Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eppodhum Nee!
Eppodhum Nee!
Eppodhum Nee!
Ebook107 pages1 hour

Eppodhum Nee!

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002994
Eppodhum Nee!

Read more from Anuradha Ramanan

Related to Eppodhum Nee!

Related ebooks

Reviews for Eppodhum Nee!

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eppodhum Nee! - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    எப்போதும் நீ!

    Eppodhum Nee!

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    முன்னுரை

    அன்புள்ள வாசக அன்பர்களுக்கு வணக்கம்... பூம்புகார் பதிப்பகத்தின் மூலமாய் மற்றுமொரு நாவல்.....

    ‘எப்போதும் நீ..’

    எனதுக் கதையின் விதைகள் எப்பொழுதுமே நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும்.

    எது ஒன்றுமே ஆழமாய் மனசைப் பாதிக்காது, அது பற்றி எழுதுவதில்லை என்றிருப்பவள் நான்.

    ஆமாம். பொழுது போக்குக்காக ஒரு கதைப் புத்தகம் வாங்கிப் படித்தாலும் அதில் - படிக்கிறவருக்கு ஏதாவது ஒர் செய்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறவள் நான்...

    கதாநாயகி பூமாவின் உண்மையான வடிவம் - தஞ்சாவூரில் இருக்கிறாள்.... இலக்கியத்தில் ஆர்வம் மிக்க இல்லத்தரசி. அரசியாக இருக்க வேண்டியவள்தான். கணவன், மாமியார், சகோதரர்கள், அண்ணிகள் இப்படி ஆள் ஆளுக்கு அவளைப் பந்தாடி... நடுவே கொஞ்ச காலத்துக்கு மனநிலை பாதிக்கப்பட்டு......

    ப்ச்... அதெல்லாம் கொடுமையான நிஜக்கதை. வாழ்க்கையில் நடக்கிற அத்தனை அசம்பாவிதங்களையும், எழுத்தில் கொடுத்தால் - உலகம் தாங்காது. 'அய்யய்யோ - இப்படியெல்லாம் கூட நடக்குமா... கற்பனைக்கு ஓர்

    அளவே இல்லையா' என்றுதான் கேட்பார்கள்.

    கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு வாழ்க்கையில் எத்தனையோ இருக்கிறது.

    ஆனாலும் - இந்த இருபதாம் நூற்றாண்டின் விளிம்பில் கூட - பெண், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகிறாள் என்பதுதான் என் வருத்தமே....

    என்றைக்கு சீரும், செனத்தியும் இன்றி, பைசா எதிர்பாராமல் - பெண்ணை, அவளது குண நலன்களுக்காகவே மணமுடிக்கிற காலம் வருகிறதோ - அன்றைக்குத்தான் நமது நாடு நிஜமாகவே நாகரீகமடைந் திருக்கிறது என்று சொல்வேன் நான்.

    இப்படி நான் கூறும்போது, வழக்கமாய் ஒலிக்கும் எதிர்ப்புக் குரலும் எனக்குக் கேட்காமல் இல்லை.

    பெண்ணுக்குப் பெண்தானே எதிரியா இருக்காங்க மேடம்.. பையனைப் பெத்தவங்க - அதுவும் அம்மாக் காரிதானே நகையும், ரொக்கமும் கேட்கறாங்க... அந்தம்மாவும் ஒரு பொம்பிளைதானே... அவங்க சொல்லை மீறி, மாப்பிள்ளைப் பையனோ, மாமனார் கிழமோ ஒரு வார்த்தை சொல்ல முடியுமா...

    உண்மைதான். மாமியார் மட்டுமல்ல; மணமகளுமே 'இத்தனை சீர் கேட்கிற இடத்தில் எனக்குக் கல்யாணமே வேண்டாம்' என்று சவுக்கால் அடித்தாற் போலச் சொல்லலாம்.... அப்படிச் சொன்னால், அப்புறம் தன்னை எவனுமே கட்டாவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்... எப்படியோ கஷ்டமோ, நஷ்டமோ... அப்பா உயிரைக் கொடுத்தாவது நம் கழுத்தில் தாலி ஏறச் செய்ய மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பு...

    இதெல்லாம்தான் பெண்ணை அடிமாடாக விலை போக வைக்கிறது....

