Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu
Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu
Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu
Ebook504 pages4 hours

Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

சிவசங்கரியின் அறுபதாவது வயதின் போது வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அறுபது சிறுகதைகளின் தொகுப்பு.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803363
Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu

Read more from Sivasankari

Related to Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu

Related ebooks

Reviews for Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu - Sivasankari

    http://www.pustaka.co.in

    சிவசங்கரி சிறுகதைகள் முதல் தொகுப்பு

    Sivasankari Sirukathaigal Mudhal Thoguppu

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பதிப்புரை

    நேற்றுப்போல இருக்கிறது! இளம் பெண்ணாய் எனக்கு அறிமுகமான சிவசங்கரி இன்று மணிவிழாக் காண்கிறார். கடந்த கால நினைவுகள் என் முன்னால் படம் போல் விரிகின்றன.

    'ஆனந்த விகடன்' மணியன் மூலம்தான் சிவசங்கரி எனக்கு அறிமுகமானார். அவருடைய 'காத்திருக்கிறேன்' என்னும் தலைப்பிலான சிறுகதைத் தொகுதியைத்தான் முதலில் 1870ஆம் ஆண்டு வானதியில் வெளியிட்டேன்.

    மணியன் சிவசங்கரியை எனக்கு அறிமுகம் செய்து, அவருடைய புத்தகத்தை வெளியிடச் சொன்னபோது நான் சற்றுத் தயங்கினேன் என்பது உண்மை. 'வங்கியில் வேலை பார்க்கிறார், ஏதோ கதைகள் எழுதுகிறார்' என்ற அளவில்தான் அவரைப்பற்றி நான் அறிந்திருந்தேன். இவருடைய முதல் புத்தகத்தை, அதுவும் ஒரு சிறுகதைத் தொகுதியைப் போட்டால் எப்படி விற்பனையாகும் என்கிற சிந்தனை எனக்கு.

    அறிமுகப்படுத்திய மணியன் விடுவதாய் இல்லை. நன்றாக வளர்ந்து வருகிற ஓர் எழுத்தாளர். தைரியமாகப் போடுங்கள் என்று தூண்டினார். அத்துடன் நில்லாமல் அந்தப் பெண்ணின் தந்தை சூரி அவர்களிடம் என்னை அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார்.

    பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையிலிருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கல்கி போன்ற பிரபல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக இருந்தார் அந்தப் பெரியவர். 'ஆடிட்டர் சூரி' என்பது ஒரு மந்திரச்சொல் மாதிரியான பெயர்!

    நூலின் பிரதியோடு நானும் மணியனும் மருத்துமனைக்குச் சென்றபோது அங்கே சிவசங்கரியும் அவருடைய தாயாரும் இருந்தார்கள். 'காத்திருக்கிறேன்' கதைத் தொகுதியைப் பெரியவரிடம் தந்தபோது அவருக்கு அளவு கடந்த சந்தோஷம். என் குழந்தை எழுதின புஸ்தகமா? பேஷ், பேஷ், என்று சொல்லிக் கொண்டே புத்தகத்தை வாங்கிப் பக்கங்களைப் புரட்டினார். சிவசங்கரியைப் பக்கத்தில் அழைத்தார். பெருமை பொங்கத் தன் பெண்ணின் கரங்களைப் பற்றிக்கொண்டு மகிழ்ந்தார். உடன் என்னையும் அவர் பக்கம் அழைத்து நான் இந்தக் குழந்தையைப் பெற்றேன். அதைவிடப் பெரிய பெருமை இவள் பெற்றெடுத்திருக்கிற இலக்கியக் குழந்தை! இனிமேல் இவளுடைய இலக்கியக் குழந்தைகளைப் பேணி வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது... என்று உணர்ச்சி பொங்கச் சொன்னது இன்று நடந்தது போலிருக்கிறது.

    பெரியவர் சூரியின் வேண்டுகோளின்படி சிவசங்கரியின் நூல்களை வானதி பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே.

    சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகப் பரிணாமம் பெற்ற சிவசங்கரி இந்த நூற்றாண்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.

    சிவசங்கரியின் வளர்ச்சியைக் குறித்து இப்பொழுது நினைத்துப் பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது. இதற்கெல்லாம் சிவசங்கரியின் எழுத்துக்களின் வலிமையும், பெரியவர் சூரியின் ஆசீர்வாதமும், அம்மாவின் அரவணைப்பும்தாம் காரணம் என்பேன்.

    இவருக்கு இப்பொழுது அறுபது வயது. தம்முடைய அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி, தாம் தேர்ந்தெடுத்த அறுபது எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்று விரும்பினார். நியாயம்தான் அம்மா! நல்ல முயற்சி. ஆனால் கூடவே உங்கள் அறுபது சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தும் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் இல்லையா? என்று நான் கேட்டேன். ரொம்ப நல்ல ஐடியா ஐயா இது என்று சொல்லிவிட்டு, அடக்கத்தோடு என்னுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்டார் சிவசங்கரி. அந்தக் கதைகள்தாம் இந்தத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. அறுபது கதைகளும் சமுதாயத்தின்மீது அவருக்குள்ள அக்கறையையும் சமூகப்பொறுப்பையும் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

    சிறுகதைகள் என்கிற வடிவத்தோடு மட்டும் நில்லாமல் நாவல்களிலும் வெற்றி பெற்றுள்ளவர் சிவசங்கரி. முதன் முதலாக சமூகப் பிரக்ஞையோடு தமிழில் வெளியான நாவல் என்று சிவசங்கரியின் 'ஒரு மனிதனின் கதை' நூலைக் குறிப்பிட வேண்டும்.

    வெறும் எழுத்தோடு மட்டும் நில்லாமல், போதைப் பழக்கத்துக்கு எதிராக ஆக்கபூர்வமான முறையில் எழுதியும், தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாகப் பணியாற்றியும் வருகிறவர் சிவசங்கரி.

