Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devan Mozhi
Devan Mozhi
Devan Mozhi
Ebook137 pages1 hour

Devan Mozhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465438
Devan Mozhi

Read more from Devibala

Related to Devan Mozhi

Related ebooks

Reviews for Devan Mozhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devan Mozhi - Devibala

    12

    1

    முக்கியமான சில தகவல்களை சொல்லி விட்டு கதைக்குள் போகலாமா?

    நம் கதாநாயகி விஜிக்கு வயது- வரும் ஆகஸ்ட் மாதம் முப்பது! முன்னுச்சியில் கணிசமாக நரை! அதை மறைக்க சாயம் அடிக்க வேண்டும்! வழியில்லை. காரணம், விஜி வேலைக்குப் போகவில்லை. ஏன் போகவில்லை? விஜி 12ஆவது வகுப்பில் பெயிலாகி விட்டதால் மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லை.

    கல்யாண மார்க்கெட்டில் இடம் பிடிக்க ஒரு பெண்ணுக்கு என்னல்லாம் வேண்டும்?

    முதலில் அழகு; அடுத்தபடியாக இளமை - அதாவது குறைஞ்ச வயசு.

    அட்லீஸ்ட் பட்டதாரியாக இருக்க வேண்டும்! குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயாவது சம்பாதிக்க வேண்டும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஜாதகமாக இருக்க வேண்டும்!

    இதில் ஒன்று கூட விஜிக்கு இல்லாதது துரதிஷ்டம்!

    பணம் படைத்த குடும்பத்திலும் விஜி பிறக்கவில்லை!

    தாங்கிப் பிடிக்க அப்பா உயிருடன் இல்லை! ஒரு விதவைத் தாய் - கண்ணீரும் பெருமூச்சுமாக வாழும் புண்ணியவதி!

    இனி கதைக்குள் போகலாமா?

    ‘இதைவிட என்ன வேண்டும் கதைக்கு?’ என்றொரு குரல் கேட்கிறதே!

    இத்தனை எதிர்மறை சங்கதிகளையும் மீறி விஜியை நாலைந்து பேர் பெண் பார்க்க வந்து விட்டார்கள்! அதுதான் ஆச்சர்யம்!

    ஆனால் யாருமே விஜியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது தெரிந்த சங்கதிதானே?

    அம்மா அம்புஜம் கோயிலுக்குப் போனபோது தெரிந்தவர்களிடம் பேசி, ஜாதகம் கொடுத்து அது பொருந்தப் போக, அந்தம்மா அம்புஜத்தை மடக்கி ‘எப்ப பெண் பாக்க வரலாம்னு கேக்கறாங்க’ என்றாள்!

    பையன் என்ன செய்யறான்?

    ஒரு ஓட்டல்ல மானேஜரா இருக்கான்! வயசு முப்பத்தி அஞ்சு! வீட்டுக்கு மூத்த பிள்ளை! மூணு சகோதரிகளுக்கு கல்யாணம் நடந்த காரணமா, இவனுக்கு தாமதம்! பாக்க லட்சணமா இருப்பான்! பெத்தவங்க கூட வாழறான். சொந்த வீடெல்லாம் இல்லை! வாடகை வீடுதான்!

    சரி! இவளைப் பற்றி சொல்லியாச்சா?

    எல்லா தகவல்களையும் தரகர் சொல்லியாச்சு! பாக்க வர்றோம்னு சொல்றாங்க!

    சரி! நான் வீட்ல போய் என் பிள்ளைகிட்டப் பேசிட்டு உங்களைக் கூப்பிடறேன்!

    செல் நம்பர் கைக்கு வந்தது!

    அம்மா அம்புஜம் வீட்டுக்கு வந்தாள்!

    மூத்தவன் கோவிந்து! ஒரு பேக்டரியில் சூப்பர்வைஸர்! வயசு முப்பத்தி ஆறு! அவன் மனைவி தாரிணிக்கு பிரபல தனியார் நிறுவனத்தில் உத்யோகம்! நாலு வயதில் பெண் குழந்தை! கோவிந்துக்கு அடுத்தவள் தான் விஜி! அதன் பிறகு புஷ்பா - இருபத்தாறு வயசு! அவளுக்கு தனியாரில் உத்யோகம்! விஜியை விட்டுவிட்டு புஷ்பாவை கேட்கத் தொடங்கி விட்டார்கள்! கடைசிப் பெண் சந்திரா - வயசு இருபத்திரண்டு. நர்ஸ் பயிற்சி முடித்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறாள்!

