Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullin Kadhal
Mullin Kadhal
Mullin Kadhal
Ebook441 pages4 hours

Mullin Kadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103439
Mullin Kadhal

Read more from Ja. Ra. Sundaresan

Related to Mullin Kadhal

Related ebooks

Reviews for Mullin Kadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullin Kadhal - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    முள்ளின் காதல்

    Mullin Kadhal

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    முள்ளைப் பற்றிக் கொஞ்சம்

    ரோஜாவுக்கு முள் பாதுகாப்பா? அல்லது அதன் காதலனா அது?

    காவல்காரன் தனது எல்லைக் கோட்டை அறிந்தவனாக இருக்க வேண்டும். அந்த ரோஜாவின் மனத்தை யாரால் அறிய முடியும்?

    ஆயுளெல்லாம் அது காவல் கைதி போல இருந்தே கழிக்க ஆசைப்படுமா என்ன? தன் அழகைத் துதித்து ஆராதிக்கும் ஒரு கவிதைக்காக அது ஏங்கக்கூடும். முரட்டுக் காவல்காரனுக்கு அது தெரியுமா?

    அந்தப் பொக்கிஷத்தின் மீது பிறர் காற்றுப் படக் கூடாது என்று அவன் இரவும் பகலும் அதன் அருகே இருந்து கண் விழித்துக் காப்பது - அதன் மீது உள்ள அக்கறையால் என்று அவன் பெருமையாக எண்ணிக் கொள்ளலாம்.

    ஆனால் அந்த ரோஜாவோ ஒரு நல்லவனிடம் கைதியாக இருப்பதைவிட தன்னை ஆராதித்து மகிழ்பவன் குணக்கேடனாக இருந்தாலும் அவனையே அடைய ஆசைப்படுகிறது.

    ஜ. ரா. சுந்தரேசன்

    ***

    1

    விடிகாலைப் பொழுது ஈரத் திருநீறு உலர்வதைப் போல மெதுவே புலர்ந்து கொண்டிருந்தது.

    வெள்ளிக் கதிர்கள் பனித் துளிகளைப் பருக ஆசையுடன் பாய்ந்து வந்து கொண்டிருந்தன. பாவம், ஏமாந்தன.

    வேனில் பிறந்து விட்டது. பனி முத்துக்களை அவை வீணே தேடட்டும்.

    ஆ! அந்தக் கதிர்கள் களித்தன. 'பருவம் கடந்தும் பரிமளம் வீசும் சில அபூர்வப் பூக்களைப் போல, காலம் தப்பியும் கோலத்தோடு திகழும் சில தப்புக் கனிகளைப் போல, அதோ இந்தச் சித்திரைத் திங்களிலும் நம்மைச் சிரித்து வரவேற்கின்றனவே சில பனி முத்துக்கள் 'பட்டுக் கிண்ணங்களிலே பள பளத்தவாறு’ என்று அவை எண்ணின.

    ஆர்வத்தைச் சுமந்து அருகே வந்த பின் தான் அவை, 'அட! பட்டுக் கிண்ணம் அல்ல இவை, பட்டுக் கன்னங்கள்' என்று தெளிந்தன. ‘முத்துக்களும் பனி முத்துக்கள் அல்ல' ஓர் அழகிய பெண்ணின் அகன்ற கருங்கண்கள் ஈன்ற முத்துக் குழந்தைகளே கன்னப் பட்டு விரிப்பில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டன.

    அழுகிறாயா ஜெயந்தி? என்ற உருக்கமான குரல் அப்பெண்ணைத் திடுக்குறச் செய்தது.

    நான்... நான்... எங்கே அழுதேன்? சிரிக்கப் பிறந்தவளைப் போல அவள் சிரித்தாள். அந்த அழகிய வெண்ணிற வரிசை தனக்குள் வெதும்பியது, 'துயரத்தை அடக்கிய பொய்ச் சிரிப்புத்தான் நம் பொழுதுக்கும்’ என்று.

    திமிசுக் கட்டை மாதிரி இருக்கிறாளே? இவள்தான் ஒரு நாளைக்கு விடியற்காலம் எழுந்து வாசல் தெளித்தால் என்ன? யுகப் பிரளயம் ஏற்பட்டு உலகமே முழுகி விடுமா? உன் மோவாயில் இடித்த அந்த ராட்சசியின் கையை ஒரு நாளைக்கு நிச்சயம் உடைக்கப் போகிறேன். இன்றைக்குக் கூட எனக்கு வந்த கோபத்தில் என்னென்னவோ அவளைத் திட்டியிருப்பேன். கழுதையிடம் வாய் கொடுப்பானேன். காலையில் என்று அடக்கிக் கொண்டேன். சீனிவாசகத்துக்கு மகளிடம் மாறாக் கரிசனம் உண்டு. ஆனால் வெளியிடும் நேரம் மனைவி சீதாலட்சுமி இல்லாத நேரமாகத்தான் இருக்கும்.

    அப்பா, விடியற்காலையில் எழுவதற்குக் கொஞ்ச நாளாக ஏனோ பயமாக இருக்கிறது.