    இலக்கியத்தின் மூலம் பாரத ஒற்றுமை என்கிற கொள்கையோடு, தேசத்தின் பிறமொழி எழுத்தாளர்களோடு பழகி, அவர்களுடைய இலக்கியங்களைப் பற்றி எழுதியுள்ள நூலைத் தனி ஒரு மனிதரின் சாதனையாகக் கருத முடியாது.

    கடுமையான உழைப்பு, எதையும் நுணுகி ஆராய்ந்து தீர்வுகாணத் துடிக்கும் மனவலிமை இவற்றுக்குச் சரியான எடுத்துக்காட்டாய்த் திகழ்கிற சிவசங்கரி, 'அறுபதை' நினையாமல் என்றும் துடிப்போடும் சத்திய ஆவேசத்தோடும் எழுதவேண்டும்; புகழும் பெருமைகளும் மேன்மேலும் இவரை வந்தடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    சிவசங்கரியின் கதைகளை வாசகர் உலகம் வரவேற்று மகிழும் என நம்புகிறேன்.

    அன்புடன்

    வானதி ஏ. திருநாவுக்கரசு

    அணிந்துரை

    இயல்பிலேயே பெண்கள் படைப்பாளிகள், இலக்கியம் அவர்களுக்கு இயல்பாகப் பழகும் ஒரு துறை என்று 'கலைமகள்' ஆசிரியர் அமரர் கி.வா.ஜ. அவர்கள் கூறுவார்கள். சமுதாயத்தை மறுஉற்பத்தி செய்பவள் பெண். தன் குழந்தைக்கு முதல் ஒலியை, மொழியை அறிமுகப்படுத்தியவள் பெண். மொழி, இசை, துதிப்பாடல்கள், இலக்கியம் ஆகிய அனைத்துக்கும் வேதம் கூறும் ஆதி தேவதையே 'வாக்' என்பதுதான். ஸரஸ்வதி என்றும் பாரதி என்றும் பெண் தெய்வங்களையே இன்றளவும் கல்வி, மொழி, பேச்சு, இசை, நடனம் ஆகிய கலைகளுக்கு அதிபதியாக வழிபட்டு வருகிறோம். பெண்ணே தன் மக்களுக்குத் 'தந்தை' என்ற முதல் உறவைக் காட்டிக் கொடுக்கிறாள். ஆணும் பெண்ணும் இணைந்து மக்களைப் பெற்றுப் பேணி வளர்த்து, அவர்களை நன்மக்களாக்கும் பொறுப்பை ஏற்கும் இலட்சியத்தில் அமைவதே குடும்பம் என்ற அமைப்பு. ஒரு நல்ல சமுதாயத்துக்கான நற்பயிர் வளர்ப்பே இந்த அமைப்பில்தான் நிகழ்கிறது. இந்தச் சமுதாயப் பொறுப்பில், தலையாய பங்கை ஏற்றிருப்பவள் பெண்ணே. இல்லாள், இல்லத்தரசி, மனையாள், மனைத்தலைவி என்றெல்லாம் இவள் குறிக்கப்படுகிறாள். குடும்பத்தைச் சுற்றிய உறவுகள், இந்த இல்லத்தரசியினாலேயே பாலிக்கப்படுகிறது. ஏனெனில், இவள் பிறந்த இடத்துக்கே உரியவளாகக் கருதப்படவில்லை. நாற்றங்காலில் இருந்து வேர் பிரிக்கப்பட்டு, வேறு விளைநிலத்தில் ஊன்றப்படும் நெற்பயிர் போல் இவள் முற்றிலும் புதிய, இரத்த சம்பந்தமில்லாத ஒரு மனைக்கு வாழ வருகிறாள். இதுவே உன் இல்லம். இங்கிருக்கும் உன் கணவனின் உறவுகளும், இந்த இல்லமும், இங்கிருக்கும் கன்றுகாலிகளும் உன்னுடையவை. நீ இங்கே அரசியாகப் பரிபாலனம் செய்து, உன் கணவனையும், இங்கிருக்கும் உறவினரையும் பேணி அன்பு செலுத்தி நன்மக்களைப் பெற்று நெடுங்காலம் வாழ்வாயாக! என்பதே திருமண வைபவங்களில் அவளுக்குக் கூறப்படும் வாழ்த்து வாசகமாகும். இந்த உறவு முறைகள்-இவளுக்கு இரத்த சம்பந்தமும் பாசமும் உடைய உறவுகள். அவை இல்லாத இடத்திலும் படரவைத்து, நேசத்தினாலும் கடமை நெறியினாலும் இரு குடும்ப உறவுகளையும் செழிக்கச் செய்ய, இவளே உயிர்ச்சக்தியாகத் திகழவேண்டும். இந்த நாட்டில் பிறக்கும் பெண்கள் அனைவருமே வழிவழியாக இந்த இல்லற தர்மத்தை அறிந்தோ அறியாமலோ கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. சமுதாய ஏற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு விதிக்கப்பட்ட வரையறைகள், பெண்ணைக் குருடாக்கி, முடமாக்கி, வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், அடுக்களை உழைப்புப் பாவையாகவும் ஒடுக்க உதவின. ஆணின் மேலாண்மை, குடும்பம் மறுக்கப்படும் போகப்பொருளாக அவளை உறிஞ்சி எறியும் சாதனமாக்கவும் உரிமை கொண்டாடியது. இந்த இருபதாம் நூற்றாண்டில், புதிய யுகம் கண்டிருக்கும் இன்னாளில், அந்தச் சிறுமைகள் சட்டபூர்வமாகவும் நடப்பியல் சார்ந்தும் ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

    இன்றைய குடும்பச்சூழல் பெரிதும் வேறுபட்டிருக்கிறது. இல்லத்தைச் சுற்றிய உறவுகளும், உறவுகளின் நுண்மையான இழைகளும் பொருளியல் சார்ந்த மாசுகளும், சுயநல அழுக்குகளும் படிய, மனித நேயம் என்ற ஆதாரத்தையே மூடிமறைத்திருக்கின்றன. அன்பு, பாசம் என்பதெல்லாம் பொய்யானவை, நுகர்பொருள் சாதனங்களின் வசீகரங்களே வாழ்க்கைத்தரத்தை ஏற்றக்கூடியவை என்ற குறிக்கோளுடன் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையைப் பார்க்கிறார்கள். இந்த நிலைக்குப் பல்வேறு காரணிகள் இருக்கலாம்.

