இப்ப சென்னைக்கு வந்து இருக்கீங்க... இங்கே யார் இருக்காங்க?

    இங்க என் ஃபிரெண்ட் ஒருத்தி இருக்கா. அவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்து அவகூட இருக்கணும்னு சொன்னதால புறப்பட்டு வந்தேன்.

    அப்படீன்னா சென்னையில்தான் ஒரு வாரம் இருக்கப் போறீங்க?

    ஆமா...

    சென்னையில் எங்க மேடம்?

    எழும்பூர்...

    உங்களோடு ஒரு செல்பி எடுத்துக்கலாமா மேடம்?

    தாராளமாய்... ஆனா நான் யார்ங்கிறது யாருக்கும் தெரியக்கூடாது.

    ஓகே மேடம்...

    மொத்த விமானமும் பயணிகள் இல்லாமல் ஒரு காலியான மினி தியேட்டர் மாதிரி தெரிய - தீர்க்காவும் மணிமொழியும் அதற்கு நடுவே போய் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

    தேங்க்யூ வெரிமச் மேடம்! நீங்க இவ்வளவு சிம்பிளா - ஹம்பிளாய் இருப்பீங்கன்னு நான் கொஞ்சமும் நினைச்ப் பார்க்கல மேடம்...!

    இந்த பிளைட்டுல எவ்வளவோ சினி ஸ்டார் - மினிஸ்டார்ஸ், பொலிடிக்கல் லீடர்ஸ் வந்து இருக்காங்க. நான் யாரையுமே பொருட்படுத்த மாட்டேன். கடமைக்காக ஸ்மைல் பண்ணி ஒரு ‘ஹலோ’ சொல்றதோட சரி.

    மற்றபடி அவங்க கூட ஸ்நேப் எடுத்துக்கவோ, ஆட்டோகிராப் வாங்கவோ நான் விருப்பப்பட்டது இல்ல. என்னோட வாழ்க்கையிலேயே முதல் தடவையாய் ஆட்டோகிராப்னு வாங்கினது உங்கக்கிட்டதான்!"

    ரொம்ப சந்தோஷம். இப்ப நான் இறங்கலாமா?

    ஸாரி மேடம்! இது என்னோட வி.சி. இதுல என் வீட்டு அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் இருக்கு. எப்ப வேணும்னாலும் காண்டாக்ட் பண்ணலாம்...

    தீர்க்கா புன்முறுவலுடன் தலையசைத்து விட்டு இறங்கினாள். மே மாசத்து சென்னை அந்த இளம் காலை வேளையிலேயே காற்று வீசாமல் சூடாய் இருந்தது.

    ரன்வேயில் பாதித் தூரத்தைக் கடந்து இருந்த போதே அவளுடைய கைப்பையில் இருந்த செல் போன் திடுமென்று விழித்துக் கொண்டு வைப்ரேஷனில் கிர்ரென்று உறுமியது. போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

    அவளுடைய தோழி மதுவிகா.

    காதுக்கு செல்போனை ஒற்றினாள்.

    குட்மார்னிங் கல்யாணப் பெண்ணே!

    குட்மார்னிங் எழுத்தரசியே... என்ன... சென்னை மண்ணை மிதிச்சுட்டியா?

    ம்... ஒரு நிமிஷமாச்சு!

    என்னோட அண்ணன் வசந்த் உன்னை ரிசீவ் பண்ண ஏர்போர்ட் வந்திருக்கார்!

    உன்னோட அண்ணன் கியூ பிராஞ்ச்ல ஒரு போலீஸ் ஆபீசர். அவருக்கு எவ்வளவோ வேலை இருக்கும். அவரை எதுக்காக ஏர்போர்ட் அனுப்பி வச்ச?

    இதோ பார் தீர்க்கா! நீ என்னோட கல்யாணத்துக்காக ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துட்ட. நாங்க உன்னை ஹானர் பண்ண வேண்டாமா?

    உன்னோட அண்ணனுக்கு சிரமமாய் இருக்குமேன்னு சொன்னேன்.

    மறுமுனையில் மதுவிகா சிரித்தாள்.