    சீனிவாசகம் சிரித்தார். நம் வீட்டில் பயமா? அப்படி உனக்கு ஏதாவது பயமாயிருந்தால் என்னைக் கூப்பிட்டால் நான் பின்னோடு வரமாட்டேனா... எதைப் பார்த்தம்மா பயந்து கொண்டாய்? உன் சித்தி இருக்கிற வீட்டுக்குள் பேய் பிசாசுகூட வருவதற்கு அச்சப்படுமே.

    ஜெயந்தி தகப்பனாருக்குப் பதில் சொல்ல வாயெடுத்தாள். ஆனால் புறக்கடைப் பக்கம் அதற்குள் ஒரு வாலிபன் வரவே, அப்பா, ரூம்காரர்... என்று சொல்லிவிட்டுப் பேச்சைப் பட்டென்று முடித்தவளாக உள்ளே சென்று மறைந்தாள்.

    வந்தவன் ஜெகத்குரு.

    நீர் இறைத்ததால் நனைந்த சிற்றாடை ‘தபக் தபக்’ என்று ஓசை எழுப்ப ஈரச்சுறுசுறுப்புடன் ஓடி மறைந்தாள் ஜெயந்தி.

    கிணற்றுப் பக்கம் அவன் வரும் சமயங்களில் கிணற்றடிக் கல்லில் அவள் துவைத்துக் கொண்டிருந்தால் யாரோ மகாராஜா வந்து விட்டதைப் போல, அத்தனை துணிகளையும் அவசர அவசரமாகத் தள்ளி அவனுக்கு வழி செய்து கொடுப்பாள்.

    தனக்காக அவள் அப்படி வாரிச் சுருட்டும் பரபரப்பு அவன் உள்ளத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். தனக்கு அவ்வளவு மரியாதை அவள் காட்ட வேண்டியதில்லை என்றும் நினைத்துக் கொள்ளுவான்.

    அவள் முகம் கழுவிக் கொள்ளும் நேரம் ஜெகத்குரு என்றாவது தப்பித் தவறிப் புறக்கடைப் பக்கம் சென்று விட்டால் போதும்.

    சோப்புத் தேய்த்துக் கொண்ட முகத்தின் மேல் அவசர அவசரமாக ஜெயந்தி வாளித் தண்ணீரை வாரிப் பூசிக் கொண்டு, நீங்கள்... நீங்கள்... நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று செம்பில் அவனுக்காகத் தண்ணீரை மொண்டு தரையில் வைத்துவிட்டு நாணமும் வெட்கமும் துரத்த உள்ளே ஓடுவாள்.

    அந்த அவசரத்தில் ஒரு நாள் அவள், எடுத்து வைத்த தண்ணீர்ச் செம்பு தன்னையே இடறிவிடக் கீழே விழுந்ததும், அடடா! ஏன் அப்படி ஓட வேண்டும்? என்று இரக்கப்பட்டான்.

    'அப்பா இருந்தும் அவரது ஆதரவு இன்றி, சித்தியின் வாய் மூடாத் திட்டுகளையெல்லாம் சீரணித்துக் கொண்டு அவள் மலர்ந்த முகத்துடன், சிறிதும் துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் சிட்டுப் போல் பரபரப்பது அவனுக்கு விந்தையாகவும் அனுதாபமாகவும் இருக்கும்.

    அவன் யாரிடமும் அவளுக்குத் தான் சூட்டிய செல்லப் பெயரை வெளியிட்டதில்லை. 'ஊளசிப் பட்டாஸ்' என்று தனக்குத் தானே கூறிக் கொள்வான், அவள் இப்படிப் பரபர என்று வேலை செய்யும் போது.

    ஜெகத்குருவின் அறைக்கு 'வாடகை' என்று சீனிவாசகம் வருவாரே தவிர காற்று வராது. என்றாவது புழுக்கம் சகிக்க முடியாமல் மொட்டை மாடியில் சற்று நிற்கலாமே என்று தோன்றும் அவனுக்கு. ஆனால் அடுத்த கணமே, ஒருகால் ஜெயந்தியும் அங்கேயிருந்து இவனைக் கண்டதும் ‘இந்த மொட்டை மாடி பூரா உங்களுக்கே உங்களுக்கு! இடையூறாக நானிருக்க மாட்டேன்' என்பது போலத் தடதடவென்று கீழே ஓடி விட்டால்?' என்ற நினைவு வர, தன் அறைக்குள் காற்றில்லாவிட்டாலும் புழுக்கத்தில் மகிழ்ச்சியோடு இருப்பான்.

    ஜெகத்குருவும் அந்த வீட்டின் முன்புற அறைக்குக் குடி வந்து ஓர் ஆண்டுக்கும் அதிகமாகி விட்டது. ஆனால் ஜெயந்தியின் முகத்தில் இன்று கண்ட கலவரத்தை அவன் என்றும் கண்டதில்லை.