    ஆனால், குடும்ப உறவுகளில் இந்நாள் ஏற்பட்டிருக்கும் மாசுகளும் தீமைகளும் உண்மையல்ல, நிலையானவையும் அல்ல என்ற உணர்வுடன் இயங்கிவரும் பெண்கள் அன்றாட வாழ்வில் பலரும் இருக்கிறார்கள். புரிந்துகொண்டு பெண்களை மதித்துக் குடும்பம் நடத்தும் ஆண்களும் இருக்கிறார்கள். ஏற்றங்கள், சறுக்கல்கள், வறுமையின் கிடுக்கிப் பிடிகள், பேராசைச் சுயநலங்கள், கட்டிக் காக்கும் மரபுநெறிகளின் அழுத்தங்கள், எதிர்பாராமல் சம்பவிக்கும் இழப்புகள் என்று, இந்தச் சமூக மனிதர்கள் குடும்ப அமைப்புகளை, உறவுகளை, மனிதநேயங்களைக் கட்டிக்காக்கும் போராட்டங்களே, பெரும்பாலும் பெண்களின் படைப்புக்களில் முதலிடம் பெறுகின்றன. சிதிலங்களுக்கிடையே மனிதநேயங்களே சாசுவதம் என்று உணர்த்தும் நொடிகளைப் பதியவைக்கும் பெண்களின் இலக்கியப் படைப்புக்கள், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ச்சிறுகதை இலக்கியத் துக்குக் கணிசமாக வளம் சேர்த்திருக்கின்றன.

    இவ்வகையில், சிறுகதை இலக்கியத்துறையில் தமக்கென்று ஒரு தனி முத்திரை பதித்துக்கொண்டவர், படைப்பாளர் சிவசங்கரி. அறுபதுகளின் பிற்பகுதிகளில் எழுத்துத்துறையில் அடிவைத்த இவர், எழுபதுகளிலேயே தம் படைப்புத்திறனால் எழுத்துலகில் செல்வாக்கும் புகழும் பெற்றுவிட்டவர். ஏறக்குறைய இந்த முப்பத்தைந்து-நாற்பது ஆண்டுகளில், இவர் தொட்டுவிட்ட எல்லைகள் வியப்புக்குரியவை. ஆழ்ந்த சமூக உணர்வும், உலகளாவிய பயண, பல துறை அனுபவங்களும், அரிய நவீனங்களாக, பயணக்கட்டுரைகளாக, வாழ்க்கை வரலாறுகளாக, பத்திரிகை சார்ந்த நேர்காணல் எழுத்துக்களாகப் பரிணமித்து, இந்திய எல்லைக்கப்பாலும் ஓர் எழுத்தாளர் என்ற செல்வாக்கைப் பெறச் செய்திருக்கின்றன. எழுத்தின் புதிய பரிமாணமாகிய காட்சி ஊடகத்துறையிலும் இந்த எழுத்தாளர் தம் செல்வாக்கைப் பதித்திருப்பவர். 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்று திட்டமிட்டு ஓர் அருஞ்சாதனையைத் தனிஒரு பெண்மணியாக நிறைவேற்றி வருபவர். எழுபதுகளில் வேர்விட்டு வளர்ந்த எழுத்து பலதுறைக் கிளை பரப்பி விழுது விட்டுப் படர்ந்த ஆலமரமாகத் திகழும் இந்நாளில், இவர் தொடக்கத்தில் எழுதிய சிறுகதைகள் உள்பட அறுபது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பைப் படித்துப் பார்ப்பதே அரிய அனுபவம்தான்.

    சிறுகதை என்பதே ஓர் இனிய அனுபவம். அதுவும், எழுதும் போது அதன் ஆசிரியர் பெற்ற அனுபவத்தைப் படிப்பவரும் பெறுவதுதான் அந்தப் படைப்புக்கு வெற்றித்திலகமாக அமைகிறது.

    சிவசங்கரியின் படைப்பாற்றலும் வெளியீட்டுத்திறனும் எந்தக் கருவை மையப்படுத்தினாலும், துவக்கத்திலிருந்து இறுதிவரையிலும் சுவாரசியமும், அழகியல் ரசனையும் குன்றாதவகையில் முழுமை பெறச் செய்பவை.

    இவருடைய கதைகள் பெரும்பாலும் உயர்வகுப்பில்பட்ட இடைநிலைக் குடும்பக் களன்களில் நிகழ்கின்றன. இக்கதைகளில் வரும் மாந்தர், ஆண், பெண், இளைஞர்கள், முதியோர், குழந்தைகள் எல்லோரும் நாம் அன்றாடம் சாதாரணமாகப் பார்க்கும் மக்களே. நிகழ்ச்சிகளும் அன்றாடம் குடும்பம் சார்ந்தும் நடப்பியல் உலகு சார்ந்தும் நடப்பவையே. நகரநெரிசலில், வசதிகளில் வாழும் மக்கள் மட்டுமில்லாமல், சிற்றூர்கள், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கிராமங்கள், இரண்டுங்கெட்டான் 'டவுன்'கள் என்று கதைக்கான பின்புலங்கள் வேறுபடுகின்றன. கதையைச் சொல்லிச் செல்வதைவிட நாடகப் பண்புடன் பதியவைப்பதும், பாத்திரங்களின் இயல்புத் தன்மை சற்றும் மாறாதவகையில் கதையைக் கொண்டு செல்வதும் ஆசிரியரின் உள்ளார்ந்த ஈடுபாட்டுக்குச் சான்றுகளாகின்றன.

