Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valaivugal Abayam
Valaivugal Abayam
Valaivugal Abayam
Ebook116 pages1 hour

Valaivugal Abayam

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403385
Valaivugal Abayam

Read more from Rajesh Kumar

Related to Valaivugal Abayam

Related ebooks

Related categories

Reviews for Valaivugal Abayam

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valaivugal Abayam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    வளைவுகள் அபாயம்

    Valaivugal Abayam

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    நான் தீர்மானமான குரலில் சொன்னேன். 'அண்ணா நான் வேலை பார்க்கிற கம்பெனி முதலாளி நல்லவர்தான். ஆனால், அந்த கம்பெனியோட நடவடிக்கைகள் சரியில்லை. ஏதோ நிழல் காரியம் பண்ணுகிறார்கள்.

    பெண், பெயர் பிரின்சி. வயது? வரும் ஜூனோடு இருபத்து மூன்று. என்னைப் பார்க்கிற எந்த அந்நிய ஆணும் சில விநாடி நேரமாவது பார்க்காமல் இருக்க மாட்டான். என்னைப் பற்றி பின்னால் நிறைய சொல்கிறேன். இப்போது நான் என் அண்ணனோடு பேச வேண்டும்.

    அண்ணன் என்னை ஏறிட்டார்.

    'நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா பிரின்சி...'

    'தீர்க்கமா - நேத்து ராத்திரி பூராவும் தூங்காமே யோசிச்சுப் பார்த்துட்டு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.'

    'கம்பெனியில் ஏதோ நிழல் காரியம் பண்றதா சொன்னியே... அதென்ன நிழல் காரியம்...?"

    'இன்னதான்னு சொல்ல முடியலை. ஆனால் கம்பெனி சரியில்லை. மாலை ஐந்து மணியானால் போதும்... எல்லா ஊழியர்களையும் வெளியே அனுப்பிச்சுடுவாங்க. கம்பெனி முதலாளி அந்த நேரத்துக்குத்தான் பதட்டமாயிருப்பார்.'

    என் அண்ணன் சிரித்தார்.

    'உனக்கு எதிலும் சந்தேகம்தான். ஒரு கம்பெனின்னு சொன்னால் எவ்வளவோ வியாபார இரகசியங்கள் இருக்கும். அதையெல்லாம் நாம் கண்டுக்கக் கூடாது... நம்ம வேலை என்னவோ அதை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும். 'சாரிண்ணா... அப்படி என்னால் இருக்க முடியலை...'

    உன்னோட பாஸ் என்றைக்காவது எந்த சந்தர்ப்பத்திலாவது உன்கிட்ட முறை தவறி நடந்திருக்கிறாரா?

    இல்லை...

    'இரட்டை அர்த்தம் வர்ற மாதிரி பேசியிருக்காரா?'

    'இல்லை'

    'கம்பெனியில் இருக்கிற மத்த ஊழியர்கள்!'

    'அவங்களும் என்கிட்ட கண்ணியமாத்தான் பேசறாங்க… பழகறாங்க. சில பேர்களோட பார்வை மட்டும் தப்பா யிருக்கும்."

    'அதை தவிர்க்க முடியாது. ஏன்னா என்னோட தங்கச்சி அழகான பொண்ணு...'

    நான் புன்னகைத்துக் கொண்டே - என்னுடைய கைபேக்கைப் பிரித்து - ஒரு கவரை எடுத்து என் அண்ணனிடம் நீட்டினேன்.

    என்ன இது...?

    'என்னோட ராஜினாமாக் கடிதம்.'

    இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு பிரின்சி.

    "எனக்கு அது மாட்டுக் கொம்புதான் அண்ணா. இந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு இன்னும் பத்தே நாள்லே வேற ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்து காட்றேன்.''

    அண்ணன் தோள்களை குலுக்கினார். 'ம்... நீ இவ்வளவு உறுதியாக இருக்கும் போது... நான் என்ன சொல்ல முடியும்...? ராஜினாமா லெட்டரைக் கொடுத்துவிட்டு உடனடியா வீட்டுக்கு வந்து சேரு. கம்பெனி இன்றைக்கு லீவுதானே?'

