Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayiliragu
Mayiliragu
Mayiliragu
Ebook84 pages35 minutes

Mayiliragu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703479
Mayiliragu

Read more from Vidya Subramaniam

Related to Mayiliragu

Related ebooks

Reviews for Mayiliragu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayiliragu - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    மயிலிறகு

    Mayiliragu

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    நாலு மணிக்கு வரச் சொன்னால் சாவகாசமாய் ஆறு மணிக்கு வந்து நின்ற புருஷனை பல்லைக் கடித்தபடி பார்த்தாள் நந்தினி.

    மணி என்ன இப்பொ...?

    அரை நாள் லீவு போட்டுட்டு வந்துடலாம்னுதான் கிளம்பினேன். திடீர்னு மீட்டிங் வெச்சுட்டார் ஜி.எம். நா என்ன செய்ய...?

    நீங்க என்னிக்கு என்ன செஞ்சிருக்கேள் உருப்படியா? இல்ல நா சொல்லி எந்த விஷயத்தைத்தான் தட்டாம செஞ்சிருக்கேள். எப்பப்பாரு ஆபீஸ். இல்லாட்டா அத்வானத்தை வெறிச்சுண்டு மாடில போய் உக்காந்துட வேண்டியது இதை ரெண்டை விட்டா உங்களுக்கு என்ன தெரியும்? மண்ணாந்தை மாதிரி முழிக்கத் தெரியும். மனுஷனா மெஷினா நீங்க? உணர்ச்சியே கிடையாதா உங்களுக்கு? கல்யாணமாகி இந்த அஞ்சு வருஷத்துல ஒரு நாள்... வேண்டாம் ஒரு நிமிஷம் என்னை சந்தோஷமா வெச்சுண்டதுண்டா? இல்ல, சந்தோஷமா வெச்சுக்கணும்னு நினைச்சதாவது உண்டா?

    சிவகுமார் பதில் சொல்லவில்லை. தான் செய்தது தவறுதான் என்பதுபோல் மெளனமாக நின்றார்.

    கஷ்டம்! எல்லாம் என் தலையெழுத்து . இருந்திருந்து எனக்குன்னு வந்து வாய்ச்சுதே ஒரு ஊமைக்கோட்டான்! கல்லா நீங்க...? திட்டினாலும் மரக்கட்டை மாதிரி நிக்கறேள். மனுஷனுக்கு நவரச குணங்கள் உண்டுன்னுவா. உங்களுக்கு ஒண்ணு கூடவா இல்ல? ஜடபரதன் மாதிரி என்ன பிறவி இது...?

    சிவகுமார் இதற்கும் எவ்வித பதிலும் சொல்லவில்லை, அவள் சொன்னதுபோல் ஜடபரத வாழ்க்கை தான். எல்லா பற்றுக்களையும் கிட்டத்தட்ட அறுத்தாகி விட்டது. ஒன்றே ஒன்றைத் தவிர. காவிரியின் நினைவுகள்! அதை மட்டும் தான் அறுக்க முடியவில்லை. சொல்லப் போனால் இதில் தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

    போயாச்சா... சூன்யத்துக்குப் போயாச்சா மறுபடி.யும்? நந்தினி அவனை பேய் மாதிரி உலுக்க அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

    சுபாவோட பர்த்டே பார்ட்டி இருக்கு. மறக்காம வந்துடுங்கோன்னு எங்க மன்னி எத்தனை முறை சொல்லிட்டுப் போனான்னு மறந்துடுத்தா...? கொஞ்சமானம் ஈவிரக்கம் இருந்தா இப்டி ஆபீஸ் மீட்டிங் தான் பெரிசுன்னு உக்காந்திருப்பேளா? பணம் வேணும், வேற ஏதாவது ஒத்தாசை வேணும்னாதான் எங்கண்ணா ஞாபகம் வருமா உங்களுக்கு? எவ்ளோ செஞ்சிருப்பான் அண்ணா நமக்கு! அவன் குழந்தை பர்த்டேக்குகூட என்னைக் கூட்டிண்டு போக மனசில்ல இல்ல உங்களுக்கு? உங்களைச் சொல்லி குத்தமில்லப்பா. இதெல்லாம் மாயவரத்து குசும்பு. எங்காத்து மனுஷாளை மதிச்சுடப்படாதுங்கற வைராக்யம்! காவேரித் தண்ணி குடிச்சு வளர்ந்த திமிரு.

    நீயா வந்து போயிருக்கலாம் இல்ல? சிவகுமார் அவள் பேசியது எல்லாம் உறைக்கவே இல்லை என்பதுபோல் அமைதியாகக் கேட்டான்.

    ஆஹா! போயிருக்கலாமே. அங்க போனா எங்கடி உன் அழகான ஆம்படையானைக் காணும்னு ஆளாளுக்கு கேக்கணும். நா அசடு வழியச் சிரிக்கணும். எனக்குன்னு மானம் மரியாதை இல்ல...? அவாவா ஜோடி ஜோடியா வருவா நா மட்டும் ஒத்தை செருப்பாட்டம் போகணும் அப்படித்தானே...?!

    மணியாகலையே. வா போய்ட்டு வந்துடலாம்

    "ஓ... போலாமே! உங்க டப்பா ஸ்கூட்டர்ல, இங்கேர்ந்து அண்ணா நகர் போறதுக்குள்ள பர்த்டே குழந்தைக்கு அடுத்த பர்த்டே வந்துடும், பொறாமைப்பா உங்களுக்கு. எங்கண்ணா நன்னார்க்கான்னு பொறாமை, அமெரிக்கால டாலர் டாலரா சம்பாதிக்கறான். இங்க வீடும் வாசலும் தோட்டமும் தரவுமா வாங்கிப் போட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1