Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaazhvil Vetri
Vaazhvil Vetri
Vaazhvil Vetri
Ebook168 pages57 minutes

Vaazhvil Vetri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதை எழுதுவதில் உள்ள சூழலை மனத்தில் வைத்து எழுதிய என்னுடைய முதல் கதை பிரசவங்கள் என்பதாகும். ஆனால் அதற்குப் பின்னால் எழுதிய எதிரும் புதிரும் என்ற சிறுகதையே முதன் முதலாக 1993 இல் வெளியானது.

நம் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தவும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் சிறுகதைகள் முக்கிய காரணியாக அமைகின்றன. சிறுகதைகள் எழுத எனக்கு முழு ஆர்வத்தையும் ஆரம்பம் முதல் கொடுத்து வருபவர் நண்பர் முனைவர் க.அன்பழகன் அவர்கள். அவருக்கும், இந்த ஆர்வத்தைத் தூண்டிய மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய சிறுகதைகள் குங்குமம், பாக்யா, மாலைமுரசு, சாவி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழ் அரசி, வாசுகி, மேகலா, உஷா, ராஜரிஷி உட்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இந்த அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கதைகள் பல்வேறு காலகட்டத்தில் வந்ததால் நடையில் வேறுபட்ட சில மாற்றங்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒரே மாதிரி தொடர்ந்து வருவது, சில கதைகள் சிறிதாக அமைந்தமை, சில கதைகளில் ஆங்கிலச் சொற்களின் பிரயோகம் போன்றவை இதில் காணப்படுவதை உணரலாம். இது ஒரு குறையாகத் தோன்றினாலும் தொகுப்பாக வரும்போது இது தவிர்க்க முடியாததாகிறது.

அன்புடன், பா.ஜம்புலிங்கம்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124403350
Vaazhvil Vetri

Related to Vaazhvil Vetri

Related ebooks

Reviews for Vaazhvil Vetri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaazhvil Vetri - Dr.B. Jambulingam

    http://www.pustaka.co.in

    வாழ்வில் வெற்றி

    Vaazhvil Vetri

    Author:

    முனைவர் பா.ஜம்புலிங்கம்

    Dr.B. Jambulingam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jambulingam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மோகனம்

    2. முட்டாப் பசங்களுக்காக

    3. மனசும் வயசும்

    4. இனிய சகோதரிக்கு...

    5. வேறு வேறு

    6. அங்கீகாரம்

    7. தலையாட்டிப் பொம்மை

    8. அக்கரைப் பச்சை

    9. சுவடுகள் அழிவதில்லை

    10. தலைமுறைச் சிந்தனை

    11. பேர அவலங்கள்

    12. புன்னகை

    13. அம்மாவுக்குத் தெரியாமல்

    14. விவேகம்

    15. பிரசவங்கள்

    16. அப்பா அழுகிறார்

    17. மாற்றங்கள்

    18. நட்பு

    19. ஒத்தடம்

    20. எதிரும் புதிரும்

    21. முடிவு

    22. சலனம்

    23. வாழ்வில் வெற்றி!

    24. இதயம் விற்பனைக்கு அல்ல

    25. 'தங்கத்தலைவர்’

    26. இறப்பிலிருந்து உயிர்ப்பு

    27. வேராகும் விழுது!

    28. 'வியர்வை நேயம்'

    29. 'கோப்பு'

    30. மயக்கம் தெளிந்தது

    31. 'வந்த பாதை'

    32. 'கானல் நீர் கனவுகள்'

    அணிந்துரை

    திரு. கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

    ஏன் சார்! நான் வந்து கொஞ்ச நாள்லேயே உங்க கதைங்க ரொம்ப படிச்சிட்டேன். நீங்க ரொம்ப நாளா எழுதுறதாச் சொன்னீங்க. நீங்க வெளியிட்ட கதையெல்லாம் ஒரு தொகுப்பா போட்டா நல்லாயிருக்குமே!

    இது ஜம்புலிங்கத்தின் கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் குரல் மட்டுமன்று; என்னுடைய குரலும் தான்.

