Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Itharkuthane Kathiirunthom
Itharkuthane Kathiirunthom
Itharkuthane Kathiirunthom
Ebook170 pages43 minutes

Itharkuthane Kathiirunthom

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Itharkuthane Kathiirunthom

Read more from V.Usha

Related to Itharkuthane Kathiirunthom

Related ebooks

Reviews for Itharkuthane Kathiirunthom

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Itharkuthane Kathiirunthom - V.Usha

    25

    1

    உலகத்தின் மிக இனிமையான இசைக்கு ஆர்வத்துடன் நர்த்தனமாடும் நாட்டிய மங்கை போல உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்தது ரயில்.

    உதயா தலையை மட்டும் மெல்ல உயர்த்திப் பார்த்தாள்.

    இன்னும் இருள் பிரியாத இரவு. ஆனால் கிழக்கில் மிக லேசாக சாம்பல் நிறம் தெரிந்தது. இன்னும் ரொம்ப நேரமில்லை, விடியலுக்கு - என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது அடிவானம்.

    பார்த்துக் கொண்டிருக்கும்போதே காட்சி மாறியது.

    மெல்ல மெல்ல விடியல் வந்து விட்டது.

    உதயா எழுந்தாள்.

    கீழே இருந்தவர்கள் வழியிலேயே இறங்கியிருக்க வேண்டும்.

    மேல் பெர்த்தை விட்டு இறங்கினாள். பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் எடுத்துக் கொண்டு தனியறை நோக்கிச் சென்ற போது, கண்கள் தன்னையறியாமல் எதிர்வரிசையை ஓரப்பார்வை பார்த்தன.

    அந்த இளைஞன் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தான். விழிகள் அழுத்தமாக மூடியிருந்தன. முகத்தில் சோர்வு தெரிந்தது. அவன் மடிமேல் தலை வைத்துப் பெரியவர் படுத்துக் கொண்டிருந்தார். அவரும் நல்ல உறக்கத்திலிருந்தார்.

    இரவெல்லாம் அவன் ஒரு தாய் போல அவரைக் கவனித்துக் கொண்டிருந்தான் என்பது வியப்புடன் அவளுக்கு நினைவு வந்தது.

    பதினோரு மணி வரைக்கும் அவளுக்கும் தூக்கம் வரவில்லை.

    நல்லவேளையாக கையில் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்திருந்தாள். அப்பர் பெர்த் வேறு கிடைத்திருந்ததால் இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டு இரவு உணவை முடித்துவிட்டு மேலே ஏறி விட்டாள். விளக்கின் தனி ஒளியில் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டாள்.

    கீழ் பெர்த்தில் கணவன், மனைவி, குழந்தை என்று சிறு குடும்பம்தான் இருந்தது. ஒன்பது மணிக்கே அவர்கள் எலுமிச்சை சாதம், வத்தல் என்று சாப்பிட்டு விட்டு படுத்து விட்டார்கள். விளக்கையும் அணைத்து விட்டார்கள்.

    முதலில் அவளுக்கும் உறக்கம் வரவில்லை.

    இனம் புரியாத ஒரு உணர்வு இதயம் முழுக்க வியாபித்திருந்தது.

    ஆசிரியர் பயிற்சி முடித்ததும் வேலை கிடைத்து விட்ட சந்தோஷமா, அது சென்னையில் இல்லாமல் கூடலூர் அருகில் மலைகிராமத்து பள்ளியில் கிடைத்திருக்கிறதே என்ற சஞ்சலமா, அக்கா - மாமாவை விட்டுப் பிரிகிறோமே என்ற வருத்தமா, புது இடத்தில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கவலையா, ஊட்டியில் வசிக்கிற சிநேகிதி புஷ்பா தனக்காக வீடு பார்த்து... வசதி பார்த்து என்று சிரமப்படுவாளே என்கிற தர்மசங்கடமா - எது என்று தெரியவில்லை.

    ஆனால், வழக்கம் போல உணர்வுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டாள் உடனடியாக.

    சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்திக் கொண்ட மனக்கட்டுப்பாடு அது. கழிவிரக்கத்திலும் சுய சோகத்திலும் மனசு சஞ்சலப்படும்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவை போல விழித்தெழுந்து உறுதியை சேகரித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்குவது அவள் பழக்கம்.

    இப்போதும் அதே போலத்தான் கிளம்பியிருந்தாள். அச்சப்பட்டுக் கொண்டிருந்த அக்காவையும் மாமாவையும் சமாதானப்படுத்துவதுதான் பெரிய காரியமாக இருந்தது.

    அதிலும் அக்கா நித்யா ரொம்ப பயந்த சுபாவக்காரி. பட்டதாரிப் படிப்பு அவள் பயத்தை போக்கவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் கணவனின் மனைவி என்கிற திருமண வாழ்க்கை அவளிடம் தைரியத்தை தரவில்லை. எட்டாண்டு கால மணவாழ்வும் மனபலத்தைக் கொடுக்கவில்லை.

