Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thenkoodum Sila Karkalum
Oru Thenkoodum Sila Karkalum
Oru Thenkoodum Sila Karkalum
Ebook115 pages36 minutes

Oru Thenkoodum Sila Karkalum

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465711
Oru Thenkoodum Sila Karkalum

Read more from Rajeshkumar

Related to Oru Thenkoodum Sila Karkalum

Related ebooks

Reviews for Oru Thenkoodum Sila Karkalum

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thenkoodum Sila Karkalum - Rajeshkumar

    14

    1

    அஸ்வின் க்ளினிக்.

    கட்டிடம் விஸ்தாரமான காம்பவுண்டுக்கு மத்தியில் முகப்புக் கண்ணாடிகள் மின்ன நளினமாய் உட்கார்ந்திருந்தது. விசிட்டிங் ஹவர்ஸ் முடிந்திருக்கவே ஆஸ்பத்திரி வராந்தாக்கள் வெறிச்சென்றிருந்தன. அவ்வப்போது கையில் மெடிக்கல் சார்ட்டை பிடித்த நர்ஸ்கள் கான்வாசின் மெல்லிய சப்தத்தோடு நடந்து சென்றார்கள்.

    டாக்டர் முகேஷ் ரவுண்ட்சை முடித்துக் கொண்டு இருக்கையில் வந்தமர்ந்தார்.

    இன்டர்காமை எடுத்து, நர்ஸ்.... ரூம் நெம்பர் ஆறில் இருக்கும் பேஷண்ட்டுக்கு இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு ட்ரிப்சை நிறுத்திடு. அப்புறம்... ஆடிட்டர் வள்ளியப்பன் கேஸ் ஹிஸ்டரியை எனக்கு அனுப்பி வை என்று சொல்லிக் கொண்டிருந்தபோது - அறைக் கதவு திறந்தது.

    அசிஸ்டெண்ட் சர்ஜன் தேவேந்திரன் உள்ளே பிரவேசித்தார்.

    குட்மார்னிங் டாக்டர்...

    குட்மார்னிங்.

    சொன்ன முகேஷ்- எதிர் இருக்கையில் அமரும் தேவேந்திரனைப் பார்த்துக் கேட்டார்.

    என்ன தேவேந்திரன்... எனிதிங்க் ஸ்பெஷல்?

    போன வாரம் ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்டுக்காக இன்டர்வியூ கார்டு அனுப்பியிருந்தோமே...

    ஆமா...

    இன்டர்வியூ அட்டெண்ட் பண்றதுக்காக அந்தப் பொண்ணு வந்திருக்கு.

    பின்புறமிருந்த கப்போர்டில் துழாவி ஒரு கனத்த ஃபைலை உருவியெடுத்தார் முகேஷ்.

    ஃபைலில் கத்தையாய் அப்ளிகேஷன்கள்.

    மேலாக இருந்த அப்ளிகேஷனில் அப்பிக் கிடந்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்.

    இந்தப் பொண்ணா?

    ஆமா.

    மதுரா?

    எஸ்.

    போட்டோஜெனிக் ஃபேஸ் இல்லையா தேவேந்திரன்?

    நேரில் பார்க்க இதை விடவும் ப்ரெட்டியா இருக்கா. சார்மிங் லுக்.

    வெளியே உட்கார்ந்திருக்கா அந்தப் பொண்ணு?

    ஆமா.

    முகேஷ் பக்கவாட்டிலிருந்த ஜன்னல் கர்ட்டனை வேகமாய் விலக்கிப் பார்த்தார்.

    ஆரஞ்சு நிற பாலிமர் நாற்காலியில் மதுரா தெரிந்தாள். மெழுகில் செதுக்கிய சிற்பம் போல நேர்த்தியான வடிவம். ஓரிரு முடிக்கற்றைகள் முன்னெற்றியில் ஃபேன் காற்றில் சுருண்டு பறந்தன.