    நடப்பியல் வாழ்க்கையில், ஒவ்வொருவரும் எத்தனையோ அனுபவங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது. ஆனால், ஒவ்வொரு கணமும் முக்கியத்துவம் பெற்றதாக ஒரு கலைப் படைப்பாளருக்கு வாய்த்துவிடுகிறது.

    கோயிலுக்கு மாலையில் எத்தனையோ பேர் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள், வேண்டுதல்கள் உண்டு. நசுங்கிய அலுமினியக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துவந்து விளக்கேற்றும் கங்கா ('அம்மாவுக்காக ஒரு பொய்') அத்தகையோரில் ஒருத்தி. ஒட்டுக்குடித்தன மாடியில் படிக்க வந்து அமர்ந்திருக்கும் ராஜாவும் ('படிப்பு') அவளும் ஒரே நிலையில் இருப்பவர்கள். பெண்ணாய்ப் பிறந்து வறுமைத்தீயில் ஆசைகளைப் பொசுக்கிக்கொண்டு, சூழலில் உள்ள பொறுப்பற்ற நாக்குகள் உதிர்க்கும் சொற்களை முட்களாக ஏந்திக்கொண்டு, கோயிலுக்குப் பிராத்தனைக்குத்தான் வருகிறாள். ஆனால், தனக்கு வாய்க்காத வளமையில் தோய்ந்துவரும் பெண்களின்மீது, தான் ஏந்திக்கொண்ட முட்கள் எடுத்து மானசீகமாகப் பதித்து, ஆற்றாமைத்தீயைச் சமனப்படுத்திக்கொள்ளும் ஆறுதலில், 'அம்பாளை'ப் பார்த்ததாகத் தாய்க்குப் பொய் சொல்கிறாள். பெண்ணுக்குத் திருமணம், இலக்கு. ஆனால் வளரும் வயதில், ஆளாக்கவேண்டிய அப்பன் விபத்துக்காளாகி அகாலத்தில் போன பின், அவனை ஆளாக்க, அவனைப் படிக்க வைக்கவேண்டும். தன் இயலாமைகளை மறைத்துக்கொண்டு அன்னை அவனைப் படிக்க வைக்கிறாள். இங்கும் சுற்றுச்சூழல் குத்தல்களுக்குப் பஞ்சமில்லை. படிப்பதாகப் பாவனை செய்துகொண்டு, கீழே தெருக்காட்சிகளில் தன் ஆற்றாமைகளைத் துடைத்துக்கொள்கிறான். பையன் சிரமப்பட்டுப் படிக்கிறான் என்று தன்னைத் தேய்த்து அவனுக்குப் பால்-ஊட்டம் கொடுக்க வரும் தாயைப் பையன் குற்றஉணர்வுடன் பார்க்கிறான். பால் கசக்கும் மருந்து போலிருக்கிறது.

    ஊருக்கு வெளியே 'டி.பி.' (அரசினர் பயணியர் விடுதி) என்று ஒன்று தென்படும். சாலையும் சூழலும் அடுத்த நூற்றாண்டில் தாவி விட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டு தாசில்தார் வந்து தங்கிய அதே கோலத்தில் இருக்கும் விடுதி. தன் பணி நிமித்தம் ஊர் சுற்ற வேண்டிவந்த, புது மணம் புரிந்த இளைஞன், மனைவியை இந்த விடுதியில் விட்டுவிட்டுப் பணிக்குச் செல்லும்போது, அந்த இளம் பெண், பொழுதை எப்படி சுவாரசியமாகக் கழிக்கிறாள் என்பது ஒரு சித்திரம். இந்தக் கதை முடிவில் ஒரு முக்கிய அங்கமாகும் சுவர்ப்பல்லியின் கூடலில் 'பொழுது' நிறைவடைகிறது. திருமணமாகாத ஓர் இளைஞன், தன் வங்கிவேலைக்காக 'லாட்ஜ்' என்ற விடுதி அறையில் தங்கும்போதும், மனஉளைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பல்லியே காரணமாகிறது. 'பட்டாம்பூச்சியும் தூக்கமும்' கதை உண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியைத்தான் மையப்படுத்துகிறது. 'வண்ணத்துப்பூச்சி' என்பதுதான் 'வண்ணாத்திப்பூச்சி' என்று பேச்சுவழக்கில் திரிந்து போயிருக்கிறதென்றே பலரும் நினைத்திருக்கிறோம். ஆசிரியர், பாட்டி சொன்ன கதையாக ஒரு வண்ணாத்தியையும் அவள் புருசனையும் சுற்றிய வரலாறாக-அக்குபட்சி கதைபோல் ஒரு கதையைப் புகுத்தியுள்ளார்.

    இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல படைப்புக்களும் உண்மையில் அரிய நடைச்சித்திரங்களாகவே உருவாகியிருக்கின்றன. நெருக்கடி மிகுந்த சென்னை நகரின் வணிகவீதியான பிராட்வேயில் நாயகி காரில் ஒதுங்கி நின்று காத்திருக்கவேண்டிய 'நிர்ப்பந்தம்' வருகிறது. அதுவே அவள் நெருக்கடி மிகுந்த, பலதரப்பட்ட மக்களும் இயங்கும் ஒரு வாழ்க்கைச்சந்தியின் குறுக்குவெட்டுச் சித்திரமாக உருவாகிறது. 'மனிதர்கள்' என்பது தலைப்பு. இதேபோல், 'போணி' என்று ஒரு சந்தைச் சித்திரம். கிராமத்துப் பொருட்களும் மக்களும் வந்து கசகசக்கும் சந்தைக்கான திரை பெரியது. ஆனால், இந்த நெருக்கடியின் உயிர்த்துவமுள்ள பின்புலத்தில், காருக்குள் ஒதுங்கியிருந்து பார்க்கும் கதையின் நாயகியைவிட, அங்கே கொய்யாப்பழம் விற்கும் கிழவியின் வாழ்க்கைச்சித்திரமே வாசகர் மனதில் பதிந்து போகிறது. குடிகாரக் கணவன், அழுகும் பொருள். பொழுது ஓடுகிறது. இவளுக்குப் போணி திகையவில்லை. திகையுமோ, திகையாதோ? வீட்டில் இரவு அடுப்பு எரியுமோ? ஆதங்கம் படிப்பவர் மனதை வாட்டுகிறது. நாயகியின் மனதில் அழுத்தமாக ஓடும் கோட்டுச்சித்திரம்.

    'விபத்து' என்ற சிறுகதையின் நிலைக்களனும், ஒரு பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருக்கும் வெவ்வேறு தரப்பட்ட மனிதர்கள்தாம். கதை ஓர் இளைஞனின் மனஓட்டமாக இரவு நேரத்தில், திடுமென்று பயணம் பாதிக்கப்பட்ட நேரத்திலிருந்து துவங்குகிறது. (இந்தக் கதை ஓர் ஆணின் பார்வையாக, பயணிகளின் விவரங்களும் நுட்பமான தகவல்களும் கொடுக்கப்பட்டாலும், அது ஒரு பெண்ணின் நோக்காகவே அமைகிறது.) குபுக்கென்று விளக்கெரிந்து, பஸ்ஸில் பயணம் செய்பவர் ஒவ்வொருவரும் எந்த வகையிலும் ஒற்றுமையில்லாதவர் என்ற உண்மையை உணர்த்துகிறது. முன்பு ரயில்வே கேட்டில் லாரி சென்று மோதி விபத்து என்று காற்றுவாக்கில் வந்த சேதி, அனைவருடைய சொற்களிலும் புகுந்து, விபத்தை மிகப்பெரிய அளவு கோரத்தை உணர்த்துகிறது. தொடர்ந்து குடித்துவிட்டு ஓட்டிய வண்டி ஓட்டிகள், பயணம் செய்தவரின் பரிதாப மரணங்கள் என்று இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றும் சுவாரசியத்தில், அனைவரையும் விமரிசனப் பார்வைக்கு உள்ளாக்கும் இளைஞன் உட்பட, யாரும் வண்டியிலிருந்து இறங்கிச்சென்று உண்மையறிய மெனக்கெடவில்லை. இதிலெல்லாரும் ஒன்றுபடுகிறார்கள். கதைக்கரு இதுதான். உண்மையில், அது விபத்தே இல்லை. மணல் லாரி, சிறிதளவு உராய்ந்திருந்தது. முன்னெச்சரிக்கையாகப் பயணம் தடைசெய்யப்பட்டிருந்தது. செய்கையில் இறங்குவதைவிட பொறுப்பற்ற நாவை விளையாட விடும் பெரும்பான்மை மக்கள் இயல்பு பதிவாகிறது.

    'அணில்கள்' என்ற தலைப்பில் ஒரு கதை. புதிதாக மணமாகி வந்த பெண்ணுக்கு உலகமே இன்பமயமாக இருக்கும் நேரம். அவளுடைய அறைக்கு வெளியே உள்ள கொய்யாமரத்தில் ஏறி இறங்கி சல்லாபித்துக் குஞ்சு குழந்தைகளுடன் விளையாடும் அணில் கூட்டம் அவளுக்கு அலுப்பே தட்டாத ரசனையைத் தருகிறது. இந்த ரசனையில், கற்பனையில் ஒவ்வொரு அணிலுக்கும் பெயர் சூட்டி மானசீகமாகக் கொஞ்சி விளையாடிய மகிழ்ச்சியில், கொய்யாத் தோட்ட உரிமையாளர், பழங்களுக்காக அணில்களைக் கொல்ல முன்வரும்போது, அவள் அழகு உலகில் சாவின் கோரங்கள் படிகின்றன. இதேபோல் 'ஆசை, ஆசை, ஆசை' என்ற படைப்பில் நாயகன் தனக்கு நிச்சயமான இளம்பெண் தன் கனவுக் கன்னியாகவே இருப்பதால், அவளை எப்படிப் போற்றி இலட்சியமாக வாழவேண்டும் என்ற வாழ்க்கையின் ஒவ்வோர் அணுவையும் ரசனையுடன் திட்டமிடுகிறான். மனைவியை முதன்முதலில் தனிமையில் சந்திக்கும்போது அவள் தான் ஏற்கனவே ஒருவரைக் காதலித்ததாகவும், அவர் வேற்று சாதிக்காரர் என்பதால் பெற்றோர் அச்சுறுத்தி அவளை அவனுக்குக் கட்டிவைத்திருப்பதாகவும் சொல்லி ஓர் அணுகுண்டையே போட்டுவிடுகிறாள். வண்ணங்கள் புகையாய் அழிகின்றன.

