Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisiyil
Kadaisiyil
Kadaisiyil
Ebook120 pages1 hour

Kadaisiyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803208
Kadaisiyil

Read more from Sivasankari

Related to Kadaisiyil

Related ebooks

Reviews for Kadaisiyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisiyil - Sivasankari

    http://www.pustaka.co.in

    கடைசியில்

    Kadaisiyil

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கக் கக் கக் கக் என்று எங்கோ அமானுஷ்யமாக ஒரு பல்லி குரல்கொடுக்க, உமா சட்டென்று விழித்துக்கொண்டாள்.

    மணி என்ன?

    மூன்றுதானா!

    டீ போட நாழியாகவில்லை என்ற நினைப்புடன் மீண்டும் கண்களை மூடி தூங்க முயற்சித்தாள்.

    கழுத்தில் கசகசவென்று ஊறிய வியர்வை கோடாய் வழிந்து தலையணையை நனைக்க, சேலைத் தலைப்பால் கழுத்தைத் துடைத்தபடி புரண்டு படுத்தாள்.

    ம்ஹூம் - தூக்கம் வரவில்லை.

    இரண்டு நிமிடம் போல அப்படியே படுத்தவள், இனி தாங்க முடியாது என்று ஆனதும் எழுந்து உட்கார்ந்தாள்.

    பார்வை ஜன்னலைத் தாண்டி வெளியே ஓடியது.

    கண்ணுக்கு எட்டியவரை தரிசாகக் கிடந்த நிலம். மழையின்மை காரணமாகப் பொட்டல்காடாகப் பரந்திருந்த பழுப்பு மண். தொலைவில் நீலமாய் வானம். இரண்டு வெள்ளை மேகங்கள் பந்தாய் திரண்டு, கொஞ்சம்கொஞ்சமாய் கொம்பு முளைத்த ராட்சதனாகவும், யானையின் தும்பிக்கையாகவும் மாறி உருவிழந்துகொண்டிருந்தன.

    வெயில் தாங்காமல் பரிதவித்த காகம் ஒன்று அலகுகளைத் திறந்தபடி, தண்ணீர் எங்காவது இருக்கிறதா என்று வேலியின் முதுகில் உட்கார்ந்து தலையைச் சாய்த்துச் சாய்த்து தேடியது.

    காற்று இல்லை. வீட்டை ஒட்டி நின்ற வேப்பமரத்தில் ஒரு இலைகூட அசையவில்லை.

    உமாவுக்கு எரிச்சலாக இருந்தது.

    என்ன ஊர் இது... சரியான பட்டிக்காட்டுக் கிராமம்!

    பழகுவதற்கு ஒரு படித்த குடும்பம் உண்டா, சாயங்காலம் ஆனால் பொழுதைப் போக்க ஒரு மன்றம் உண்டா, நல்ல சினிமா தியேட்டர் உண்டா... ம்ஹும், என்ன இருக்கிறது, இந்தப் பட்டிக்காட்டில்!

    அட, பொழுதுபோக்கு சாதனம் வேண்டாமய்யா, இருபத்தி நாலு மணிநேரமும் மின்சாரமாவது இருக்கக்கூடாதா?

    காலை இல்லை, பகல் இல்லை, இரவு இல்லை என்று எப்போது போகும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி திடுதிடும் என்று விளக்கும், விசிறியும் நின்று போவதால்தான் எத்தனை அவதி!

    இந்த வாரப் பத்திரிகைகளை படித்துமுடித்தாகிவிட்டது. பூவேலை செய்து கண் எரிகிறது. அக்கடா என்று ஒரு மணி நேரம் படுத்துத் தூங்குவோம் என்று தலையணையைத் தட்டி படுத்தால், மின்சாரம் நின்றுபோய்விடும். நாள் பூராவும் கிராமம் கிராமமாய் விவசாயத்துக்கும், கறவை மாட்டுக்கும் கடன் தருகிறேன் என்று லோலோ என்று வெயில் வீணாகாமல் சுற்றிவிட்டுவரும் கணவன் குளித்துச் சாப்பிட உட்கார்ந்தால், கழுகுக்கு மூக்கில் வேர்க்கிறமாதிரி டக் என்று மின்சாரம் நின்றுவிடும்.

    கசகசவென்று வியர்வை வழிய, இருட்டில் முட்டிக்கொண்டு மோதிக்கொண்டு என்ன சாப்பாடு, என்ன தூக்கம்? ச்சே!

    மூன்று மாதமாய், இந்த ஊருக்கு வந்த நாளாய், நித்தமும் இதே ரோதனைதான்.

    போன பத்து நாள் வரை நிலைமை இத்தனை மோசமாக இல்லை. விடுமுறை முடிந்து படிப்பைத் தொடர் செல்வி சென்னைக்குப் போய்விட்ட இந்தப் பத்து நாளாய்தான், போர் என்றால் செமை போர்.

    சென்னையை விட்டுவிட்டு கிராமத்துக்கு மாற்றல் ஆகி வரும்பொழுதே உமா முகத்தை ஒண்ணரை முழத்துக்கு தூக்கிவைத்துக்கொண்டுதான் வந்தாள்.

