Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nerungi Nerungi Varugiral
Nerungi Nerungi Varugiral
Nerungi Nerungi Varugiral
Ebook237 pages2 hours

Nerungi Nerungi Varugiral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103246
Nerungi Nerungi Varugiral

Read more from Ja. Ra. Sundaresan

Related to Nerungi Nerungi Varugiral

Related ebooks

Reviews for Nerungi Nerungi Varugiral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nerungi Nerungi Varugiral - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    நெருங்கி நெருங்கி வருகிறாள்

    Nerungi Nerungi Varugiral

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    அழகான இளம் பெண்ணாக அல்லது குறைந்த பட்சம் கவர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உடையவளாக இருக்க வேண்டும்.

    குடும்பப் பாங்கானவளாக, பயந்த சுபாவமுள்ளவளாக இருக்க வேண்டும்.

    யார் கொஞ்சம் அழுத்தமாக அதட்டிச் சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படிகிற இயல்புள்ளவளாக இருக்க வேண்டும்.

    மிக முக்கியம்: அவளுடைய வம்சத்தில் யாருக்காவது முன்னர் மனோ வியாதி இருந்திருக்க வேண்டும்.

    மேலே கண்ட எல்லாத் தகுதிகளையும் கொண்ட ஒரு பெண் உங்களுக்குத் தேவைப்பட்டால் - நீங்கள் யார், உங்களுக்கு எதற்காக அவள் தேவைப்பட வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தயவு செய்து இப்போது கேட்காதீர்கள் - வேறெங்கும் போக வேண்டாம்:

    அடையாறு ஜி. கே. ராவ் அவென்யூவிலுள்ள முப்பத்தொன்றாம் நம்பர் வீட்டுக்குச் சென்று, 'இங்கே புதிதாகக் குடி வந்திருக்கிறாராமே சரவணன் என்று? அவர் வீடு இதுதானா?' என்று கேட்டுவிட்டு, ஓசைப்படாமல் ஜன்னல் அருகே நின்று உள்ளே எட்டிப் பார்த்தால் போதும்.

    காஸ் அடுப்பின் பர்னரை ரம்யாவின் விரல்கள் ஒரு துணியால் மெதுவே துடைத்துக் கொண்டிருந்தன. அவளுடைய மென்மையான கைக்கு அந்த இரும்பு சற்றுக் கனமாக இருந்தாலும், அந்த வேலையைச் செய்ய அவளுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

    மூன்று மாதங்களுக்கு முன் வரையில் இப்படித் தங்களுக்கென்று ஒரு தனி வீடு கிடைக்கும், அந்த வீட்டின் சகல வேலைகளையும் தானே செய்கிற வாய்ப்புக் கிடைக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை. சரவணன் தான் கல்யாணம் ஆன கையோடு அலை அலையென்று அலைந்து, சிறியதானாலும் வசதியான இந்த வீட்டை அமர்த்தினான். நூற்றைம்பது ரூபாய்க்குத் தனியாக இப்படி ஒரு வீடு கிடைத்ததற்கு உன் அதிருஷ்டம்தான் காரணம். இப்போது வாசலில் வீட்டுக்காரர் போட்ட நம்பர் மாத்திரம்தான் இருக்கிறது. நான் 'ரம்யா' என்று இதற்குப் பெயர் சூட்டி போர்டு எழுதி மாட்டிவிடப் போகிறேன். என்று அவன் உற்சாகமாகச் சொன்னதை நினைத்துப் பார்க்கும்போது அவளுடைய உள்ளத்தில் இனிப்பு ஊறியது.

    பர்னரின் துவாரங்களிலுள்ள ஈரத்தை உதடுகளைக் குவித்து ஊதிய போது, ஒளிந்திருந்த நீர்த்துளிகளில் சில அவளது உதடுகளில் பட்டு லேசாக உப்புக் கரித்தது. பர்னரை வெய்யிலில் வைக்க வேண்டும்.

    மொட்டை மாடி - என்ற விசாலமான ஓர் இடம் அந்தப் புது வீட்டில் இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. மொட்டை மாடிக்குச் சென்றாள்.