    இன்றைக்கு ரொம்ப 'லேட்' போலிருக்கிறதே? என்று வந்தவனை வினவிய சீனிவாசகம். புது தம்பி இன்னும் எழுந்திருக்கவில்லையா? என்று கேட்டார்.

    ஜெகத்குரு, ஓ, எழுந்து அவர் குளித்துக்கூட விட்டாரே. நான்தான் லேட்

    'புதுத் தம்பி' என்று வீட்டுக்காரர் குறிப்பிட்டது ஜெகத்குருவின் சினேகிதன் கல்யாணராமனை. அவன் ஜெகத்குருவின் அறையில் குடியிருப்பதற்கு வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.

    ஜெகத்குருவின் விரல்கள் பிரஷைப் பிடித்துப் பல் துலக்கிக் கொண்டிருந்தாலும், அவன் எண்ணம் பூராவும், ஜெயந்தி கலவரம் தோய்ந்த முகத்துடன் சீனிவாசகத்திடம் கூறிய வார்த்தைகளையே துலக்கிக் கொண்டிருந்தது.

    'விடியற்காலையில் எழுவதற்குக் கொஞ்ச நாளாக ஏனோ பயமாக இருக்கிறது?’

    ‘கொஞ்ச நாளாக' என்பதில் என்னவோ முக்கியத்துவம் இருப்பதாக அவன் மனம் குழம்பிக் கொண்டது.

    குளித்து முடித்தான். தலையைத் துவட்டிக் கொண்டு துண்டை ஓர் உதறு உதறினான். கொடிக் கம்பியிலிருந்து பொத்தென்று ஒரு சட்டை ஈரத்தில் விழுந்தது.

    அடடா! கல்யாணராமனின் சட்டையல்லவா? பெரிய இடத்துப் பிள்ளை, ஒரு நாளைக்கு மேல் ஒரு சட்டையை அவன் அணிவதில்லை. கழற்றிப் போட்டு விடுவான்.

    ஈரத்தில் விழுந்த சட்டையை எடுத்துக் கம்பியில் போட்டான் ஜெகத்குரு. சட்டைப் பையிலிருந்து ஒரு மடிந்த கடிதம் கீழே விழுந்தது.

    கல்யாணராமனின் எழுத்துக்கள்! நிறுத்தி நிதானமாக எழுதியிருந்தான். ‘முத்தே' என்ற வார்த்தையும் உணர்ச்சிக் குறியும் ஜெகத்குருவின் கண்களைச் சிறிது நிறுத்தின.

    அவன் மனத்தில் என்னவோ ஒரு சந்தேகம். கலக்கம். கேள்வி. கடிதத்தைப் பிரித்தான்.

    ஆசையெல்லாம் அள்ளிக் கொண்ட நிலா முத்தே.

    எந்தத் திருமுகத்தைக் கண்டால் என் இதயச் சூன்யம் தானாகத் தேன் மொண்டு கொள்ளுகிறதோ, அந்த சுந்தர முகத்தை நீ ஏன் இரண்டு நாளாகக் காட்டவில்லை?

    நீ நடந்த இடத்தில் நடப்பதில் நான் பெருமைப் படுகிறேன். நீ சாய்ந்து நின்ற சுவரில் நான் சாய்ந்தால், பள்ளுப் பாடுகிறது உள்ளம்.

    தினமும் எட்டு மணிக்கு எழுந்திருப்பவன் உன் காதலை எப்படியும் மன்றாடிப் பெற்றுவிட வேண்டும், உன் மென்மை இருதயத்தைத் தொட்டுவிட வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களாக விடிகாலம் உன் கை வளைகள் குலுங்குவதைக் கேட்க எழுந்து விடுகிறேன். உன்னுடைய ஒவ்வொரு அசைவும் என் உள்ளப் புயல். என் இதயக் குளத்தில் விழும் கல்.

    மனத்திலே எதுவும் பதிவதற்கு உகந்த நேரம் விடியற்காலம். அந்தப் பொழுதை நீ ஒரு நாளேனும் பயன்படுத்திக் கொள்ளலாகாதா?

    கல்யாணம்.

    தன் நண்பன் எழுதிய காதல் கடிதத்தைப் பொறுமையாகப் படித்து முடித்தான் ஜெகத்குரு. அவன் உடம்பு சிலிர்த்தது.

    தூங்குமூஞ்சிக் கல்யாணராமன் கடந்த நான்கு தினங்களாகச் சுறுசுறுப்புடன் விடியற்காலையில் எழுந்திருப்பது இதற்குத்தானா?

    ஜெகத்குருவின் உள்ளம் குமுறியது.

    உலகின் தூய்மைப் பொழுதை எவ்வளவு அழுக்காக்கி விட்டான் கல்யாணராமன்!

    அவனது குறுக்குப் புத்தியை நினைத்து ஜெகத்குருவின் உடல் கூசியது. கொதித்தது. தான் கொண்டு வந்து வைத்துக் கொண்ட ஒரு விஷமக்காரனின் செய்கை தினமும் சித்தியிடம் ஜெயந்தியை இடிபட வைக்கிறது.