    ஒரு உண்மையை சொல்லட்டுமா?

    என்ன?

    அண்ணனேதான் வாலண்ட்டியராய் முன்வந்து ‘உன்னோட ஃபிரெண்ட் தீர்க்காவை ரிசீவ் பண்ண போகட்டுமா?’ன்னு கேட்டார்.

    சரி... சரி... உன்னோட பிரதர் வசந்த் என்னைப் பார்த்துட்டார். நான் நேர்ல வந்து பேசிக்கறேன். செல்போனை அணைத்த தீர்க்கா விசிட்டர் பவுண்டரியில் நின்றிருந்த உயரமான - தேகப்பியாச உடம்போடு கூடிய - இளைஞனை நோக்கிப் போனாள். அவன் கெட்டியான கரிய மீசைக்கு கீழே புன்னகைத்தான்.

    வெல்கம் டூ சென்னை மிஸ் தீர்க்கா.

    தேங்க்யூ...

    உங்க திரைமறைவு வாழ்க்கை எப்படியிருக்கு?

    புரியல...

    உங்க எழுத்துப் பணி எப்படியிருக்குன்னு கேட்டேன்.

    போலீஸ் புத்திய காட்றிங்களே...

    இருவரும் சிரித்துக் கொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து கார் பார்க்கிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

    சமீபத்துல நீங்க எழுதின ‘அவிழ மறுக்கும் அரும்புகள்’ நாவலைப் படிச்சேன். உங்களைப் பாராட்டறதா இருந்தா அந்த நாவல் அளவுக்கு நானும் ஒரு லெட்டர் எழுத வேண்டியிருக்கும்.

    தீர்க்கா சிரித்து விட்டு, எனக்கும் அது தான் பிடிச்ச நாவல் என்றாள்.

    கார் பார்க்கிங்கின் மையத்தில் சில்வர் நிறத்தில் பளபளக்கும் உடம்போடு நின்றிருந்த இன்னோவா காருக்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

    கார் வெளியே வந்து போக்குவரத்து அதிகமில்லாத அந்த அகலமான சாலையில் பிரவேசித்தது.

    வழியில் ஒரு நல்ல காபி ஹவுஸ் இருக்கு. காபி சாப்ட்டுட்டுப் போலாமா?

    வீட்ல போய்ப் பார்த்துக்கலாமே! நான் ஹோட்டல்களில் சாப்பிடறதை நிறுத்தி பல வருஷமாச்சு...

    குட் பாலிசி... சொன்னவன் காரின் வேகத்தை அதிகரித்தான். காலை நேர போக்குவரத்தற்ற சாலை. இறக்கைகள் இல்லாத ஒரு பறவையாய் பறந்தது இன்னோவா.

    வசந்த் பேசிக்கொண்டே காரை ஓட்டினான். அரசியல், சினிமா, இலக்கியம் என்று எல்லாத் துறைகளிலும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்து இருந்தான்.

    தீர்க்கா பிரமிப்போடு கேட்டு அவ்வப்பொழுது குறுக்கிட்டு தன்னுடைய அபிப்பிராயத்தையும் சொன்னாள். நாற்பது நிமிஷப் பயணம் - பேச்சின் சுவாரசியத்தில் நான்கு நிமிஷமாய் கரைந்து போக, தேராய் போய்க் கொண்டிருந்த இன்னோவா ஒரு ‘யூ டர்னிங்’ திரும்பி அந்த விஸ்தாரமான காம்பவுண்ட் கேட்டுக்குள் நுழைந்தது.

    தீர்க்கா திகைத்தாள்.

    ‘இது என்ன கட்டிடம்?’

    குனிந்து பார்த்தாள்.

    ஜெனரல் ஹாஸ்பிடல். பதற்றமாகி குழப்ப முகத்தோடு கேட்டாள். வசந்த்! இப்போ எதுக்காக ஜி.ஹெச். வந்திருக்கோம்?

    வசந்த் காரை ஓட்டிக்கொண்டே சொன்னான்.

    நீங்க இங்கே ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருக்கு.

    யா... யாரை?

