Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koodavey Oru Nizhal
Koodavey Oru Nizhal
Koodavey Oru Nizhal
Ebook318 pages2 hours

Koodavey Oru Nizhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவல் இரண்டு சகோதரிகளைப் பற்றிய நாவல். இந்த நாவலைப் படிக்கும் முன் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! உங்களுக்கு இப்போது வேறு ஏதாவது ஒரு முக்கியமான வேலை இருந்தால் அதை முடித்துவிட்டு வந்து 'கூடவே ஒரு நிழல்!' நாவலைப் படியுங்கள். இல்லாவிட்டால் அந்த வேலையை நீங்கள் செய்ய மறந்து போக வாய்ப்பு அதிகம். நான் சொன்னது உண்மை என்பதை நாவலைப் படித்து முடித்ததும் ஒப்புக் கொள்வீர்கள்!

-ராஜேஷ்குமார்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850488
Koodavey Oru Nizhal

Read more from Rajesh Kumar

Related to Koodavey Oru Nizhal

Related ebooks

Reviews for Koodavey Oru Nizhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koodavey Oru Nizhal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கூடவே ஒரு நிழல்

    Koodave Oru Nizhal

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    அந்த சாயந்தர நேரம், சூரிய வெளிச்சத்தைக் கொஞ்சமாய் தின்று வளர்ந்து கொண்டிருக்க, ரோட்டோர சோடியம் விளக்குகள் மின்சாரத்தை உறிஞ்சி ஒளிர ஆரம் பித்திருந்தன. காகங்கள் கூட்டம் கூட்டமாய் இரைச்சலோடு மரங்களில் இறங்கிக்கொண்டிருந்தன. சூரியனின் கடைசி வெளிச்சக் கதிரும்மேற்கு திசையில் சுருண்டு போக, கிழக்குப் பக்கமாய் சில நட்சத்திரங்கள் தைரியமாய்க் கண்ணடிக்கத் தொடங்கியிருந்தன.

    பிரபா வாசல் கதவைத் திறந்து கொண்டு போர்டிகோவுக்கு வந்தாள்.இடதுபக்க சுவரில் இருந்த மின்பொத்தானைத் தட்ட, போர்டிகோவின் மேற்கூரையில் ஒளித்திருந்த ‘டியூப் லைட்’‘பக் பக்’கென்று சில விநாடிகள் யோசித்து வெளிச்சத்தைக் கொண்டு வந்து, போர்டிகோவை நிரப்பியது.

    அந்த வெளிச்ச மழையில் நின்ற பிரபாவுக்கு பிறந்த தேதி: 20.03.1966.மஞ்சளை இழைக்கிற போது லேசாய் குங்குமமும் கலந்தது போன்ற நிறம்.அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே தேன்நிறக் கண்கள். சின்ன உதடுகளை அவள் அசைத்துப் பேசுகிறபோதுஉண்மையாகவே வாய்க்குள் முத்துச்சரம் மாதிரி பல் வரிசை தெரியும். சந்தனத் துண்டு போன்ற மோவாயில் மச்சம் ஒன்று கடுகு சைசில் பிடிவாதமாய் ஒட்டிக் கொண்டிருந்தது. உடம்பின் கழுத்து சீனா பட்டுச்சோலை கச்சிதமாய்ப் படிந்து உடம்பைப் போர்த்தியிருந்தது.

    தோல்சீவிய ஆப்பிள் நிறத்தில் இருந்த தன் மணிக்கட்டை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தாள், பிரபா.

    மணி: 6.55.

    எங்கே இவரை இன்னமும் காணோம்…? கண்களில் கோபப்பட்டு புருவங்களுக்கு மத்தியில் யோசித்து போர்டிகோவைத் தாண்டியபடிகாம்பவுண்டு கேட் அருகே வந்தாள், பிரபா, மனசுக்குள் எரிச்சல் பீறிட்டது.