    வாழ்க்கையில் எதிர்பாராவிதமான அதிர்ச்சிகள் நிகழ்வது சாதாரணம்தான். கிராமச்சூழலில், பண்ணை வளமைப் பெற்றோரின் அருஞ்செல்வியராக வாழ்ந்தபின், திருமணமாகித் தனிக்குடும்பம் செய்ய நகரச்சூழலுக்குப் போகும் பெண்கள் இத்தகைய அதிர்ச்சிகளை எப்படித் தாங்குவார்கள்? 'ஒரு வார்த்தை'யின் கதாநாயகி. மோசமான மிருகமாக கணவன் அவளை நடத்திய அனுபவத்தில், பெற்றோரும் மற்றோரும் எதிர்பாராதபடி, அவனுடன் சென்று வாழ்வதைவிட 'வாழாத' பெண்ணாக இருந்துவிட முடிவு செய்கிறாள். 'விதி'யின் கதைப்பின்னலில், மகிழ்ச்சிப்புள்ளிகள் கோலங்களாகச் சென்று இறுதியில் முடிச்சவிழும்போது... அதிர்ச்சியை ஊகமாக்கி முடிப்பது நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

    இதேபோன்ற நாயகி, 'டிரங்கால்' படைப்பில், எதிர்பார்ப்பு மத்தாப்பூவாக பூச்சிதறாமல், வெறுமே புகையும் திரியாக முடிந்து விடுகிறது.

    நவீனச் சிறுகதைகள், பழைய காலத்து நீதி புகட்டும் கதைகள் அல்ல. இந்தக் கதைகளின் பயன்பாட்டில் களிப்பூட்டும் அம்சம் குறிப்பாக்கப்படுகிறது என்றாலும், களிப்பூட்டலுக்கும் பல்வேறு இலக்குகள் உண்டு. மனிதமனங்களைக் கீழ்முகமாக இழுத்துச்செல்வதும் ஓர் இலக்குதான். அருவருக்கத்தக்க வருணனைகளும் கொச்சையான. உரையாடல்களும், கதைக்கருவுக்குத் தேவையில்லாத புகுத்தல்களும், இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதையிலும் இடம் பெற்றிருக்கவில்லை. புதிய உத்திகள் என்ற பெயரில் புரியாத மூடு மந்திரங்களும் இல்லை.

    சிறுகதையே படைப்பாளரின் மனதில் நெருடலாக விழும் ஒரு துளியே முத்தாகத் திரளும் பயன்தான். குழந்தையின் சிரிப்பைப் போல், கருக்கிருட்டில் பளிச்சென்று வெட்டும் மின்னல்போல் ஒவ்வோர் அனுபவத்திலும் ஒரு சுகம், அல்லது இதம் இருக்கிறது. நெஞ்சைப் பிழியும் சோக அனுபவமும்கூட, மனதடியில் ஆழ்ந்து மறைந்து எழுத்தாக வெளியே முகிழ்க்கும்போது, சோகம் கலை நயமாகி, பலரையும் அந்த நயத்தின் வாயிலாகச் சோகப் பங்கேற்புக்கும் பாத்திரமாக்க முடிகிறது.

    சிறுகதை என்பது ஏறக்குறைய ஒரு கவிதை போன்றது. வித்து விழுந்த நேரத்துக்கும் முகிழ்க்கும் பொழுதுக்கும் ஆண்டுக்கணக்கிலும் இடைவெளி இருக்கலாம். இடைவெளியே இல்லாமலும் போகலாம். ஆனால், திட்டமிடுவதும், கோப்பதும், இழுப்பதும், ஒட்டுவதும், வேலைப்பாடுகள் செய்வதும் தேவையில்லாத எளிய வடிவம் சிறு கதையே. சொற்செட்டு, முழுமை, இரண்டுமே இந்த வடிவத்துக்கு வெற்றிப்படிகளாகின்றன.

    இந்தத் தொகுப்பில் இரண்டு சிறுகதைகள் மிகச்சிறியவை. ஒன்று 'கால்கள்', மற்றது 'வாக்'. கால்களின் நாயகி கால்களை இழந்தவள். இறுதியில்தான் அவள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் உண்மை வெளிப்படுகிறது. 'வாக்' என்ற ஆங்கிலச் சொல்லை, ஆசிரியர் அழகாக 'நடை' என்ற தலைப்பிலேயே காட்டி இருக்கலாம். நாயை நடத்திச்செல்வது வெறும் காரணம். நாயகி அந்தச் சாக்கில், உலக வாழ்வின் ஒரு குறுக்குவெட்டின் சில நிமிடங்களில் பங்குபெறும் ஆனந்தத்தில் முழுமை காண்கிறாள். வெளிஉலக வேலைகளில் ஓய்ந்த கணவனுக்கோ, இது தேவையில்லாதது.

    ஆசிரியை ஒரு பெண் என்ற நிலையில், இந்தத் தொகுப்புக் கதைகளில் பலதரப்பட்ட நிலைகளில் பல்வேறு சூழல்களில் பெண்கள் இயங்குகிறார்கள். பெரும்பாலும் எந்தத் தரத்திலும், இவர்கள் குடும்பம் என்ற அமைப்புக்குரியவர்களாக, தம் மக்களையும் கணவனையும் வாழ்விப்பதற்காக, அந்த அடிப்படையில் உழைப்பவர்களாக, தியாகம் செய்பவர்களாகவே இயங்குகின்றனர். இந்த மரபு அச்சில் பெண்களின் இயல்பில் பல கரும்புள்ளிகள் உண்டு. பெண்ணிய ஆய்வாளர், பெண்ணின் இயல்பில் பெண்ணுக்குப் பெண் விரோதி என்பது, மற்றவள் வாழ்வில் பெறாமை உடையவள் என்று விழும் கரும்புள்ளிகளை, பெண்மைக்குரியதாக ஒப்புக் கொள்வதில்லை. அதற்குக் காரணமே, ஆணாதிக்கக்கூறுதான் என்ற முடிவு வைக்கப்படுகிறது. பெண் பிறவி எடுத்த உடனேயே, அவள் ஓர் ஆணுக்காகப் பிறப்பெடுத்திருப்பதையும், எக்காலத்தும் அவனைச் சார்ந்துதான் வாழவேண்டும் என்ற கருத்தை காலம்காலமாக மரபு சார்ந்த கருத்துகளும் பழக்க வழக்கங்களும் நிலைப்படுத்தி இருக்கிறது. இதன் விளைவு, பெண்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகும் மனப்பான்மையை மிக அரிதாக்கி இருக்கிறது. சார்புக்கு பாசத்தையே முழுமையாக்கிப் பற்றிக்கொள்ளும் மாமியார், அதே நிலையில் மனைவி என்ற ஒரு புதிய உறவு வந்ததும், அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.