    ஜம்புலிங்கத்திற்குக் கதை எழுத வருகிறது; ஏராளமான கதைகளுக்குரிய ஊற்றுக்கண்களை மனத்தால் படம்பிடித்துக் கொள்ளும் திறன் கைவசம் இருக்கிறது. பாத்திரங்களை இழுத்துக்கொண்டு மனம் விரும்பியபடியெல்லாம் ஓடவும், அந்தப் பாத்திரங்கள் இழுத்துக் கொண்டு போகும் திசையெல்லாம் இவர் ஓடவும். இந்தச் சித்து விளையாட்டு இவர் கையிலிருக்கும்போது இவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

    விமலாவுக்குக் குழந்தை பிறப்பதைப் போலவே செல்வத்துக்குக் கதை பிறப்பதாக ஜம்பு சொல்கிறார். படைப்பின் இரகசியம் புரிந்தவர்கள் மட்டுமே இதைக் கூற முடியும். தயாளனுக்குத் 'திறமை’க்காக வேலை கிடைப்பது கதாசிரியரின் அங்கதப் பார்வையை அழகாகக் காட்டுகின்றது. மயில்வாகனன் போட்டியில் இராகவனை முந்தும்போது, நியாயம் சட்டம் ஆகியன எல்லாம் குப்பைக் கூடையில் அந்த 'அது’ போலக் கிடப்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? சங்கம் தந்த தங்களுக்கு ஏதோ நம்மால் ஆன உதவி ‘ஜாயினிங் ரிப்போர்ட்’ டைப் செய்து கொடுப்பதுதான்!

    கும்பகோணம் கிளையில் மயிலுக்கு மட்டும் பதவி உயர்வு கிடைக்கும் 'நியாயமான விபத்தை' ஜம்பு நன்கு வடித்திருக்கின்றார். இதுமாதிரி இருப்பதுதான் கதை; மற்றவை யதார்த்தம். ஜம்புவுக்கும் இது புரியும் என்றாலும் யதார்த்தத்தையே எழுதிக்கொண்டு போனால், எப்போதுதான் நேர்மை வெற்றி பெற்றுத் தொலைப்பது? அதற்காக எழுத்தாளன் அவ்வப்போது பிச்சை போடுவது மாதிரி ஏதாவது செய்தாக வேண்டுமே. அந்த அடிப்படையில் இந்தக் கற்பனை.

    கதைகள் நன்றாக இருக்கின்றன. நன்றாக என்றால் எப்படி? கொஞ்சம் உறைப்பது மாதிரி, கொஞ்சம் நறுக் சுறுக்கோடு சுரணை வருவதற்காகக் கிள்ளுவது மாதிரி... அதுவும் அப்பாவியாக இருந்துகொண்டு நான் ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டே அனாசயமாகக் கிள்ளுவது மாதிரி.

    ஜம்புலிங்கம் தொடர்ந்து எழுதலாம். அவரிடம் ஊசிகளும் மருந்துகளும் இருக்கின்றன. தூரிகைகளும் வண்ணங்களும் இருக்கின்றன. பூதக் கண்ணாடிகளும் தொலைநோக்கிகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, வையகம் நலம்பெற ஏதாவது செய்தாக வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது.

    வாழ்வில் வெற்றி - ஒரு சுவையான தொகுப்பு. வாழ்க ஜம்புலிங்கம்! வளர்க அவர்தம் எழுத்துப்பணி.

    அன்பன்,

    கு.வெ.பாலசுப்ரமணியன்.

    ***

    என்னுரை

    1983 தொடங்கி வார, மாத இதழ்களில் வாசகர் கடிதம் எழுதும் ஆர்வம் ஏற்பட, எழுத ஆரம்பித்து அப்பணியினைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். உடனுக்குடன் கதைகள், பிற செய்திகளைப் படிப்பது, அதுபற்றிக் கருத்துக்களைத் தெரிவிப்பது என்ற சிந்தனை அப்போது என்னுள் மேலிட்டிருந்தது. இதன் மூலம் பெரும்பாலான செய்திகளை ஆழ்ந்து நோக்கும் எண்ணம் ஏற்பட்டது.

    முதன் முதலாக வந்த வாசகர் கடிதம் ஆங்கில நாளிதழில் வந்தது. நான் எழுதும் ஓரிரு வரிகள், வார்த்தைகளை அப்போது இதழ்களில் படிக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவு வாசகர் கடிதங்களை எழுதுவதுடன் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்றவை எழுதும் ஆர்வம் எழுந்தது. நம் கருத்துக்களை மேம்படுத்தவும் வெளிக்கொணரவும் இதனை ஓர் வாய்ப்பாக நான் உணர்ந்தேன்.

    மனதில் அவ்வப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அன்றாடம் எதிர்கொள்ளும் சில தீர்வுகள், சமூகத்தில் நம் முன் தோன்றும் அவலங்கள், பிற குடும்பச் சூழல்கள் போன்ற நிலைகளை மனத்தில் வைத்துக் கதை எழுத ஆரம்பித்தேன்.

