Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalil Nee Oru Kaviyam
Kaadhalil Nee Oru Kaviyam
Kaadhalil Nee Oru Kaviyam
Ebook171 pages1 hour

Kaadhalil Nee Oru Kaviyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003416
Kaadhalil Nee Oru Kaviyam

Read more from Anuradha Ramanan

Related to Kaadhalil Nee Oru Kaviyam

Related ebooks

Reviews for Kaadhalil Nee Oru Kaviyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalil Nee Oru Kaviyam - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    காதலில் நீ ஒரு காவியம்

    Kaadhalil Nee Oru Kaviyam

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    உள்ளே நுழையும்போதே பலமான வரவேற்பு கைதட்டல் ஓயவே-குறைந்தது இரண்டு நிமிடங்களாயிற்று...

    பாலா வந்துட்டா...

    தினமும் பார்க்கற ஃபிகர்தானே...இதுல என்ன பெரிய விஷயம் இருக்குதாம்?

    ஒத்துக்கறேன். அப்பா நீயேண்டா கண்ணா அவ வர்றப்ப எழுந்து நின்னியாம்?

    அது வந்து...வந்து...நான் அவளுக்காக எழுந்து நின்னதா யாருடா சொன்னது...உட்கார்ந்து உட்கார்ந்து கால் வலி எடுத்துப் போச்சு...அதான் நின்னேன்.

    மாணவர்களிடையே ஒருத்தரை ஒருத்தர் வாரி விடுவதும் கொஞ்சம் ஏமாந்தால் கிண்டல் செய்தே எதிராளியை அழ வைப்பதும் சகஜம்தான்.

    அதுவும் மருத்துவக் கல்லூரி...

    கேட்க வேண்டுமா...

    ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அலட்டல் அருணா, ஜீனியஸ் ஜலஜா, கவர்ச்சிக் கன்னி கல்பனா இன்னும் லதா மங்கேஷ்கர், பி.டி. உஷா...இப்படி நிறைய.

    உண்மையில் அலட்டல் அருணாவுக்கு - அலட்டிக் கொள்ளவே தெரியாது. யார் என்ன சொன்னாலும் சரி, சரி என்று தலையாட்டுகிற ரகம்.

    ஜீனியஸ் ஜலஜா-அவளது மார்க்கை வைத்துக் கொண்டு-மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தது எப்படி என்பதை வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் இவளுக்கு ஸ்டெதஸ்கோப் என்றால் என்னவென்றே தெரியாது என்கிற பேச்சுகூட உண்டு.

    லதா மங்கேஷ்கர் என்று இவர்களால் செல்லமாக அழைக்கப்படுபவளுக்கு கனத்த ஆண் பிள்ளைத்தனமானக் குரலும் பி.டி.உஷா என்கிற பரிமளாவுக்கு சேர்ந்தாற்போல இரண்டு அடி எடுத்து வைப்பதே பெரிய தேகப் பயிற்சி என்பதும் கல்லூரி வட்டாரத்தில் பிரபலம்...

    இந்த பாலாவை வர்ணிக்கத்தான் வார்த்தையின்றி இவர்கள் திண்டாடுகிறார்கள்.

    மொத்தமாய் ஒரே வார்த்தையில் 'அழகி' என்று கூறி விடலாம்.

    கொஞ்சம் அகன்ற நெற்றிதான்... மூக்கு நுனி அவசரமாய் சரிந்திருக்கும்தான்...ஒல்லிதான் சராசரிக்கும் குறைந்த உருவம் தான்.

    ஆனாலும் பளீரிடும் நிறமும், அவள் சிரிக்காவிட்டாலும் விஷமமாய் சிரிப்பது போன்ற கண்களும் இமைகளின் அடர்த்தியும், நடையில் கலந்திருக்கும் துள்ளலும்...

    சில பெண்கள்-இப்படி சிரமப்படாமலேயே அழகிப் பட்டம் வாங்கி விடுவார்கள்.

    மருத்துவக் கல்லூரி மாணவர்கள்-வயது வித்தியாசமின்றி இவளை மனசில் வைத்து பூஜிக்கிறார்கள்.

    பாலா, என்கூடப் பேசினா...

    நேத்து என்னாச்சு தெரியுமோ... பஸ் ஸ்டாப்புலே நின்னுட்டிருந்தேனா...பாலா வந்து லிப்ட் தரட்டுமா... மொபட்டுலே ஏறிக்கறியான்னு கேட்டாடா...

