Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andhamma Romba Nallavanga
Andhamma Romba Nallavanga
Andhamma Romba Nallavanga
Ebook92 pages52 minutes

Andhamma Romba Nallavanga

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803084
Andhamma Romba Nallavanga

Read more from Sivasankari

Related to Andhamma Romba Nallavanga

Related ebooks

Reviews for Andhamma Romba Nallavanga

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andhamma Romba Nallavanga - Sivasankari

    http://www.pustaka.co.in

    அந்தம்மா ரொம்ப நல்லவங்க!

    Andhamma Romba Nallavanga!

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    சுரேஷ்...

    .................

    டே... சுரேஷ்! கூப்பிடறது காதுல விழலியா? வாயில என்ன கொழுக்கட்டையா? 'என்னம்மா?'னு கேக்கறதுகூடவா கஷ்டம்?

    அடுத்த அறையில், பள்ளிக்குச் செல்லவேண்டி சீருடை அணியும் வேலையில் ஈடுபட்டிருந்த சுரேஷ், எட்டிப்பார்த்தான்.

    கையில் ஷு, கலைந்த தலைமுடி... ஏண்டா, இன்னுமா ஷுவக்கூட மாட்டிக்காம நிக்கறே? ரிக்ஷா வந்துடப்போகுது, எனக்கென்ன!

    லேஸ் கட்டிவிடுங்கம்மா...

    கையிலிருந்த சாப்பாட்டுத் தட்டை ஓசையுடன் சுமதி மேஜை மேல் வைத்தாள்.

    லேஸ் கட்டிவிடணும், தலைவாரிவிடணும், ஷர்ட்டை 'இன்' பண்ணித்தரணும்... ச்சே! உன்னோட தினம் இதே பெரிய ரோதனையாயிடுச்சுடா! வயசு ஆவுது, கழுதையாட்டம் ஏழு... ஆனா, இன்னும் தனக்கா எந்த வேலையும் செய்யத் துப்பு கிடையாது! எல்லாத்துக்கும் அம்மா வரணும்! எதிர்ப் போர்ஷன் தியாகு உன் வயசுக்காரன்தானே? தினம் சமத்தா தன் காரியத்த தானே கவனிச்சுகிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பறதப் பாக்கறப்ப, வெக்கமாயில்ல? நா உன்னக் கவனிப்பேனா, அம்மு கிளம்பறதப் பாப்பேனா, இல்ல சமையல் செஞ்சு போட்டு உங்கப்பாவ ஆபீஸுக்கு அனுப்பற வழியப் பாப்பேனா? ம்? எனக்கு மட்டும் எட்டு கையா இருக்கு? யாருக்குப் புரியும் என் கஷ்டம்!

    வழக்கமான புலம்பலைப் புலம்பியபடியே பிள்ளையை முரட்டுத்தனமாய் அருகில் இழுத்து, ஷுவை மாட்டி, தன் தலைமுடியில் செருகியிருந்த சீப்பை எடுத்து, இடக்கையால் முகவாயை அழுந்தப் பற்றி, வலக்கையால் அவன் கிராப்தலையைப் பரக்பரக்கென்று சீவின நிமிஷத்தில், பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு, ஈரம் சொட்டச்சொட்ட புருஷோத்தமன் கத்தினான்.

    துண்டு எங்க, சுமதி?

    எங்கன்னா? அலமாரிலதான் இருக்கும். குளிக்கப் போறப்ப எடுத்துகிட்டுப் போற பழக்கம் இருந்தாத்தானே!

    வளவளன்னு பேசிட்டு நிக்காம, துண்ட எடுத்துத் தாயேன்...

    ஆமா... எனக்கு இங்க வேலவெட்டி எதுவுமே இல்ல... போரடிக்குது...அதான் வாயாடிகிட்டு நிக்கறேன்!

    கோபத்துடன் முணுமுணுத்த சுமதி, போய் புஸ்தகங்கள் எடுத்து வெச்சுகிட்டு, சாப்பிட வாடா... என்று கூறி ஒரு கையால் சுரேஷைத் தள்ளினவள், உள்ளறையிலிருந்து துவைத்த துண்டு ஒன்றை எடுத்துவந்து புருஷனிடம் தந்தாள்.

    சமையலறைக்குள் சென்று ஒரு தட்டில் சாதம், பருப்பு, நெய் போட்டுப் பிசைந்தவாறு, ஒருபக்கமாய் பால் டம்ளருடன் அமர்ந்திருந்த பெண்ணை அதட்டினாள்.

    அம்மு... இன்னுமா அந்த அரைகிளாஸ் பாலை கையில வெச்சுகிட்டு உக்காந்திருக்க? கொட்டிடப் போவுது... குடிம்மா... மத்த பிள்ளைங்களக் கூட்டிகிட்டு ஆயா வர்ற நேரமாச்சு... ம்... ம்...

    அவள் எச்சரிக்கும்போதே ஜன்னலில் வந்து உட்கார்ந்து கச்...கச் என்று கத்திய அணிலிடம் அம்முவின் கவனம் ஓட, கையிலிருந்த டம்ளர் கணப்பொழுதில் சாய்ந்து, அணிந்திருந்த சீருடையில் பால் திட்டாகப் பரவ...

    சாதத்தட்டை ஒரு கையில் ஏந்திய சுமதி, மற்றதால் அம்முவின் முதுகில் ஓங்கி அறைந்தாள்.

    சனியனே! நாள் பூராபிசுபிசுன்னு மழைதூறிகிட்டேயிருக்கு... எந்தத் துணியும் ஒழுங்காகாயமாட்டேன்றதால, அம்பது காசும் ஒரு ரூவாயும் குடுத்து லாண்டரில் இஸ்திரி பண்ணி யூனிஃபார்மை வாங்கிப் போட்டா, ரெண்டு நாள்கூட உடுத்த முடியாம, இப்படிப் பாலக் கொட்டிகிட்டு நிக்கறியே!

    ஆத்திரம் அடங்காமல் இன்னொருதரம் அவள் மகளை அறைய, அம்மு குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

    என்ன அங்க அமக்களம்? எதுக்காக காலவேளைல குழந்தைய அழவிடறே?

    உள்ளறையிலிருந்து புருஷோத்தமன் அதட்டலாய் கேட்டதற்கு பதிலாய், சுமதி கத்தினாள்.

    நீங்க ஓவரா செல்லம் குடுத்துதான், இவ நா எது சொன்னாலும் மதிக்கவே மாட்டேன்றா! ஸ்கூலுக்குக் கிளம்ப நாழியாகல? பாலக் குடிச்சுட்டுக் கிளம்பாம், யூனிஃபார்ம் பூரா கொட்டிகிட்டு நிக்கறதுமில்லாம், என்னமோ நா தலையக் கிள்ளியெடுத்துட்ட மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்றா! இன்னிக்கு நா இவடிரெஸ்ஸ மாத்தப்பபோறதில்ல... அப்படியே போகட்டும்... சனி!

    என்னத்துக்காகக் குழந்தைய நாளும் கிழமையுமா 'சனி, சனி'ன்னு திட்டிகிட்டேயிருக்கே? உன்னால முடிஞ்சா செய்... இல்லாட்டி, விட்டுடு... நா பாத்துக்கறேன்!

    சமையல்கட்டுக்குள் வந்த புருஷோத்தமன், அழும் மகளைத் தூக்கிக்கொண்டான்.

    "அழாத, அம்முக்குட்டி... ஐயே, முகமெல்லாம் சிவந்து போச்சேடா என் தங்கத்துக்கு! வேணாம்மா... சமத்தில்ல? வா... அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1