Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poothu Kottiya Paadhai
Poothu Kottiya Paadhai
Poothu Kottiya Paadhai
Ebook179 pages1 hour

Poothu Kottiya Paadhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Poothu Kottiya Paadhai

Read more from V.Usha

Related to Poothu Kottiya Paadhai

Related ebooks

Reviews for Poothu Kottiya Paadhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poothu Kottiya Paadhai - V.Usha

    28

    1

    இந்திரா ஒரு கையில் காப்பிக் கோப்பையும் மறுகையில் கவிதைப் புத்தகமும் எடுத்துக் கொண்டாள்.

    இன்று விடுமுறை நாள்.

    காந்தி ஜெயந்தி.

    பரபரப்பான அலுவலகம், அது கொடுக்கும் மனவேகம், எதிர்ப்படும் நோயாளிகளை கணிக்க வேண்டிய நெஞ்சப் பரபரப்பு, சிகிச்சை முறைகளைப் பற்றிய எண்ணவோட்டம் என்று எதுவுமேயில்லாத ஒரு அமைதியான நாள்.

    புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தாள்.

    ‘மற்றவை நேரில்’ என்றிருந்தது. ‘வெற்றிச்செல்வன்’ என்கிற ஆசிரியரின் பெயரில் கவனம் சென்றது.

    ‘ஆட்டுக்கறி கோழிக்கறி

    அறவே தொடமாட்டான்

    மீன்கறி சமைத்தாலோ

    முட்டையை அவனுக்கெதிரில்

    சாப்பிட்டாலோ

    முகஞ்சுளித்து

    அப்பால் நகர்ந்து கொள்வான்.

    சுத்தசைவம்

    என்று சொல்லிக் கொண்டு

    எப்படி முடிகிறது அவனால்

    மனுஷக் கறியை மட்டும்

    சுவைத்துச் சாப்பிட?

    முகத்தில் அறைந்த கவிதையை மறுபடி வாசிக்கவே கொஞ்சம் அச்சமாக இருந்தது. எழுத்துகளுக்கான நியாயம் நிச்சயமாக எழுதுபவரின் அனுபவத்தில் இருக்கும் என்று நினைத்தபோது அச்சத்தை விட அனுதாபமே மேலெழுந்தது. மனிதக்கறியை ரசித்துத் தின்பவன் எப்படி சைவமாக இருக்க முடியும்? சமணர்களைக் கழுவிலேற்றி, பௌத்தர்களைக் கொன்று குவித்த ‘சைவம்’ என்ற கோட்பாட்டை சிறுவயதிலிருந்து படித்துக் கொண்டு வருவது உடனே ஞாபகத்திற்கு வந்தது. எல்லோருக்குமே வாழ்க்கை, கனவுகளைப் போல சுகமானதாய் இருக்க முடியாது என்று நினைத்தபோது செல்பேசி அழைத்தது.

    எண்களைப் பார்த்தாள்.

    சந்திராதான்!

    ஹாய் அக்கா... என்று குரலில் மென்மை சேர்த்துக் கொண்டாள். என்ன அதுக்குள்ள எழுந்துட்ட? இன்னிக்கு லீவுதானே உன் சேகருக்கு? நிதானமா எழுந்து நிதானமா காபி போட்டு குடிக்க வேண்டியதுதானே?

    லீவுதான்... இன்னிக்கு சின்னதா பிக்னிக் போகணும்னு ஆசையா இருக்குடி இந்திரா... அதுவும் உன்கூட... வாயேன்... உனக்கும் லீவுதானே? சந்திராவின் குரலில் இருந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அவள் புரிந்து கொண்டாள்.

    என்னக்கா நீ? என்றாள் மேலும் மிருதுவாக. நீயும் சேகரும் போயிட்டு வாங்களேன்... எவ்வளவு ஆசையா கட்டிகிட்டிருக்கே அவரை? சினிமா, ஹோட்டல், பீச்னு சுத்த வேண்டிய நேரம் இது... ஹனிமூன் பீரியட்... நான் எதுக்கு நடுவுல கரடி மாதிரி?

