Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirukkoyilgal - Varalarum Magimaiyum
Thirukkoyilgal - Varalarum Magimaiyum
Thirukkoyilgal - Varalarum Magimaiyum
Ebook202 pages1 hour

Thirukkoyilgal - Varalarum Magimaiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"Jeya Venkatraman" has written many books about temples in India and America. He has translated a famous Kannada book-"Aavarana", written by S.L.Bhyrappa.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851577
Thirukkoyilgal - Varalarum Magimaiyum

Read more from Jaya Venkatraman

Related to Thirukkoyilgal - Varalarum Magimaiyum

Related ebooks

Related categories

Reviews for Thirukkoyilgal - Varalarum Magimaiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirukkoyilgal - Varalarum Magimaiyum - Jaya Venkatraman

    http://www.pustaka.co.in

    திருக்கோயில்கள் - வரலாறும் மகிமையும்

    Thirukoyilgal - Varalarum Magimaiyum‏‏

    Author:

    ஜெயா வெங்கட்ராமன்

    Jaya Venkatraman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. விஜயநகரத்தின் எச்சங்களும் திருக்கோயில்களும் மிச்சங்களும்

    2. பேளுர் - ஹோய்சாளர்களின் கலைப்பணி –1

    3. சோமநாதபுரம் - ஹோய்சாளர்களின் கலைப்பணி -2

    4. ‘ஹளேபீடு’ – ஹோய்சாளர்களின் கலைப்பணி – 3

    5. பெங்களுர் மேல்க்கோட்டை செலுவநாராயணர்-- யோகநரசிம்மர் ஆலயங்கள்.

    6.  ஸ்ரீரங்கப்பட்டினம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்

    7. பகவத்பாதர் அவதரித்த புண்ணிய பூமி!

    8. ராஜஸ்தான் -- ‘தில்வாரா’ திருக்கோயில்கள்!

    9.  தும்கூர் குரவனஹள்ளி மகாலட்சுமி திருக்கோயில்

    10. தும்கூர் தேவராயணதுர்கா—யோகநரசிம்மர்-- போக நரசிம்மர்

    11. கவி கங்காதேஸ்வரர் குகைக்கோயில்

    12.  இஸ்கான்-- கிருஷ்ணர் கோயில்

    13. ஞானாட்சி ஸ்ரீராஜராஜேஸ்வரி திருக்கோயில்

    14. ராகிகுட்டா பிரசன்ன ஆஞ்சனேயர் கோயில்

    15. நிலமங்கலா விஜயவிட்டலா கோயில்

    16.  பசவனகுடி நந்தி கோயில்

    17.  சிங்கப்பூரில் ஹிந்துக் கோயில்கள்

    18.  அமெரிக்காவில் ஹிந்துக் கோயில்கள்

    19.  ராஜஸ்தான்-- மவுண்ட் அபு!

    20.  ராஜஸ்தானத்துப் புஷ்கர் எனும் புண்ணிய பூமி

    21.  ஸ்ரீமலை மாதேஸ்வரர் திருக்கோயில்

    1

    விஜயநகரத்தின் எச்சங்களும் திருக்கோயில்களும் மிச்சங்களும்

    சாம்ராஜ்யத்தின் பிறப்பிடம், ஹம்பே. ஒன்பது சதுர மைல்கள் பரப்பளவில் கிடந்த சாம்ராஜ்யம். துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இப்போது ஒரு சிறிய கிராமம் மட்டுமே. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது இங்கு தங்கினால் தான் முழுவதையும் காண முடியும். இதன் அழகை வார்த்தைகளில் வடிப்பது கடினம். ஹம்பேயிக்கு உவமை ஹம்பேயாகத்தான் இருக்க முடியும்.

    ஊரின் பாரம்பரியப்படி விஜயநகர சாம்ராஜ்யம் பிறப்பதற்கு முன்பே இங்கு ஒரு நகரம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இராமாயணத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் இங்குதான் நடந்தாகச் சொல்லப்படுகிறது. கிஷ்கிந்தை ஹம்பேயின் அருகில்தான் இருக்கிறது.