    ஒரே குப்பைக் கூளம்! முன்னால் குடியிருந்தவர்கள் போட்டுச் சென்ற அடுப்புக் கரித்துண்டுகள்!

    ஞானாம்பாள் அத்தையென்றால் தப்பித் தவறி ஒரே ஒரு துண்டுக்கரி கீழே விழுந்துவிட்டால்கூடப் பதறித் துடித்துப் போய்விடுவாள். 'கரி கீழே விழக்கூடாது. எடுங்கள் யாரானும் முன்னே' என்று துடித்துப் போவாள்.

    'அம்மா!" என்ற குரல் கீழேயிருந்து கேட்டது. ரம்யா கீழே இறங்கி வந்தாள். இடுப்பில் கைக் குழந்தையுடன் வேலைக்காரி வந்து கொண்டிருந்தாள்.

    என்ன இவ்வளவு லேட்? என்றாள் ரம்யா.

    மன்னிச்சிடுங்கம்மா. எங்க தெரு பிளாட்பாரத்துலே கோவிலுக்குப் போயிட்டு வந்தேன். புச்சாக் கட்டியிருக்காங்களே, என்றவள் புடவைத் தலைப்பிலிருந்த முடிச்சைப் பிரித்து ஒரு பொட்டலத்தை அவளிடம் நீட்டினாள். துண்ணூறு எடுத்துக்குங்கம்மா.

    ரம்யா அந்தப் பொட்டலத்தை வாங்கி அலமாரியில் வைத்துவிட்டு, நீ போய்த் துணி துவை, என்று கிணற்றடிக்கு அனுப்பி வைத்தாள்.

    அவள் பெரியப்பா சொல்வது வழக்கம். அப்பா, அம்மா, அண்ணன் போன்ற முக்கியமான உறவுக்காரர்களைத் தவிர வேறு யார் விபூதி கொடுத்தாலும் உடனே வாங்கி இட்டுக்கொண்டு விடக்கூடாது என்று. அவருடைய பாட்டி ஒருத்தி இளம் வயசாயிருந்த காலத்தில் யாரோ தந்த விபூதியை இட்டுக்கொண்டு பட்ட அவதியை அவர் விவரிப்பதுண்டு.

    சமையலறைக்குத் திரும்பினவள், 'அடடே! பொட்டலத்தை இப்படி அலமாரியில் வைத்துவிட்டோமே, பிரபுக்குட்டி கண்ணில் பட்டு விடக்கூடாதே' என்று நினைத்துக்கொண்டாள். பிரபு அவளுடைய ஓரகத்தியின் கடைக் குட்டி, எந்தப் பொட்டலமாயிருந்தாலும் பிரித்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு விடுவான். அவனுக்கு மருந்து எதையும் தேனிலே கலக்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தியிருந்தார்கள். பொட்டலம் என்று கண்டுவிட்டால் போதும், அது மிளகாய்ப் பொடியாயிருந்தாலும் சரி, பல்பொடியாயிருந்தாலும் சரி.

    பிரபு என்ற அந்த விஷமக்காரன் இப்போது இந்த வீட்டில் இல்லை. மாம்பலம் வீட்டில் இருக்கிறான் என்று அவள் நினைவுக்கு வந்தது.

    சற்று முன் வரையில் தனி வீட்டைப் பற்றி மகிழ்ந்து கொண்டிருந்தவளுக்கு மாம்பலத்திலுள்ள மாமியார் வீட்டின் ஞாபகம் வந்தது. ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்தது.

    அந்தக் கலகலப்பை அவளால் எப்படி மறக்க முடியும்?

    மூன்று மன்னிகளும் - தன் ஓரகத்திகளை ரம்யா, மன்னி என்றுதான் கூப்பிடுவாள் - இந்த நேரம், என்ன பண்ணிக் கொண்டிருப்பார்கள்? ஜெயா, கல்பகத்தை 'வர்ரீங்களா மன்னி, தாயக் கட்டம் ஆடலாம்' என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பாள். பவானி, மாமியாரிடமும் அத்தையிடமும் நல்ல பெயர் வாங்க அன்ன பூர்ணாஷ்டகத்தை அவர்களுக்குப் படித்துக் காட்டி கொண்டிருப்பாள். குழந்தைகள் நேரம் கிடைத்தால் டிராமா போடுகிற ஆர்ப்பாட்டம், பொடிசுகளின் ஆபீஸ் விளையாட்டு...

