Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek Vidivatharkul Vaa
Vivek Vidivatharkul Vaa
Vivek Vidivatharkul Vaa
Ebook164 pages1 hour

Vivek Vidivatharkul Vaa

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek Vidivatharkul Vaa

Read more from Rajeshkumar

Related to Vivek Vidivatharkul Vaa

Related ebooks

Related categories

Reviews for Vivek Vidivatharkul Vaa

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek Vidivatharkul Vaa - Rajeshkumar

    26

    1

    கவாஸகி மோட்டார் பைக்கை ரோட்டோரமாய் நிறுத்திவிட்டு அவன் இறங்கினான். இளைஞன். வயது முப்பது. ஜீன்ஸ் பேண்ட். வெள்ளை சர்ட். உடம்பில் பதட்டம்.

    வேகவேகமாய் ரோட்டைக் கடந்தவன் பெட்டிக்கடை வாசலில் நின்று போஸ்டர்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த ஒரு நபரிடம் கேட்டான்.

    என்னங்க... இங்கே ப்ளட் பேங்க் எங்க இருக்கு...?

    ப்ளட் பேங்க்கா...? அப்படி ஒரு பேங்க்கோட பேரை நான் கேள்விப்பட்டதேயில்லையே... இந்த ரோட்டுல ஸ்டேட் பேங்க் இருக்கு.. வைஸ்யா பேங்க் இருக்கு. வேற எந்த பேங்க்கும் இருக்கிற மாதிரி தெரியலையே...?

    இளைஞன் கோபத்தைக் காட்டாமல் சொன்னான்.

    இது பணம் போடற பேங்க் இல்லைங்க.

    பின்னே...?

    ப்ளட் பேங்க். ரத்த வங்கி. ரத்தத்தை சேமிக்கிற இடம். இதே ரோட்ல எங்கேயோ மாடியில் இருக்கிறதாக சொன்னாங்க...

    ஓ...! அதைக் கேக்கறியா...? இப்படியே நேரா போனா மார்ஸ் காம்ப்ளக்ஸ் வரும். அந்த காம்ப்ளக்ஸோட ரெண்டாவது மாடியில் ‘அப்பல்லோ ரத்த வங்கி’ன்னு ஒரு போர்டு தெரியும். அதுதான்...

    இளைஞன் தன்னிச்சையாய் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு வேகவேகமாய் மார்ஸ் காம்ப்ளக்ஸை நோக்கி நடை போட்டான்.

    ஐந்து நிமிஷ நடை.

    மார்ஸ் காம்ப்ளக்ஸ் க்ரானைட் உடம்போடு பளபளப்பாய் வந்தது. ‘அப்பல்லோ ரத்த சேமிப்பு வங்கி’ என்ற பெயர்ப் பலகை இரண்டாவது மாடிக்கு வழி காட்ட லிப்ட்டுக்கு காத்திருக்க பொறுமையில்லாமல் படிகளில் தபதபவென்று ஏறி இரண்டாவது மாடி வராந்தாவுக்குள் மூச்சிரைக்க நுழைந்தான்.

    கௌண்ட்டரில் இரண்டு பெண்கள் உட்கார்ந்து ஆடித்தள்ளுபடியில் வாங்கி வந்த சேலைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். தள்ளுபடி சேலைன்னாலே பயமாயிருக்கு...

    ஏன்...?

    சாயம் போயிருதே...! அப்படியே சாயம் போகாமே போனாலும் அஞ்சுமீட்டர் சேலை நாலே முக்கால் மீட்டர் சேலையாயிடுதே...

    எக்ஸ்க்யூஸ் மீ... அந்த இளைஞன் நெற்றி வியர்வையை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டே அவர்களுக்கு எதிரே வந்து நின்றான்.

    எஸ்...

    என்னோட மதர்க்கு ஒரு அவசர ஆப்ரேஷன். ‘ஓ’. பாஸிட்டீவ் ப்ளட் ரெண்டு பாட்டில் வேணும். கிடைக்குமா?

    ஸாரி... அந்த க்ரூப் ப்ளட் ஸ்டாக் இல்லை.

    எங்கே கிடைக்கும்?

    ஜி.ஹெச்ல ட்ரை பண்ணீங்களா?

    கேட்டுப் பார்த்துட்டேன். அங்கேயும் ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டாங்க.

    லோட்டஸ் ஹாஸ்பிடல்ல கேட்டுப் பார்த்தீங்களா?

    இல்லை....

    அங்கே கேட்டுப்பாருங்க. ஒரு வேளை கிடைக்கலாம்.

    ப்ளீஸ்... நீங்களே கொஞ்சம் லோட்டஸ் ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி ப்ளட் க்ரூப் இருக்கா இல்லையான்னு கேட்டுச் சொல்ல முடியுமா...?

    இரண்டு பெண்களில் ஒருத்தி தயங்கிவிட்டு டெலிபோனைத் தொட்டாள். லோட்டஸ் ஹாஸ்பிடலோடு தொடர்பு கொண்டு பேசிவிட்டு இளைஞனிடம் நிமிர்ந்தாள்.

    ஸாரி... அங்கேயும் நீங்க கேட்ட ப்ளட் க்ரூப் இல்லையாம். உங்க மதர்க்கு என்ன ஆப்ரேஷன்..?

