Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkaga Uma
Unakkaga Uma
Unakkaga Uma
Ebook90 pages41 minutes

Unakkaga Uma

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002966
Unakkaga Uma

Read more from Anuradha Ramanan

Related to Unakkaga Uma

Related ebooks

Reviews for Unakkaga Uma

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkaga Uma - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    உனக்காக உமா

    Unakkaga Uma

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    என்கிட்ட சொல்லவே இல்லையே...

    சரவணன் தலையை உயர்த்திப் பார்க்கவில்லை. அவனுக்குத் தெரியும், தன் எதிரில் நிற்பது ராஜிதான் என்பது- அவனது இதழ்கடையில் குறும்புச் சிரிப்பு.

    எதைச் சொல்லலே?

    ஆபீஸ்லே நாம போகப் போற பிக்னிக்குக்கு உங்கம்மாவும் வரப் போறாங்கங்கற விஷயத்தை. உங்க தங்கை உமா மட்டும்தான் வருவான்னு சொன்னீங்க?

    சொன்னேன். சாதாரணமா வயசானவங்களுக்கு இந்த மாதிரிக் கலாட்டாவான சமாசாரங்கள் எல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம் பார்த்தா, என்னைவிட எங்கம்மாவுக்குத்தான் இதுல ரொம்ப ஆர்வம்னு...

    அப்படின்னா எங்க அப்பாவும் வருவாங்க...

    ராஜி, இரட்டைப் பின்னலில் ஒன்றைத் தூக்கி முன் பக்கம் போட்டுக் கொள்ள, சரவணன் தனது பதட்டத்தை மறைக்க, ஏதோ முக்கியமான ஃபைலைத் தேடுவது போலப் பாசாங்கு செய்கிறான்.

    'இந்தப் பெண்கள் ரொம்ப மோசம். நாலு பேர் முன்னாலேதான் நம்ம வீக் பாயிண்ட்டைப் பிடிப்பாங்க."

    அவனது தடுமாற்றம் ராஜிக்குப் பிடிக்கும்.

    உண்மையிலேயே சரவணனைச் சீண்ட வேண்டுமானால், ராஜி சல்வார் கம்மீஸ் அணிந்து, மழைக்கால மேகம் போல பம்மிப் படர்ந்துள்ள அடர்ந்த கூந்தலை இரண்டாக வகுத்துப் பின்னி, ஒன்றை எடுத்து முன் பக்கம் போட்டாலே போதும். திணறி விடுவான்.

    ஆயிரக்கணக்கில் பணம் புழங்கும் கேஷ் கவுண்ட்டரில் அமர்ந்திருந்தால், அவளை முன்கூட்டியே எச்சரித்துவிடுவான்.

    இதப் பாரு, இப்படி வந்து எதிர்த்தாப்பல நிற்காதே. உங்கப்பா எனக்கு வரதட்சணை கொடுக்காட்டாலும் பரவாயில்லே, என் கையை விட்டுத் தண்டம் அழ வச்சிடுவாரு போல இருக்கு.

    எத்தனைதான் குரலை அடக்கிப் பேசினாலும், அவன் மேஜைக்கு அடுத்து அமர்ந்திருக்கும் ஹெட் கிளார்க் யமுனா பாய்க்குப் பாம்புக் காது.

    ஆமா... இப்படிச் சொல்லிப் புலம்பிட்டே இருங்க. நானும் பார்த்துட்டே இருக்கேன். ஆறு வருஷமாவா லவ் பண்ணிட்டே இருப்பாங்க? ராஜேஸ்வரீ...

    என்ன மேடம்?

    இந்த ஆளை நம்பாதே. டபாய்க்கிறாரு. இதே மாதிரி எத்தனை பொண்ணுங்களை வளைச்சுப் போட்டு வச்சிருக்காரோ!

    சேச்சே... அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. ஆம்பிளைன்னா என்ன வேணுமானாலும் சொல்லிடறதா? வீட்டுக்குத் தலைப் பையன். அடுத்தாப்பல தங்கச்சி ஒருத்தி இருக்கா. அவ மேலே இவன் உயிரையே வச்சிருக்கான். அவளுக்கு ஒரு நல்ல வரனைப் பார்க்கறதுக்கு முன்னாலே திடுதிப்னு இவன் மாலையும் கழுத்துமாப் போய் நின்னா பெத்தவங்க வயிறு பதைச்சுப் போயிடாதா?- இது அக்கவுண்ட் செக்ஷன் சுப்பிரமணியன்.

    யாரு பேசறது? சுப்புணி சாரா? சரியா இருபது வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்தது? வாழ்க்கைச் சக்கரத்தை ரிவர்ஸ்லே ஓட்டிப் பாருங்க. நாலு தங்கச்சி கல்யாணத்துக்குக் காத்துட்டு இருக்கறப்ப, குமாரி மேரி தாமஸைக் கைத்தலம் பற்றி, சாந்தோம் சர்ச்சுக்குப் போய், அங்கேயிருந்து கோல விழியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போகலையா? அப்படிப் பார்க்காதீங்க சுப்புணி சார். உங்க கல்யாணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவ இந்த யமனா பாய். அந்த உரிமையில சொல்றேன்.

    இந்த ஆபீஸ், குடும்பம் மாதிரி கலகலன்னு இருக்கும்னு என் அப்பாவோட ஃப்ரண்ட் சொன்னார். அதுக்காக இந்த அளவுக்கு உணர்ச்சிமயமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லே.- ராஜி சரணவனின் காதருகில் கிசுகிசுப்பாள்.

    அப்படிச் சொல்லாதே ராஜி. கடந்த ஆறு வருஷமா நாமும் லவ்விட்டே இருக்கோம். எங்கே இப்படியே ஆயுசு முழுக்க இருந்துடப் போறோமோங்கற நியாயமான பயம் அவங்களுக்கு. இப்ப உன் கறுப்பு வெல்வெட் ரெட்டைப் பின்னலைப் பார்த்து நான் கன்னா பின்னான்னு பெருமூச்சு விடற மாதிரியே அறுபது வயசுக்கும் உன் நரைச்ச ரெட்டைப் பின்னலைப் பார்த்து ஏங்கு வேன்தான். அதுல துளிகூட மாற்றமில்லே. ஆனா பார்க்கறவங் களுக்கு அத்தனை சுவாரஸ்யமா இருக்காது பாரு.- சரவணனும் தன் பங்குக்கு அவளை வெறுப்பேற்றுவான்.

    இப்பொழுதும் கூட ராஜி, அவன் மேஜை மீது சாய்ந்து நின்று பின்னலை நுனி விரலால் வருடியபடியேதான் கேட்கிறாள், அது என்ன திடீர்னு அம்மாவை... எனக்குப் பயமா இருக்கு.

    "எதுக்கு பயம்? இப்படிப் பயந்துட்டே இருந்தா எப்பத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1