    எழுவதற்கு அவள் அச்சப்படாமல் என்ன செய்வாள்? அவளது மருண்ட விழிகளின் அச்சம் ஜெகத்குருவின் கண்கள் முன் தோன்றின. ஜெயந்தி, என்னை மன்னித்துவிடு. உன் மென்மை இதயத்தில் விஷ அம்பைப் பாய்ச்ச எண்ணும் என் சினேகிதனுடைய அற்பத்தனமான செய்கைக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    கையிலிருந்த கடிதத்தைப் பொறுமையாகப் பல துண்டுகளாகக் கிழித்தான் ஜெகத்குரு.

    அதை எங்கிருந்து எடுத்தானோ அங்கேயே - நண்பன் கழற்றிப் போட்டிருந்த சட்டையின் பையிலேயே - போட்டான்.

    ஆரம்ப முதலே ஜெகத்குருவுக்குக் கல்யாண ராமனைப் பற்றி நல்ல அபிப்ராயமில்லை. தெரியாத்தனமாக அவனைத் தன் அறைச் சினேகிதனாய்ச் சேர்த்துக் கொண்டோமே என்று வருந்தினான்.

    கல்யாணராமன் அடிக்கடி கல்லூரிக்கு வராமல் இன்றைக்கு ஒரே தலைவலி, நான் வருகிற உத்தேசமில்லை.

    இன்றைக்கு என்னவோ ஒரே டல்லடிக்கிறது என்பது மாதிரி காரணங்களுடன் வீட்டில் உட்கார்ந்து விடுவதும் ஜெகத்குருவுக்கு இப்போது நினைவு வந்தது.

    அன்றைக்கொரு நாள் முகம் பார்க்கும் கண்ணாடியை இப்படியும் அப்படியுமாக எதற்கோ பல கோணங்களில் வைத்துக் கொண்டு சிரமப்பட்டான் கல்யாணராமன்.

    ஜெகத்குரு படிப்பதில் ஆழ்ந்திருந்தாலும் என்ன தடுமாறுகிறே? கண்ணாடிக்குள் தண்ணீர் புகுந்து கொண்டிருக்கிறதா என்ன? என்று வினவினான்.

    ஹி! ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்பி விட்டான்.

    வாசல் பக்கம் சித்தியுடன் நின்று கொண்டிருந்த ஜெயந்தியின் உருவத்தைத் தரிசிக்கவே அவன் அப்படிக் கண்ணாடியைத் திருப்பித் திருப்பிப் பாடுபட்டிருக்க வேண்டும் என்று ஜெகத்குரு அப்போதே ஊகித்தான். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. ஏதோ சில்லறை விஷமம் என்று எண்ணி விட்டுவிட்டான்.

    ஆனால் இப்போது விஷயம் விபரீதத்தை நோக்கிப் போகிறதே.

    குளித்து முடித்து உடம்பு குளிர்ந்தாலும் உள்ளம் கொதிப்புடன் அறைக்குள் நுழைந்த அவனை சீட்டி சப்தம் வரவேற்றது. மேஜை மீதிருந்த கண்ணாடி முன் நின்று பல கோணங்களில் பார்த்துப் பார்த்துத் தன் கிராப்பை வாரிக் கொண்டிருந்தான் கல்யாணராமன். தலைமயிர் ஒவ்வொன்றையும் எண்ணக்கூடிய மாதிரிப் பிரித்து விட்டுக் கொள்வதில் சில நிமிடங்களைச் செலவு செய்தான்.

    ஜெகத்குருவைப் பார்த்ததும், சீக்கிரம் கிளம்பப்பா, எனக்குப் பசி கொல்லுகிறது, என்றான்.

    ஜெகத்குரு அவனுக்குப் பதில் சொல்லாமல் சட்டையை மாட்டிக் கொண்டான்.

    திடுமென்று நினைத்துக் கொண்டவன் போல் கையை உதறினான் கல்யாணராமன். ஆ! அடடே! என்று வாய்விட்டுக் குளிக்கும் அறைக்கு விரைந்தான்.

    ஜெகத்குரு அவன் திரும்பியதும் பேச்சை எப்படித் துவக்கி, அவனுக்குப் புத்திமதி கூறி எச்சரிக்கலாம் என்பதை எண்ணிக் குழம்பியவனாகத் தலையை மெதுவே வாரிக் கொண்டான்.

    கல்யாணராமன் தான் கழற்றிப் போட்ட சட்டையை எடுத்து வந்தான். அவன் முகத்தைப் பாராதது போல் பார்த்த ஜெகத்குரு அதிலிருந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் பயத்தையும் கண்டுகொண்டுவிட்டான்.

    ஆனால் கல்யாணராமன், அத்தனை உணர்ச்சிகளையும் மறைக்கப் பாடுபட்டான். சொக்காயை அழுக்குக் கூடையில் வீசிவிட்டு, ஓட்டலுக்குப் புறப்படத் தயாராகக் கதவு அருகே நின்று, கதவை ‘டொக்கு டொக்கு,' 'டொக்கு டொக்கு' என்று தாளமிட்டுச் சப்தப்படுத்தியவாறு இருந்தான்.

