Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nooru Degree Thendral
Nooru Degree Thendral
Nooru Degree Thendral
Ebook152 pages43 minutes

Nooru Degree Thendral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nooru Degree Thendral

Read more from Rajeshkumar

Related to Nooru Degree Thendral

Related ebooks

Related categories

Reviews for Nooru Degree Thendral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nooru Degree Thendral - Rajeshkumar

    27

    1

    விக்னேஷ் டெல்லிக்கு வருவது அதுதான் முதல் தடவை. மெட்ராஸ், பெங்களூர் எல்லைகளைத் தாண்டாத அவனுக்கு - டெல்லி கொஞ்சம் பிரமிப்பாய் இருந்தது. சுத்தமான ரோடுகளையும், கட்டிடங்களையும் பார்த்து – 'இந்தியாவா... ஏழை நாடு...? ஹம்பக்!' என்று மனசுக்குள் சிரித்தான். ரோஸ் நிற உடம்பு, பாப் தலை, ஸ்லீவலஸ் ஜாக்கெட்டில் போகும் பெண்கள் அவனை நிலை தடுமாற வைத்தார்கள்.

    ரெண்டு நாட்களுக்கு முன்பு -

    பாலம் ஏர்ஃபோர்ட்டில் பதினோரு டிகிரி ஸெல்ஷியஸ் குளிரில் வெட வெடவென்று அவன் வந்து இறங்கிய போது - அவனுடைய கம்பெனி மானேஜர் தேவானந்த் ஒரு பெரிய ரோஜா மாலையை அவன் கழுத்தில் போட்டு - வெல்கம் ஸார் - சொன்ன போது ஏர்ஃபோர்ட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

    என்னய்யா... இது டெல்லிதானா...?

    ஆமா... ஸார்...

    ஃபாரின் கணக்கா இருக்கு...

    ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ரெனவேஷன் பண்ணினாங்க ஸார். மொத்தம் பத்து கோடி ரூபாய் செலவு...

    ஹம்மாடி...

    அன்றைக்கு ஏர்போர்ட்டில் ஆரம்பித்த ஆச்சர்யம்... இன்னமும் அவனிடம் முடிந்த பாடில்லை.

    டொக்... டொக்...

    அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு - கண்ணாடி ஜன்னல் வழியே டெல்லியின் பனிமூட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த விக்னேஷ் எஸ்... கம்மின் என்றான்.

    தேவானந்த் கதவைத் தள்ளிக் கொண்டு - உள்ளே வந்தார். கையில் நீண்ட வயரோடு டெலிபோன்.

    என்ன...?

    அப்பா கிட்டயிருந்து உங்களுக்கு லைட்னிங் கால் டெலிபோனை அவர் கையில் வைத்துக் கொள்ள - ரிஸீவரை எடுத்து ஹலோ - என்றான் விக்னேஷ். மறுமுனையில் விக்னேஷின் அப்பா நாகேஸ்வரன் உற்சாகக் குரலில் கேட்டார். என்ன விக்னேஷ் டெல்லி எப்படியிருக்கு...?

    ஃபைன்...

    கெஸ்ட் ஹவுஸ் வசதியா இருக்கா...?

    ஆஹா...!

    பிஸினெஸ் பிடிபடுதா...?

    அதான் டாட்... பேஜாரு... எந்த ஃபைலை எடுத்து... எதை படிச்சாலும் ஒண்ணும் புரியமாட்டேங்குது... நான் பேசாம காலேஜ் ஸ்டடியையே கண்டினியூ பண்ணியிருக்கலாம்... பிஸினெஸெல்லாம் உங்களுக்குத்தான் சரி... எனக்கு போர் டாட்

    ஆரம்பத்துல் அப்படித்தான் இருக்கும். ஒரு மாசத்துக்குள்ளே... பிஸினெஸ்ல இன்வால்வ்மெண்ட் வந்துடும்...

    எனக்கு வரும்னு தோணலை...

    அப்செட் ஆயிடாதே... எனக்குப் பின்னாடி பிஸ்னெஸை நீதான் கவனிச்சுக்கணும். ரெண்டு தடவை ஹார்ட் அட்டாக் வாங்கி - மூணாவது அட்டாக்கை எதிர்பார்த்து - காத்திட்டிருக்கிற எனக்கு நீதான் ஆறுதல்...

    அப்பா நான் ஒண்ணு சொல்லட்டுமா...?

    என்ன...?

    இவ்வளவு பிஸினெஸ் நமக்கு தேவைதானா...? மெட்ராஸில் இருக்கிற பாலி கெமிக்கல் பாக்டரியை மட்டும் வெச்சுகிட்டு - மத்ததையெல்லாம் ஒரு நல்ல பார்ட்டிக்கு ‘குட்வில்' வெச்சு வித்துடலாமே...