    எந்தத் தொழிலைச் செய்கிறவர்களுக்கு வேண்டுமானாலும் கழுத்தை நீட்டி தாலியைக வாங்கிக் கொள்ளலாம். இந்த டாக்டர்களுக்கு மட்டும் கழுத்தை நீட்டவே கூடாது. சே! என்ன தொழில்? கட்டின பெண்டாட்டியை ஒரு அரைமணி நேரம் வெளியே கூட்டிக் கொண்டு போகமுடியாத அளவுக்கு எந்நேரமும் பார்த்தாலும்… ஆபரேசன்… ஆபரேசன்…ஆபரேசன்…!

    அவர் இன்றைக்கு வரட்டும்.

    ஒரு மூச்சு சண்டை பிடிக்க வேண்டும் அவள் தீர்மானித்த அதே விநாடி

    வீட்டின் உள்ளேயிருந்து அந்த வேலைக்காரப் பெண் ஓடிவந்நதாள்.

    அம்மா…

    என்ன கமலம்?

    அய்யா… டெலிபோன்ல கூப்பிடுறாரம்மா…

    சரிதான்… எதையாவது சொல்லி…‘சாரி பிரபா கண்ணு’ நாம நாளைக்குப் பொருட்காட்சி போலாமே? ஒரு முக்கியமான ஆபரேசனைத் திடீர் என்று பண்ணவேண்டி வந்துடுச்சு’ என்று சொல்லப் போகிறார்மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஆத்திரமும் எரிச்சலுமாய் போர்டிகோ படியேறி உள்ளே போனாள்.

    ஹாலின் சுவரோரமாய் இருந்த டீபாயின் மேல் டெலிபோனில் ரிசீவர் கரப்பான் பூச்சி மாதிரி மல்லாந்திருந்தது. ரிசீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள். கேலியான குரலில் கேட்டாள்.

    அலோ.. டாக்டர் சாரா?

    ஆமா, அடியேன்தான் மறுமுனையில் பிரபாவின் கணவன் சம்பத் பேசினான். அவன் குரலிலும் கேலி தொற்றியிருந்தது. பிரபா தொடர்ந்து பேசினாள்.

    "உங்க டாக்டர் தொழிலுக்கு மத்தியில இந்தப் பெண்டாட்டியோட ஞாபகம் எப்படி வந்தது சார்? ஆச்சிரியமாயிருக்கே!’நேத்து ராத்திரி டாக்டர் சார் படுக்கை அறையில் பெண்டாட்டி கிட்டே என்னமோ கொஞ்சிக் கொஞ்சி சொல்லிட்டிருந்தாரே! இப்போ மறந்துடுச்சா…?

    ஞாபகமிருக்கு, பிரபா! பொருட்காட்சிக்குக் கூட்டிட்டுப் போறதா சொல்லியிருந்தேன். இப்போ வந்துடறேன்.

    எத்தனை மணிக்கு வருவீங்க…?

    இப்போ மணி ஏழு… ஏழேகால் மணிக்குள்ளே வந்துடறேன்…

    நிச்சயமா வருவீங்களா?

    கண்டிப்பா…

    ஏழேகால் வரைக்கும் பார்ப்பேன். 7.16க்கே வர்றேன்…

    சீ… போங்க…" சிரித்தாள், பிரபா.

    சம்பத்தும் சிரித்துக்கொண்டே ரிசீவரைக் கவிழ்த்துவிட்டு தன்னுடைய நாற்காலியில் இருந்து எழுந்தான். தள்ளுக் கதவைத் திறந்துகொண்டு வெளிப்பட்டான்.

    எதிரே டாக்டர் தயாளிசுவரன் எதிர்பட்டார். நரையோடிய தன் கிருதாவைத் தடவிக் கொண்டே கேட்டார்.

    என்ன சம்பத், புறப்பட்டுட்டீங்களா?

    ஆமா… வீட்டிலிருந்து வாரண்ட் வந்தாச்சு…

    என்ன… சினிமாவா?

    நோ… நோ… பொருட்காட்சி…சொல்லிக் கொண்டே நகர்ந்த சம்பத்தை. ஒரு நிமிடம் சம்பத் என்று சொல்லி நிறுத்தினார், அவர்.

