Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

June, July, Aaa...!
June, July, Aaa...!
June, July, Aaa...!
Ebook106 pages33 minutes

June, July, Aaa...!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
June, July, Aaa...!

Read more from Rajeshkumar

Related to June, July, Aaa...!

Related ebooks

Related categories

Reviews for June, July, Aaa...!

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    June, July, Aaa...! - Rajeshkumar

    20

    1

    டி.வி.யில் காவேரி முகர்ஜி ஆங்கிலச் செய்திகளை முடித்துக் கொண்டு அரிசிப் பல்லைக் காட்டி ‘குட் நைட்’ சொன்னதும் சுவரில் இருந்த கடிகாரம் பத்து மணி அடித்தது.

    மருதநாயகம் டி.வி.யை அணைத்தார். கிருதா ஓரங்களில் நரைத்திருந்த அவர் கம்பீரமான உயரத்தை எட்டியிருந்தார். பீர் குடிக்கும் பழக்கம் அவர் வயிற்றை தொப்பையாய் மாற்றியிருந்தது.

    ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த ஷர்ட், பேண்ட்டுக்கு மாறி ஹாலுக்குள் நுழைகிற போது சாரதா பிரசன்னம் ஆனாள்.

    கண்களால் திகைத்தவாறே அவரை ஏறிட்டாள்.

    இந்த நேரத்தில் எங்கே கிளம்பிட்டீங்க?

    ஒருத்தரைப் பார்க்கணும்.

    இந்த ராத்திரி நேரத்திலா?

    சர்ட்டின் பட்டன்களைப் பொருத்திக் கொண்டே தலை அசைத்தார்.

    இப்ப போனாத்தான் அவர்கிட்ட ஃப்ரீயா பேச முடியும்.

    யார்கிட்டே என்ன பேசப் போறீங்க?

    என்ன நீ... நேரம் காலம் தெரியாமே க்ராஸ் கொஸ்டின் பண்ணிட்டிருக்கே...?

    உங்களுக்குன்னு பாத்தியதைப்பட்ட எனக்கு இதையெல்லாம் கேக்கற உரிமை கிடையாதா?

    அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டினார். உனக்கு இல்லாத உரிமையா?

    அப்ப சொல்லுங்க...

    பிசினஸ்தான். ஒரு முக்கியமான காண்ட்ராக்ட்டில் ப்ரைஸ் கொட்டேஷன் சம்பந்தமாப் பேசணும். இதெல்லாம் காதும் காதும் வெச்ச மாதிரி நடக்க வேண்டிய பேச்சுவார்த்தை. அதனாலதான் இந்த நேரத்துல அவரைப் பார்க்கப் போறேன்.

    அவர் யாரு?

    விஷ்ணு டூல்ஸ் ஜெனரல் மானேஜர்.

    சரி... யாரையோ பாருங்க. இன்னும் பத்தே நிமிஷத்தில் சப்பாத்தி ரெடியாயிடும். சாப்பிட்டுப் போங்க.

    ஊஹும்... லேட் ஆயிடும். நீ எங்கே போயிடப் போறே... உன் கையால செஞ்ச சப்பாத்தி எங்கே போயிடப் போகுது. வந்து சாப்பிட்டுக்கறேன்.

    எத்தனை மணிக்கு வருவீங்க..?

    அது... சொல்ல முடியாது சாரதா. முடிஞ்சா... சீக்கிரம் வந்துடறேன். இல்லேன்னா நாளைக்குத்தான் வருவேன்.

    சாரதா முகத்தை ‘உம்’மென்று வைத்துத் திருப்பிக் கொண்டாள். மருதநாயகம் அவளின் முதுகைத் தொட்டார்.

    ஏய்... இங்க பாரு...

    என்கூடப் பேசாதீங்க.

    தொழில் முக்கியமா... உன் கையால சப்பாத்தி சாப்பிடறது முக்கியமா?

    உங்களுக்கு எப்பவுமே தொழில்தானே முக்கியம்..!

    என்ன பண்றது...? இந்த நேரத்தில் போனாத்தான் அந்த மனுஷனைப் பார்க்க முடியும். இந்த காண்ட்ராக்ட் மட்டும் எனக்கு கிடைச்சா போதும். இன்னும் ரெண்டே மாசத்தில் பத்து லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம்.

    கண்களை அகல விரித்தாள் சாரதா.

    பத்து லட்சமா?

    பின்னே...?

    அப்ப போயிட்டு வாங்க...

    இப்ப மட்டும் நான் போலாமாக்கும்?

    சிரித்துக் கொண்டே அந்த ப்ரவுன் நிற சால்வையை எடுத்து போர்த்தி கண்ணாடி முன்னால் நின்று ஒரு தடவை தன் தோற்றத்தை சரிபார்த்துக் கொண்டு கிளம்பினார்.

    நான் போயிட்டு வர்றேன்.

    பத்து லட்ச நினைப்புடனே தலையாட்டினாள் சாரதா.

    மருதநாயகம் வாசலுக்கு வந்தார்.

    பனி ஈரத்துடன் நின்றுகொண்டிருந்த காருக்குள் நிரம்பி, இக்னீஷியனைத் திருகினார்.

    என்ஜின் குளிருக்கு சற்று அதிகமாக தொண்டையைச் செருமிக் கொண்டு ஸ்டார்ட் ஆகிக் கொண்டது.

    ஹெட்லைட் வெளிச்சம் பாலைக் கொட்டின மாதிரி சாலையில் வழிய, மங்கலான சோடியம் வேபர் விளக்குகளுக்குக் கீழே ஓடிற்று கார்.

    பத்து நிமிஷ வேகமான பயணம்.

    அந்த பெரிய பங்களாவின் காம்பவுண்ட் கதவோரம் வந்து ‘பிங்க்’கென்று ஹார்ன் சப்தம் எழுப்பினார்.

    பழக்கமான அந்த ஹார்ன் ஓசையைக் கேட்டதுமே - அவசரமாக ஓடி வந்து கதவை அகல விரித்தான் வாட்ச்மேன்.

    கார் உள்ளே போய் -

    போர்டிகோவுக்குள் ஒதுங்கி நின்றது.

    காரினின்றும் வெளிப்பட்டார்.

    சிட்-அவுட்டிலேயே காத்திருக்கும் ஜானகியைக் கண்ணில் வாங்கி லேசாய்ப் புன்னகைத்தார்.

    அவள் முகத்தில் புன்னகை

    Enjoying the preview?
    Page 1 of 1