Udhaa Nizhal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Udhaa Nizhal
Related ebooks
Oru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPogap Pogath Theriyum and Ootha Nira Thevathai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsRattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Oru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsVaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Puthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsNirangal Rating: 3 out of 5 stars3/5Puthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsNeethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsThai Manne Vanakam Rating: 0 out of 5 stars0 ratingsIruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 0 out of 5 stars0 ratingsOnbathaavathu Thisai Paththavathu Giragam Rating: 0 out of 5 stars0 ratingsKaraikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Puyalum Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsOru Maranathin Maranam Rating: 0 out of 5 stars0 ratingsRaththamindri Oru Yuttham Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Kili Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pothuvazhiyalla Rating: 0 out of 5 stars0 ratingsAndre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Innaley! Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Udhaa Nizhal
0 ratings0 reviews
Book preview
Udhaa Nizhal - Rajeshkumar
20
1
விடியற்காலை ஐந்து மணி. சாந்தோம் பீச். அயோடின் உப்பு கலந்த ஓஸோன் காற்று கொஞ்சம் குளிராய் வீசிக் கொண்டிருக்க - ரசிகா தன் டால்பின் காரை ரோட்டோரமாய்க் கொண்டு வந்து நிறுத்தி என்ஜினை அணைத்தாள்.
ரசிகா காரினின்றும் இறங்கினாள். இருபத்தோரு வயது உடம்பு. உடம்பின் வளைவுகளில் கறுப்பு ஷார்ட்ஸும் பேகி பனியனும் அமர்க்களாய் படிந்திருந்தது. பேவ்மெண்டில் - கடல்காற்றை ஆழ்ந்து சுவாசித்தபடி மெதுவாய் நடந்தாள். கடலின் அலைகள் இருட்டில் வெள்ளை நுரைகளோடு எழுந்து எழுந்து அடங்கின.
ஹாய் ரசிகா! குட்மார்னிங்...
எதிரே ஓடிவந்து மொண்டிருந்த ஒரு தொப்பை, மூச்சு வாங்கிக் கொண்டு நின்றது. ரசிகா புன்னகைத்தாள்.
குட்மார்னிங் டாக்டர் அங்கிள்...
என்னம்மா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம்...?
தூக்கம் வரலை. எந்திரிச்சு வந்துட்டேன்...
உங்கப்பன் என்ன பண்றான்...? கம்பளியைப் போர்த்திக்கிட்டு தூங்கறானா...?
அவர் நேத்து ராத்திரியே சிங்கப்பூர் போயிட்டார் அங்கிள்.
கொடுத்து வெச்ச கட்டை. நினைச்சா சிங்கப்பூர் போயிடறான். ஜப்பான் போயிடறான். நானும் அவனும் ஒண்ணாத்தான் எம்.எஸ். முடிச்சோம் அவனுக்கு அடிக்கடி ஃபாரின் போற யோகம். எனக்கு நம்ம மெட்ராஸ் பாரிஸ் கார்னர் க்ளீனிக்கோட சரி...! எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஏம்மா நின்னுட்டே? வா பேசிக்கிட்டே ஓடலாம்.
வேண்டாம் அங்கிள்... நான் லோன்லியா கொஞ்ச நேரம் நடக்க விரும்பறேன்...
ஓ.கே. நான் கழண்டுக்கிறேன்...
சொன்னவர் தொப்பையைத் தூக்கிக் கொண்டு 'திம் திம்' என்று பேவ்மெண்ட் அதிர ஓடினார்.
ரசிகா நடந்தாள்.
காற்று இப்போது வேகமாய் அடிக்க - ஆழ்ந்து சுவாசித்தாள். கிழக்குத் திசையில் பிறக்கப் போகும் வெளிச்சத்திற்காக - கடற்பறவைகள் கத்த ஆரம்பித்தன. இலக்கில்லாமல் தலைக்கு மேலே பறந்தன.
மெதுவாய் நடந்து கொண்டிருந்த ரசிகா 'வார்ம் அப்' செய்து கொள்கிற மாதிரி கையையும் காலையும் வீசினாள். ஜம்ப் செய்கிற மாதிரி எம்பினாள்.
ஆஹ்ஹா...! அற்புதம்...
பின்பக்கம் குரல் கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தாள் ரசிகா. தாடி வைத்து, அந்த நேரத்துக்கும் குளிர் கண்ணாடியைக் கண்ணுக்கு கொடுத்திருந்த ஒரு இளைஞன் அவளை நோக்கி மெதுவாய் வந்து கொண்டிருந்தான்.
ரசிகா அவனையே பார்த்துக் கொண்டு நிற்க - அவன் அருகில் வந்து நின்றான். உஷ்ணமாய்க் கேட்டாள்.
யார்... நீ...?
உன்னுடைய பத்துநாள் பக்தன்.
என்ன உளர்றே...?
உன்னை இந்தப் பத்து நாளாத்தான் எனக்குத் தெரியும்ன்னு சொல்றேன். இந்த ஷார்ட்ஸ்லேயும் - பனியனில் நீ என்னமா இருக்கே தெரியுமா...?
மைண்ட் யுவர் பிசினஸ்!