    "சொல்லுங்க, தயாள்…’

    அந்த அப்பெண்டிக்ஸ் ஆபரேசன் கேசை நாளைக்கு டிஸ்ஜார்ஜ் பண்ணிடலாம்?

    தையல் எல்லாம் செட்டாயிடுச்சா?

    ஆயிடுச்சு…

    எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணிப் பார்த்துடுங்க, தயாள்… உங்களுக்குத் திருப்தியா இருந்தால் டிஸ்ஜார்ஜ் பண்ணிடுங்க… ஆபரேசனைப் பண்ணிகிட்ட ஆசாமி மூட்டைத் தூக்கிப் பிழைக்கிறவன்… அவசரப்பட்டு வேலைக்குப் போயிடப் போறான்…எச்சரிக்கை செய்து அனுப்புங்க…

    தலையாட்டினார் தயாளிசுவரன்.

    தனது காரை நோக்கிப் போனான் சம்பத். அவன் போய்த் காரைத் தொடுவதற்குள். அவனைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

    இருபத்தெட்டு வயதான் சம்பத்துக்கு மாநிறத்துக்கும் சற்று மட்டுப்பட்ட நிறம். உயரம் அசாத்தியம். சற்று மேடிட்ட நெற்றியும், கொஞ்சம் பெரிய சைஸ் காதுகளும் அவனுடைய பர்சனாலிடியைக் குறைத்துக் காட்டினாலும் அவன் படித்திருந்த டாக்டர் படிப்பு முகத்தைப் பிரகாசம் ஆக்கியிருந்தது. சமீப காலமாய் சர்ஜரியில் நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டிருந்தான். அதனால் நிறைய பணம். போன ஆறு மாதத்திற்கு முன்னால்தான் நூங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் ஒரு மினி பங்களாவை விலைக்கு வாங்கிக் குடி வந்திருந்தான்.அவனுடைய அந்த அதிர்ஷ்டத்திற்குக் காரணம் தான் கைபிடித்த பிரபாதான் என்று தீர்க்கமாய் நம்பினான்.

    காரைச் சுற்றிவந்து, டிரைவிங் சீட்டில் பரவி, காரைக் கிளப்ப முயன்ற நேரம்

    அந்த நர்ஸ் ஓடி வந்தாள்.

    டாக்டர்…

    என்ன புஷ்பா…?

    அந்த ஸ்பெஷல் வார்டு நோயாளி புண்ணிய கோடிக்குத் திடீர்னு வலிப்பு வந்துடுச்சு சார்… நர்ஸ் சொல்ல, காரின் எஞ்சினை அணைக்காமல் அவளை ஏறிட்டான்.

    "எப்பவுமே அவருக்கு வர்ற வலிப்புதானே? வழக்காமா போடற ஊசி மருந்தைப் போட வேண்டியதுதானே…

    இல்ல… டாக்டர்… இப்போ வந்திருக்கிற வலிப்பு வேறவிதமா தெரியுது… மார்பும் வயிறும் தூக்கித் தூக்கிப் போடுது…

    நான் கிளம்பிட்டிருக்கேன். புஷ்பா… டாக்டர் தயாளிசுவரன்கிட்டே விஷயத்தைச் சொல்லி அவரைக் கூட்டிட்டுப் போ… அவர் பார்த்துக்குவார்…

    அவரைக் காணோம் டாக்டர்…"

    இருக்கார்… தேடிப் பார்… சொல்லிவிட்டு காரை விருட்டென்று நகர்த்திக்கொண்டு போனான், சம்பத், ஆஸ்பத்திரி காம்பவுண்டு கேட்டைத் தாண்டிக் கொண்டே வாட்சைப் பார்த்தான். 7.05.

    பத்து நிமிடத்தில் வீட்டில் இருந்ததாக வேண்டும்.

    இல்லாவிட்டால் பிரபா பத்திரகாளியாய் மாறிவிடுவாள்.

    காரை விரட்டினான். மவுண்ரோட்டின் ஏராளமான போக்குவரத்தில் நீந்தி சிக்னல்களுக்குக் கட்டுப்பட்டு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் திரும்பியபோது

    மணி 7.10.