    எப்படி உதயா? எப்படி நீ தனியா வேலை பார்க்க முடியும் குளிர்பிரதேசத்துல? வேணாம்டி... வேற வேலை கெடைக்கும்டி... பயமா இருக்குடி உதயா... உன்னை விட்டா எனக்கு யாருடி இருக்கா? என்று கையைப் பற்றிக் கொண்டு அழுது விட்டாள்.

    ஸ்பெஷல் வழக்கு ஒன்றிற்காக நன்னிலம் வரை போய் வந்த மாமா சரவணனும் அவள் மேல் கவலையுடன் பார்வையைச் செலுத்தி விட்டு அக்கா சொல்றது சரிதானே உதயா? சின்னப் பொண்ணு நீ... ஆசிரியர் வேலைதான் பார்ப்பேன்னு சொல்லி அதே படிப்பு படிச்சே... சரி... இங்கயே பிரைவேட் ஸ்கூல்ல வேலை கெடைக்காதா? கொஞ்சம் முயற்சி செஞ்சா போதுமே... தெரியாத ஊருக்குப் போய் அவஸ்தைப்படணுமா? என்று கேட்டார்.

    விளக்கமாகவே பதில் சொன்னாள் அவள்:

    தாய் தந்தையை விட அதிகமா இப்படி என் பேர்ல அன்பு வெச்சிருக்கீங்களே... எப்படி நன்றி செலுத்தப் போறேன்? மாமா, போலீஸ் வேலைக்குப் போகணும்னு லட்சியத்தோட இருந்து ஜெயிச்சவர் நீங்க... இப்போ திருப்தியா இருக்கீங்க... எனக்கும் அதே மாதிரி ஒரு லட்சியம் மனசுல உருவாகியிருக்கு மாமா.... அரசுப் பள்ளியில வேலை பார்க்கணும், உண்மையான டீச்சரா, பெண் குழந்தைகள் மனசுல தைரியத்தை விதைக்கிற ஆசிரியரா நம்ம வாழ்க்கை பயன்படணும்னு ஒரு கொள்கைய வளர்த்துக்கிட்டிருக்கேன்... இயற்கையும் அதுக்கு ஆசிர்வாதம் செஞ்சு உடனடியா வேலையக் கைல கொடுத்திருக்கு... புஷ்பா இருக்கா ஊட்டில... என் நெருங்கின தோழி... ஏன் அக்காவுக்கும் தோழிதான்... இனிஷியலா அவ உதவி பண்ணுவா... தைரியம் இருக்கு மாமா... தயவு செஞ்சு நீங்க கவலைப்படாதீங்க ப்ளீஸ்...

    ஆனால், கடைசி வரை அக்கா பிடிவாதமாகத் தானும் கூடவே வருவேன் என்று நின்றாள். திடீரென்று மாமியார், கொழுந்தன், நாத்தனார் என்று ஒரு படையே திருப்பரங்குன்றத்திலிருந்து கிளம்பி வந்ததும் இடத்தை விட்டு அவளால் நகரவே முடியாமல் போய் விட்டது.

    காபி... டீ... டீ... காபி... என்று வாசனையும் குரலும் அவளை நனவுக்கு இழுத்து வந்தன.

    தேயிலையின் வாசனை சுண்டி இழுத்தது.

    காசை எடுத்துக் கொடுத்து விட்டு ஒரு கோப்பை தேநீர் வாங்கிக் கொண்டாள்.

    எதிர்வரிசை இளைஞன் விழித்திருந்தான். அவள் ஏனோ அவனையே பார்த்தாள்.

    2

    "இருங்க தாத்தா... அவசரப்பட்டு ஏன் எழுந்துக்கறீங்க? இன்னும் கோயம்புத்தூர் வரலே..." - அவன் பெரியவரின் தோளை மென்மையாகப் பற்றினான்.

    பெரியவர் தலையை உயர்த்தி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். பளிச்சென்ற வெளிச்சம் கண்ணை உறுத்திற்று போலும். உடனே மூடிக் கொண்டார். ஒரே ஒரு கணம் இடைவெளி விட்டு இருமல் அவரைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டது.

    மெல்ல எழுந்து உக்காந்துக்குங்க தாத்தா... படுத்துகிட்டே இருந்தா இருமல் அதிகமாயிடும்... என்றவாறு அவன் மெல்ல அவரை எழுப்பினான்.

    இரண்டு தோள்களிலும் கைபற்றி உட்கார வைத்தான். சரிந்து கிடந்த துண்டை எடுத்து உதறி அவருடைய தோளில் போட்டான்.

    ரெண்டு நிமிஷம் அப்படியே இருங்க... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு பாத்ரூம் போய் வரலாம்... ஃபிளாஸ்க்ல நல்ல காபி வாங்கி வெச்சிருக்கேன்...

    சரிப்பா... என்று பெரியவர் முணுமுணுத்து விட்டு சாய்ந்தவாக்கில் உட்கார்ந்து கொண்டார்.

    தேநீர்

    Enjoying the preview?
    Page 1 of 1