    பூட்டு? என்றான் ஜெகத்குரு.

    இருக்கிறது, என்று நாதாங்கியிலிருந்த பூட்டை ஓசைப்படுத்திக் காட்டினான் கல்யாணம்.

    ஓட்டலுக்குப் போகும் வழியில் வழக்கமாக ஏதேனும் பேசிக் கொண்டு வரும் கல்யாணராமன் குற்றவாளி போல ஜெகத்குருவுடன் மெளனமாக நடந்தான்.

    ஜெகத்குரு திடுமென்று கூறினான், நான் கொஞ்சம் கெளரவமாக இருக்கலாமென்று பார்க்கிறேன்.

    கல்யாணராமன் திடுக்கிட்டவனாக, என்ன சொல்லுகிறாய்? என்றான்.

    இல்லை. நான் கொஞ்சம் கெளரவமாக இருக்கலாமென்று பார்க்கிறேன் என்று இரண்டாம் முறை கூறினான் ஜெகத்குரு.

    கல்யாணராமனுக்குச் சுருக்கென்றது. தாராளமாக இரேன் என்றான்.

    ஜெகத்குரு நடந்துகொண்டே சொன்னான். அதற்கு நீயும் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது.

    ஓகோ? என்றான் கல்யாணராமன்.

    நான் இந்த அறைக்கு வந்து இந்த ஒரு வருடத்தில் ஒருவரைக்கூட என்னுடன் தங்குவதற்குச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏன் தெரியுமா? ஜெகத்குரு வினவினான்.

    தெரியாது, சொன்னால் தெரிந்து கொள்கிறேன்.

    விளையாட்டுப் பேச்சு மூலம் சிலவற்றைத்தான் சமாளிக்கலாம்.

    கல்யாணராமன் அதிர்ச்சி அடைந்தவனைப் போல் திகைப்பைக் காட்டினான்.

    நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்கு விளங்கவில்லை

    நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்குத் தெரியும். இந்த மாதிரித் திருவிளையாடல்களையெல்லாம் நீ வேறு எங்காவது வைத்துக் கொள்வது நல்லது. எனக்கு இதெல்லாம் பிடிக்காது.

    தோளைக் குலுக்கிக் கொண்டான் கல்யாணராமன். பூ! இதற்குத்தானா இஞ்சி முரபா மாதிரி இருந்தாய். இது ஒரு சின்ன விஷயம். இதைப் போய் நீ இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளலாமா?

    ஜெகத்குரு கல்யாணராமனை அலட்சியமாக நோக்கினான். உனக்கு இது சகஜமாக இருக்கலாம். ஏன் உனக்கு இது பொழுதுபோக்காகக்கூட இருக்கலாம். ஆனால் இடம் இதுவல்ல, ஆகவே...

    ஆகவே?

    ஜெகத்குரு நிதானமாகப் பேசினான்.

    ஒன்று உன் லீலைகளை நிறுத்து. அல்லது வேறு உனக்கு வசதியான அறையாகப் பார்த்துக் கொள். அவ்வளவுதான்.

    கல்யாணராமன் சிரித்தான். கோபமும் ஏளனமும் சரிக்குச் சரி கலந்த எக்காளச் சிரிப்பு. இந்தப் பரந்த பட்டணத்தில், உன் ஓட்டை ரூமை விட்டால் எனக்கு ரூமே கிடைக்காது, இல்லையா? ஒரு நாளைக்குப் பதினைந்து ரூபாய் கொடுத்துக் கொண்டு பெரிய லாட்ஜில் இருக்க முடியும் என்னால்.

    தாராளமாக இருக்கலாம்.

    அவ்வளவு ரோஷம் கெட்டவனல்ல நான் பேசி முடித்த அந்தக் கணமே, ஏ! டாக்ஸி! என்று சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த டாக்ஸியைக் கை தட்டி அழைத்தான்.

    ஜெகத்குருவுக்கு கல்லூரிப் பாடங்கள் காதுகளில் நுழையவில்லை. விரிவுரையாற்றும் பேராசிரியரின் பேச்சுக்களை அவன் செவிப்புலன் கவ்வ மறுத்தது.

    இவ்வளவு நேரம் கல்யாணராமன் அறையைச் காலி செய்திருப்பான். அவனுக்குத்தான் எத்தனை சினம்?

    ஜெகத்குருவின் உதடுகளில் இப்போது குறுநகை ஒன்று குடி புகுந்தது.

    சிக்கலான ரண சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக முடித்த மருத்துவரின் திருப்திப் புன்னகை அது.

    கல்லூரி கறுப்புப் பலகையில் அவன் கண்களிருந்தாலும் அங்கே ஜெயந்தியின் நன்றி தெரிவிக்கும் விழிகளே அவனுக்குத் தெரிந்தன.

    அவள் இதயத்தில் படிந்த ஒட்டடை துடைத்து துரத்தப்பட்டு விட்டது.