    அவர் யார்ன்னு எனக்குத் தெரியாது. நீங்கதான் அவரைப் பார்த்துட்டு சொல்லணும்!

    தீர்க்கா கலவரமானாள்.

    அவர் எங்கே இருக்கார்?

    மார்ச்சுவரியில்... என்றான் வசந்த்.

    2

    வசந்த் சொன்னதைக் கேட்டு தீர்க்கா விழிகள் உறைந்து போனவளாய் அவனை ஏறிட்டாள்.

    என்ன சொன்னீங்க... எனக்கு வேண்டிய ஒருத்தர் மார்ச்சுவரியில் இருக்காரா...?

    வசந்த் இறுகிப் போன முகத்தோடு தலையசைத்தான்.

    ஆமா...!

    யாரது...?

    அதை நீங்கதான் சொல்லணும்...

    என்ன வசந்த்... ஆர்யூ பிளேயிங் வித் மீ...? நான் சென்னைக்கு வந்தது உங்களோட சிஸ்டர் மதுவிகாவைப் பார்க்கவும், அவளோட மேரேஜை அட்டெண்ட் பண்ணவும்தான். அதுவும் அவள் கட்டாயப்படுத்தி ஒரு வாரத்துக்கு முன்னாடியே சென்னைக்கு வந்துடணும்னு சொன்னதினால்தான் நான் என்னோட எல்லா வேலைகளையும் ஒரு வாரத்துக்கு ‘போஸ்ட் பாண்ட்’ பண்ணிட்டு வந்திருக்கேன். அப்படி நான் வந்ததுக்கு நீங்க தர்ற ‘மார்ச்சுவரி ரிசப்ஷன்’ ரொம்பவும் நல்லாவே இருக்கு...

    சாரி மிஸ் தீர்க்கா...! இப்படியொரு நிகழ்வை நானே எதிர்பார்க்கல. இன்னிக்கு காலையில் அஞ்சு மணிக்குத்தான் என்னோட கலீக் விக்னேஷ் எனக்கு போன் பண்ணி, ‘நாவலாசிரியை தீர்க்கா உன்னோட சிஸ்டர் மதுவிகாவுக்கு குளோஸ் பிரெண்ட்தானே?’னு கேட்டான். நான் ‘ஆமா’ன்னு சொன்னதும் ‘ஒரு கேஸ் விஷயமாய் அவங்களை என்கொயர் பண்ணனும். போன் நம்பர் குடு’ன்னு கேட்டான். நான் அதுக்கு ‘தீர்க்காவே இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னைக்கு வரப்போறாங்க. நான் தான் ஏர்போர்ட்டுக்குப் போய் ரிசீவ் பண்ணப்போறேன்’னு சொன்னேன். ‘ரொம்ப நல்லதாப் போச்சு. தீர்க்காவை ஏர்போர்ட்டிலிருந்து நேராய் ஜி.எச். மார்ச்சுவரிக்கு கூட்டிட்டு வந்துடு’ன்னு சொன்னான்.

    வசந்த் கூறிய எல்லாவற்றையும் உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்ட தீர்க்கா, அதிர்ச்சியிலிருந்து இன்னமும் விலகாத கலக்கம் மண்டிய பார்வையோடு கேட்டாள்.

    மார்ச்சுவரியில் இருக்கிறது ஆணா... பெண்ணா?

    பெண்...

    மரணம் எப்படி?

    ரேப்ட் அண்ட் மர்டர்...

    எனக்கு அந்தப் பெண்ணைத் தெரிந்து இருக்கும் என்கிற முடிவுக்கு நீங்களும் உங்க நண்பர் விக்னேஷும் வரக் காரணம்?

    மொதல்ல நீங்க அந்த கொலையான பெண்ணைப் பாருங்க... அப்பறம் மத்ததைப் பத்தி பேசிக்கலாம்... வசந்த் சொல்லிக் கொண்டே சற்று வேகமாய் நடக்க ஆரம்பித்து விட... ஒரு பெருமூச்சோடு அவனோடு இணைந்து நடந்தாள் தீர்க்கா.