என்னுடைய பிசினஸே உன்னை மைண்ட் பண்றதுதானே?
ராஸ்கல்!
என் பேர் ... கிஷோர்...
என்ன... கலாட்டா பண்ண வந்திருக்கியா...?
"எனக்கு காதல் பண்ணத்தான் தெரியும். கலாட்டாவெல்லாம் பண்ணத் தெரியாது. இந்த ஏரியாவுல யாரும் கிடையாது. அந்த பீச்ப்பக்கம் போயிடலாமா...
காதலிச்சுட்டு வந்துடலாம்..."
யூ... ப்ளடி...
அவன் கன்னத்தை நோக்கி - வீச முயன்ற ரசிகாவின் கையை அவன் 'கப்'பென்று பற்றி நிறுத்தினான். இன்னொரு கையையும் சேர்த்துப் பிடித்து அவளை அணைக்க முயல -
சீ... விட்றா.
இன்னிக்கு எனக்காகவே... சீக்கிரமா... ஜாக்கிங் வந்தியா ரசிகா...?
அவன் பிடி இறுகிய விநாடி - கிஷோரின் தோளில் ஒரு கை விழுந்தது. கிஷோர் திரும்ப - அந்த இளைஞன் வெள்ளை ட்ராயரில் உயரமாய் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.
குட்மார்னிங் ப்ரதர்...
கிஷோர் ஆத்திரமாய் பார்த்தான். டேய்! உன் வேலையைப் பார்த்துக்கிட்டு நீ போயிடு... இது எங்க காதல் விவகாரம்...
அந்த இளைஞன் சிரித்தான்.
இது உங்க காதல் விவகாரம் மாதிரி தெரியலையே...?
.......
மரியாதையா அந்தப் பொண்ணை விட்டுட்டு போய்கிட்டே இரு... வீணா உன் மூஞ்சி முகரையை சேதம் பண்ணிக்காதே...
என்னடா சொன்னே?
அவன் சட்டென்று தன் இடுப்பை வருடி – கைகளில் முளைத்துவிட்ட கத்தியோடு பாய்ந்தான். இளைஞன் சட்டென்று காலை 90 டிகிரிக்கு செங்குத்தாக உயர்த்தி - 'பட்'டென்று அவனுடைய மணிக்கட்டில் வெடிக்க - கத்தி விடுதலையாகி எங்கோ பறந்தது.
கராத்தேயில் இந்த ஸ்ட்ரோக்குக்கு என்ன பேர் தெரியுமா?
அவன் மிரண்டான்.
ஸ்ட்ரெயிட் ஸ்ட்ரோக்...! இப்ப நான் கொடுக்கப் போறது, டெத்லைன் ஸ்ட்ரோக்... உன் கழுத்துக்கு கீழே என்னோட கை சாய்வா விழுந்தா... நீ ஆறு மணி நேரத்திற்கு ஆகாசத்தைப் பார்த்துக்கிட்டு கிடப்பே...
அவன் பின் வாங்கினான்.
அட! வா ப்ரதர்... வந்து... காதலி! பீச்சுப் பக்கம் போய் காதலிக்கலாம்ன்னு சொல்லிட்டு... இப்படி ஜகா வாங்கறியே...?
அவன் வேகமாய் ஓடி இருட்டில் மறைய - ரசிகா அந்த இளைஞனின் பக்கம் திரும்பினாள்.
தாங்கஸ்...
யாரவன்...?
தெரியலை...
இவ்வளவு சீக்கிரமா எழுந்து இந்த ஏரியாவுக்கெல்லாம் ஏன் ஜாக்கிங் வர்றீங்க...? மெரினா பக்கம் போயிட்டா கூட்டம் இருக்குமே.
கடந்த ஆறு மாசமா ஜாக்கிங் வர்றேன்... எந்தத் தொந்தரவும் வந்ததில்லையே...?
ஆறுமாசமா ஜாக்கிங் வர்றீங்களா?
ஆமா...
நான் ஒரு வருஷமா வர்றேன். உங்களை நான் பார்த்ததே இல்லையே...?
நானும் உங்களைப் பார்த்ததில்லை...
ஆச்சர்யமாயிருக்கு... பை... த... பை... உங்க நேம்...?
ரசிகா...
ஸ்வீட் நேம்...
உங்க பேரைச் சொல்லலையே...?
என் பேர் சுரேந்தர்...! அப்படியே வாக் பண்ணிட்டே பேசலாமா...?
வித் ப்ளஷர்...
நடந்தார்கள்.
நீங்க என்ன பண்றீங்க...?
ஜோஷி லாபரட்ரிஸ்ல டெக்னீஷியனா இருக்கேன்.
மை குட்னஸ்!
ஏன் ஆச்சர்யப்படறீங்க?
டாக்டர் ஜோஷி அகில இந்திய அளவில் புகழ் பெற்ற ஒரு கார்டியாலஜிஸ்ட் அவரோட லாபரட்ரியிலா டெக்னீஷியனா இருக்கீங்க...?
அவரேதான்...
நான் யார்ன்னு சொன்னா உங்களுக்கும் ஆச்சர்யமாயிருக்கும்.