    காரை எண்பதில் பீறிட வைத்து, சக்கரங்களுக்குக் கீழே ரோட்டை நழுவ விட்டு லேக் ஏரியாவில் நுழைந்து தன் பங்களா போர்டிகோவில் காரை சொருகி நிறத்திய போது மணி 7.14.

    போர்டிகோவில் நின்றிருந்த பிரபா. தன் வாட்சைப் பார்த்துக் கொண்டே சிரித்து சொன்னாள்.

    தப்பிச்சீங்க…"

    புறப்படலாமா?காரை விட்டு இறங்காமலேயே கேட்டான். சம்பத்.

    நீங்க வேறு டிரஸ் பண்ணிக்கலையா?

    நோ… இதே டிரஸ் எனக்கு போதும்… ம்… காரில் ஏறு…

    காரின் கதவைத் திறந்துவிட

    பிரபா கோல்ட் பிளேம் செண்ட் வாசனையோடுசம்பத்தின் தோளை மெத்தென்று தன் வெல்வெட் தோள் பட்டையால் மோதிக் கொண்டு உட்கார்ந்தாள்.

    கார் புறப்பட்டது.

    பொருட்காட்சி ஏக இரைச்சலோடு இருந்தது. ஒலிபெருக்கிகள் சென்னையிலேயே சிறந்த பிரியாணிக் கடை எது என்று சொல்லிக் கொண்டிருக்க இன்னொரு பக்க ஒலிபெருக்கி வேட்டி வரிஞ்சு கட்டு…என்று பாடிக் கொண்டிருந்தது. புழுதி மண்ணும்,மிளகாய்த் தூளும் அப்பியிருந்த மாங்காய்த் துண்டுகளைக் கடித்துக் கொண்டும், அழுக்கான எண்ணெயில் பொரித்த மசாலா அப்பளத்தைக் கொறித்துக் கொண்டும் மக்கள் நெருங்கிக் கொண்டு நடந்தார்கள். ராட்சச ராட்டினம் பிசாசு வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்க ஒரு பெண் கணவனின் மடியில் படுத்து பயத்தில் அலறிக் கொண்டிருந்தாள்.இரண்டு தலை மனிதனைப் பார்க்க ஒரு ஸ்டாலுக்கு முன்னால் கும்பல் சேர்ந்து கொண்டிருந்தது.

    ஓரமாய் நடந்தார்கள் சம்பத்தும், பிரபாவும். சம்பத் சலித்துக்கொண்டான்.பேசாம பீச்சுக்குப் போயிருக்கலாம், பிரபா… சுத்தமான காத்தாவது கிடைச்சிருக்கும்….

    எப்பவும் போற பீச்சதானே? இந்தக் கும்பல், இவ்வளவு ஆரவாரமான வெளிச்சத்துக்கு மத்தியில நடந்துபோறதே ஒரு சுகம்தான்…"

    உனக்கு சுகம்… எனக்குத் தலையை வலிக்குது…

    காப்பி சாப்பிடலாமா?

    அங்கே போனாலும் பாடாவதி காப்பிதான் கிடைக்கும்… ம்… வா…அதையாவது குடிச்சி வைப்போம்…மக்கள் கும்பலில் மெதுவாய் ஊர்ந்து காப்பி ஸ்டாலை நோக்கி நகர்ந்தார்கள்.

    என் கையைக் கெட்டியா பிடிச்சுக்கோ… பிரபா… கொஞ்சம் ஏமாந்தா கூட்டம் உன்னையும் என்னையும் தனித்தனியா பிரிச்சுடும்…

    "காப்பி ஸ்டாலை ஐந்து நிமிடத்திற்குப் பிறகு தொட்டார்கள். காப்பிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்த சமயம்

    ஒலி பெருக்கியிலிருந்து அந்த அறிவிப்பு கேட்டது.

    நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவைச் சேர்ந்த டாக்டர் சம்பத் எங்கிருந்தாலும் விளம்பர அறைக்கு வரும்படி வேண்டுகிறோம். மிகவும் அவசரம்.

    அறிவிப்பு காதில் விழ

    திடும்மென நிமிர்ந்தாள் பிரபா.