    போட்டோவைப் பார்த்தப்ப காமிராவுக்காக ஸ்மைல் பண்றான்னு நினைச்சேன். ஆனா அவளோட ஃபேஸ்ல ஒரு பர்மனன்ட் புன்னகை உறைஞ்சிருக்கு...

    ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு இந்த மாதிரி ஒரு முகவெட்டு கண்டிப்பா தேவை.

    அவர் சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டின முகேஷ் தொடர்ந்தார்.

    முதல் பார்வையிலேயே இந்தப் பொண்ணை எனக்குப்பிடிச்சுப் போச்சு.

    தோற்றத்தை வெச்சு ஒருத்தரை எடை போட முடியாது டாக்டர்...

    அப்படிச் சொல்லாதீங்க தேவேந்திரன். சிலரைப் பார்த்தவுடனேயே அவங்க எப்படிப்பட்டவங்களா இருப்பாங்கன்னு நம்மால சொல்ல முடியும்.

    இந்தப் பொண்ணு எப்படிப்பட்டவங்கிறீங்க?

    பொறுமையானவளா, சின்சியரா வேலை செய்பவளா எனக்கு தோணுது. ரிசப்ஷன் பதவிக்கே உரிய சூட் அப்பியரன்சும் அவகிட்ட இருக்கு.

    பேசிப் பார்த்துட்டு முடிவு எடுக்கலாம்.

    தேவேந்திரன் சொல்ல - முகேஷ் பஸ்ஸரை அமுக்கினார்.

    அறைக்கு வெளியே அரை விநாடி மெல்லிசையாய் அது ஒலித்தது.

    ஒரு சிப்பந்தி எட்டிப் பார்த்தார்.

    இன்டர்வியூக்காக மதுரான்னு ஒரு பொண்ணு வந்திருக்கு. அந்தப் பொண்ணை உள்ளே அனுப்பு.

    தலையாட்டி விட்டு சிப்பந்தி மறைந்த சில நிமிஷங்களில் மதுரா உள்ளே பிரவேசித்தாள்.

    ஒரு தேவதை அறைக்குள் பிரவேசம் செய்வது போலிருந்தது.

    குட்மார்னிங் டாக்டர் குரலில் புல்லாங்குழல் வைத்திருந்தாள்.

    குட்மார்னிங். டேக் யுவர் ஸீட்...

    தாங்க்யூ.

    எதிரேயிருந்த நாற்காலியில் பவ்யத்தோடு அமர்ந்தாள்.

    அப்ளிகேஷன் தாளைப் புரட்டிக் கொண்டே - அவளைப் பார்த்துக் கேட்டார் முகேஷ்.

    பி. எஸ்ஸி... ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கம்ப்ளீட்டட்?

    ஆமா டாக்டர்.

    இதுக்கு முன்னால ரிசப்ஷனிஸ்ட் உத்தியோகம் பார்த்த அனுபவம் இருக்கா...?

    ஒரு வருஷம் ஹோட்டல் செண்பகாவில் வேலை பார்த்திருக்கேன்.

    அங்கே ஏன் கன்டினியூ பண்ணலை?

    ஹோட்டல் சூழ்நிலை பிடிக்கலை. பார்ல சிலர் குடிச்சிட்டு இன்டீஸண்ட்டா பிஹேவ் பண்ணினாங்க. பிடிக்கலை. வந்துட்டேன்.

    ரொம்ப சென்சிடிவ் டைப்பா தெரியறே.

    நோ. நான் ரொம்ப ஃப்ளெக்சிபிள் டைப். ஆனா தப்பான நோக்கத்தோட பேசறவங்ககிட்டே சென்சிடிவ்வாத்தானே இருக்க வேண்டியிருக்கு.

    குட்! உன்னோட ஃபேமிலி பேக்ரவுண்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

    அம்மாவும், அப்பாவும் காலமாகி ரெண்டு வருஷம் ஆச்சு. நானும் என்னோட அண்ணனும் மட்டும்தான் இருக்கோம்..

    "சம்பளம் எவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1