Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthal Paarvai
Muthal Paarvai
Muthal Paarvai
Ebook61 pages34 minutes

Muthal Paarvai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703320
Muthal Paarvai

Read more from Vidya Subramaniam

Related to Muthal Paarvai

Related ebooks

Reviews for Muthal Paarvai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthal Paarvai - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    முதல் பார்வை

    Muthal Paarvai

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    வீடு அமர்க்களமாக இருந்தது. பாயும் ஜமக்காளமும் இன்னும் சுருட்டப்பட வில்லை. பூக்கள் வீடு முழுக்க இறைதிருந்தது. காப்பி டம்ளர்கள் ஆங்காங்கே காலியாய் வைத்திருந்தது. இந்த அமர்க்களத்திற்கு மத்தியில் வீட்டில் அனைவரும் உற்சாகமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

    நல்ல குடும்பம். நல்ல மனுஷங்க.

    பொண்ணு லட்சணமார்ந்தா பார்த்தயா?

    அதை பார்க்க வேண்டியவன் வாய்ல ஈ போறது தெரியயாம பாத்துட்ருந்தனே! அத்தை சொல்ல அப்பா அவனை திரும்பிப் பார்த்தார்.

    உம் பிள்ளை வெக்கப்படறாண்டா.

    ஏங்க்கா ஆம்பளைன்னா வெக்கப்படக் கூடாதா என்ன?

    ஆமாமா உன் கல்யாணத்துல நீ வெக்கப்பட்டதை விடவா... தாலி கட்டவே வெக்கப்பட்டாண்டா உங்கப்பன்.இன்னும் கொஞ்சம் பட்ருந்தான்னா தாலியப் பிடுங்கி உங்கம்மா இவன் கழுத்துல கட்டியிருப்பா.

    பஸ்ட் நைட்ல யாருப்பா முதல்ல பேசினது? லலிதா அப்பாவிடம் கேட்டுவிட்டு கண்ணடித்தாள். அந்தக் கதையை நா சொல்றேன் இங்க வா அம்மா அடுக்களையிலிருந்து அழைக்க லலிதா எழுந்து ஓட அப்பா அழகாய் வெட்கப்பட்டார்.

    அய்யோ... அந்த கதையெல்லாம் சொல்லி என் மானத்தை வாங்கணுமா....?

    அத்தையும் அவனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். "சரி சரி என் கதை இருக்கட்டும். முதல்ல வீட்டை சுத்தம் பண்ணுங்க நான் கொஞ்சம் கடை வரை போயிட்டு வந்துட றேன்.

    அப்பா கிளம்ப அவன் தன் அறைக்குப் போனான் மனம் சந்தோஷமாக இருந்தது. வாழ்வின் அடுத்த படியில் கால் வைக்கப் போகும் சந்தோஷம். குழந்தைப் பருவம். பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம். வேலைக்கு அலைந்த பருவம், என்று ஒவ்வொன்றாய் கரைந்து, இன்று மணப் பருவம் வந்திருக்கிறது. இத்தனை காலம் ஒற்றையாய் இருந்த காலம் முடிந்து இனி துணை ஒன்று வரப்போகிறது. பெண் துணை! ஏதோ ஒரு இடத்தில் பிறந்து ஒவ்வொரு பருவமாய் முடித்து அவனோடு சேரப் போகிறவள் அவனுக்காகவே இறைவன் படைத்த தேவதை. அவனுக்கு அதிசயமா யிருந்தது. இத்தனை காலம் அவள் யார் என்று தெரியாது. முகம் தெரியாது. அவனைப் பற்றியும் அவளுக்கு எதுவும் தெரியாது. ஒருவரை ஒருவர் தெரியாத இருவர் ஒரே நாளில் புருஷன் மனைவி என்ற நெருக்கமான உறவுக்கு தயாராகப் போகிறார்கள்! நினைக்கும் போதே உடம்பு என்னமோ செய்தது. முழுக்க முழுக்க அவனுக்கே சொந்த மாகப் போகும் பெண். அவனை மட்டுமே நேசிக்கப் போகறவள். அவனை மடியில் சாய்த்து, கேசம் கோதி, முத்து மிட்டு அரவணைத்து அவனது சோர்வு நீக்கி, அவனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1