    குரங்குகளின் வம்வாவளியினராகக் கருதப்படும் சுக்ரீவன் வாலியினால் விரட்டப்பட்டு இந்த மலைப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறார். ‘ரிஷ்யமுகம்’ என்ற இந்த இடம் பம்பா நதிக்கரையில் உள்ளது. துங்கபத்ரா நதியின் புராதனப் பெயர்தான் பம்பா. பம்பா என்பவள் பிரம்மாவின் திருமகள் என்றும் இறைவன் பிருபாசஷரின் மனைவி என்றும் புராணக் கதை சொல்கிறது.

    ராம லசஷ்மணர்கள் இந்த இடத்திற்கு வந்தபோதுதான் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும், இங்கிருந்துதான் இலங்கைக்குப் பயணப் பட்டதாகவும், ராவணனைக் கொல்வதற்கான வியூகமும் போர் முறையும் இங்கிருந்துதான் வகுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

    சுற்றியுள்ள ஊர்களின் பெயர்களும் இராமாயண நிகழ்ச்சிகளுடன் மிகவும் ஒத்துப் போகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். பம்பா ( பம்பாசுரன்) என்னும் அணைக்கட்டு ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள அனே கொண்டாவிலும், ரிஷ்யமுகம்’ எனப்படும் குன்று இங்கேயும், ‘மாதங்கபர்வதம்’ ஹம்பேயின் அருகிலும் இருக்கிறது.

    துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஒரு குகையில்தான் சீதாபிராட்டியின் நகைகள் சுக்ரீனவால் பாதுகாத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த வித்யாரண்யர் என்பவர் இந்த இடத்தில் தவமிருந்தபோது சரஸ்வதிதேவி பிரத்யசஷமானாராம். அவரிடம், ‘எனக்கு ஒரு ஹிந்து சாம்ராஞ்யத்தை ஸ்தாபிக்கும் ஆசையிருக்கிறது. அதற்குத் தங்கள் ஆசி வேண்டும்’ என்று கேட்டராம். அதற்கு சரஸ்வதி ‘இந்த ஜென்மத்தில் வேண்டாம், அடுத்த ஜென்மத்தில் செய்யலாம்" என்று சொன்னாராம். அதற்கு வித்யாரண்யர் பிடிவாதமாக, இந்த ஜென்மத்திலிலேயே நிறைவேற வேண்டும்’ என்று வலியுறுத்த, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சரஸ்வதிதேவி ஆசி வழங்கி மறைந்து போனாராம்.

    பின்னர் வித்யாரண்யர் பெங்களுருக்கு அருகில் உள்ள ‘முல்பாகல்’ என்னும் ஊரிலிருந்து வந்த ஹரிஹரன் - புக்கர் ஆகிய இரண்டு பாளையக்காரர்களைச் சந்தித்து ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவும் பணியினை அவர்களிடம் ஒப்படைத்து ஆசிகள் வழங்கினாராம்.

    பிறகு நல்ல நேரம் பார்த்து தனது மடத்திலிருந்து சங்கை ஊதுவேன் என்றும் அந்த நேரத்தில் அஸ்திவாரப் பணியைத் தொடங்குங்கள் என்றும் வித்யாரண்யர் சொல்ல, அந்தப் புனிதமான நல்ல நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அதேவேளையில், அந்த வழியே சென்ற சில பிச்சைக்காரர்கள் - வழிப்போக்கர்கள் சங்கை ஊத, வித்யாரண்யர்தான் ஊதுகிறார். என்று எண்ணிக் கடைக்கால் வேலையைத் தொடங்க, பின்னர்தான் தவறு கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

    அதற்குள் காலம் கடந்துபோய், புனிதமில்லாத நேரத்தில் வேலை தொடங்கப்பட்டதால், இந்த சாம் ராஜ்யம் இருநுறு வருடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று வித்யாரண்யர் சொன்னது உண்மையாகிப் போனது.

    விஜயநகர சாம்ரஜ்யம் சங்கமா, துளுவா, அரவீடு ஆகிய வம்சாவளிகளினால் ஆளப்பட்டு வந்ததாகச் சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் துளுவா வம்சாவளியிலிருந்து வந்தவர். சுமார் ஏழு லட்சத்து முப்பதாயிரம் காலாட் படைகள், ஐந்நூறு ஐம்பது யானைப்படை, மிகப் பெரிய குதிரைப்படைகள் இவரிடம் இருந்ததால்தான் அனேகமாக எல்லா இஸ்லாமிய அரசர்களையும் முறியடிக்க முடிந்தது. கிருஷ்ண தேவராயர் சிற்பக் கலைக்கு மட்டுமல்லாமல் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய ஆதரவு நல்கினார்.