    என்னங்க இது…?

    அதானே யாரோ எனக்காக விளம்பர அறையில் காத்திருக்காங்க போலிருக்கு…

    யாராயிருக்கும்?

    ஒலிபெருக்கியில் மறுபடியும் அந்த விளம்பர வாசகம் கேட்டது.

    வாங்க, போய்ப் பார்க்கலாம்…பிரபா அவசரப்பட்ட நேரம் காப்பி தம்ளர்கள் முன்னால் நீட்டப்படவாங்கிக் கொண்டு வேக வேகமாய்க் குடித்தார்கள். இரண்டே நிமிடத்தில் காப்பியை உறிஞ்சிவிட்டு காலி தம்ளர்களையும் காசையும் கொடுத்துவிட்டு விளம்பர அறையை நோக்கி நடந்தார்கள்.

    பிரபாவின் இதயம் உதறிக்கொண்டது.ஊரில் இருக்கும் தன்னடைய அப்பாவுக்கோ அதே மாதிரி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய அத்தை, மாமாவுக்கோ ஏதேனும் விபரீதமாய் நிகழ்ந்திருக்குமோ என்கிற நினைப்பில் வியர்த்துப்போனாள். கால்கள் பின்னி பின்னி விட்டது. கூட்டத்தைக் கடந்து விளம்பர ஸ்டாலைத் தொட்டார்கள். உள்ளே நுழைந்தார்கள். உட்கார்ந்திருந்த ஒரு வழுக்கைத் தலைக்காரர் மைக்கை வாய் அருகே வைத்துக் கொண்டு இன்றே பாருங்கள்… சண்டைகள் நிறைந்த குடும்பச் சித்திரம். தினசரி காலைக் காட்சியாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது" என்று சொல்லிக் கொண்டிருந்தார். சம்பத்தையும், பிரபாவையும் பார்த்ததும் எதிரே இருந்த நாற்காலிகளைக் காட்டிவிட்டு மைக்கை அணைத்தபடி கேட்டார்.

    நீங்க டாக்டர் சம்பத்தானே!

    ஆமா…

    அரசாங்க பெரிய ஆஸ்பத்திரியில் இருந்து தயாளிசுவரன்னு ஒரு டாக்டர் போன் பண்ணியிருந்தார். உங்களை உடனடியா ஆஸ்பத்திரிக்கு வரச்சொன்னார்.ஏதோ ஆபரேசன்னு சொன்னார்.

    தேங்க் யூ… சொல்லி விட்டு வெளியே வந்தான். சம்பத் பின்னாலேயே பிரபாவும் வந்தாள்.

    என்னங்க,புறப்படப் போறீங்களா….?

    வேற வேலையில்லை… எல்லாமே தயாளிசுவரனே பார்த்துப்பார்…

    அவராலே முடியாததினாலேதானே செய்தி அனுப்பியிருக்கார்… நீங்க புறப்பட்டுப் போறது நல்லதுன்னு என் மனசுக்குப் படுது…

    பேசாமே வா… ஒரு மணி நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க… நான் பொருட்காட்சி போறதா டாக்டர் தயாளிசவரன் கிட்டே சொல்லிட்டு வந்தது தப்பா போச்சு…பொருமிக்கொண்டே நடந்தான் சம்பத்.

    எதிரே வந்த ஒரு கும்பல் அலை மாதிரி அவர்களை தாண்டிக்கொண்டு போக சம்பத், அந்தக் கும்பலை ஊடுருவி வெளியே வந்தான். பத்தடி நடந்ததும்

    பிரபா! என்று கூப்பிட்டு திரும்பிப் பார்த்தான்.

    திடுக்கிட்டான்.

    பிரபாவைக் காணோம்.

    பிரபா…!

    "சுற்றும் முற்றும் பார்வையைப் போட்டான்.

    இருபதடி தொலைவில்ஒரு கும்பலுக்கு மத்தியில் பிரபா சிக்கியிருந்தாள்.தடித்தடியாய் இரண்டு ஆண்களும் பிரபாவுக்கு முன்னாலும், பின்னாலும் நின்றுகொண்டு அவளைத் தப்புத் தப்பாய்த தொட்டுக் கொண்டிருந்தார்கள்.