    பாலாவைப் பற்றி அத்தனை ஆண்களும் இப்படி தங்களுக்குள்ளாகப் புலம்புகையில்-ஒன்றை அவர்கள் மறக்கவில்லை. அனைவரின் கண்களும் மறுபடியும் வாசற்பக்கம் தாவ-

    வந்துட்டான், நம்ம காதல் எதிரி...

    ஆளைப் பாரேன்...கொஞ்சமாவது நம்ம பக்கம் திரும்பிப் பார்க்கறானா... பாரு...

    பாலா...

    பாலகிருஷ்ணன்.

    இவளும் பாலா அவனும் பாலாதான்!

    இந்தப் பெயர் பொருத்தம்தானே, இவர்களை ஒன்று சேர்த்து வைத்தது...

    ஓடுகிற பஸ்ஸில் ஏறும் மாணவிகளை எல்லாம் வாய் வலிக்க விமர்சித்து, பாலகிருஷ்ணன், தனது நண்பர்களுடன் இறங்க-

    யார் யார் அது பாலா... கண்டக்டர், கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அலற...

    பாலகிருஷ்ணனின் சினேகிதன் ஒருவன் ஓடிப்போய் வாங்கி வருகிறான்.

    நோட் புக்கை பஸ் ஸிலேயே வச்சிட்டியே-இந்தா?

    நோட் புக்?

    பாலகிருஷ்ணன், ஏகப்பட்ட ஆச்சரியத்துடன் புருவங்களை உயர்த்தினான்.

    என்னடா என்னமோ நோட்புக்கையே கண்ணாலே பார்க்காதவன் மாதிரி பார்க்கறே?

    இல்லையா பின்னே...இப்படியொரு பொருளை நான் ஸ்கூல்லே படிக்கறச்சே பார்த்ததா ஞாபகம். காலேஜுக்கு வந்ததுக்கு அப்புறம் கைய வீசிட்டுத் தானே வர்றேன்...

    பின்னே-பாலான்னு போட்டிருக்கு...

    பாலகிருஷ்ணன், ஆவலை அடக்க மாட்டாமல் - நோட்டுப் புத்தகத்தை நண்பனின் கையிலிருந்துப் பிடுங்கினான்.

    டேய்...நம்ம காலேஜ்தான்...முதல் வருஷம்...இது பேரும் பாலா தான்...

    அதான் காலேஜுக்கு சமர்த்தா நோட் எடுத்திட்டு வர்றது...

    இது பாட சம்பந்தமான நோட் புக் இல்லே?

    புதுக் கவிதையா?

    முந்தாநாள் ஏதோ சினிமாவுக்குப்போயிருக்காபோல இருக்கு...அதைப்பத்தி ரெண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கா... படிக்கிறேன் கேட்கறீங்களா...?

    படி...படிடா...

    இப்ப வேண்டாம் லஞ்ச் டயத்தில படிக்கிறேன். அவளும் கேட்டு சந்தோஷப்பட வேண்டாமா...

    அன்று பிற்பகல்

    பாலகிருஷ்ணனும், அவனுடையப் பட்டாளமும் திரண்டு போய்-நோட்புக்கை பஸ்ஸில் தவறவிட்ட பாலாவின் எதிரில் முற்றுகையிடுகிறது...

    பாலகிருஷ்ணன் தொண்டையை கனைத்துக் கொண்டு படித்தான்.

    "படத்தில் கதாநாயகிக்கு வேலையே இல்லை...ஏண்டா, நாம் தரலாமா?

    காதல் காட்சிகளில் நெருக்கம் போதாது...புதுமுகம் என்றால் இத்தனை மிரட்சி வேண்டுமா...பிரமாதம்டா... இந்த வரி நிஜமாகவே அசத்தறது...ஏங்க பாலா...இன்னும் கொஞ்சம் கிட்ட வந்து படிக்கலாமா...நெருக்கம் எப்படியின்னு சொல்லுங்க...

    சந்தனக் கிண்ணத்தில், குங்குமத்தைக் கொட்டினாற்போல பாலாவின் முகம் சிவந்து குழம்பிவிட்டது...

    யூ...யூ...ராஸ்கல்...

    அவளை மேலும் பேச விடாமல் சைகையினாலேயே அடக்கினான் பாலகிருஷ்ணன்.

    நான் உன்னைவிடப் பெரியவன்...சீனியர் ஸ்டூடண்ட் மரியாதைக் கொடுத்துப் பேசு. யாரு கண்டது இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு, உங்க அப்பாவோ, அம்மாவோ உன் ஜாதகத்தை எடுத்திட்டு எங்க வீட்டுக்கு வந்தாலும் வரலாம். எங்க அப்பா, என்னை அழைச்சு ஏண்டா உங்க காலேஜ்லே தான் படிக்குதாமே. பொண்ணு எப்படிடான்னு கேட்டாலும் கேட்கலாம்...அப்ப, ஃப்ளாஷ் பேக்லே இந்த சீன் வந்து அநியாயமா நான் உன்னை...