    அந்தக் காலை வேளையில் ஜி.எச்சின் ஒரு சில வார்டுகளைத் தவிர மற்ற வார்டுகள் அசாத்திய நிசப்தத்தில் உறைந்து போயிருந்தன. நர்சுகள் ஆங்காங்கே வெண்புறாக்களைப் போல் ஒரு சில விநாடிகளுக்கு மட்டுமே தட்டுப்பட்டு உடனே மறைந்தார்கள். புற நோயாளிகள் பகுதியில் பெண்கள் கைக்குழந்தைகளோடு நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள். தீர்க்காவின் இதயத் துடிப்பு தாறுமாறான லப்டப்பில் இருக்க, அவளுடைய நெற்றி வியர்த்து பிசுபிசுத்தது.

    ‘மார்ச்சுவரியில் இருக்கும் அந்தப் பெண் யார்? அவளோடு நான் எப்படி சம்பந்தப்படுகிறேன்.’

    ஹாஸ்பிடலின் பிரதான கட்டடங்கள் முடிந்து பின்பகுதியில் ஒரு பெரிய மரத்துக்கு கீழே காற்றில் பார்மலின் நெடியோடு மார்ச்சுவரியின் அந்தச் சிறிய கட்டடம் வந்தது. சற்றுத் தள்ளி ஒரு போலீஸ் ஜீப் தெரிய உள்ளே காக்கி யூனிபார்மில் அந்த இளைஞன் இறைந்து கொண்டிருந்த வயர்லெஸ்சை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தான். வசந்தையும், தீர்க்காவையும் பார்வையில் வாங்கியதும், ஜீப்பினின்றும் இறங்கி வேகவேகமாய் அவர்களை நோக்கி வந்தான். அண்மைக்கால சினிமாக்களில் அறிமுகமாகும் இளம் ஹீரோ மாதிரியான தோற்றம். தொப்பை சிறிதும் இல்லாத வயிறும், அகன்ற புஜங்களும் காக்கி யூனிபார்மை கச்சிதமாய் சிறை பிடித்திருந்தன.

    வசந்த் அறிமுகப்படுத்தி வைத்தான்.

    விக்னேஷ்... ஷி ஈஸ் மிஸ் தீர்க்கா...

    விக்னேஷ் அந்த இடத்தின் சூழ்நிலைக்கு பொருந்தாமல் மெள்ளச் சிரித்தான். ஒரு வணக்கம் சொல்லி விட்டுப் பேசினான்.

    நான் உங்களோட கதைகளை நிறையப் படிச்சிருக்கேன். அந்த நாவல்களைப் படிக்கும்போது உங்க வயசு நாற்பதுக்கு மேல இருக்கலாம்னு ‘கெஸ் ஒர்க்’ பண்ணியிருக்கேன்... பட் நேர்ல பார்க்கும்போதுதான் தெரியுது... ஒரு காலேஜ் கேர்ள் மாதிரி...

    சாரி... மிஸ்டர் விக்னேஷ்... உங்களோட பாராட்டைக் கேட்டு சந்தோஷப்படக்கூடிய நிலைமையில் நானில்லை. மிஸ்டர் வசந்த்கிட்ட ஏதோ என்கொயரின்னு சொன்னீங்களாம். மார்ச்சுவரியில் இருக்கிற அந்தப் பெண்ணை நான் பார்க்கணும்...!

    தேங்க்ஸ் ஏ லாட் ஃபார் யுவர் கோவாப்ரேஷன்... வாங்க பார்த்துடலாம்! சொன்ன விக்னேஷ் முன்னால் நடந்தான். தீர்க்காவும் வசந்தும் பின் தொடர்ந்தார்கள். ஒரு நிமிஷ நடையில் சாத்திய கதவோடு மார்ச்சுவரி வர, ஸ்டூலில் உட்கார்ந்திருந்த அந்த வெள்ளுடுப்பு மனிதர் பவ்யமாய் எழுந்து நின்றார்.

    சூசை!

    சார்...!

    அந்தப் பொண்ணோட பாடியை பார்க்கணும்!

    வாங்க சார்! கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். மூன்று பேரும் நுழைந்தார்கள்.