    மருமகள் தாரிணி வாழ வந்து ஆறு மாத காலம் ஒழுங்காக இருந்தாள்! அதன் பிறகு தன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டாள்!

    ஆறு ஜீவன்களை காலம் முழுக்க ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தன் கணவனுக்கு என்று தெரிந்ததும் தலைதூக்கி விட்டாள்!

    முதலில் கோவிந்து ஆர்ப்பாட்டம் செய்தான்!

    பெண் பார்க்க வந்தப்பவே எல்லாம் சொன்னோமில்லை? தெரிஞ்சு தானே கழுத்தை நீட்டினே? என்னையே நம்பி இருக்கற என் அம்மாவும், தங்கச்சிகளும் எங்கே போவாங்க! இஷ்டமிருந்தா இரு. இல்லைனா, போய்க்கிட்டே இரு!

    முதலில் தாரிணி மிரண்டாள்.

    அம்மா அம்புஜம் சமாதானப் படுத்தினாள்!

    அப்படியெல்லாம் பேசாதே கோவிந்து! அவ உன் சம்சாரம்! அவளையும் நீ விடக்கூடாது! அது மகாபாவம்!

    கொஞ்சம் களேபரம் நடந்தது! சமாதானம் பேசப்பட்டது!

    ஒரு வருடத்தில் குழந்தை பிறந்தது!

    செலவுகள் கை மீறின!

    தாரிணிக்கு கோவிந்தை விட ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகம்! அவளது சம்பளம் அந்தக் குடும்பத்துக்கு மிக மிக அவசியம் என்ற நிலையில் கோவிந்து மெள்ள மெள்ள அடங்கிப் போனான்! குழந்தையும் பிறந்தபிறகு சுத்தமாக பேச மறந்தான்! அவன் சம்பளம் முன்பெல்லாம் அம்மாவிடம்; இப்போது தாரிணி கைக்கு மாறி விட்டது!

    தாரிணியைக் கேட்டுத்தான் வீட்டில் எதுவும் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகி விட்டது!

    நீ தலைக்கு சாயம் போட மாசா மாசம் பட்ஜெட் இடம் தராது! முப்பது வயசை சாயம் போட்டு மறைக்க நினைக்காதே! முகம் காட்டிக் குடுத்துடும்!

    விஜிக்கு ‘சுருக்’.

    கோவிந்துவிடம் தாரிணி தீர்மானமாகச் சொல்லி விட்டாள்!

    இதப்பாருங்க! உங்களுக்கு சொந்த வீடு இல்லை! இந்த ஜென்மத்துல நம்மால வாங்கவும் முடியாது! வாடகை குடுத்து, ஆறு பேர் சாப்பிட்டு வாழணும்! எனக்கும், என் குழந்தைக்கும் எதுவும் குறையக் கூடாது! உங்க தங்கச்சிகளோட கல்யாணத்துக்கு நான் பொறுப்பை ஏத்துக்க முடியாது! புரியுதா?

    கோவிந்து பேசவில்லை!

    அம்புஜம் மனசு பொறுக்காமல் கேட்டு விட்டாள்!

    அவன் சம்பளத்தையும் உன்கிட்டத்தான் தர்றான். நீதான் செலவு நடத்தறே! அப்புறமா எதுக்கும் நீ பொறுப்பெடுக்க முடியாதுனு சொன்னா எப்படி?

    இதப்பாருங்க! கேள்வி கேக்காதீங்க! எனக்குப் புடிக்காது! உங்களுக்காக என் சந்தோஷத்தை நான் தாரை வார்க்கணும்னு இல்லை! பொண்ணுங்களைப் பெத்தா, சேர்த்து வச்சுக்கணும்! மத்தவங்க முதுகுல சவாரி செய்ய நினைச்சா என்ன நியாயம்? நாங்களும் வாழத் தானே வந்திருக்கோம்?

    கோவிந்து வாயடைத்து நின்றான்!

    வேறு வழியில்லை!

    அடுத்தவள் புஷ்பா வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு அம்மா, சகோதரிகளின் தேவைகள் நிறைவேற, அடுத்த மாதம் சம்பளம் வந்ததும்,

    "புஷ்பா! உன்

    Enjoying the preview?
    Page 1 of 1