    எந்தப் புனிதப் பொழுதில் சின்னஞ்சிறு பறவையும் அச்சமின்றித் துயில் கலையுமோ அந்தப் பொழுதில் அவளும் இனிப் பயமின்றி எழலாம்.

    உன்னைப் பிடித்த வியாதி நான் கொடுத்த ஒரு ‘டோஸ்' மருந்தில் எப்படிக் கதறிக் கொண்டு ஓடிவிட்டது பார்த்தாயா?

    ஜெயந்தியாவது நேரில் நின்று தன் மகிழ்வைத் தெரிவிப்பதாவது! அவள் தான் மின்னலாயிற்றே!

    அவளிடம் எப்படியாவது கூறிவிட வேண்டும். உன் விதவிதமான கோலத்தை இனி வழக்கம் போல நீ பயமில்லாமல் போடலாம்.

    ஜெயந்தி திகைத்துப் போவாள்.

    விடியற்காலாசுரன் வேறு ‘ரூம்' பார்த்துக் கொண்டு போய் விட்டான்.

    ஆச்சரியக் காற்று அவன் மெல்லிய உதடுகளையும் கண்ணிமைகளையும் படபடக்கச் செய்யும். ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும் என் துயரம்?

    அது எப்படியோ? என்னால் வந்த துயரம் என்னால் நீக்கப்பட்டு விட்டது. ஒரு பாக்கியும் இனி இல்லை. சரிதானே?

    கல்லூரியிலிருந்து உடன் வந்த கற்பனைக் காட்சிகளும் உரையாடல்களும் ஜெகத்குவிடமிருந்து விடைபெற்றன. வீடு வந்துவிட்டது. வழக்கத்தை விடச் சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் தன் அறைக்குத் திரும்பிய ஜெகத்குருவின் கண்கள் அதிர்ச்சியால் தம்பித்துப் போயின.

    ஜெயந்தியின் நீட்டிய கரங்களிலிருந்து காப்பி டம்ளரைப் பெற்றுக் கொண்டிருந்தான் கல்யாணராமன்.

    ***

    2

    ஜெகத்குருவின் உணர்வு உலுக்கப்பட்டது. விழித் தூதுவர்கள் கொணர்ந்த இடிச்செய்தியை அவனது இதயம் ஏற்க மறுத்தது.

    கல்யாணராமனிடம் ஜெயந்தி டம்ளரை நீட்டியது மாயக் காட்சி. கற்பனைச் சிதறல். கண்களே, உங்களை நான் நம்ப முடியாது.

    'பைத்தியக்கார ஜெகத்குரு!' என்று அவனை உரிமையுடன் ஓர் உட்குரல் அழைத்தது. சிரித்தது.

    பெண்ணைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? காதல் என்றால் முகத்தலளவையில் வாங்கும் பொருளா, நீட்டலளவையில் கிடைக்கக் கூடியதா என்பாய் நீ.

    ஜெயந்தியின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளாத ஒரு பிழையோடு, அவளுக்கு உபகாரம் செய்வதாக நினைத்து, அவளுடைய காதலனை அறையை விட்டு விரட்டவும் தீர்மானித்தாயே?

    உன் கற்பனை உள்ளத்துக்கு ஒன்று சொல், தன் தயாரிப்பை அது நிறுத்திக் கொள்வது மேல். உன் சதை விழிகள் சவுக்கடிப்பட்டுக் கொண்டு ரத்தம் சுரக்க ஓடி வந்து உன் இமைக்குள் செருகிக்கொண்டு என்னவோ உன்னிடம் புலம்புகின்றனவே, அவற்றைக் கொஞ்சம் சமாதானம் செய்.

    'என் அறியாமையால் நடந்தது இது. விடையைப் பார்த்த பின்புதான் நான் போட்ட கணக்கு வழி பிணக்கானது என்று தெரிகிறது. ஜெயந்தி கல்யாணராமனை வெறுப்பதாக அவசரப்பட்டு முடிவு செய்து விட்டேன்' என்று அவைகளுக்குக் கூறு.

    அவள் விடியற்காலம் எழுவதற்குப் பயமாக இருக்கிறது என்று அப்பாவிடம் சொன்னாளே?

    அட! புரியாதவனே அந்த சூட்சுமமெல்லாம் காதலர்களுக்குத்தான் தெரியும். உனக்குப் புரியாது.

    ஒருகால் தகப்பனார் தானும் அவனும் பழகுவதை எதேச்சையாகப் பார்த்திருந்து மனத்துள் வைத்துக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அவர் எண்ணத்தில் தான் பரிசுத்தமானவளே என்பதைக் காட்டிக்கொள்ள அவள் இப்படி முன் ஜாக்கிரதையாகக் கூறி இருக்கலாம்.

    மூடிக் கிடக்கும் எண்ணச் சுரங்கத்துக்குப் பெயர் பெண்ணென்று உனக்குத் தெரியாதிருந்தால் இப்போது தெரிந்துகொள்.

    ஒரு வருடம் பூராவும் நீ ஜெயந்தியை அறிந்ததைவிட ஒரே மாதத்தில் கல்யாணராமன் அவளை அறிந்ததே அதிகமும் சரியானதும்.