    தீர்க்கா ஒரு மார்ச்சுவரி அறைக்குள் நுழைவது அதுதான் முதல் தடவை. அந்த பெரிய அறை ஏசியின் உச்சபட்ச ஜில்லிப்போடு - நாசிக்குப் பிடிக்காத ஒரு நெடியோடு நாறியது.

    சூசை முதல் ஆளாய் நடந்து போய் அறையின் மூலையில் இருந்த ஒரு அலமாரிக்கு முன்பாய் போய் நின்று அதன் கைப்பிடியைப் பற்றி இழுத்தான்.

    அந்த தகர டிரே சத்தமில்லாமல் நீண்டு உள்ளே படுத்திருந்த ஒரு பெண்ணின் உடம்பைக் காட்டியது.

    மிஸ் தீர்க்கா! இப்படி வந்து பாருங்க...!

    தீர்க்கா தன்னுடைய எகிறும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாய் நகர்ந்து வந்து டிரேயை எட்டிப் பார்த்தாள்.

    அழகான அவளுடைய முகம் வீங்கியிருக்க, இரண்டு கன்னங்களிலும் நகக்கீறல்கள். உறைந்து போன கருஞ்சிவப்பு ரத்தத் தீற்றல்கள்.

    தீர்க்கா அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க அவளுடைய முதுகுக்குப் பின்னாலிருந்து விக்னேஷின் குரல் கேட்டது.

    என்ன மிஸ் தீர்க்கா...! இந்தப் பெண் உங்களுக்குத் தெரிந்த பெண்தானா?

    இல்லை... இந்தப் பெண்ணை எனக்குத் தெரியாது. இதுக்கு முன்னாடி நான் இவளைப் பார்த்ததே இல்லை...

    நீங்க பொய் சொல்லலியே...?

    நான் எதுக்காக பொய் சொல்லணும்? ஒரு பொண்ணைத் தெரிஞ்சிருந்தா ‘இந்தப் பொண்ணு எனக்குத் தெரிஞ்சவதான்’னு சொல்றதுல எனக்கென்ன பிரச்னை?

    வசந்த் விக்னேஷிடம் திரும்பினான்.

    விக்னேஷ்...! தீர்க்கா இந்தப் பொண்ணைத் தனக்குத் தெரியாது, இதுக்கு முன்னாடி தான் பார்த்தது இல்லன்னு சொல்லிட்டாங்க. இனிமே இவங்க இருக்க வேண்டியது இல்லையே...

    இல்லை... நீ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போலாம். என்னோட என்கொய்ரி ஈஸ் ஓவர்...!

    தீர்க்கா சற்றே கோபமாய் குறுக்கிட்டாள்.

    எனக்கு இந்தப் பெண்ணைத் தெரிஞ்சிருக்கும் என்கிற முடிவுக்கு நீங்க வர என்ன காரணம்?

    வசந்த் தீர்க்காவை ஏறிட்டான்.

    கார்ல போகும்போது நான் சொல்றேன். வாங்க.

    மூன்று பேரும் மார்ச்சுவரியை விட்டு வெளியே வந்தார்கள். விக்னேஷிடம் விடை பெற்றுக் கொண்டு நடக்க ஆரம்பித்தபோது வசந்தின் செல்போன் வாயைத் திறந்தது. எடுத்துப் பார்த்தான்.

    மதுவிகா.

    குரல் கொடுத்தான்.

    என்ன மது... சொல்லு!

    நீதான் சொல்லணும்... தீர்க்காவைக் கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு லேட்?

    வந்துட்டே இருக்கோம்... வர்ற வழியில் ஒரு இடத்துல டிராபிக்.

    இவ்வளவு காலை நேரத்துல டிராபிக்கா?

    சென்னையில் எந்த நேரத்துல எந்த இடத்துல டிராபிக் ஜாம் ஏற்படும்னு அந்தக் கடவுளால் கூட முன்கூட்டி சொல்ல முடியாது. கிண்டிக்கு பக்கத்துல ரோட்டுக்கு நடுவுல ஒரு மரம் விழுந்துட்டதால டிராப்பிக்கை டைவர்ட் பண்ணி விட்டிருக்காங்க. அதான் லேட்...

