Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veliyorathil Oru Vellai Poo
Veliyorathil Oru Vellai Poo
Veliyorathil Oru Vellai Poo
Ebook105 pages58 minutes

Veliyorathil Oru Vellai Poo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003023
Veliyorathil Oru Vellai Poo

Read more from Anuradha Ramanan

Related to Veliyorathil Oru Vellai Poo

Related ebooks

Reviews for Veliyorathil Oru Vellai Poo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veliyorathil Oru Vellai Poo - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    வேலியோரத்தில் ஒரு வெள்ளைப் பூ

    Veliyorathil Oru Vellai Poo

    Author:

    அனுராதாரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    முன்னுரை

    பிரியத்துக்குரிய வாசகர்களுக்கு...

    நலம்... நலம்தானே...

    வானதி திரு. திருநாவுக்கரசு ஐயா அவர்கள் மூலமாய், இந்தப் புதிய நாவல் மூலம் நாம் மீண்டும் சந்திக்கிறோம். அவருக்கும், அவருடைய மகன் திரு. ராமு அவர்களுக்கும், என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நாவலில் - இரண்டு கதைகள்... ஒரு பூங்கொத்தில் இரண்டு மொட்டுக்கள் போல... ஒன்று மாத நாவலாகவும், இன்னொன்று 'தாய்' பத்திரிகையில் தொடர் கதையாகவும் வந்தது.

    எத்தனையோ கதைகள் எழுதினாலும், சில கதைகள் - எழுதிய எழுத்தாளருக்கு மட்டுமில்லாமல், படிக்கிற வாசகர்களுக்கும் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும். (கதை சிறப்புற அமைந்ததனால் மட்டுமல்லாமல், படு மோசமாக அமைந்திருந்தாலும் நினைவில் இடம் பிடித்துவிடும். நான் அதைக் குறிப்பிடவில்லை.)

    வாசகர்களுக்கு எப்படியோ... 'வேலியோரத்தில் ஒரு வெள்ளைப் பூ' எழுதியபோது - ஒரே சமயத்தில் க்ரைம் நாவல்களும், குடும்பக் கதைகளுமாய் மாத நாவல்களில் புகுந்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த சமயம்... ஒரு மாதம் குடும்பக் கதைக்காக அனுராதா ரமணன், லட்சுமி, இந்துமதி என்று எழுதினால் - அடுத்த மாதம் ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், புஷ்பா தங்கதுரை என்று எழுத்தினாலேயே மிரட்டுவார்கள்.

    எனக்கு 'க்ரைம் கதைகள்' பிடிக்கும். இன்றைக்கும் ஷெர்லக் ஹோம்ஸின் புத்திசாலித்தனமான துப்பறியும் பாங்கை விரும்பிப் படிப்பேன்... பார்க்கப் போனால் எனது முதல் நாலைந்து கதைகள் கூட, துப்பறியும் உத்தியைக் கையாண்டவைதான். பின், நம் நாட்டு மக்கள், தினமும் துப்பாக்கியையும், கத்தியையும் வைத்துக் கொண்டா இரவு படுக்கப் போகிறார்கள் என்கிற நினைப்பு வந்ததும் - குடும்பக் கதைக்கு மாறினேன். இன்றளவும் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

    வேலியோரத்தில் ஒரு வெள்ளைப் பூ... குடும்பக் கதையில் ஒரு மர்ம முடிச்சு... பூண்டு போட்ட வற்றல் குழம்பு மாதிரி. பூண்டு பிடித்தவர்கள் கரண்டியால் அரித்துப் போட்டுக் கொள்ளலாம். பிடிக்காதவர்கள், குழம்பை ஒரு கை பார்க்கலாம்.

