Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vaanam Miga Arugil
En Vaanam Miga Arugil
En Vaanam Miga Arugil
Ebook91 pages42 minutes

En Vaanam Miga Arugil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403475
En Vaanam Miga Arugil

Read more from Rajesh Kumar

Related to En Vaanam Miga Arugil

Related ebooks

Reviews for En Vaanam Miga Arugil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vaanam Miga Arugil - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    என் வானம் மிக அருகில்

    En Vaanam Miga Arugil

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    என் வானம் மிக அருகில்

    உன் பார்வையோ வெகு தொலைவில்

    ஒரு சேதி உன்னைத் தேடிவரும்

    நின்ற தேரொன்று ஓடிவரும்.

    -குறிஞ்சி

    அந்த பாசஞ்சர் ரயில் அல்லியூர் ரயில்வே ஸ்டேஷனில் நீராவி கக்கி நின்றபோது அதிகாலை ஐந்தே முக்கால் மணி. அவன் ஒருவன் மட்டுமே அந்த ஸ்டேஷனில் இறங்கினான். இளைஞன். முப்பது வயதிருக்கலாம். முகத்தின் பாதியை ட்ரிம் செய்யப்பட்ட தாடி குத்தகைக்கு எடுத்திருந்தது. இடது தோளில் ஒரு ஜோல்னா பை. வலது கையில் நிறம் மங்கிப்போன ஒரு சூட்கேஸ். சூட்கேஸின் லாக்கர் பிளேட்டில் 'சங்கர நாராயணன்' என்கிற பெயர் எழுதப்பட்டிருந்தது.

    ரயில், 'வே' என்று கூவிவிட்டு - அந்தச் சிறிய ஸ்டேஷனில் அதற்கு மேல் நிற்பது அவமானம் என்று கருதி நகர்ந்ததும் - அவனும் மணல் கொட்டியிருந்த பிளாட்பாரத்தில் நடந்து - இவனிடம் டிக்கெட்டை வாங்குவதற்காகவே காத்திருந்த வயதான ஸ்டேஷன் மாஸ்டரை நோக்கிப் போனான்.

    கிராமத்திற்கே உரிய குளிர் காற்று… அவசரமில்லாமல் வீசிக் கொண்டிருக்க - அதில் நெற்பயிரின் மணம் எப்படியோ திருட்டுத்தனமாய் கலந்து விட்டிருந்தது. ரயிலடிக்கு கொஞ்சம் தள்ளியிருந்த டீக்கடையில் - பாய்லரின் நெருப்பு 'கணகண'வென்று தெரிந்தது.

    கையை நீட்டிய ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு - ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த - அந்த சிறிய ரயில்வே ஸ்டேஷனினின்றும் வெளிப்பட்டான் அவன்.

    வண்டியிலிருந்து அவிழ்த்துவிட்டிருந்த காளையொன்று மணிச் சத்தத்தோடு வைக்கோலை அசை போட்டுக் கொண்டிருக்க - வண்டிக்காரன் - சிமெண்ட் பெஞ்சியில் மல்லாந்து படுத்து - வாயைப் பிரித்து தூங்கிக் கொண்டிருந்தான்.

    'டீ சாப்பிடலாம்' - யோசித்து - பனையோலைகளால் - ஒரு டீ ஸ்டாலாய் மாறியிருந்த கடையை நோக்கிப் போனான்.

    'ஜோதிலட்சுமி டீ ஸ்டால்.'

    இவிடம் கொழா புட்டு, பொண்டா, பச்சி, இட்லி, தேசை கெடைக்கும் உரிமையாளர் சொடலமுத்து. குற்றுயிரான தமிழில் போர்டை படித்துக் கொண்டே - பாய்லர்க்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த - மரப் பெஞ்சில் போய் உட்கார்ந்தான்... அவன்.

    சொடலமுத்து தோளில் துண்டோடும், நெற்றியில் திருநீறு பட்டையோடும் பாய்லர்க்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தார்.

    என்ன வேணுங்க...

    சக்கரை கம்மியா ஒரு டீ...

    நாட்டு சர்க்கரை டீயா? அஸ்கா டீயா?

    அஸ்கா டீ...

    வெறும் டீ போதுங்களா?

    போதும்

    கொழா புட்டு சூடா இருக்கு... சாப்ட்றீங்களா?

    வேண்டாம்... டீ போதும்

    சொடலமுத்து சற்றே ஏமாற்றமாய் - கண்ணாடி டம்ளரை எடுத்து - சுடுதண்ணீரில் கழுவி - நுரை ததும்ப ஒரு டீயை அடித்துக் கொண்டு வந்து - அவனிடம் நீட்டினான். கேட்டான்.

    மேக்கே போன ட்ரெய்ன்லதானே வந்தீங்க?

    ஆமா...

    வெளியூரா...?

    ஆமா...

    எந்த ஊரு...?

    வடநாட்டுப் பக்கம்

    இந்த கிராமத்துல யார் வீட்டுக்கு வந்தீங்க...?

    அவன் பதில் பேசாமல் டீயை உறிஞ்சிக் கொண்டிருக்க - சொடலமுத்து மறுபடியும் கேட்டார் யார் வீட்டுக்கு வந்தீங்க...?

    அவசியம் உங்ககிட்டே சொல்லணுமா?

    இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாங்க...

    இஷ்டமில்லை... டீ எத்தினி காசு...?

    அம்பது...

    அவன் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். சொடலமுத்து மீதி சில்லறையைக் கொண்டுவந்து கொடுப்பதற்குள் – அவன் டம்ளரில் இருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1