    இன்னும் எவ்வளவு நேரமாகும்?

    எப்படியும் ஒரு அரை மணி நேரமாயிடும்.

    கொஞ்சம் ஸ்பீடாய் வாண்ணா. எனக்கு தீர்க்காவை பார்க்கணும் போலிருக்கு! மறுமுனையில் மதுவிகா செல்போனை அணைத்து விட, வசந்த் காரை ஓட்டிக்கொண்டே தீர்க்காவை பார்த்தான்.

    நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்.

    என்ன?

    நீங்களும் நானும் ஜி.எச் போய் ஒரு டெட்பாடியை பார்த்தது என்னோட சிஸ்டர் மதுவிகாவுக்கு தெரிய வேண்டாம்.

    இதுல மறைக்க என்ன இருக்கு? உங்க போலீஸ் டிபார்ட்மெண்ட் பற்றின விசாரணை தானே...?

    இருந்தாலும் அவ பயப்படுவா...! எல்லாத்துக்கும் மேலாய் ‘வந்ததும், வராததுமாய் தீர்க்காவை மார்ச்சுவரிக்கு எப்படி கூட்டிட்டுப் போலாம்’னு சண்டை போடுவா... அவளுக்கு ஆதரவாய் என்னோட அம்மாவும், அப்பாவும் கட்சி சேர்ந்துட்டாங்கன்னா அந்தப் போர்ப் படையை என்னால சமாளிக்க முடியாது.

    தீர்க்கா மென்மையாய் புன்னகைத்தாள்.

    அவங்க அப்படி ஃபீல் பண்றதிலும் ஒரு அர்த்தம் இருக்கு. நான் சென்னைக்கு வந்தது மதுவிகாவோட கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதுக்காகத்தான். ஒரு சுபகாரியத்துக்கு வரும்போது மார்ச்சுவரிக்கு போயிட்டு வீட்டுக்குப் போறது எனக்கே என்னவோ போல்தான் இருக்கு.

    நீங்க ஒரு எழுத்தாளர். உங்களுக்கு நான் புதுசாக எதையும் சொல்லிடப் போறதில்ல. இந்த பிறப்பு, இறப்பு, கல்யாண வீடு, துக்க வீடு இதெல்லாம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல இருக்கற எனக்கு சாதாரண வார்த்தைகள்தான்.

    போலீஸ்காரங்க இப்படித்தான் பேசுவாங்கன்னு எனக்குத் தெரியும். பை... த... பை... நீங்க இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே...

    என்ன உங்க சந்தேகம்?

    மார்ச்சுவரியில் நாம பார்த்த பொண்ணுக்கும், எனக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குங்கிற முடிவுக்கு உங்க போலீஸ் டிபார்ட்மெண்ட் வர என்ன காரணம்?

    சாலையின் ஒரு வளைவில் காரை யூ டர்ன் எடுத்த வசந்த் பிறகு காரின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.

    நேத்து ராத்திரி பத்து மணிக்கு பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியிருந்த ரயில்வே டிராக்கில் கேங்க்மேன் ஒருத்தர் வழக்கமான சோதனைக்காக போயிட்டிருந்த போது டார்ச் வெளிச்சத்தில் ஒரு பொண்ணு தண்டவாளத்துக்கு நடுவில் குப்புற விழுந்து கிடந்ததைப் பார்த்திருக்கார். பதறிப் போனவராய் அந்தப் பொண்ணை நெருங்கியவருக்கு அதிர்ச்சி. முக்கலும் முனங்கலுமாய் அந்தப் பெண் உயிரோடு இருந்திருந்தா... கேங்க்மேன் உடனடியாய் போலீசுக்குத் தகவல் தரவும், ஆம்புலன்ஸ் ஸ்பாட்டுக்கு வந்தது. ஜி.எச்சில் பதினோரு மணிக்கு டிரீட்மெண்ட்டுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒரு மணி நேரம் உயிரோடு இருந்துட்டு ஒரு வாக்கு மூலத்தையும் குடுத்துட்டு இறந்துட்டா...!