    'ஆமா! ஆனால் எம்.டி, இருப்பார்.'

    நான் கிளம்பினேன்.

    வீதியின் முனைக்கு வந்து - காலியாப் போன ஆட்டோ ஒன்றை பிடித்து, பதினைந்து நிமிடத்தை பிரயாணத்தில் கரைத்து என்னுடைய கம்பெனியின் பிரமாண்டமான காம்பவுண்டு கேட்டுக்கு முன்னால் இறங்கிக் கொண்டேன். மீட்டர் பார்த்து காசு கொடுத்து ஆட்டோவை அனுப்பிவிட்டு, வாட்ச்மேன் கொடுத்த சல்யூட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனேன்.

    ஆரோக்கியமான கட்டிடம், கட்டிடத்தைச் சுற்றிலும் கூர்சீவின பென்சில்கள் மாதிரி தைல மரங்கள் நின்றிருந்தன. மெட்டாடர் வேன்களிலும், லாரிகளிலும் லக்கேஜ் கனமாய் தெரிந்தது. கம்பெனி விடுமுறையானதால் உள்ளே அமைதி.

    நான் - நீளமான சலவைக் கல் வராந்தாவில் நடந்து - கோடியில் இருந்த - மேனேஜிங் டைரக்டர் அறைக்கு முன்னால் வந்து நின்றேன்.

    அறைக்கு முன்னால் - ஸ்டூலில் உட்கார்ந்திருந்த அட்டெண்டர் என்னைப் பார்த்ததும் 'வணக்கம்' சொல்லிக் கொண்டே எழுந்தான்.

    'அம்மா'

    'எம்.டி.யைப் பார்க்கணும் உள்ளே யாராவது இருக்காங் களா?'

    'யாரும் இல்லேம்மா...'

    'நான் உள்ளே போலாமா?'

    'இருங்கம்மா... கேட்டுட்டு வந்துடறேன்.' சொன்னவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய், உடனே வெளியே வந்து, 'போங்கம்மா' என்றான்.

    நான் உள்ளே போனேன்.

    ஏர்கண்டிஷனர் 'ம்ம்ம்ம்' என்று சுருதி கூட்டிக் கொண்டிருக்க - அறை ஜில்லிப்பாய் இருந்தது. மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு பைல் ஒன்றில் தீவிரமாய் மூழ்கியிருந்த என்னுடைய பாஸ் நிமிர்ந்தார்.

    நான் புன்னகைத்தேன். 'வணக்கம் சார்.'

    'வணக்கம் பிரின்சி... உட்கார்.'

    நான் உட்கார்ந்தேன்.

    'என்ன விஷயம்...?' நீயாகவே என்னைப் பார்க்க வந்திருக்கே?'

    நான் ஒன்றும் பேசாமல் பேக்கை திறந்து உள்ளேயிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினேன்.

    'என்ன இது...?'

    'என்னோட ராஜினாமா கடிதம் சார்.'

    "பாஸ் துல்லியமாய் திடுக்கிடுவது தெரிந்தது. என் கையிலிருந்து வாங்கிய கடிதத்தைப் பிரித்துக்கூட பார்க்காமல் மேசையின் மேல் போட்டுவிட்டு ஆச்சரியக் குரலில் கேட்டார்.

    'நீ வேலைக்கு சேர்ந்து மூணு மாசம் கூட ஆகலை... அதுக்குள்ளே ராஜினாமாவா?'

    நான் பதிலொன்றும் சொல்லாமல் - என் இடது கை விரல்களின் நெயில் பாலீஷ் பூச்சைப் பார்த்தேன்.

    'என்ன காரணம் பிரின்சி?'

    'அண்ணன் வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிவிட்டார்.'

    பாஸ் மெல்ல சிரித்தார். ரோலிங் நாற்காலியில் ஒரு கால் வட்டம் சுழன்றார். 'நீ சொல்ற காரணம் நம்பும்படியா

    Enjoying the preview?
    Page 1 of 1