    தனிக்குடித்தன ஆசை ரம்யாவுக்கு என்றைக்குமே ஏற்பட்டதில்லை. பிறந்த வீட்டிலும் கல கலவென்று நான்கு சகோதரிகளுடனும் மூன்று அண்ணன்களுடனும் இருந்தவள். அங்கேயும் கடைசிப் பெண். புகுந்த வீட்டிலும் கடைசி மருமகள்.

    அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். மாமியாரின் வீட்டைப் போலவோ, பிறந்த வீட்டைப் போலவோ கலகலப்பு இங்கு இல்லை என்பது உண்மைதான். அங்கே நாலு பேரோடு இருந்த போது மனத்துக்கு இருந்த தெம்பும் தைரியமும் இங்கு கிடையாது. பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைக் கேட்டு நடந்தோம் என்ற சந்தோஷத்தை அவள் இழந்து விட்டாள். ஆனால் இந்த விசாலமான வீட்டில் அமைதியும், தனிமையும் கணவனின் அன்பான அரவணைப்பும் அங்கு கிடைத்ததில்லையே.

    மணி பன்னிரண்டு.

    ரம்யா தான் வீடு மாறியதை ஊரிலுள்ள அம்மாவுக்கு எழுத வேண்டு மென்று இரண்டு நாளாக நினைத்துக் கொண்டிருந்தாள். எழுதிவைத்த கடிதத்தைப் பூர்த்தி செய்யத் தொடங்கினாள். புது வீட்டின் அழகைப் பற்றியும், வசதி பற்றியும் அதே சமயம் தனியாக இருப்பதன் வெறுமை பற்றியும் ஒரு வழியாக எழுதி முடித்தாள். மீண்டும் படித்துப் பார்த்த பிறகுதான் முக்கியமாக எதை எழுத வேண்டுமோ அதை எழுதாதது ஞாபகத்துக்கு வந்தது.

    முகவரி மாறிவிட்டதைத் தெரியப்படுத்தத்தான் கடிதமே எழுத உட்கார்ந்தாள். அதை எழுத மறந்து ஊர்ப்பட்ட கதையை எழுதியதை நினைத்துச் சிரித்துக் கொண்டாள். 'யாரிடம் கொடுத்து போஸ்ட் செய்யச் சொல்வது' என்று அவளுக்குத் தெரியவில்லை . 'சரி, என்ன அவசரம்? அவர் நாளைக்கு ஆபீஸ் போகும்போது கொடுத்தால் போயிற்று' என்று எண்ணியவாறு கடிதத்தைப் பூஜாடியின் கீழே வைத்துவிட்டுத் திரும்பினாள்...

    திடுமென்று யாரோ அவள் காதருகே, அந்தப் பேனாவைத் தூக்கி சுவரில் வீசியடி! என்று சொன்ன மாதிரி இருந்தது.

    திடுக்கிட்டவளாகத் திரும்பிப் பார்த்தாள். யாரையும் காணோம்.

    மறுபடியும் அவள் காதில் அதே கட்டளை ஒலித்தது.

    என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் கையிலிருந்த பேனாவைச் சுவரை நோக்கி வீசி எறிந்தாள்.

    பேனா சுக்கலாக உடைந்து தரையில் விரித்திருந்த விரிப்பில் கறுப்பாக மையைச் சிதற அடித்துக் கொண்டு கீழே விழுந்தது.

    இரண்டொரு வினாடி ரம்யாவுக்கு என்னவோ மாதிரி இருந்தது. சோபாவில் ஒரு நிமிடம் உட்கார்ந்துவிட்டுப் பிறகு எழுந்து கொண்டாள்.