    2

    ஆவேசமானான் சம்பத். உடம்பு பூராவும் கோபமான இரத்தம் ‘சுர்’ என்று ஓடியது. தனக்கு முன்னால் நின்றிருந்த கும்பலை விலக்கிக்கொண்டு ஒரு அம்பு மாதிரி பாய்ந்தான். எதிர்ப்பட்டவர்களின் கைகளைத் தள்ளிக் கொண்டு அந்த இரண்டு இளைஞர்களுக்கு மத்தியில் வியர்வை பூத்த முகத்தோடு திணறிக்கொண்டிருந்த பிரபாவை இரண்டு கைகளாலும் பிறத்து தன் பக்கமாய் இழுத்துக்கொள்ள அந்த இளைஞர்கள் விலகினார்கள். மெள்ள நழுவினார்கள்.

    டேய் நில்லுங்கடா…

    சம்பத் ஆத்திரமாய்க் கத்த அவர்கள் சட்டென்று நின்றார்கள். ஒருவன் உயரமாய் இருந்தான். முகத்தில் சத்தியராஜ் தனம் தெரிந்தது. இன்னொருவன் தொங்கு மீசையும் ஹிப்பித்தலையுமாய் கன்னங்கரேலென்று இருந்தான். இரண்டு பேருமே வாயில் சூயிங்கத்தை மென்றார்கள். கண்களில் அலட்சியத்தை நிரப்பியிருந்தார்கள். ‘என்னடா’ என்கிற மாதிரி பார்த்தார்கள்.

    சம்பத் கோபமாய் பாய்ந்து உயரமாய் இருந்தவனின் சட்டையை எட்டிப் பிடித்தான். ஏண்டா… உங்களுக்குகெல்லாம் அக்கா தங்கச்சி இல்லையா…?

    அவன் மென்று கொண்டிருந்த சூயிங்கத்தைத் துப்பிவிட்டு கன்னத்தைச் சொறிந்து கொண்டே சொன்னான். இருக்காங்க சார்… ஆனா அவங்களையெல்லாம் இவ்வளவு கூட்டம் இருக்கிற இடத்துக்குப் கூட்டிட்டு வர மாட்டோம்..

    நீ… நீ… ராஸ்கல்…

    சம்பத் அவனுடைய கன்னத்தில் அறைவதற்காகக் கையை உயர்தன் அந்தக் கையைப் பக்கத்தில் நின்றிருந்த ஹிப்பி பேர்வழி கப்பென்று பற்றிக்கொண்டான். இதோ… பார் சார்… கும்பல்ல ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுகிட்டு நடக்கிறது சகஜந்தான்…. இதைப்போய் எதுக்காக பெரிசு பண்றீங்க…? உங்க பெண்டாட்டி மேல கையும் காலும் படக்கூடாதுன்னா கூட்டமில்லாத நாளில் பொருட் காட்சிக்குக் கூட்டிட்டு வரணும்… மொதல்ல அவன் சர்ட்டில் இருந்து கையை எடுங்க.

    அந்த ஹிப்பி பேர்வழி பேசிக்கொண்டிருக்க,தன் வலது காலை உயர்த்தி அவனுடைய இடுப்புப் பிரதேசத்தில் ‘நெக்’கென்று உதைத்தான், சம்பத்,தப்பைப் பண்ணிட்டு தத்துவமாடா பேசறே…? ராஸ்கல்…! உன்னை..

    ‘அம்மா…." என்று அலறி கீழே விழுந்து விட்ட ஹிப்பி பேர்வழியின் இடுப்பை நோக்கி மறுபடியும் தன் வலது காலை உயர்த்தினான் சம்பத். பிரபா குறுக்கிட்டு சம்பத்தின் தோளைப் பற்றினாள். கத்தினாள்.

