Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Onbadhu Uyirgal
Onbadhu Uyirgal
Onbadhu Uyirgal
Ebook73 pages51 minutes

Onbadhu Uyirgal

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111002915
Onbadhu Uyirgal

Read more from Arnika Nasser

Related to Onbadhu Uyirgal

Related ebooks

Reviews for Onbadhu Uyirgal

Rating: 3 out of 5 stars
3/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 3 out of 5 stars
    3/5
    N o t b a d s t o r y

Book preview

Onbadhu Uyirgal - Arnika Nasser

http://www.pustaka.co.in

ஒன்பது உயிர்கள்

Onbadhu Uyirgal

Author:

ஆர்னிகா நாசர்

Arnika Nasser

For more books

http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

***

1

டியாரா ராஜ்குமார் பாத் டப்பிலிருந்து குதித்து எழுந்தான். எலக்ட்ரிக் ஷேவரால் முகத்திலுள்ள ரோமப்புள்ளிகளை அறுவடை செய்தான்.

பூத்துவாலையை இடுப்பில் கட்டிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டான்.

ஹீட்டர் வைத்து தலைக் கேசத்தை உலர்த்தினான். தூய வெள்ளை நிறத்தில் ஃபுல்சூட் அணிந்து கொண்டான்.

புரூட் நறுமணத்தை உடலில் பீய்ச்சிக் கொண்டான்.

படுக்கையறைக் கதவைத் திறந்து கொண்டு ஜெருஷாவும் ஜூனியரும் வெளிப்பட்டனர்.

ஜூனியரும் டியாராவைப் போல வெள்ளை நிற ஃபுல் சூட்டில் இருந்தான்.

என்ன ஒற்றுமை அப்பாவுக்கும் மகனுக்கும் உங்களைப் பார்க்காமலேயே இவனும் ஒயிட் கலர் சூட் தான் அணிவேன்னு அடம் பிடிச்சான்.

அபிநயித்தாள் ஜெருஷா.

கையில் இரண்டு ரோஜா மலர்களைக் கொண்டு வந்திருந்தாள்.ஒன்றை டியாரா கோட்டிலும், இன்னொன்றை ஜூனியர் கோட்டிலும் செருகினாள்.

அழகிய மகனை உன்னித்தான் டியாரா. தந்தை மாதிரியே மேனரிசம் செய்தான் ஜூனியர் சந்தோஷம் பொங்கினான் டியாரா.

நிலா பய்யர!

என்ன டாடி?

பாராட்டு விழா உனக்கா எனக்கா?

நமக்கு டாடி

நல்ல பதில் பொழச்சுப்பேடா..!திரும்பி ஜெரு நீ என்ன கலர் பட்டுப் புடவை கட்டிட்டு வரப்போறே.?

சிரித்தாள்… நீங்களே சொல்லுங்களேன்!

கிளிப் பச்சை நிறப் பட்டுப்புடவை கட்டு: அமர்க்களமாக இருக்கும். தன்னறைக்குப் போனாள் ஜெருஷா.

நகர்ந்து அந்த அறை பார்வையில் தெரிய நின்று கொண்டான் டியாரா.

விழா எத்னி மணிக்கு!

ஷார்ப் சிக்ஸ் ஓ க்ளாக். எங்களுக்கு விருது வழங்கும் டைட்டன் நிறுவனம் பயங்கரமா பங்க்ச்வாலிட்டி கீப் அப் பண்றது. நாம் அஞ்சே முக்காலுக்கெல்லாம் அங்க. இருக்கணும்!

ரத்த நிற ஸியெல்லோ காரில் கிளம்பினர்.

ஸியெல்லோ அண்ணா சாலையில் இருந்து இடப் பக்கம் திரும்பியது.

ராணி சீதை ஆச்சி ஹால் ராஜஸ்தானி மணப்பெண் போல அலங்காரம் செய்திருந்தது. கட்டடம் முழுவதும் மின் பழங்கள்.

வெளிவாசலில் வாழை மரத் தோரணங்கள்

டைட்டன் சிறப்பு விருந்தினரை நெஞ்சார வரவேற்கிறது! என்ற வாசகம் வரவேற்றது.

காரிலிருந்து இறங்கிய டியாரா, ஜெரு, நிலாவை டைட்டன் நிர்வாகி வரவேற்றார்

சிசப்ஷன் பெண்கள் பன்னீர் தெளித்து ரோஜா நீட்டினர்.

உள் அரங்கத்தில் 500 பாலிமர் சேர்கள்.

மேடை புரூனே தனமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆங்காங்கே டைட்டனின் எம்பளம்.

விழாவை தொகுத்தளிக்க சன் டி வி.யின் உமாமகேஸ்வரி வந்திருந்தார்.

முதல் வரிசையில் ஜெரு, ஜூனியருடன் அமர...

டியாரா மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

மேடையில் ஆறு சிம்மாசன வடிவ சேர்கள். நடு சேர் டைட்டனின் ரீஜனல்

Enjoying the preview?
Page 1 of 1