    சமையலறையில் சாப்பாட்டை மூடி வைத்தோமோ என்ற சந்தேகம் வந்தது. போய்ப் பார்த்து ஒழுங்கு செய்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

    திடுக்கிட்டாள்.

    "என்னது இது! விரிப்பெல்லாம் ஒரே மை! பேனா இப்படி உடைந்து கிடக்கிறது? அணில் காக்கா ஏதாவது வந்து பேனாவை இப்படித் தள்ளிவிட்டதா?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.

    பாத்ரூமுக்குச் சென்று ஒரு பக்கெட்டில் நீர் எடுத்து வந்து சோப்புப் போட்டுச் சுவரையும், ஜமுக்காளத்தையும் நிதானமாகத் துடைத்தாள்.

    பாங்கியிலிருந்து வேலை முடிந்து அப்போதுதான் உள்ளே வந்தான் சரவணன்.

    மண்டியிட்டுக் குனிந்து மனைவி எதையோ கவனமாகத் துடைத்துக் கொண்டிருப்பதை அவன் ரசிக்கத் தொடங்கினான்.

    இவள்தான் எவ்வளவு அழகு! அதுவும் இந்த அழகான பங்களாவிலிருப்பது அவள் அழகை வெல்வெட் பெட்டியில் வைத்த வைரக் கல்லைப்போல் எப்படி ஜொலிக்க வைக்கிறது!

    2

    சரவணன் வந்தது தெரியாமல் ரம்யா நிதானமாய்த் தரையிலிருந்த இங்க் கறையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். மண்டியிட்டு அவள் குனிந்திருந்த விதத்தை, செழுமையான அவளது கால்கள் மடிந்திருந்த அழகை, அவன் தூர இருந்து கொஞ்ச நேரம் ரசித்தவன் ஓசைப்படாமல் பின்னால் வந்து அவள் இடையைத் தொட்டான்.

    தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு. என்ன நீங்கள்? பயந்தே போய் விட்டேன்! என்று விலகிப் புடவையைச் சரி செய்து கொண்டாள்.

    நான் வந்து எவ்வளவு நேரம் ஆகிறது தெரியுமா? மன்னித்துக்கொள்ளுங்கள். பார்க்கவே இல்லை.

    அவன் கண்களில் குறும்பு ஒளிவிட்டது. நீ பார்க்கா விட்டாலும், நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தத் துடைக்கிற வேலையெல்லாம் நீ செய்யணுமா? உனக்கென்று சில வேலைகளிருக்கிறது. அதைத்தான் நீ செய்யணும்.

    கல்யாணமான புதிதில் மாம்பலம் வீட்டில் எல்லோருடனும் இருந்த பொழுது அவனுக்கு அவளுடன் தடையில்லாமல் தனியாகப் பேச வசதியே இருக்காது. ஆபீசிலிருந்து அவன் வந்து அரை மணியானாலும் சமையல் கட்டில் ஓரகத்திகளோடு அவள் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பாள். ஒரு மணி கழித்து ஒரு வினாடி தலையை நீட்டி, வறுவலுக்கு வாழைக்காய் சீவிக் கொண்டிருக்கிறேன், என்பாள். புடலங்காய் சீவுவதுதானே? இன்னும் கொஞ்சம் நீளமாய் இருக்கும், என்பான் அவன் எரிச்சலுடன்.

    இங்கே வந்த பிறகு அந்த வசதி கிடைத்து விட்டது. ஆனால் இப்போது அவன் ஏக்கம் - அவளாக விரும்பி, ஆவலோடு நெருங்கி வரவில்லையே என்பது.

    சாடையாக ஒரு நாள், 'எல்லாம் ஒன்வே ட்ராபிக்காக இருக்கிறது,' என்று சொல்லி வைத்தான். அவளுக்குப் புரியவில்லை . 'நம்ம ரோடையா? ஏன் அப்படிப் பண்ணிவிட்டார்கள்?' என்றாள் அப்பாவித்தனமாக.