    ரப்பிஷா பேசாதே... ஒவ்வொரு கம்பெனியும் எனக்கு குழந்தைகள் மாதிரி... அந்தக் குழந்தைகளை இன்னொருத்தர்க்கு தத்து குடுக்க நான் விரும்ப மாட்டேன்... இதோ பார் விக்னேஷ்... இன்னிக்கு இருக்கிற அஞ்சு கம்பெனிகளுக்கு நான் மானேஜிங் டைரக்டர். நீ ஜாய்னிங் டைரக்டர்... நவ் அயாம் கெட்டிங் ஓல்ட் அண்ட் கெளண்டிங் டேஸ் டு மை க்ரேப்யார்ட்... அந்த கம்பெனிகள் எல்லாமே என் சுய உழைப்பினால் வந்தது. வளர்ந்தது. என்னோட காலம் முடியறதுக்குள்ளே... உன் முயற்சியாலே ஒரு கம்பெனியாவது உருவாகணும்...

    என்னப்பா நீங்க... இதையே என்னால் கட்டிக்காக்க முடியுமான்னு திணறிக்கிட்டிருக்கேன்... நீங்க என்னடான்னா... பெரிய பெரிய நம்பிக்கை எல்லாம் என் மேல வெச்சிட்டிருக்கீங்க...! அளவுக்கு மீறி ஆசைப்படாதீங்கப்பா...

    விக்னேஷ்... நீ என் ரத்தம் தானே...?

    யெஸ்...

    அப்படீன்னா உன்னாலேயும் நாலைஞ்சு கம்பெனிகளை உருவாக்க முடியும்... பை... த... பை... டெல்லியைச் சுத்திப் பார்த்தியா...?

    இன்னிக்குத்தான் என்னோட ஸைட் லீயிங்கை ஆரம்பிக்கிறேன்.

    என்ஜாய் ஸன்...! இஃப் யூ ஃபைண்ட் லீஷர் கிவ் லிட்டில் கான்சண்ட்ரேஷன்... டு பிசினஸ்... தட் வில் டூ...

    அப்புறம்... என்கிட்டே உனக்கு எந்தவிதமான மாரல் ஃபியரும் வேண்டாம்... ஹேவ் ட்ரிங்க்ஸ்... வென்யூ ஃபைண்ட் நெசஸிடி... ஹேவ் ஃபைன் கேர்ள்ஸ்

    டாட்...

    விக்னேஷ் அதிர்ச்சியாய் ரிஸீவரைப் பார்க்க - மறு முனையில் அவர் சிரித்தார். நான் உனக்கொரு வித்தியாசமான அப்பா... விஷ் யூ ஆல் த பெஸ்ட்... ரெண்டு நாள் கழிச்சு நானே ரிங்க் பண்றேன்...

    ரிஸீவரை சாத்திவிட்டு - தேவ்ஆனந்தை ஏறிட்டான். "அப்பாவுக்கு என் மேல் ரொம்பவும் நம்பிக்கை. நானாவது புதுக்கம்பெனியை ஆரம்பிக்கிறதாவது? இருக்கிற கம்பெனிகளை மூடாம இருந்தா போதும்...'

    ஸார்! உங்களாலும் புதுக் கம்பெனிகளை உருவாக்க முடியும்.

    ஐஸ் வைக்காதே...

    ஸாரி... ஸார்

    இன்னிக்கு... என்னோட ப்ரோக்ராம் என்னென்ன...?

    எட்டு மணிக்கு பிரேக் பாஸ்ட் முடிஞ்சதும் கம்பெனிக்குப் போய் - பத்து மணி வரைக்கும் சம்-இம்பார்ட்டன்ட் ஃபைல்ஸ்ல கையெழுத்து போடறீங்க... தென் சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் ஸைட் லீயிங் அரேஞ்ச் பண்ணியிருக்கு...

    ஸைட் லீயிங்குக்கு என்னோட வரப் போறது யாரு...?

    டெல்லி டூரிஸம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி - ஒரு கைடை வரச் சொல்லியிருக்கேன்...

    இன்னிக்கு ஆபீஸ் ஒர்க் எதுவும் வேண்டாம்... அந்த கைடை எட்டு மணிக்கெல்லாம் வரச் சொல்லிடு... பிரேக் பாஸ்ட் முடிஞ்சதும்... நேரா ஸைட் லீயிங்தான்...

    ஸார்... வந்து...

    என்ன...?

    சில முக்கியமான ஃபைல்ஸில் இன்னிக்கு நீங்க கையெழுத்துப் போட்டாத்தான்... ஆடிட்டரும் நானும் சேர்ந்து - பாங்க் டாக்குமென்டேஷன்களை - முடிக்க முடியும்...

    "நாளைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1