Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu Kadal
Anbu Kadal
Anbu Kadal
Ebook96 pages41 minutes

Anbu Kadal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703392
Anbu Kadal

Read more from Vidya Subramaniam

Related to Anbu Kadal

Related ebooks

Reviews for Anbu Kadal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu Kadal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    அன்புக் கடல்

    Anbu Kadal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    திடீரென்று பலமாய் காற்று வீச அதைத் தொடர்ந்து, மழையும் கனமாய் கீழிறங்கியது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஜன்னலருகில் வந்தான் சங்கரன். வானத்திற்கும் பூமிக்கும் பாலம் கட்டினாற்போல் நெருக்கியடித்த கம்பிச்சரங்களாய் இறங்கிய மழைச் சரங்கள் மின்னல் ஒளிபட்டு வெள்ளிக் கம்பிகளாய் ஜொலித்த அழகை சற்று நேரம் வேடிக்கை பார்த்தான். மழை அற்புதமான விஷயம். சுகமான விஷயம். சங்கரனுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். மழையில் நனைவது இன்னும் பிடிக்கும். அதிலும் கிராமத்தில் பெய்யும் மழை என்றால் இன்னும் பிடிக்கும். கிராமத்து மழை சுத்தமான மழை பட்டணத்து மழை அமிலமழை! அவன் இப்போது இருப்பது ஒரு கிராமம்தான். சங்கரன் சந்தோஷமாக மழையில் நனையத் தயாரானான். மொட்டை மாடியின் ஒரு அறையில் அவன் தங்கியிருந்தான். கதவைத் திறந்தால் கொட்டும் மழை விழும் திறந்த வெளிப் பகுதிதான். சங்கரன் மேல் பட்டையைக் கழற்றி விட்டு கீழே அணிந்திருந்த பர்முடாசுடன் அறையை விட்டு வெளியில் வந்து தளத்தின் நடுவில் நின்றான் மழை ஊசியாய் மேலே விழுந்தது. சின்னக் குழந்தையாக மாறி விட்டாற் போலிருந்தது. அம்மா இருந்தால் நனைய விட மாட்டாள். அம்மாவிற்கு எல்லாவற்றிற்கும் பயம், விபரீதக் கற்பனைகளும் அதிகம் நச்சென்று ஒரே ஒரு முறை அவன் தும்மி விட்டால் போதும் அவள் கற்பனை பயம் பரபரவென்று விரியும். தும்மல் இருமலாகி, இருமல் சளியாகி சளி டிபி வரை போய் உயிரையே எடுத்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு பதறிப் போவாள். ஒரு பாட்டில் விக்ஸைத் தடவி அவன் மூக்கையும் தொண்டையையும் முதுகையும் ஒரு வழி பண்ணி விடுவாள். சீரகம் போட்டு காய்ச்சின வெந்நீர்தான் அவன் கண்டிப்பாக குடிக்க வேண்டும். சீதளம் ஏற்படுத்தும் காய்கறிகளுக்கும் தடை விதித்து விடுவாள் மொத்தத்தில் சங்கரன் தும்மல் வந்தால் கூட அம்மாவுக்கு எதிரில் தும்ம மாட்டாள். உடம்பில் சின்னச் சின்ன உபாதைகள் இருந்தாலும் அவளிடம் தப்பித் தவறிக் கூட சொல்லி விட மாட்டான். மூன்று பெண்களுக்குப் பின் பிறந்த ஆண் குழந்தை என்பதால் இந்த அதீத பாசமா என்று தெரியவில்லை. அதற்கென்று அக்காக்களிடம் அன்பில்லாமல் இல்லை. அதென்ன அவன் மட்டும் அப்டி உசத்தி? சங்கரனை விட பதினெட்டே மாதம் பெரியவளான கடைசி அக்கா மூக்கு சிவக்க அம்மாவிடம் ஆதங்கமாய்க் கேட்பாள். அம்மா பதில் சொல்லாமல் அவள் தலை தடவி சிரிப்பாள். அது அப்படித்தான் என்பாள். இது ஒரு பதிலா? அக்கா பொருமுவாள்.

    சங்கரன் பெருமூச்சு விட்டான்.

    ஏந்தம்பி இப்டி மழையிலே நனைஞ்சா உடம்பு என்னத்துக்காவும்?

    சங்கரன் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தான். வீட்டுக்காரம்மாள் நின்றிருந்தாள்.

    சும்மாதான். ஆசையார்ந்துது.

    புது மழை தம்பி. எதுனா உடம்புக்கு வந்தா என்ன செய்வ? ஒத்தைக்கு இருக்கற புள்ள!

    நீங்க தான் இருக்கீங்களே! எங்கம்மா மாதிரி!

    அவன் சொல்ல வீட்டுக்காரம்மாளின் முகம் மத்தாப்பாய் மலர்ந்தது.

    நா இருக்கேந்தா! அதுக்காக மழையில நனையணுமா? உள்ள போ தம்பி. இந்தா இதையும் வாங்கிட்டு போ.

    என்ன அது!

    ஆத்து மீனை வறுத்து கொண்டாந்திருக்கேன் மழைக்கதுக்கும் சாப்ட நல்லார்க்கும்.

    அய்யோ... நா அதெல்லாம் சாப்ட மாட்டேன்.

    பிடிக்காதா?

    இல்ல... நா சைவம். பிராமணக் குடும்பம்

    அய்யர் வீட்டுப் பிள்ளையா...? அட ராமா...! வீட்டுக்காரம்மா தலையில் அடித்துக்கொண்டு சிரித்தாள்.

    ஏந்தம்பி நெஞ்சுல நூல் எதுவும் போடலையே! அய்யர் வீட்டுப் பிள்ளைன்ற!

    அது... இன்னும் போடல...

    அப்டியா...? மன்னிச்சுடு தம்பி நீ யாருன்னு தெரியாம கொண்டாந்துட்டேன்

    பரவால்ல. நா வந்து ரெண்டு நாள் தானே ஆறது! உங்களுக்கெப்டி தெரியும்?

    மாடிக்கு ஒரு பையன் குடிவரான்னு சொன்னாங்க அவங்க. யாரு என்னன்னு எல்லாம் கேள்வி கேட்டு பழக்கமில்ல அவங்க எது செஞ்சாலும் எதிர்த்ததில்ல. அப்டியே பழகிட்டேன். அது சரி தம்பி. அய்யர் பிள்ளன்ற அப்பறம் எப்டி இங்கவந்த? நாங்க கறி மீன் சாப்டுவோம்னு உனக்குத் தெரியாதா?

    தெரியும். அதெல்லாம் பார்த்தா முடியுமா? இந்த மொட்டை மாடியும், இந்த அறையும் எனக்கு பிடிச்சிருந்துது. செளகர்யமா தோணித்து அதான் வந்துட்டேன்.

    இங்கயே எத்தினி அய்யர் வீடுங்க இருக்கு! இதை விட நல்லா கூட இருக்குமே.

    அதென்னமோ நா முதல்ல பார்த்த வீடு இதுதான். இதுவே மனசுக்குப் பிடிச்சதும் அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.

    தம்பிக்கு என்ன உத்யோகம்...?

    உங்க ஊர் ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்டேஷன் மாஸ்டரா சேர்ந்து ரெண்டு நாளாச்சு.

    அடேயப்பா பெரிய உத்யோகம் தான்.

    சங்கரன் சிரித்தான்.

    "நா

    Enjoying the preview?
    Page 1 of 1