    ஜமுக்காளமும் சுவரும் இங்க் கறையில்லாமல் சுத்தமாகிவிட்டது என்ற திருப்தியுடன் ரம்யா துணியை அலசுவதற்காக எடுத்துச் சென்றாள். ஜன்னலுக்குப் போட்டிருந்த, நெருக்கமில்லாத, காற்றோட்டமான, நீல நிறக் கைத்தறித் திரையிலிருந்து, தன் கூட்டுக்காக ஒரு நூலை இழுத்துக் கொண்டிருந்த சுறு சுறுப்பான குருவி ஒன்று அவள் வந்ததும் விருட்டென்று பறந்து டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி மேல் சென்று உட்கார்ந்து கொண்டது. சமையலறையிலிருந்து வந்த குழம்பின் வெந்தய மணம், இறக்கி வைத்ததை ஒருகால் மூட மறந்து விட்டோமோ என்ற எண்ணத்தை அவளுக்குத் தந்தது.

    ரம்யா, என்றான் சரவணன் டையைக் கழற்றியவனாய். உனக்கு இன்றைக்கொரு ஸ்பெஷல் பரிசு கொண்டு வந்திருக்கிறேன். என் ஆபீஸ் பெட்டியை மட்டும் திறந்து விடாதே. - இப்படிச் சொன்னாலாவது அவள் ஆர்வத்துடன் அவனுடைய பெட்டியைத் திறந்து பார்ப்பாள், அவனிடம் அந்தப் பரிசும் கையுமாகக் கொஞ்ச வருவாள் என்று எதிர் பார்த்தான். பலனில்லை.

    சாப்பிட்டு முடித்தான். பெட் ரூமுக்குப் போகிறேன். பாக்குப் பொடி கொண்டு வா, என்று உள்நோக்கத்தோடும் உதட்டில் சிரிப்போடும் கட்டளையிட்டுவிட்டு வாஷ் பேஸினில் அவன் கை கழுவியபோது அங்கே நீல நிறத்தில் மைக்கறை படிந்திருந்ததைக் கவனித்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவியின் அழகை ரசிக்கத் தொடங்கி விட்டானே தவிர, ஏன், எதற்காக, எதை அவள் துடைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையெல்லாம் அவன் கவனிக்க வில்லை. ஏதோ இங்க் பாட்டிலைக் கைதவறிக் கீழே போட்டு விட்டுத் துடைத்திருக்கிறாள் போலிருக்கிறது என்று ஊகித்தான். ஆனால் அதைப்பற்றி அவளிடம் கேட்க விரும்பவில்லை. ஒன்று, அவளுக்குத் தான் ஏதோ தப்பு செய்து விட்டது போன்ற நினைவு தோன்றி மனம் கஷ்டப்படும். அந்தக் கஷ்டத்தைக் கொடுக்க அவன் இஷ்டப் படவில்லை. இரண்டு, அவளோடு அவன் இந்த மாதிரியான உப்பு சப்பில்லாத விஷயங்களைப் பேசித் தன் கிளுகிளுப்பான திட்டத்தை இழக்க இஷ்டப்படவில்லை.

    பெட்ரூமில் கீழ் ஜன்னல் மேல் ஜன்னல் எல்லாவற்றையும் தயாராகச் சாத்தி வைத்துக் கொண்டு அவள் பாக்குப் பொடி கொண்டு வருவதற்காகக் காத்திருந்தான். அவள் சமையலறையில் இதை மூடி அதை மூடி, மேடையை ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள்.

    ரம்மி! பாக்கு! -

    அவள் வந்ததும் பிரீஃப் கேஸை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். கண்ணை மூடிக்கொள்.

    ஊஹம், நீங்கள் ஏதாவது செய்து விடுவீர்கள். அவள் பயந்தாள்.

    ஒண்ணும் பண்ண மாட்டேன். கண்ணை மூடிக் கொள்.

    அவன் மீது நம்பிக்கையில்லாமல் எட்ட உட்கார்ந்து பாதிகண்ணை மூடிக்கொண்டவள், உள்ளே எனக்கு நிறையக் காரியம் இருக்கிறது, என்றாள்.

    "காரியம். காரியம். காரியம். எனக்கு ஆபீஸில் இன்டெர்வல் தருகிற மாதிரி உனக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1