Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Janaki Maami
Janaki Maami
Janaki Maami
Ebook93 pages45 minutes

Janaki Maami

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603192
Janaki Maami

Read more from Devibala

Related to Janaki Maami

Related ebooks

Reviews for Janaki Maami

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Janaki Maami - Devibala

    http://www.pustaka.co.in

    ஜானகி மாமி

    Janaki Maami

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    "ஆடை இன்றிப் பிறந்தோமே! ஆசை இன்றிப் பிறந்தோமா?

    ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?"

    - கவியரசு கண்ணதாசன்

    மேற்கு மாம்பலம் (சென்னை) அயோத்யா மண்டபம் அருகில் ஏதோ ஒரு தெருவுல உள்ளே போனால், இடதுபுறம் ஒரு சின்ன ஓட்டல்!

    ‘மாமி மெஸ்' என்று போர்டு! மூன்று வேளையும் கூட்டம் அள்ளும்!

    காலை 5 மணிக்கு கும்பகோணம் டிகிரி காபிக்காக க்யூ நிற்பார்கள் - நடைப்பயண அன்பர்கள்.

    தவிர, அறுகம்புல், வாழைத்தண்டு ஜூஸ் என சகலமும் அதே நேரத்தில் தயாராகி விடும்!

    ஆவி பறக்கும் இட்லி, பொங்கல் ஆறரை மணிக்கே மணம் பரப்பும் மூன்று வகை சட்னி, சாம்பாருடன் தயார்.

    சகல டிபன்களும் உண்டு. மதியம் முழுச்சாப்பாடு, கலந்த சாதங்கள் - மாலை பஜ்ஜி போண்டா, சாட் அயிட்டங்கள் -

    இரவும் சப்பாத்தி, இட்லி தோசை என பட்டியல் நீளும்.

    எது கிடைக்காது என்றால் பதில் இல்லை. அத்தனையும் அபார ருசி! விலை மற்ற இடங்களை விடக் குறைவு! தரம் - நிரந்தரம் - அதனால் கூட்டத்துக்கு பஞ்சமில்லை!

    பெரும்பாலும் பார்சல்கள்தான்.

    உட்கார்ந்து சாப்பிட இடம் போதாது! பதினைந்து பேர் அதிகபட்சம் உட்காரலாம். ஆனால் முப்பது பேருக்கு மேல் நின்று கொண்டே சாப்பிடுவார்கள்.

    போக்குவரத்துக்கு இடைஞ்சல் தராத வகையில் சந்து பொந்துகள் உண்டு!

    சக ஓட்டல், மெஸ்காரர்களுக்குப் பொறாமை அதிகம்.

    மாமியால் கடந்த 15 வருடங்களாக பிஸினஸை இழந்தவர்கள் ஏராளம்.

    காரணம் தரம் - விலை!

    தரத்தைக் காட்ட முடியவில்லை. விலையைக் குறைக்க மனமில்லை.

    அங்குள்ள ஆட்களுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து இழுத்தார்கள். மாமி அசரவில்லை.

    காரணம், சகலமும் அங்கே மாமிதான். தயாரிப்பில் யாரையும் விடுவதில்லை. பரிமாற, இலை எடுக்க, பார்சல் கட்ட இதற்கு மட்டும்தான் ஆட்கள்.

    உணவு தயாரிப்பில் மாமி யாரையும் அனுமதிப்பதில்லை! ஒவ்வொரு வேளையும் அதிகபட்சம் 75 பேருக்கு மேல் உணவு இல்லை. தீர்ந்துவிடும்.

    500 பேர் சாப்பிடத் தயார். ஆனால், மாமி தரத் தயாராக இல்லை. ‘இந்த தரத்தை வச்சு பெரிய ஓட்டலே தொடங்கலாம்' என பல பேரின் வாதம்!

    உங்க திறமைக்கு நகரோட மையத்துல பெரிய ஓட்டலா தொடங்கினா, லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம். வாடிக்கையாளர்கள் குவிவாங்க! கோடீஸ்வரி ஆகலாம்!

    இதெல்லாம் எதிர்பார்ப்புகள்.

    ஓரிரண்டு பெரிய தொழிலதிபர்கள், கறுப்புப் பண அரசியல்வாதிகள் சந்தித்து விட்டார்கள்.

    இதப் பாருங்க! தமிழ்நாடு முழுக்க நாங்க ஓட்டல் தொடங்கறோம். உங்களுக்கு லட்சக்கணக்குல சம்பளம் தர்றோம். சம்மதம் சொல்லுங்க

    மாமி மறுத்து விட்டாள்.

    எனக்கு அப்படியெல்லாம் பேராசை இல்லை. ஜீவனம் கஷ்டப்படாம இருக்கணும். வயிறு வாழ்த்தினா, வாழ்க்கைல நிம்மதி கிடைக்கும். சாகும்போது கஷ்டப்படாம சாகணும்! இதுதான் மாமியின் கொள்கை.

    காலை மூணரை மணிக்கு எழுந்து விட்டால், இரவு படுக்க பதினொரு மணி ஆகிவிடும்!

    கடுமையான உழைப்பு. இரவு ஒன்பது மணிக்கு மெஸ்ஸை மூடிவிடுவாள். அதன் பிறகு யார் வந்தாலும் இல்லை. எல்லா செலவும் போக மாதம் ஒரு லட்சம்வரை கையில் நிற்கும்.

    மாமி இருப்பது வாடகை வீடுதான்.

    முதலில் மூவாயிரம் வாடகையில் தொடங்கி, மெஸ் நடத்தி சம்பாதிப்பதால் இப்போது 15 ஆயிரம் வாடகை! தனி வீடு! உள்ளே இரண்டு பெட்ரூம் - ஒரு ஹால் - வராண்டா, வெளிப்பகுதி லான் - மொட்டை மாடி!

    சமையல்கட்டு பெரிதாக இருக்கும்.

    பின்கட்டும் அகலமாக இருப்பதால் - இரண்டையும் இணைத்து சமையல் வேலை நடக்கும்.

    மாடியில் டேபிள், சேர் போட்டு பதினைந்து பேர் சாப்பிடலாம். கீழே, மேலே என 35 பேர் நின்று கொண்டு சாப்பிடலாம்.

    தவிர பார்சல்!

    இது மெஸ் பற்றிய தகவல்!

    இனி மாமியின் சொந்த வாழ்க்கைக்கு வருவோம்!

    பெயர் ஜானகி! வயசு 48.

    மிதமான உயரம் - நல்ல சிகப்பு நிறம் - தளதளப்பான உடம்பு! நெற்றியில் பளிச்சென மீனாட்சி குங்குமம். நேர் வகிடு. அங்கங்கே நரை! பளிச்சிடும் வகிட்டுப் பொட்டு. கம்பீரமான கண்ணாடி.

    எப்போதும் சிரித்த

    Enjoying the preview?
    Page 1 of 1