    கனத்த இதயத்தின் பளுவைத் தூக்கிக் கொண்டு நகர இயலாதவன் போல் நின்றுவிட்ட ஜெகத்குருவை கல்யாணராமன் கையிலிருந்த டம்ளருடன் மெதுவே அடியெடுத்து அவனை நோக்கி வந்தான்.

    நான் காலி செய்யாதது உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? அருகே வந்த கல்யாணராமன் நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான்.

    ஆச்சரியப்பட இதில் என்ன இருக்கிறது? ஜெகத்குரு நெஞ்சாழத்திலிருந்து வார்த்தைகளைச் சிரமப்பட்டு இறைத்தான்.

    நான் ரொம்ப ரோஷக்காரன்தான். சீனிவாசகம் மட்டும் நெஞ்சைப் பிடித்தவாறு துடித்துக் கொண்டிராவிட்டால் நான் இத்தனை நேரம் காலி செய்திருப்பேன். நீயும் பாவம் ஸ்வீட்டுடன் டிபன் சாப்பிட்டிருக்கலாம்.

    ஜெகத்குருவுக்கு அவனது குத்தலான பேச்சு வெறுப்பைக் கொடுத்தாலும் சீனிவாசகத்தைப் பற்றிக் கூறிய செய்தி பரபரப்பை ஊட்டியது.

    வீட்டுக்கார சீனிவாசகம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இப்படி மாரடைப்பு என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் புழுவாய்த் துடித்தது அவனுக்கு நினைவு வந்தது.

    சீனிவாசகத்துக்கு உடம்பு சரியில்லையா? பரபரத்தது ஜெகத்குருவின் குரல்.

    அதையேன் கேட்கிறாய்? நான் அறையைக் காலி செய்கிறேன் என்று சொன்னதைக் கேட்டு ஒரு கால் ஷாக்கோ என்னவோ! 'அம்மாடி!' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தவர்தான்... அமர்க்களப் பட்டு ஊரே கூடிப் போய் விட்டது. போன் செய்தால் டாக்டர் வருகிறாரா? நான்தான் ஓடினேன். அதற்குள்ளே ஆளே போய் விட்ட மாதிரி அந்த அம்மாள் அழுத அழுகை முழு தெருவுக்குக் கேட்டு ஏராளமான கூட்டம். மனுஷன் என்ன பால்யமா அப்படியாவது? ஆகவில்லை கிட்டத்தட்ட எழுபத்தஞ்சு? நம் அறையிலேயே படுக்கையைப் போட்டுப் படுக்க வைத்திருக்கிறது. இப்போது ஆர்ப்பாட்டம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. டாக்டரும் வந்து வேண்டுமென்கிற அளவு ஊசி ஏற்றி விட்டுப் போயிருக்கிறார்.

    ஜெகத்குரு நண்பனைத் தாண்டிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் பதற்றத்துடன்.

    சீனிவாசகம் அங்கே சலனமில்லாமல் படுத்திருந்தார். அவரது கண்கள் மூடியிருந்தன.

    ஜெகத்குரு ஆறுதலடைந்தான். பாவம், தூங்கட்டும்.

    ஓசை ஏற்படுத்தாவண்ணம் பூட்ஸுகளை மெதுவே கழற்றி ஒருபுறம் வைத்தான்.

    காலையில் மகளைக் கிணற்றடியில் பரிவாக விசாரித்துக் கொண்டிருந்த அவரது அன்பில் கனிந்த முகம் ஜெகத்குருவின் கண்முன் நின்றது. பாவம், அவருக்குத்தான் மனைவியிடம் எவ்வளவு பயம்.

    பாசத்தைக் கூட ஏதோ அவர் தின்பண்டத்தை மறைத்து வைத்திருந்து கொடுப்பதைப் போலக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

    மனுஷன் காப்பி, காப்பி என்றாரே, என்று ஓடினேன். அதற்குள் கண்ணை மூடிக் கொண்டுவிட்டாரே என்று விமர்சித்தபடி காப்பியுடன் உள்ளே நுழைந்தான் கல்யாணராமன்.

    நுழைந்த அலட்சியம் டம்ளரைக் கதவு மேல் மோத வைத்துக் காப்பியைக் கொஞ்சம் சிதற வைத்தது.

    பார்த்து... பார்த்து... என்று ஜெகத்குரு பல்லைக் கடித்துக் கொண்டான்.

    ஊரான் விவகாரத்தையெல்லாம் நாம் எடுத்தாக வேண்டியிருக்கிறதென்றால்? என்று அவன் முணு முணுத்தது ஜெகத்குருவுக்கு அருவருப்பைத் தந்தது.

    நான் தருகிறேன் அவருக்கு என்று கூறி ஜெகத்குரு அவனிடமிருந்த காப்பியை வாங்கிக் கொண்டே, வீட்டுக்கார அம்மா இல்லை? என்று வினவினான்.