    நீ இல்லாம எனக்குன்னு தனியா சந்தோஷம் உண்டாடி இந்தூ?

    அப்படி இல்லக்கா... சேகர் - என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை இல்லையா? அவருக்கு ஆசை இருக்காதா உன் கூட ஜாலியா சுத்தணும்னு?

    அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே அவருக்கு... இன்ஃபேக்ட் உன்னையும் கூட்டிகிட்டு முட்டுக்காடு, முதலைப் பண்ணைன்னு சுத்தலாம்னு சொன்னவரே அவர்தான்... வாடி இந்தூ.

    ஒரு நாள் லீவுக்கா... செய்ய வேண்டிய வேலை எவ்வளவு இருக்கு தெரியுமா? எல்லா காட்டன் துணிக்கும் கஞ்சி போடணும்... அயர்ன் பண்ணி வாங்கணும்... சாயங்காலம் ரஷ்யன் சல்ச்சுரல் போகணும்... ஒரு மூவி ஸ்க்ரீனிங் இருக்கு... ‘ரெட் மெமரீஸ்’னு ஒரு படம்... சைக்காலஜி பத்தினது... பாஸ்கரன் சார் பாஸ் எடுத்துக் கொடுத்து பாத்துட்டு வரச்சொல்லியிருக்கார்... ப்ளீஸ்க்கா... என்னால வர முடியாது...

    இந்தூ... என்றாள் குரல் இறங்க.

    சொல்லுக்கா

    தப்பு பண்ணிட்டேண்டி... பெரிய தப்பு...

    என்ன தப்பு?

    அப்பா அம்மாவை பிஞ்சுல இழந்தோம்... பாட்டி வளர்ப்புல உயிருக்குயிரா வளர்ந்தோம்... பாட்டி போன பிறகு அந்த ஒண்ணரை வருஷம் இன்னும் அன்புப் பெருக்கத்துல ஒரே உயிர் போல வாழ்ந்தோம்... சேகர் வந்து கல்யாணம் பண்ணிகிட்டு நம்மளை பிரிச்சுட்டாரேடி இந்தூ... ஏன் ஒத்துக்கிட்டேண்டி இந்த கல்யாணத்துக்கு?

    அவள் சிரித்து விட்டுச் சொன்னாள்.

    சேகரை குத்தம் சொல்றியா - ஆசையா நீயா கல்யாணம் பண்ணிக்கிட்டு? ஓ அக்கா... கம் ஆன் அக்கா... நானாத்தான் வீட்டை விட்டு வெளில வந்திருக்கேன்... நானாவேதான் ஒர்க்கிங் உமன் ஆஸ்டல்ல தங்கியிருக்கேன்... எதுக்காக? உங்க ரெண்டு பேரையும் தனிமைல இருக்க விடணும்னுதான்... குங்குமச்சிமிழ் மாதிரி சின்னதா இருக்கற வீட்டுல புதுமணத் தம்பதி சந்தோஷமா வாழ்க்கையைத் தொடங்கட்டும்னுதான்... கொஞ்ச நாள் போகட்டும்க்கா!

    போனா?

    ஒரு குட்டி சேகரோ குட்டி சந்திராவோ பொறக்குமில்லே?

    பொறந்தா?

    இந்த சித்தி ஓடி வருவாளே கொஞ்சறதுக்கு!

    உனக்காக நான் புள்ள பெத்துக்கணுமாக்கும்?

    சரி... நமக்காக... ஓகேயா?

    ஏய் இந்தூ... என்னடீ நீ? என்று குரலைத் தழுதழுத்துக் கொண்டாள். ஒரு வாரமாச்சு உன்னைப் பாத்து... ஏதோ ஒரு தவிப்பு இருந்துகிட்டே இருக்கு உள்ளே... முகத்தைக் காட்டிட்டுப் போயேன் இந்தூ... என் கண்ணில்லே?