    பாலா, அவன் சற்றும் எதிர்பாராதவிதமாய் நோட்டுப் புத்தகத்தை பிடுங்கிக் கொண்டாள்.

    மத்தவங்க நோட்டைப் பிரிச்சுப் படிக்க வெட்கமாயில்லே?

    எதுக்காக வெட்கப்படணும்?

    நோட்புக் லே கவிதை இருக்கும்; லவ்லெட்டர் இருக்கும்; எங்களை மாதிரி பசங்களோடதுன்னா வெத்தலைப் பாக்குக் கடை கணக்கு இருக்கும்...அட, எப்பவாவது பாடமும் இருக்கும்னு வச்சுக்க. ஆனா, சினிமா விமர்சனம் இருக்கும்னு எனக்குத் தெரியாது தாயே!"

    பாலான்னு கொட்டை கொட்டையாய்ப் போட்டிருக்கே... கண் தெரியலே...

    இவ்விடத்திலேயும் பாலான்னுதான் பெயர். அதை இந்த சந்நதியில தெரிவிச்சுக்க விரும்பறேன்...

    'பாலாங்கறது எங்க பாட்டி பேர்...'

    பாலகிருஷ்ணன்கறது எங்க தாத்தாபேரு...உனக்கு சாட்சி சொல்றதுக்காக சொர்க்கத்துல இருக்கற எங்க தாத்தாவை தந்தி கொடுத்து வரவழைக்க முடியாது

    பாலகிருஷ்ணன் எப்படி பாலாவாகும். கிருஷ்ணன்னு பேரை மாத்திக்குங்க...

    நல்ல கதையா இருக்கே. நீ வேணுமானா உங்க பாட்டி பேரான பாலம்மாவை ம்மான்னு மாத்தி வச்சுக்க...யார் வேண்டாம்னு தடுக்கறாங்க?

    அவ்வளவுதான். எல்லோரும் சொல்லி வைத்தது போலக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

    ...ம்மா...ம்மா

    தலைக்குத் தலை விதவிதமான குரல்.

    இப்படி எலியும் பூனையுமாக ஆரம்பித்த அறிமுகம் இன்று ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிவதை நினைத்துப் பார்க்க முடியாதவர்களாய்...

    வேதனையை உள்ளடக்கி, வெறும் சிரிப்பை மட்டும் இதழ்களில் தேக்கி-இந்த விருந்துக்கு வந்திருக்கிறார்கள்.

    பாலகிருஷ்ணன், ஒரு கோப்பை தேநீரை எடுத்துக் கொண்டு, மெள்ள பாலாவின் அருகில் வந்து நிற்கிறான்

    ஆயிரம் வார்த்தைகள் வாய் உதிர்த்தாலும்-பாலாவின் விழிகள் அவனிடம் ஒன்றையே யாசிக்கின்றது.

    பாலு...ஊருக்குப் போயிட்டு நல்ல செய்தியோட வாங்க...இங்கே, நான் மட்டுமில்லே, என்னோட வயசான அம்மாவும் உங்க வரவுக்காக காத்திட்டிருக்கா...

    அப்பாவை எப்படியும் சம்மதிக்க வச்சிடுவேன். நீ கவலைப்படாதே...

    பாலகிருஷ்ணன், இப்படிப் பார்வையால் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில்-அவனது அப்பா உலகநாதன், தமக்கையிடம் வீட்டோடு வைத்து பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

    மேளமில்லை, விருந்தில்லை; கூட்டமில்லை: கூச்சலில்லை-உலகநாதனும்-அவர் சகோதரியும்தான்...

    எதிரில் சாட்சியாக உலகநாதனின் சகோதரி தெய்வானையின் மகள் ராதா...

    மாமன் மகனின் முகமே தெரியாது...

    கண்களை மூடினால் திருட்டு மாங்காய் அடிக்கும் சிறுவன் பாலுதான் வந்து நிற்கிறான்.

    2

    ஒருவிதத்தில் பார்க்கப் போனால், உலகநாதன் சுயநலக்காரர்தான்.

    இல்லாவிட்டால் தன் கையில் நயா பைசா சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தமக்கையின் பணத்திலேயே மகனை டாக்டருக்குப் படிக்க வைக்கும் இவரை என்ன சொல்லி அழைப்பது?

    அக்கா புருஷன் உயிரோடு இருந்தவரையில் இரண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1