    வேண்டாங்க… விடுங்க… உங்க தகுதிக்கு நீங்க அவன் கூட சண்டை போடறது நல்லாயில்லீங்க. நாம வீட்டுக்குப் போகலாம் வாங்க…

    நீ சும்மாயிரு, பிரபா… இவங்க ரெண்டு பேரையும் போலீஸ்ல ஒப்படைக்காமல் நான் வீட்டுக்கு வரமாட்டேன்…

    சம்பத் கத்த. கும்பல சூழ்ந்துகொண்டது. கும்பலில் யாரோ ஒருவர் சம்பத்தை அடையாளம் கண்டுகொண்ட என்ன டாக்டர் என்ன கலாட்டா?என்று கேட்க

    அவரிடம் விஷயத்தைச் சொன்னான். சம்பத்.

    அவர் பொருமினார் தாயோட வயத்துல பொறந்தவன்களாயிருந்தா…மத்த பெண்களைப் பார்க்கறப்போ அம்மா ஞாபகமும் தங்கச்சி ஞாபகமும் வரும். இவனுக ரெண்டு பேரும் பேயோட வயத்துல பொறந்திருப்பாங்க… டாக்டர்… எதிரேதான் போலீஸ் ஸ்டேசன். நான் போய் போலீசைக் கூட்டிட்டு வர்றேன்… ரெண்டுபேரும் ஓடாமல் பார்த்துக்குங்க… டாக்டர்…

    சம்பத் ஒரு டாக்டர் என்று தெரிந்ததும் கும்பலுக்கு அவன்பேரில் ஒரு தற்காலிக மதிப்பு உண்டாக பிரபாவைத் தொட்ட இரண்டு பேரையும் மொய்த்துக்கொண்டு தர்ம அடிகளை விநியோகிக்க ஆரம்பித்தது. ரப்…ரப்… ரப்..

    சாத்துங்குடா… இனிமே சேலையைப் பார்த்தாலே பத்தடி தூரம் அவங்க தள்ளி நடக்கணும்…

    கும்பல் சேர்ந்தா போதும்… இவனுகளுக்குக் கொண்டாட்டம்தான்… இடம் பார்த்து மிதிப்பீங்களா…

    அந்த இரண்டு பேர்களையும் கும்பல் ஆவேசமாய்ப் புரட்டிக்கொண்டிருந்தபோது அந்த கான்ஸ்டபிள் கையில் தடியொடு உள்ளே வந்தார்.

    யோவ் போலீஸ் வந்தாச்சு… விடுங்கய்யா அவங்களை… யாரோ சொல்ல, கும்பல் ‘பொல பொல’ வென்று விலகியது.

    வாயில் வழிந்த ரத்தத்தோடும் கலைந்த தலையோடும்சர்ட் நார் நாராய்க் கிழிந்து தொங்க அந்த இரண்டு பேரும் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார்கள்.போலீஸ் கான்ஸ்டபிள் தன் பங்குக்குகையிலிருந்த லத்தியால் இரண்டு பேர்களுடைய முட்டிகளைத் தட்டி நிற்க வைத்தார். சட்டைக் காலர்களைப் பற்றிக்கொண்டார்.

    ம்… நடங்கப்பா…

    அவர்கள் நொண்டிக் கொண்டே நடந்தார்கள். கான்ஸ்டபிள் கேட்டார்.புகார் பண்ணினது யார் சார்?

    நான்தான் சம்பத் முன்னால் வந்தான்.

    கொஞ்சம் வந்து ஒரு புகாரை எழுதிக் கொடுத்துட்டு போங்க சார்…

    தலையாட்டிக் கொண்டே சம்பத் தொடர,அவனுக்குப் பின்னால் பிரபா மெள்ள நடந்தாள்.

    அன்று இரவு…

    மெலிதான நீலநிற வெளிச்சத்தில் படுக்கை அறை நிரம்பிக் கிடக்க, கட்டிலில் அருகே படுத்திருந்தார்கள் சம்பத்தும் பிரபாவும். சம்பத் ஒருக்களித்து படுத்து மல்லாந்து படுத்திருந்த பிரபாவின் நெற்றியில் விரலை வைத்து கோடு போட்டபடி நாசிப் பகுதிக்கும், உதட்டுப்

    Enjoying the preview?
    Page 1 of 1