    அடுத்தது... சாமத்துல நான் வறவா...' தலைப்பைக் கண்டு மிரள வேண்டாம். அன்றும் இன்றும் நாட்டுப் பாடலில் முழங்கும் ஒற்றை வரியிது... 'நாதாங்கி காதுக்காரி... நடு வீட்டுக் கொண்டைக்காரி... சாமத்துல நான் வாறேன்... நாயை விட்டு ராவிராதே...' - இந்தப் பாட்டின் ஒரு வரி... நாவலின் தலைப்பாக வந்து உட்கார்ந்து கொண்டது. மற்றபடி ஜனனியின் வாழ்க்கை... நிஜமான ஒன்று... எந்தக் கணவனை விட்டு பிரிந்து வந்து, இரண்டு குழந்தைகளுடன் தன் வாழ்க்கையைத் தொடங்கினாளோ - அதே கணவனின் மன வியாதிக்காக - ஆம், சந்தேகம்கூட ஒருவித மனவியாதிதான். அவளே சிசுருஷை செய்யப்போனது வரை நிஜம்... மற்றவை - எழுத்தாளரின் சொந்தக் கற்பனை... வாழ்த்தினாலும், திட்டினாலும் சந்தோஷமாய் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

    இவ்விரண்டு நாவல்களையும் சிறந்த முறையில் வெளியிட்டுள்ள கங்கை புத்தக நிலையத்தாருக்கும், அழகிய ஓவியத்தால் அட்டையை அலங்கரித்துள்ள ஓவியர் திரு. ஷ்யாம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்படிக்கு அன்புடன்

    அனுராதா ரமணன்

    1

    எத்தனைதான் மெதுவாக, நாசூக்காக, செந்திலைப் போல, தோசையைக் கொஞ்சம் கொஞ்சமாக விண்டு, தின்ன வேண்டுமென்கிற ஆசை இருந்தாலும்...

    ராணியின் பசிக்கு கொஞ்சம் கூட நாகரிகம் தெரிய வில்லை.

    மசால் தோசை - இத்தனை ருசியாய் அவள் சாப்பிட்டதே இல்லை.

    ஒரேயொரு முறை, அப்பாவுடன் கோயம்புத்தூர் போனபோது, பஸ் ஓரிடத்தில் நிற்க -

    இந்த பஸ் பத்து நிமிடம் நிற்கும். அவங்க அவங்க டிபன், சாப்பிடணும்னா சாப்பிட்டு விரைவா வாங்க... இப்படி கண்டக்டர் குரல் கொடுக்க -

    அவள் அப்பா இறங்கி, இவளுக்கும் டிபன் வாங்கி வருவதாகப் போனார்.

    போனார்... போனார். இறங்கிச் சென்ற பயணிகள் எல்லாரும் மறுபடியும் பஸ்சில் ஏற... டிரைவர் தனது ஆசனத்தில் அமர்ந்து, தனக்கு முன்னால் செருகப்பட்டிருந்த சின்ன வட்டக் கண்ணாடி வழியே – இவளைப் பார்த்தபடி, ஹாரைனை பலமாய் அழுத்த...

    ராணியின் கண்களில் 'குப்'பென நீர் சேர, தேகமே பயத்தில் - காற்றிலக்கப்பட்ட கொடி போல் நடுங்க... எழுந்து நின்றாள்.

    ஏலேய் மாதையா... அந்த மஞ்ச தாவணி எழுந்துநிக்குது. என்னா வேணும் கேளு...

    டிரைவர் - நல்ல வயசுப் பையன். கொஞ்சம் விகண்டையாகத்தான் பேசினான். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையோ, பக்குவமோ ராணிக்கு அப்பொழுது போதாது...

    எங்கப்பா... எங்கப்பா...

    மேற்கொண்டு வார்த்தை வராமல் அவள் திணறிய போதுதான் - ஒரு கையில் புரச இலைப் பொட்டலமும், இன்னொரு கையில் தோல் பையுமாய் லொங்கு லொங்கென்று ஓடி வந்தார். இவள் அப்பா ஐயோ குழந்தைகளுக்குப் பிடிக்குமேன்னு நினைச்சுக்குவேன். நான் துன்னு ரசிச்சதை நீயும் ரசிக்க வேணாமா...

    தந்தையைப் பார்த்த வேகத்தில், அவள் உற்சாகத்துடன் கூவினாள்.

    "எங்க அப்பா வராரு... வண்டிக் கதவைத்

    Enjoying the preview?
    Page 1 of 1