    வித்யாராண்யர் முன்பே சொன்னதுபோல மிகப்பெரிய விஜயநகர சாம்ராஜ்யத்திற்கும் ஒருநாள் முடிவு வந்தது. எப்பேர்ப்பட்ட முடிவு? அழிவு?

    1565-ஆம் ஆண்டில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் முறியடிக்கப்பட்டு இஸ்லாமியர்களால் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அத்தனை திருக்கோயில்களும் நிர்மூலமாக்கப்பட்டன. ஸ்வெல் என்னும் சரித்திர ஆசிரியர் சொல்கிறார்.

    "விஜயநகரரத்தின் அழிவு மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும், ஒரு நாடகப் பாணியில் காட்சி மாறுவதைப் போலவும் அமைந்திருக்கிறது. அழிவு வேலைகளில் ஈடுபட்டவர்கள் கைகளில் தீவட்டி, இரும்புத் தடிகள், கோடாரிகள், கத்தி கோடாரிகளுடன் அழிவு வேலையை முடித்துவிட்டு வெளியேறியதைக் காண முடிந்தது. அருமையான கலைப் பொக்கிஷங்களை உடைத்துத் தூளாக்கிவிட்டதால் வெறும் மண் மேடுகளாக இருக்கின்றன. 1565-ஆம் வருடம் யுத்தத்தில் ‘ரக்கசகி- தங்கடி’. யுத்தத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்த அத்தனை திருக்கோயில்களும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கின்றன.

    திருக்கோயில்கள் அனைத்தையும் நிர்மூலம் செய்து முடிக்க ஐந்து மாதங்கள் பிடித்ததோடு மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் - கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறார்கள். செத்த பிணங்கள் கூட இப்படிப்பட்ட படுகொலையைக் குறித்து அழுதிருக்கும். உலக வரலாற்றிலேயே இப்படிப்பட்ட சேத்தையும், அழிவையும் யாரும் பார்த்திருக்க முடியாது என்பதால்தான் சரித்திரப் பின்னணியை எழுத வேண்டியதாகியது."

    1520-ஆம் வருடம் விஜயநகரத்தைப் பார்வையிட்ட டொமின்கோஸ்பேக்ஸ் என்கிற போர்த்துக்கீசியர் இப்படிச் சொல்கிறார்:

    கூட்டம் நிரம்பிய அழகான கடைவீதிகள், அழகான வீடுகள்! மிகப்பெரிய வணிக வளாகத்தில் தங்கம், முத்து, வைரங்கள் விற்பனையுடன் குதிரைப்படை, யானைப் படைகளுக்கு தங்கத்தினால் செய்யப்பட்டு, வைரத்தினால் இழைக்கப்பட்ட முகபடாம்கள்! சீனா, அமெரிக்கவிலிருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த பட்டுத் துணிகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரைப் படைகளின் சேணங்கள் வெள்ளியினால் செய்யப்பட்டிருந்தன. அரசரின் தனிப்பட்ட சேனையில் 800 யானைகளும், 500 குதிரைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது, விஜயநகரச் செல்வச் செழிப்பைக் காட்டுகிறது.

    விஜயநகரத்தின் மிச்சங்களை ஹோஸ்பேட்டை புகை வண்டி நிலையத்திலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரத்திலுள்ள கமலாபுரத்திலிருந்து தொடங்க வேண்டியது அவசியமாகிறது.

    விஜயவிட்டலா திருக்கோயில்

    கோயிலின் வடபகுதியில் உள்ள தூண்களில் நரசிம்மரின் விதவிதமான லீலைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் விதவிதமான ஆடையலங்காரங்கள் செய்துகொண்டிருக்கும் பெண்களின் சிற்பங்கள அந்தக் கால நாகரித்தைப் பறைசாற்றுகின்றன. நர்த்தகிகள், மிருதங்கம் வாசிப்பவர்கள், கம்பத்தின் மேல பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட விதானங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விதானத்தில் தாமரை மொட்டுக்கள், தாமரை இதழ்கள், தாமரை மலரின்மீது மகரந்தங்கள்! சிறிய கிளிகள் அதன்மீது அமர்ந்திருக்கின்றன.

