Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Varum Paathaiyil...
Nee Varum Paathaiyil...
Nee Varum Paathaiyil...
Ebook97 pages39 minutes

Nee Varum Paathaiyil...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703282
Nee Varum Paathaiyil...

Read more from Vidya Subramaniam

Related to Nee Varum Paathaiyil...

Related ebooks

Reviews for Nee Varum Paathaiyil...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Varum Paathaiyil... - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    நீ வரும் பாதையில்...

    Nee Varum Paathaiyil…

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகப்பா.

    ஐயர் சொல்ல சூர்யா அம்மாவைத் தேடினான். இதற்கிடையில் யார் யாரோ வந்து அவன் கையைப் பிடித்து குலுக்கி பரிசுப் பொருள்களையும் பணக்கவர்களையும் திணித்துவிட்டுப் போனார்கள். சூர்யா தன் அருகிலிருந்த நளினியைப் பார்த்தான். ஹோமப்புகையில் நளினியின் முகம் சிவந்து வியர்த்திருந்தது. புறங்கழுத்து மயிர்கள் வியர்வையில் ஒட்டியிருக்க ரோஜாப்பூ மாலையில் பாதி பூக்கள் உதிர்ந்து பல இடங்களில் நார் மட்டும் தெரிந்தது. அக்னி வெப்பத்தில் களைத்துப் போயிருந்தாள். நல்ல காற்றில் சற்று நேரம் அமர மாட்டோமா என்று அவள் மனம் தவிப்பது கண்களில் தெரிந்தது சூர்யாவுக்கு. சிரிப்பு வந்தது. என்ன நளினி இதுக்குள்ளயே சோர்ந்து போய்ட்ட? இன்னும் எவ்ளோ இருக்கு...! என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தான்.

    ஆசை! உள்ள விட்டதும் தூங்கிடுவேன் உங்க கழுத்தை அறுப்பேன்.

    நளினி யாரையோ பார்த்துக் கொண்டு 'அவன் காதருகில் கிசுகிசுத்தாள்.

    அப்படிங்களா...? அதுக்கென்ன தாராளமா தூங்குங்களேன் நமக்கு ஆளா கிடைக்காது? அந்த பச்சை சுரிதார் நல்லால்ல? திம்முனு பம்பளிமாஸ் மாதிரி. உன்னைவிட வயசுல கூட சிறிசாதான் இருக்கும்னு தோணுது. அத்த கணக்கு பண்ணிக்கிட்டா போச்சு.

    அப்படியா? புருஷன்னு பார்க்க மாட்டேன் பிறாண்டி கடிச்சு குதறிடுவேன்.

    உன்னால முடியாது. நீதான் தூங்கிடுவயே.

    சரி சரி அம்மா எங்கன்னு பாருங்க.

    சூர்யா அம்மாவைத் தேடினான். அம்மா சற்று தள்ளி யாரோ ஒரு பெண்மணியோடு பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. சூர்யா நளினியோடு அம்மாவிடம் சென்றான். அம்மா திரும்பினாள்.

    நமஸ்காரம் பண்ணிக்கறோம்மா.

    வணங்கி எழுந்த இருவரையும் அம்மா கண்கொட்டாமல் ஒரு நிமிடம் பார்த்தாள். அவள் விழிகளில் பளபளப்பு.

    ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்டு வாழறது தான். நீங்க ரெண்டு பேரும் எந்தவித கசப்பும் ஏற்படாம செளக்யமா வாழணும்.

    இதைச் சொல்லும் போது அம்மாவின் கண்கள் உடைந்தது. குரல் அடைத்தது. அம்மாவின் கண்ணீரை ஆனந்தக் கண்ணீர் என்று நினைத்தான் சூர்யா. அவனு டைய நாலாவது வயசில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்து நடந்தது என்று பத்து வயசில் அவனுக்கு அம்மாவின் உறவு ஒன்று சொல்லியது. சூர்யா உடனே அதுபற்றி அம்மாவிடம் கேட்டு விட்டான். அம்மா, சட்டென்று எந்த பதிலும் சொல்லவில்லை.

    அப்பா கெட்டவராம்மா? உன்னை அடிப்பாரா? துன்புறுத்துவாரா? அதான் அவர் வேண்டாம்னு விலகிட்டயா?

    சூர்யா அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டான். அம்மா ஒரு நிமிடம் கண்மூடி யோசித்து விட்டு ஆமாம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். இதைச் சொல்வதற்கு அம்மா ஏன் யோசித்தாள் என்று புரியவில்லை சூர்யாவுக்கு.

    ஆனால் அதற்குப் பிறகு அப்பாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது கல்லைக் கடித்து பல் கூசுவது போல் தான் இருந்தது . கூடிய வரை அப்பாவைப் பற்றி நினைப்பதில்லை. அப்பாவின் முகம் கூட மறந்து போயிற்று. அவர் தான் அப்பா என்று பறைசாற்றிக் கொண்டிருந்த ஒரே ஒரு போட்டோவையும் அம்மா ஏதோ பெட்டிக்கடியில் போட்டு பரண் மீது ஏற்றி விட்டாள்.

    அதன் பிறகு அம்மாதான் அவனை வளர்த்தாள். அம்மா சினிமா தாயைப் போல் பாசத்தைக் கொட்டிய வளர்த்தாள். அவனுக்காக நிறைய தியாகம் செய்தாள் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் அவனுக்கு அவள் எந்த குறையும் வைக்கவில்லை என்பது நிஜம்.

    அவள் அதிகம் அவனை கொஞ்சியது கூடக் கிடையாது. பாட்டிதான் அவனோடு அதிக நேரம் செலவழித்தாள். பாட்டி செத்த பிறகு வேலைக்காரர்கள். அம்மா காலில் சக்கரம் கட்டிக் கொண்டாற்போல் அலைந்தாள். நிறைய சம்பாதித்தாள். சொந்தமாய் கார்மென்ட்ஸ் நடத்தி வந்தாள். தானே டிஸைன் செய்வாள். தன் டிஸைன்களுக்கு தானே மாடலாகவும் இருந்து பிஸினஸில் புரட்சி செய்து விற்பனையை அதிகரித்துக் கொண்டாள்.

    பிஸினஸ் நிலைத்து அவளுடைய உற்பத்திகளின் புகழ் பரவியதும் மாடலிங் செய்வதை நிறுத்தினாள். மற்ற மாடல்களை உபயோகித்துக் கொண்டாள். புதுப்புது விளம்பர உத்திகளின் மூலம் நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை அடைந்தாள். சூர்யாவை எம்.பி.ஏ. பட்டதாரியாக்கினாள். பிஸினஸ் மேல்படிப்புக்காக அவனை அமெரிக்காவுக்கு அனுப்பினாள். இரண்டு வருடம் நியூயார்க்கில் இருந்து படித்துக் கொண்டிருந்த போது தான் நளினியை சந்தித்தான் சூர்யா .

    ***

    முகூர்த்த சாப்பாடு முடிந்து சத்திரம் சந்தடி குறைந்திருந்தது. நெருங்கிய உறவுகள் மட்டும் அங்கங்கு உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் உண்ட அலுப்பில் உறக்கத்தைத் தழுவியிருந்தனர், பிள்ளைக்கு வந்த பரிசுப் பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்

    Enjoying the preview?
    Page 1 of 1