    வாக்குமூலத்துல என்ன சொல்லியிருக்கா...?

    குரல் தெளிவாய் இல்ல. சில வார்த்தைகள் தவிர பெரும்பாலான வார்த்தைகள் புரியல. டாக்டர்ஸோட எக்ஸ்டர்னல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்படி அந்தப் பெண்ணை நான்கைந்து பேர் சேர்ந்து கற்பழிச்சிருக்காங்க. குரல்வளையையும் நெரிச்சிருக்காங்க. அவ இறந்துட்டதாய் நினைச்சு ரயில்வே டிராக்ல கொண்டு வந்து போட்டுட்டு போயிருக்காங்க... நல்ல வேளையாய் ரயில்வே கேங்க் மேன் பார்வையில் பட்டதால் அந்தப் பெண்ணை ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு போக முடிஞ்சது. வாக்கு மூலமும் வாங்க முடிஞ்சது. அந்த வாக்குமூலத்தில் அவள் தெளிவாய் சொன்ன சில வார்த்தைகளில் ஒரு வார்த்தை... எழுத்தாளர் தீர்க்கா!

    தீர்க்கா இடிந்து போனவளாய் தன் நெற்றியைப் பிடித்துக் கொள்ள, கார் ஒரு மேம்பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது.

    3

    தீர்க்கா உறைந்து போன நிலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டு வசந்த் காரை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டே கேட்டான்.

    என்ன தீர்க்கா... பேச்சையே காணோம்?

    எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல... மார்ச்சுவரியில் பார்த்த அந்த பெண்ணை நான் இதுக்கு முன்னாடி எங்கேயும் சந்திச்சதேயில்ல. ஆனா ஒருவேளை இப்படி இருக்கலாம்.

    எப்படி?

    என்னோட விசிறியாய் இருக்கலாம்.

    மே... பி... பட் ஒரு சின்ன நெருடல்.

    என்ன?

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் உயிர்போகும் நிலைமையில் போலீசார் கிட்ட வாக்கு மூலம் கொடுக்கும்போது எழுத்தாளர் தீர்க்காங்கிற உங்க பேரை ஏன் சொல்லணும்?

    அந்தப் பெண் வாக்குமூலம் கொடுக்கும்போது வேற சில வார்த்தைகளையும் தெளிவாய் பேசினதாய் சொன்னீங்க. அது என்னென்ன வார்த்தைகள்னு சொல்ல முடியுமா?

    நீங்களே அந்த வாக்குமூலத்தை கேட்கலாம். சொன்ன வசந்த் காரை ரோட்டின் ஓரமாய் நிறுத்தினான். தன் செல்போனை எடுத்து ஆடியோ ஆப்ஷனுக்குப் போய் ஆன் செய்து வால்யூமை உயர்த்தினான்.

    கொஞ்சம் உன்னிப்பாய் கேளுங்க... இல்லேன்னா ஒரு வார்த்தைகூட புரியாது! வசந்த் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு பெண்ணின் குரல் ஈனஸ்வர தொனியில் வெளிப்பட்டது.

    தீர்க்கா தன் இரண்டு காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டாள். பல வார்த்தைகள் புரியாத நிலையில் - ஆங்காங்கே ஓரிரு வார்த்தைகள் மட்டும் புரிந்தது.

    ‘அவங்க...’

    ‘அப்படி நடக்கும்னு...’

    ‘அடிச்சாங்க.’

    ‘மயக்கம்...’

    ‘தீர்க்கா... எழுத்தாளர்...’

    ‘சட்டம்...."

    ஒரு இரண்டு நிமிட வாக்குமூலத்தில் மேற்சொன்ன வார்த்தைகள் மட்டும் தெளிவாய் கேட்க மற்ற வார்த்தைகள் எல்லாம் அந்தப் பெண்ணின் பலஹீனமான குரலிலும் மூச்சிரைப்பிலும் காணாமல் போயிற்று.

    செல்போனை அணைத்த வசந்த் தீர்க்காவை ஏறிட்டான்.

    கேட்டீங்களா?

    ம்.

    முழு வாக்குமூலத்தையும் உங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுதா?