    சிறுகதை எழுதுவதில் உள்ள சூழலை மனத்தில் வைத்து எழுதிய என்னுடைய முதல் கதை பிரசவங்கள் என்பதாகும். ஆனால் அதற்குப் பின்னால் எழுதிய எதிரும் புதிரும் என்ற சிறுகதையே முதன் முதலாக 1993 இல் வெளியானது.

    நம் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தவும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் சிறுகதைகள் முக்கிய காரணியாக அமைகின்றன.

    சிறுகதைகள் எழுத எனக்கு முழு ஆர்வத்தையும் ஆரம்பம் முதல் கொடுத்து வருபவர் நண்பர் முனைவர் க.அன்பழகன் அவர்கள். அவருக்கும், இந்த ஆர்வத்தைத் தூண்டிய மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னுடைய சிறுகதைகள் குங்குமம், பாக்யா, மாலைமுரசு, சாவி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழ் அரசி, வாசுகி, மேகலா, உஷா, ராஜரிஷி உட்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இந்த அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கதைகள் பல்வேறு காலகட்டத்தில் வந்ததால் நடையில் வேறுபட்ட சில மாற்றங்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒரே மாதிரி தொடர்ந்து வருவது, சில கதைகள் சிறிதாக அமைந்தமை, சில கதைகளில் ஆங்கிலச் சொற்களின் பிரயோகம் போன்றவை இதில் காணப்படுவதை உணரலாம். இது ஒரு குறையாகத் தோன்றினாலும் தொகுப்பாக வரும்போது இது தவிர்க்க முடியாததாகிறது.

    இவ்வாறு வந்த சிறுகதைகளுடன் இன்னும் சில சிறுகதைகளை எழுதி நூலாக ஆக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமாக இருந்தாலும் அதற்குச் செயல்வடிவம் கொடுத்து ஊக்குவித்தவர் வரலாற்றாய்வாளர் திரு.அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள். என் சிறுகதைகள் நூலாக வடிவம் பெறுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக அவருக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் சிறுகதை ஆர்வத்துக்குத் தூண்டுகோலாக இருப்பதுடன் ஒரு சிறப்பான அணிந்துரையையும் தந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைப் பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றி. என் முதலாவது தொகுப்பை மிகச் சிறப்பான முறையில் அச்சேற்றிக் குறுகிய காலத்தில் நேர்த்தியாக வெளியிட்டு உதவிய, பதிப்பக உரிமையாளர் பிட்டி.விஜயகுமார் அவர்களுக்கு மறவா நன்றியுடையேன்.

    இலக்கிய உலகம் என் முயற்சிக்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

    அன்புடன்,

    பா.ஜம்புலிங்கம்

    ***

    1. மோகனம்

    மோகனா! நீ பேசறது உனக்கே நியாயமாப்படுதா?"

    என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். எனக்குப் பொய் வாழ்க்கை வாழத் தெரியலை. அந்த வாழ்க்கையை முடிச்சுக்கிறதே தேவலைன்னுபடுது.

    என்ன பிரச்சினையானாலும் பேசித் தீர்த்துக்கிறது தான் சரி. வாழ்க்கைங்கறது ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பம். அநாவசியமா அந்த சந்தர்ப்பத்தை ஏன் வீணாக்கிக்கப் பார்க்கறே?

    "என் மனசைப் புரிஞ்சுக்க வேற யாருமில்லை மதி! அதான் உன்கிட்டே எல்லாத்தையும் சொன்னேன்.'

    பட்டீஸ்வரம் கோயிலின் கட்சி துர்க்கையம்மன் சந்நிதானத்துக்குப் பின்புறம் சுவற்றில் சாய்ந்து கொண்டு மோகனா சொல்வதைக் கேட்ட மதி பலவாறான யோசனைக்குப் பின் பேசத் தொடங்கினான்.

    இப்பதான் நம்ம இரண்டு பேரோட குடும்பமும் எந்தக் குழப்பமும் இல்லாம இருக்கு. ஒரு தடவை மாந்தோப்புல நாம் பேசிக்கிட்டிருந்தப்ப சுப்புணி பார்த்துட்டு தெருவையே நாறடிச்சது உனக்குத் தெரியும். உன்னோட நினைப்பு எனக்கு இப்பவும் இருக்கு. ஆனா அந்த உன் நெனப்பே என்னோட வாழ்க்கையா இருந்தா, இரண்டு பேரோட வாழ்க்கையிலும் நிம்மதி இருக்காது மோகனா!

    "வாழ்க்கையிலே

    Enjoying the preview?
    Page 1 of 1