    எனவே, பெண் இன்னொரு பெண்ணுடன், குடும்ப உறவானாலும், அயல் வீட்டுக்காரியானாலும், மனிதநேயம் என்ற அடிப்படையைக்கூட உணராத நிலையில் கர்வம் பிடித்தவளாக, பொறாமைக்காரியாக தீங்கிழைக்கும் கொடுமைக்காரியாகக் கருதப்படுவது, சமூகத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆசிரியை, வரிந்துகட்டிக்கொண்டு யாருக்காகவும் கொடிதூக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நடப்பியல் உண்மைகள் மறைக்கப்படவில்லை.

    'முட்படுக்கை', 'வேலை', 'ஆயா' போன்ற சிறுகதைகள் இந்த இயல்புகளைச் சித்தரிக்கின்றன.

    பெண், குடும்பம் என்று வரும்போது, கற்பியல் நெறி அவளுக்கு ஒரு நெருப்புவளையமாகப் பிணிக்கப்பட்டிருக்கிறது. பிறன் நெஞ்சில் புகுந்ததற்காக, இதிகாச சீதை நெருப்புக்குளித்தாள். 'வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப்போனாள்' நாயகியும், 'நான் மட்டும்' என்ற கதையில் வரும் ஏழைச் சமையல்காரி பெண்ணும், கற்பு நெறியில் உயிரை, வாழ்வை துச்சமாகக் கருதியது சித்தரிக்கப்படுகிறது. முடமாகிப்போன கணவனின் தன்னல, நா ருசிக்காக, மாமனாரின் இச்சைகளைத் தீர்க்க, அவனே வற்புறுத்துகையில் வேறு வழியில்லாமல் ராஜம் தூக்கில் தொங்குகிறாள். ஏழைச் சமையல்காரியின் மகளோ, செலவில்லாமல் நல்ல இடம் என்று மகளைக் கட்டிய இடத்தில், சீதையாக இருக்க முடியாது, துரெளபதைபோல் மூன்று பிள்ளைகளுக்கும் போகப்பொருளாக இரு என்று மாமியார் வற்புறுத்தியதால் அந்த வாழ்வே வேண்டாம் என்று தாயின் சுமையாகத் திரும்பி வருகிறாள்.

    'சோறு ஆறுதுங்க' என்ற கதை, கற்புநெறியின் இன்னொரு கோணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இது ஒரு கிராமத்து, விவசாய உழைப்பாளிக் குடும்பத்துப் பெண்ணின் கற்பை உணர்த்தும் கதை. இது அவளின் கதையாக எழுதப்பட்டிருக்கவில்லை. 'ஆண் எப்படி வேண்டுமானாலும்' இருக்கலாம். நடராஜன் பெருநகரில்லாத ஒரு பேரூரில் ஃபோட்டோ ஸ்டூடியோ நடத்துகிறான். பட்டணத்தில் சினிமா மோகத்துடன் பல பட்டறைகளில் புரண்டு புழுதி தட்டிக்கொண்டு பெற்றோர் வருத்தம் போக்கி, இங்கே தொழில் புரிகிறான். பசிக்கு உணவுவிடுதிபோல் இன்னொரு பசிக்கும், தீருவதற்கு எடுபிடி ஆள் வழிசெய்து விடுவான். அப்படி அவன் ஓரிரவு கூட்டிவந்த 'உருப்படி' தான் மல்லிகா. சுடச்சுட இரண்டு பிரியாணிப் பொட்டலங்களை வைத்துவிட்டு அவன் போகிறான். அவன் சொன்னபடி அவள் 'சுத்தமாக' வருகிறாள். மிகவும் அவசரப்படுகிறாள். காரணத்தையும் வெளியிடும்போது, கவர்ச்சிகரமாகப் பளபளக்கும் வண்ணத்தாள் ஒட்டப்பட்ட பேழையின் 'சுயம்' சற்றே தெரிகிறது. கல்யாணமான புதுக்கருக்கு அழியும் முன் ஆசைக்கணவன் பக்கவாத நோய்க்கு ஆளாகிறான். அவனை அழைத்துக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரியில் காட்டி வைத்தியம் செய்ய வந்திருக்கிறாள். அன்றாடம் உணவு, உறையுள் என்ற செலவுக்கு, வீடுகளில் பணிசெய்து பொருள் தேடுகிறாள். ஆனால், அவன் வைத்தியச் செலவுக்கு என்ன செய்வது? பெண்ணுடலின் அடுத்த பயனையும் அவள் பெறத் துணிந்து வந்திருக்கிறாள். இந்த பிரியாணி மணமோ, அவள் ஆசைக்கணவனின் தாபங்களை அவள் நெஞ்சக்கிடங்கிலிருந்து தோண்டி எடுக்கிறது. சீக்கிரம் ஆகட்டும் அய்யா, என் புருசனுக்கு பிரியாணி சூடா சாப்பிடப் பிடிக்கும். அதுக்கு இப்படிச் சாப்பிட வாங்கிக் கொடுக்க முடியாம, எத்தினி நாளாச்சி! சோறு ஆறுது...அதுக்குள்ள... கள்ளமற்ற இந்த நேசத்தையும் தியாகத்தையும் உணருபவன் பிறகு அவளைத் தொடுவானா? ஓர் ஆண் நோக்கில் எழுதப்பட்டிருப்பதே இக்கதையின் சிறப்பு. தூக்குப் போட்டுக்கொண்டவளும், வாழாவெட்டியாக நின்றவளும் காத்த கற்புநெறியின் இன்னொரு கோணம் இது. சமூகத்தின் உயர் அடுக்கில், கற்புநிலை பெண்ணைச் சுருக்குக் கயிறாய் இறுக்குகிறது. சுயச்சார்புடன் உடலுழைக்கக்கூடத் தடுமாறவைக்கும் அடுக்கு அது. உழைப்பாள வருக்கத்தில் ஆண் துரோகம் வெளிப்படையாகத் தெரிந்தாலும், எதிருக்கு எதிர் என்று நிற்க சமுதாயம் தடுப்பதில்லை. கணவனின் மீதுள்ள பரிவும் பாசமும், அவனைக் குணமாக்கும் தீவிரமும் அவளை இந்த நெறியைத் துச்சமாக்க முனைப்பாக்குகின்றன.