யாரு...?
டாக்டர் தர்மாவோட டாட்டர்...
அடையார்ல ஈ.சி.ஜி. யூனிட் வெச்சிருக்காரே...?
அவரேதான்...
வாட் ஏ கோ - இன்சிடென்ட்...?
அப்பாவை நீங்க பார்த்திருக்கீங்களா...?
ஒரு தடவை என்.ஆர்.எல்'லில் பார்த்திருக்கேன்.
'என்.ஆர்.எல்...?"
நேஷனல் ரிசர்ச் லாபரட்ரி... அந்த 'லாப்'புக்கு எல்லா டாக்டர்ஸும் வந்தாகனும். உங்க ஃபாதரையும் ஒரு சாயந்திர நேரத்துல பார்த்தேன். சிட்டியில அவரோட ஈ.சி.ஜி. யூனிட்டுக்கு நல்ல பேர் இருக்கு...! நீங்க என்ன பண்றீங்க...? படிக்கறீங்களா...?
ஆமா...
எங்கே...?
எத்திராஜில தேர்ட் இயர் பி.காம்...
நீங்க ஏன் டாக்டருக்குப் படிக்கலை...?
எனக்கு அந்த ப்ரொஃபஷன் பிடிக்கலை... சின்ன வயசிலிருந்தே ரத்தத்தைப் பார்த்தா எனக்கு அலர்ஜி. ஒரு துளி ரத்தத்தைப் பார்த்தாலும் எனக்குத் தலை சுத்தும்.
ஒரு டாக்டரோட டாட்டர் இப்படியா...?
இருவரும் பேசிக் கொண்டே நடக்க, கிழக்கில் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரவிக் கொண்டிருந்தது.
முக்கால் மணி நேர ஜாக்கிங்கிற்குப் பிறகு ரசிகா தன்னுடைய காருக்குத் திரும்பினாள்.
மிஸ்டர் சுரேந்தர்! நீங்க எதுல வந்தீங்க...?
கொஞ்சம் தள்ளி நிறுத்தியிருந்த ஸ்கூட்டரைக் காட்டினான்... அவன்.
என் வீட்டுக்கு வாங்களேன்... ஒரு கப் காப்பி சாப்டுட்டுப் போகலாம்.
நோ தாங்க்ஸ்! காப்பி சாப்பிட ஆசைப்பட்டா லேட்டாயிடும். ஆறரை மணிக்கெல்லாம் நான் லேப்ல இருக்கணும். இல்லேன்னா டாக்டர் ஜோஷி, 'ஆஃப்பாயில்' பண்ணிடுவார்... நான் வரட்டுமா...? நாளைக்கு இதே இடத்தில் பார்ப்போம்...
சுரேந்தர் ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு போனதும் ரசிகா இரண்டு நிமிஷம் கழித்து தன் டால்பினை நகர்த்தினாள். லேசாய் வெளிச்சம் கொட்டிக் கிடந்த சாந்தோம் சர்ச்சுக்குப் பக்கத்தில் போனபோது - குளிர் கண்ணாடி தரித்து - தாடி வைத்திருந்த அந்த இளைஞன் பஸ் ஸ்டாப் ஷெல்டரின் மறைவிலிருந்து வெளிப்பட -
ரசிகா காரை நிறுத்தி கதவைத் திறந்துவிட அவன் உள்ளே வந்தான். எப்படி... என் நடிப்பு...?
அபாரம்...! அதுக்காக வேஷத்தை இன்னமுமா கலைக்காம இருப்பே...? தாடி, மீசை, விக், கண்ணாடி எல்லாத்தையும் உருவு...
அவன் உருவினான்.
ரோமம் கொட்டிப்போன முன்மண்டை. சதை பிடிப்பில்லாத முகம். லேசாய் மாறுகண். ரசிகாவின் பெரியப்பா மகன் கோபி.
சுரேந்தரைக் காப்பி சாப்பிடக் கூப்பிட்டியா ரசிகா?
ம்... கூப்பிட்டேன்... ஆறரை மணிக்கெல்லாம் லாபரட்ரியில இருக்கணுமாம்... ஓடிட்டான்...
ஆள் எப்படி...? உன்னைக் காதலிப்பானா? மாட்டானா...?
நான் அழகாயிருக்கேன்னு சொல்லிட்டான்...
அப்படீன்னா காதலிப்பான்...
கோபி...
ம்..
சுரேந்தர்கிட்டே நான் கொஞ்ச நேரம் பேசிப் பார்த்ததுல...
பேசிப் பார்த்ததுல...?
அவன் சாதாரண ஆளா எனக்குத் தெரியலை... நம்ம திட்டம் துல்லியமா இல்லாத பட்சத்தில் - நம்ம பருப்பு அவன் கிட்டே வேகாது.
2
கோபி ஆச்சர்யமாய் அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான். நம்ம பருப்பு அவன் கிட்டே வேகாதுன்னு எப்படிச் சொல்றே...?
"அவன் அவ்வளவு சீக்கிரமா என்னைக் காதலிப்பான்னு தோணலை. அப்படியே காதலிச்சாலும் நம்ம