    இல்லை... மொத்தமே ஏழு வார்த்தைகள்தான் உடனே புரியற மாதிரி தெளிவாய் இருக்கு. அதுல ஒரு வார்த்தை என்னோட பேரு. மற்ற துண்டு துண்டான வார்த்தைகளை வச்சு யூகத்தின் அடிப்படையில் யோசனை பண்ணிப் பார்த்தா, அந்தப் பெண்ணை யாரோ பாலியல் பலாத்காரம் பண்ணி உடம்புல ரத்தக் காயங்களை ஏற்படுத்தி மரணத்தின் வாசல் வரைக்கும் கொண்டு போய் இருக்காங்கன்னு தெளிவாய் புரியுது. இப்படிப்பட்ட ஒரு அராஜக சம்பவத்தோடு என்னோட பெயர் சம்பந்தப்பட என்ன காரணம்னு மட்டும் எனக்குப் புரியல. பை...த...பை... அந்தப் பொண்ணு வாக்குமூலம் கொடுக்கும் போது பக்கத்துல இருந்தது யாரு?

    டாக்டர் பாலகுருவும் இந்த கேசை ஹேண்டில் பண்ற என்னோட ஃபிரெண்ட் விக்னேஷும்தான்!

    சுய உணர்வு இருக்கப் போய்தான் அந்தப் பொண்ணு வாக்குமூலம் கொடுத்திருக்கா இல்லையா?

    ஆமா...

    அப்படியிருக்கும்போது அவக்கிட்ட ‘நீ யாரு... உன்னோட பேர் என்ன?’ன்னு கேட்டிருக்கலாமே?

    டாக்டரும் விக்னேஷும் கேட்டிருக்காங்க. அவளும் ஏதோ பதில் சொல்லியிருக்கா... ஆனா அவ பேசினது ரெண்டு பேருக்குமே புரியல. தொடர்ந்து ரெண்டு மணி நேரம் பேசிட்டு உயிரை விட்டுட்டா...

    மேற்கொண்டு உங்க வே ஆஃப் இன்வெஸ்டிகேஷன் எப்படியிருக்கும்?

    அது விக்னேஷோட டியூட்டி. சுமார் பத்து மணிக்கு எனக்கு போன் பண்ணி பேசும்போது விபரம் தெரிய வரும். நீங்க இனிமேல் இதைப் பத்தி வொர்ரி பண்ணிக்க வேண்டாம். அந்தப் பொண்ணு யாரு, எந்த ஊரைச் சேர்ந்தவன்னு கண்டு பிடிச்சுட்டாலே போதும், பாதி உண்மைகளை வெளியே கொண்டு வந்துவிடலாம்! என்று சொல்லிய வசந்த் காரை ஸ்டார்ட் செய்து நகர்த்தினான்.

    சொன்னது... ஞாபகம் இருக்கா...?

    மதுவிகாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது. அதுதானே?

    ஆமா...!

    என்னிக்குமே தெரியாது...

    கார் அந்தப் பெரிய பங்களாவின் போர்டிகோவில் போய் நிற்கும்போதே மதுவிகா வாசற்படியில் ஆவலாய் காத்திருப்பது தெரிந்தது.

    சந்தன நிறம், ஒடிசலான தேகம், பெரிய கரிய விழிகள் என்று கொள்ளை அழகோடு இருந்த மதுவிகா உண்மையாகவே ஒரு மான் குட்டியைப் போல் ஓடிவந்து காரினின்று இறங்கிய தீர்க்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

    என்ன தீர்க்கா...! சாவகாசமாய் ஊரைச் சுத்திட்டு வர்ற!

    நான் என்ன செய்யட்டும் மது! தமிழ் நாட்டின் தலைநகரத்தில் இந்தக் காலை நேரத்துலேயே இவ்வளவு டிராபிக்! மில்லி மீட்டர், மில்லி மீட்டராய் ஊர்ந்து வர்றதுக்குள்ள உனக்கு கல்யாணமே நடந்து முடிஞ்சுடுமோன்னு பயந்துட்டேன்.

    "ஏய்...

    Enjoying the preview?
    Page 1 of 1