    கோயிலின் நடுப்பகுதியில் மிகப் பெரிய கூடம் ஒன்றும் உண்டு. அதில் கருங்கல்லால் ஆன மிகப்பெரிய ஆசனப் பலகைபோல கருங்கல்லால் ஆன வளையங்களும் உள்ளன. முன்பு இது ஒரு சங்கிலிபோல அமைந்திருந்தது. சிதைவுகளின் காரணமாக ஓரிரு வளையங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

    திருக்கோயிலின் முன்பாகத்தில் ஒரு திருமண மண்டபம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப் பட்டிருக்கிறது. திருக்கோயிலின் மண்டபம் ஐம்பத்தாறு அழகான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த தூண்களைத் தாங்கி நிற்கின்றன. மிருகங்கள், பறவைகள், பூக்கள் ஆகிய சிற்பங்கள் இந்த ஐம்பத்தாறு தூண்களையும் அழகு செய்கின்றன.

    படிகளின் ஆரம்பத்தில் இரண்டு யானைகளுடன் திருமண மண்டபத்தின் அருகில் முதலைகளின் சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன. ஐம்பத்தாறு தூண்களிலும் தசாவதாரக் காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கிறது. நர்த்தன சாலையின் தூண்கள் மிக மெல்லியதாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாதத்தை உடையதாகவும் இருக்கிறது.

    அதன் அருகில் மிகப் பெரிய கருங்கல்லினால் ஆன ரதம் ஒன்று நிற்கிறது. நுணுக்கமான வேலைப்பாடுகள் கண்களைக் கவருகின்றன. இதன் முக்கியமான அம்சம், இந்த ரதத்தின் சக்கரங்கள் சுழலும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. ரதம் சில இடங்களில் உடைந்ததும் காணப்படுகிறது. கீழே இருக்கும் யானையின் துதிக்கை சிதைந்திருக்கிறது. இது விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிற்பக்கலையின் சிகரமாகக் கருதப்படுகிறது.

    இந்தத் திருக்கோயிலின் மூலவர்களான விஜயவிட்டலர், ருக்மிணி இரண்டு மூலத் திருமேனிகளையும படையெடுப் பின்போது மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்திவிட்டார்கள். அவை தற்போது மஹாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பண்டரிபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    முந்நூற்றுப் பத்து அடி அகலமும், ஐந்நூறு அடி நீளமுமாகக் கொண்ட இந்த ஆலயத்தில் மூன்று மூன்று சிறிய தூண்கள் அடங்கிய ஒரு தூணாக ஐம்பத்தாறு தூண்கள் தாங்க நிற்கின்றன. கிழக்கு, தெற்கு, வடக்கு என்று மூன்று கோபுரங்களும் வாசல்களும் இருக்கின்றன. இருபத்தைந்து அடி கர்ப்பக்கிரஹமும் அர்த்த மண்டபம், மஹா மண்டபமும் மிக முக்கியமான பகுதிகள்.

    மிகப் பெரிய மஹா மண்டபம் பூமியின் மட்டத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மஹாமண்டபத்தின் ஒவ்வொரு கம்பமும் பன்னிரண்டு அடி உயரத்தில் கருங்கற்களால் மிக அழகான நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறது. கல்யாண மண்டபமும், அதன் தூண்களும் மஹா மண்டபத்தைப் போலவே இருக்கின்றன.

    திருக்கோயிலின் சுற்றுப்புறச் சுவர் இருபத்து நான்கு அடி உயரத்தில் இருக்கிறது. கர்ப்பக்கிரஹம், அம்பாள் சன்னிதி, கல்யாண மண்டபம் இவை இத்துடன் இணைந்துள்ளன. பிராகாரத்தில் சின்னச் சின்னக் கோயில்கள் உள்ளன. மண்டபத்தின் மத்ய பாகத்தில் மிகப்பெரிய நான்குக் கம்பங்கள் உள்ளன. அனைத்துமே மிகவும் கச்சிதமான கணித எல்லைக்குக் கட்டுப்பட்டதாக இருப்பது வியப்பிற்குரியது.

    விமானம், கோபுரம் இரண்டும் வெவ்வேறு கட்டடக் கலைகளை அடிப்படையாகக் கொண்டவை. தளம் மட்டும் மிகப்பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1