    அடுத்த தெருவிலே இவர்கள் வக்கீல் இருக்கிறாராமே? அவரைக் கூட்டிக் கொண்டு வரப் போயிருக்கிறாள்! அந்தப் பெண்ணோ, ஒரேயடியாக அழுது புலம்புகிறது. இந்த ஆசாமியா, தாகம் தாகம் என்கிறார், நான் ஒரு ஆள் என்ன செய்வேன்! சே!

    ஜெகத்குருவின் உள்ளத்திலும் "சே!' என்ற வெறுப்பு தோன்றியது.

    சீதாலட்சுமியின் சொத்து ஆசையைக் கண்டு அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. கணவன் மரணப் படுக்கையில் உழலும் போது அருகிலிருக்காமல் வக்கீலை அழைத்து வர ஓடும் அவளும் ஒரு பெண்ணா?

    காப்பியை ஆற்றி வைத்துவிட்டு, ஜெகத்குரு, சார்... கொஞ்சம் சூடாக இதை சாப்பிடுகிறீர்களா? என்று அன்புடனும் அனுதாபத்துடனும், சீனிவாசகத்தின் கையைத் தொட்டான்.

    அடுத்த கணம் அவன் மின்சாரத்தைத் தொட்டது போல் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

    சீனிவாசகம் சில்லிட்டுப் போயிருந்தார். கல்யாணம்! கல்யாணம்! ஐயோ எனக்கொன்றும் தெரியவில்லையே, நீ வந்து கொஞ்சம் பாரேன்....! என்று ஜெகத்குரு பேயறைந்தது போன்ற வெளிறிப்போன முகத்துடன் கல்யாணராமனை அழைத்தான்.

    கல்யாணராமன் புருவ நெறிசலுடன் சீனிவாசகத்தின் அருகே வந்து அவர் நெற்றியில் கை வைத்தான். சரிதான்! ஆள் அவுட்! என்றான்.

    அவனது பிதுங்கிய உதடுகளிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் ஜெகத்குருவின் காதுகளில் மட்டுமல்லாமல், ஒத்தடம் கொடுப்பதற்காக நெருப்புக் குமுட்டியுடன் வந்து கொண்டிருந்த ஜெயந்தியின் காதுகளிலும் விழுந்து விட்டது.

    ஐயோ! அப்பா! என்று அவள் அலறினாள்.

    தரையில் விழுந்த நெருப்புச் சட்டியின் ஓசையைக் கூட அது அடக்கி விட்டது.

    அப்பா! அப்பா! அப்பா!

    கட்டிலின் மர விளிம்பு மடேல் மடேலெனச் சப்தித்தது.

    சீனிவாசகம் படுத்திருந்த சவமென்றால் ஜெகத்குரு நிற்கும் சவமாக இருந்தான்.

    கட்டிலில் மோதிக் கொண்ட ஜெயந்தியின் நெற்றியிலிருந்து பெருகி வரும் ரத்த வெள்ளத்தை அவன் கண்கள் காணவில்லை.

    ஆனால் -

    கல்யாணராமன் பாய்ந்து சென்று அவளைப் பின்னுக்கு இழுத்தான். என்ன இது? என்ன இது? மண்டையே போயிற்றே? என்று ஜெயந்தியின் நெற்றியில் பெருகி வரும் ரத்தத்தைத் தன்கையை வைத்து அடைத்துக் கொண்டான்.

    விடுங்கள் என்னை... என்னை விடுங்கள்... அப்பா அப்பா... வெறி கொண்டவள் போல் ஜெயந்தி அவன் கைகளை நெற்றியிலிருந்து நீக்கி கொண்டு, அன்பால் குளிப்பாட்டியவரைச் சென்னீரால் குளிப்பாட்டினாள்.

    ஜெகத்குரு முகத்தை மூடிக்கொண்டு கேவிக் கேவி அழுதான். அவனால் அந்தத் துன்பத்தைத் தாள இயலவில்லை.

    கல்யாணராமன் மீண்டும் ஜெயந்தியின் தோள்களைப் பற்றிப் பின்னுக்கு இழுத்து, ரத்தம் இப்படிப் பெருகிக் கொட்டுகிறதே... ப்ளீஸ்... ப்ளீஸ்... ஒரு கட்டைப் போட்டு கொண்டாவது கதறுங்கள்... போனவர்தான் போய் விட்டார்...

    கல்யாணராமன் இரண்டாம் முறையாக அவள் தோள்களைப் பிடித்து இழுத்தது ஜெயந்தியின் உடம்பை எரித்ததோ? சீ! என்னைத் தொடாதீர்கள்! என்று அவள் உதடுகள் வெடித்துச் சிதறின.

    கண்கள் தீச் சரம் தொடுத்தன.

    கலைந்த கூந்தலும் கொட்டும் குருதியால் நனைந்த உடையும், கதறும் முகமும் அவளைப் பயங்கரப்படுத்தின.

    நடு நடுங்கிப் போனான் கல்யாணராமன்.

    ஜெகத்குருவின் ஒவ்வோரணுவும் குத்திட்டு நின்றன.

    ‘இவள்...

    Enjoying the preview?
    Page 1 of 1