    இந்தப் பெண்களுக்கு நான் சொல்வது எல்லாம் இதுதான்:

    'பெற்றோரைக் கசக்கிப் பிழிந்து காசாகவும், நகையாகவும் வாங்கிக் கொண்டு போய் கணவன் காலடியில் கொட்ட நினைக்காதீர்கள். உங்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. கழுத்தில் தொங்கும் காசுமாலையை விடவும், உங்கள் பெயருக்குப் பின்னால் சேரும் பட்டப் படிப்பு உயர்த்திதான்... கல்வியும், தன்னம்பிக்கையும், அறிவும், உழைப்பும்தான் நீங்கள் புகுந்த வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வரதட்சணையாக இருக்கட்டும். எதனாலும், யாராலும் உங்களை அழிக்க முடியாது... பூமா மாதிரி ஒவ்வொருத்தியும் இருந்தால் - பார்வதி போன்ற ஆயிரக் கணக்கான படிப்பறிவு இல்லாதப் பாமரப் பெண்கள் காப்பாற்றப்படுவார்கள். எப்போதும் நீ நிமிர்ந்து நில். எப்போதும் நீ துணிந்து ஒர் முடிவை எடு. எப்போதும் நீ உன் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லதையே செய்... அப்படி இருந்தால் எப்போதும் நீ பாராட்டப்படுவாய்...'

    இக்கதையைப் படிக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் பாலாடை அளவாவது தன்னம்பிக்கை கிடைத்தால் -

    அது என் பாக்யம்!

    நன்றி.

    இப்படிக்கு

    அன்புடன்

    அனுராதா ரமணன்.

    ***

    1

    'இங்கேதானே வைத்தேன்...'

    பூமா, சமையலறையில் அலமாரி இடுக்கில் எல்லாம் கை விட்டுத் தேடினாள்.

    ஊகும். கிடைக்கவில்லை

    சாதாரணமாய் அந்த வீட்டில் பத்திரிகை படிக்கிற ஜீவராசிகளே கிடையாது. அதுவும் வாரப் பத்திரிகைகளை, நாவல்களை விரலால் கூடத் தொட மாட்டார்கள்.

    'இதெல்லாம் பணத்துக்கு தண்டம்' என்பான் அவள் கணவன் சகாதேவன்.

    தினசரியை எப்போதாவது, இரவுச் சாப்பாட்டோடு மேய்வான். அதுவும் வெட்டு, கொலை, குத்துப் பழி, கள்ளக் காதல் என்றால் சுவாரசியமாய் ராகம் போட்டுப் படிப்பான்.

    வியாசர் பாடி வியாபாரி முனிராஜ் வயது முப்பது. இவரது மனைவி முனியம்மா வயது முப்பத்தியாறு... ஏதுடா இது புருசனை விடப் பொண்டாட்டிக்கு வயசு அதிகமா இருக்கு.... ஒரு வேளை மாத்திப் போட்டிருப்பானுவ...... முனியம்மாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த கன்னியப்பன் என்கிற எண்பது வயது கிழவருக்கும் கள்ளக் காதல்...... அப்படி போடு...

    இவன் படித்துக் கொண்டிருக்கும் போதே பக்கத்தில் உட்கார்ந்து, மருமகள் - தன் மகனுக்கு ஒழுங்காகப் பரிமாறுகிறாளா என்று நோட்டம் விட்டுக் கொண்டே சத்தம் போடுவாள் நாகம்மா.

    ஆமாண்டா... ஊர்லே எவ, எவனோட ஓடிப்போனா என்ன... நம்ம வீட்டுச் சரக்கு ஒழுங்கா இருக்கான்று பார்க்க வேணாமா நீ... வீட்டுக்குன்னு இருக்கிற ஒரே ஆம்பிளை...

    ஏம்மா அத்தானில்லே?

    "அடத் தூா... அவரு ஒரு மனுசனாங்காட்டியும்.... அம்பது வயசாறது... பொண்ணு தளதளன்னு வளர்ந்து நிக்குது... இன்னமும் நாற்காலி தேய- ஒரே பதவியில் உட்கார்ந்திட்டு... இவரோட வேலையில சேர்ந்தவங்க எல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1