    வயித்துல ஒரு மேஜர் ஆப்ரேஷன்

    எந்த ஹாஸ்பிடல்...?

    புனிதம் நர்ஸிங் ஹோம்...

    நீங்க கேட்ட ‘ஓ’பாஸிட்டீவ் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம். ப்ளட் டோனர் யாரையாவது பிடிக்கிறதுதான் பெட்டர்..-.

    ப்ளட் டோனர் லிஸ்ட் உங்க கிட்ட இருக்கா மேடம்...?

    ஒரு அட்ரஸை நோட் பண்ணித்தர்றேன். அந்த அட்ரஸ்ல மிஸ்டர் ஸ்ரீனிவாசராகவன்னு ஒருத்தர் இருப்பார். அவரைப் போய் காண்ட்டாக்ட் பண்ணீங்கன்னா அவர் நீங்க கேட்ட ப்ளட் க்ரூப்புக்கு ஏற்பாடு பண்ணித் தருவார்.

    வெரி கைண்ட் ஆப் யூ மேடம். அட்ரஸைக் கொடுங்க...

    அந்தப் பெண் ஒரு துண்டுச் சீட்டை எடுத்து பால்பாயிண்ட் பேனாவை எடுத்து அட்ரஸை விறுவிறுவென்று எழுதிக் கொடுத்தாள்.

    தேங்க்யூ மேடம்... இந்த உதவியை நான் என்னிக்குமே மறக்கமாட்டேன். பை...த... பை... இந்த சிட்டியில் எந்தெந்த இடத்துல ரத்த சேமிப்பு வங்கிகள் இருக்குன்னு சொல்ல முடியுமா...?

    சாஸ்திரி நகர்ல இருக்கு. அதை விட்டா ஈஸ்வரி காலனியில்.

    ஓ.கே... நான் பார்த்துக்கிறேன்.... அகெய்ன் தாங்க்யூ ஏ லாட்...

    மொதல்ல மிஸ்டர் சீனிவாசராகவனைப் போய்ப் பாருங்க.

    கண்டிப்பா...! இப்போ நேரா அங்கேதான் புறப்பட்டுப் போய்கிட்டிருக்கேன்...

    இளைஞன் புயல் வேகத்தில் வெளியே வந்தான். மோட்டார் பைக் நிறுத்தியிருந்த இடத்துக்கு வேகவேகமாய் போய் பைக்கை உதைத்து உயிரூட்டிக் கொண்டு கிளம்பினான்.

    சரியாய் ஏழு நிமிஷம் புல்லட் வேகப் பயணம்.

    ஸ்ரீனிவாசராகவன் குடியிருந்த அபார்ட்மெண்ட் நான்காவது மாடியில் இருந்தது.

    ஒல்லியாய் - சிவப்பு தேகம். ஐம்பது வயதுக்குரிய சற்றே தளர்ந்த உடம்பு. நெற்றியில் ஸ்ரீசூர்ணமும் அதற்கு கீழே சந்தனப் பொட்டும் தெரிந்தன.

    வணக்கம் ஸார்...!

    வணக்கம்...! என்ன விஷயம்... சொல்லுங்கோ...

    என்னோட மதர்க்கு ஒரு அவசர ஆப்ரேஷன் பண்ண வேண்டியிருக்கு. ‘ஓ’ பாஸிட்டீவ் ப்ளட் ரெண்டு பாட்டில் வேணும். ஏற்பாடு பண்ண முடியுமா ஸார்...?

    எப்ப வேணும்...?

    மத்தியானம் ரெண்டு மணிக்குள்ளே...

    உங்களுக்கு என்னோட அட்ரஸைக் கொடுத்து விட்டது யார்?

    அப்பல்லோ ப்ளட் பேங்க்...

    எவ்வளவு பாட்டில் வேணும்ன்னு சொன்னீங்க?

    ரெண்டு பாட்டில்...

    எந்த ஹாஸ்பிடல்ல ஆப்ரேஷன்...?

    புனிதம் நர்சிங் ஹோம்...

    கையில பணம் வெச்சிருக்கீங்களா?

    இருக்கு...

    எவ்வளவு?

    ரெண்டாயிரம்...

    நேத்து ஒரு பேஷண்ட்டுக்கு ரெண்டு பாட்டில் ‘ஓ’ பாஸிடீவ் ப்ளட் வேணும்ன்னு அருணா ஹாஸ்பிடல்ல கேட்டாங்க. ப்ளட் போய்ச் சேர்ந்து ஆப்ரேஷன் தொடங்கறதுக்குள்ளே பேஷண்ட் அவுட். அந்த ரெண்டு பாட்டில் ப்ளட்டும் இன்னும் அதே ஹாஸ்பிடல்லதான் இருக்கு. உங்களுக்கு அது வேணும்ன்னா ரூபாய் ஆயிரத்து ஐநூறு வரைக்கும் பே பண்ண வேண்டியிருக்கும்.

    இளைஞன் பரபரத்தான். பரவாயில்லை ஸார். பணம் எவ்வளவுகேட்டாலும் நான் கொடுக்கத் தயாராயிருக்கேன். ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சு எங்கம்மா கண்ணை முழிச்சுப் பார்த்தா போதும் ஸார். அந்த அருணா ஹாஸ்பிடல் எங்கே ஸார் இருக்கு?

    "சிட்டிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1