    இந்த மாற்றல் வேண்டாம் என்று அவள் தலைகீழாக நின்றும், கணவன் சரவணன் அதற்கு இடம் கொடாததால், முணுமுணுத்தபடி உமா மூட்டைகளைக் கட்டினாள்.

    மெட்ராசை விட்டுட்டு, அந்தத் தண்ணியில்லாக் காட்டுக்குப் போகணும்னு உங்கள் பாங்க் சொல்லிச்சுன்னா, சரினு நீங்களும் வந்துட்டீங்களே... பட்டிக்காட்டு கிராமத்திலே குடித்தனம் பண்றதுன்னா லேசாங்க?

    ஒரு வருஷம் இருந்தாப் போதும்னு மேலிடத்துலே சொல்லியிருக்காங்க, உமா... பல்லைக் கடிச்சிகிட்டு இருந்திட முடியாதா?

    ஐயோ... ஐயோ... பல்லைக் கடிச்சிகிட்டாவது ஒரு வருஷம் அவதிப்படணும்னு தலையெழுத்தாங்க?

    என்ன பண்றது சொல்லு? ப்ரமோஷன் வேணும்னா இதெல்லாம் பார்க்கக் கூடாது. இங்க நா ஆயிரத்துல ஒருத்தனா இருக்கேன். இந்த டிரான்ஸ்பரை ஒத்துக்கிட்டா, மானேஜர் என்கிற பதவி உயர்வோடு போகலாம். இப்படி அப்படி ஒரு வருஷத்தை ஒட்டினப்புறம், திரும்ப பெரிய நகரம் எதுக்காவது மாத்தறேன்னு சொல்லியிருக்காங்க... அந்தஸ்து, பணம் வருதுன்னா நாலையும் அனுசரிச்சுத்தானே போகணும்?

    அந்தப் பட்டிக்காட்டிலே பள்ளிக்கூடம் இருக்கா? நம்ம செல்வியை படிக்கவைக்கிற மாதிரி ஸ்கூல் இருக்கா?

    சரவணன் ஒரு நிமிடம் மவுனம் சாதித்தான்.

    பேசாம இருந்தா என்னங்க அர்த்தம்?

    ம்? பேசாம இல்லே-இதப்பத்தியும் நாம் யோசிச்சிட்டேன். நல்ல கான்வெண்ட்லே படிக்கிற பெண்ணை, இப்ப அனாவசியமா நம்மகூட இழுத்தடிக்க வேணாம்னு எனக்குத் தோணுது... அவள் பாட்டுக்கு தாத்தா பாட்டியோட இருந்து படிக்கட்டும்! நாம அப்பப்ப சனி, ஞாயிறிலே வந்து கவனிச்சுப்பம். ஒருவருஷம் கழிச்சு வேற பெரிய டவுனுக்கு மாத்தினப்புறம், அவளை நம்மகிட்டக் கூட்டிக்கிடலாம். என்ன?

    களுக்கென்று கண்களில் நீர் கட்டிக்கொள்ள, உமா பரிதவிப்புடன் பேசினாள்.

    அது. எப்படிங்க? செல்வியைப் பிரிஞ்சு நா இருக்க மாட்டேன். தவம் இருந்து பெத்த பிள்ளை, அத விட்டுட்டு எப்படிங்க இருக்கிறது?

    அப்ப சரி...நீ இங்கேயே இருந்துடு. நா மட்டும் போறேன். முடிஞ்சப்ப நா வரேன், செல்விக்கு லீவுன்னா நீங்க அங்க வரலாம்.

    இந்த யோசனை சரிப்படும் என்று உமாவுக்குத் தோன்றவில்லை.

    அந்தப் பட்டிக்காட்டு ஊரில் கணவன் தனியாகக் குடித்தனம் பண்ணுவது சாத்தியமா?

    பாங்க்கை ஒட்டியே வீடு இருக்கிறதாம். அதனால் வீடு பார்க்கும் பிரச்சினை இல்லை. என்றாலும், வீட்டை நிர்வகித்து, சமையல் சாப்பாட்டைக் கவனித்து... ஏ அப்பா! இத்தனையும் இவரால் ஒண்டியாக எப்படி சமாளிக்க முடியும்?

    கிராமம் என்பதால் நல்ல ஓட்டல் இருப்பது கூட சந்தேகம்தானாம்.

    தூங்கி எழுந்து காபி தயாரிப்பதிலிருந்து, இரவு சாப்பாடுவரை தானே சமைத்துக்கொண்டு, பாங்க் வேலையையும் பார்த்துக்கொண்டு... இதெல்லாம் சரிப்பட்டு வருமா?

    மேலும், கணவன் அங்கு திண்டாடித் தவிக்கும்போது இங்கு தான் மட்டும் குஷாலாக இருக்க மனம்தான் வருமா?

    ம்ஹும், வராது.

    மாமியாரும் மாமனாரும் வேறு தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.

    "அசட்டுபிசட்டுனு எதையாவது நினைச்சுகிட்டு அவனோட போக மாட்டேன்னு சொல்லாதே! ஏற்கனவே

    Enjoying the preview?
    Page 1 of 1