    அடிப்படை வாழ்வுக்கான தேவை என்று வரும்போது ஒரு பெண் துரோகம், ஏமாற்று மோசடிகளைச் சந்திப்பது, சமுதாயத்தின் மேல்தட்டு வருக்கத்துக்கு, படித்து மருத்துவராகி, தொழில் புரிய வரும் பெண்ணுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய நியாயமாகப் புரியவில்லை. தன்னிடமே கற்பை இழக்கவரும் பெண்ணிடம் சுதந்தர ஆணாகிய நடராஜன் நியாயம் கண்டு இரங்கினான். ஆனால், 'தாய்மை' என்ற சிறுகதையின் நாயகியான ஒரு பெண் மருத்துவர், அனுபவமில்லாத நகரத்து இளம்பெண். (இவளுக்குக் கதையில் ஒரு பெயர்கூடக் குறிப்பிடப்படவில்லை.) இவளுடைய முக்கியத்துவம் வெறும் மருத்துவப் பட்டப்படிப்புக் கண்ணாடிதான். அதில் விழும் பிரதிபிம்பமாகிய கருக்கலைப்புக்கு வரும் அஞ்சுலட்சம் என்ற பெயருடைய பெண்தான் நாயகி. சுயச்சார்பும் சுதந்தரமும் படிப்பும் அஞ்சுலட்சத்தின் வாழ்வை ஏற்கவோ, நியாயப்படுத்தவோ உதவவில்லை. அவள் மீது கோபப்படுகிறாள் என்பதே விந்தை.

    மேல்வருக்கத்தின் சுயநலங்கள், சின்னத்தனங்கள் (சுய) விமரிசனப் பார்வையில் மிக நேர்த்தியாக நுணுக்கமாகச் சுட்டிக் காட்டப்படும் பல படைப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

    'பிச்சம்மா' கதையில், அரிசி ஆலையில் தவிடு புடைத்து, குழந்தைகளுக்குப் பச்சை நொய்யரிசியும் கூலியும் பெற்று, நோயாய்ப் படுத்துவிட்ட கணவனையும் மக்களையும் காப்பாற்றும் ஏழைத்தாய் பிச்சம்மாவின் மீது இரக்கம் காட்டி, அவளுக்கு வேலையும் கூலியும் கொடுப்பதாகக் கூட்டிவரும் எசமானி, வேலை முழுதும் வாங்கிக் கொண்டபின் காட்டும் கஞ்சத்தனம், ஆணிக்குத்தாய் விழுகிறது. கால்படி நொய்யிலும் அரை ரூபாய்க் கூலியிலும் அந்தப் பெருமாட்டியின் மனம் கணக்குப் பார்க்கிறது.

    'நெடுஞ்சாலையில் ஓர் சாவு', 'உறுத்தல்', 'எல்லோரும்தான்', 'கழுதை தேய்ந்து' ஆகிய படைப்புக்கள், தன்னலத்தையும், பொருள் பற்றையும் வெகுநுட்பமாக மனித இயல்போடு இழைய விடுகின்றன. இந்த மனித இயல்பின் பலவீனங்களை, 'வாழைக்குலை', 'தேனடை', 'திருடன்', 'கடைசியில்' ஆகிய கதைகள் நகைச்சுவை இழைய எடுத்துக்காட்டுகின்றன. வாழை முதன்முதலில் தெற்குப் பார்த்து குலை தள்ளுவது வீட்டுக்கும் குடியிருக்கும் மக்களுக்கும் ஆகாது என்று சொல்லக்கேட்டதும், உடமையாளரின் இனம்புரியா அச்ச உணர்வு, வாழைக்குலையின் இயல்பையும் மாற்றச் செயல்படுத்துகிறது. வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி, கணவனைப் பட்டினி போட்டுப் பலவகைகளிலும் சிக்கனத்தின் பெயரால் வதைத்து ஆசையாய்ச் சேகரித்த நகைகளை ஒரே இரவில் திருடன் கொண்டு போகிறான் ('கடைசியில்').

    உயர்மட்டங்களில், பொருளாதார வண்மைகள் தேவைக்குமேல் வசதிகளை இறைக்கும்போது, அந்த வசதிகளே இளந்தலைமுறையினரின் சமுதாய உணர்வை உறிஞ்சி, தன்னலச்சுவர்களை எழுப்புகின்றன என்ற உண்மையை, 'புளியந்துளிர்' என்ற கதையின் நாயகி யசோதா, தன் கணவர், மக்களுடன் காரில் பயணம் செய்யும் போது உணருகிறாள். இதை உணருவதற்கு, அவளுக்கு ஒரு நேரம் வாய்க்கிறது. பலவகை உணவுகளை அவள் பயணத்துக்காகத்

    Enjoying the preview?
    Page 1 of 1