    ம்... என்னக்கா நீ? சரி பாக்கறேன்... மூவி முடிஞ்சு போகும்போது வரேன்...

    கண்டிப்பா வரணும் இந்தூ... காத்துகிட்டே இருப்பேன் உனக்காக...

    நிச்சயமா வரேன்... உன் கையால இஞ்சித் துவையல் சாப்பிட்டுட்டு கௌம்பறேன்...

    ரொம்ப சந்தோஷம்டி இந்தூ... கூடவே மிளகு குழம்பும் செய்யறேன்... தங்கம்டி... வெச்சுடறேன்.

    சரிக்கா என்று வைத்தாள்.

    சந்திரா அப்படியே பாட்டியைப் போல. அந்த கைப்பக்குவம், அந்த அன்பு, அந்த பரிதவிப்பு எல்லாமே பாட்டிதான். அவள் அப்படியல்ல. சமையலை விட படிப்பு பிடிக்கும். அன்பை விட அறிவுதான் மேலெழும். தவிப்பு, பரிதவிப்பு என்று குழப்பமான மனநிலை ஏற்படாமல் தைரியம், கம்பீரம் என்றுதான் உணர்வுகள் நிமிர்ந்து நிற்கும்.

    கவிதை புத்தகத்தை மூடிவைத்தாள்.

    காப்பி ஆறியிருந்தது.

    மறுபடி சுட வைத்துத் தரச்சொல்லி சாரதாவைக் கேட்கலாமா என்று நினைத்தாள். ஏற்கனவே அந்த விடுதியில் தங்கியிருக்கும் முப்பது பெண்களுக்காக அவள் ஒருத்தியே சமைக்கிறாள் என்பது ஞாபத்திற்கு வந்தது.

    இருக்கிற சூடு போதும் என்று முடிவுக்கு வந்தபோது செல்பேசியில் குறுஞ்செய்தி ஒளிர்ந்தது.

    ‘உடனே கிளம்பி வரவும்.’ என்று. டாக்டர் கொடுத்திருந்தார்.

    2

    ‘அன்னை மனநல மைய’த்தை அவள் அடைந்த போது ஒன்பதரையை தொட்டுக் கொண்டிருந்த வெயில் கொன்றை மரங்களுக்கு ஊடாக தன் மெல்லிய வெப்பத்தை அனுப்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.

    வழக்கம் போல அந்த மரங்களுக்கு இடையிலான அரச மரத்தின் அடியில் இரண்டு நிமிடங்கள் அவள் நின்றாள்.

    மரங்களிலேயே மிகத்தூய்மையானது இதுதான். சுயநலமற்றதும் இதுதான். பரிபூரணமான பிராண வாயுவை நாள் முழுவதும் செலுத்திக் கொண்டே இருக்கிற அற்புதமான அந்த பூவரச மரத்தினடியில் நிற்கும்போது ஏனோ அவளுக்கு தாயின் முகம் மேகங்களுக்கிடையிலிருந்து தோன்றி புன்னகைத்து விட்டுப் போகும்.

    ‘அம்மா! என்ன அவசரம் உனக்கு!

    இரண்டு பெற்றாய். இரண்டும் பெண் குழந்தைகளாகவே பெற்றாய். உன்னுடைய பிரதிபிம்பம். உன்னுடைய தொடர்ச்சி. பிறகு ஏன் பாதியில் விட்டுப் போனாய்? பாட்டியம்மா மட்டும் இல்லையென்றால் எங்கள் நிலைமை என்ன ஆகியிருக்கும்? நானாவது பரவாயில்லை. இயல்பிலேயே உறுதி மிக்க மனம் வாய்த்தவள். சந்திரா இன்னும் குழந்தைதான் - மனதளவில். மனமுதிர்ச்சி என்பது இன்னும் முழுமையாக வாய்க்கவில்லை அவளுக்கு. தாயின் வளர்ப்பும் அரவணைப்பும் கிடைத்திருந்தால் அவள் மனநிலையில் பக்குவம் வந்திருக்கும் அம்மா! ஏன் அப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1