Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puyalai Oru Punnagai
Puyalai Oru Punnagai
Puyalai Oru Punnagai
Ebook212 pages1 hour

Puyalai Oru Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352853274
Puyalai Oru Punnagai

Read more from Arnika Nasser

Related to Puyalai Oru Punnagai

Related ebooks

Reviews for Puyalai Oru Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puyalai Oru Punnagai - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    புயலாய் ஒரு புன்னகை!

    Puyalai Oru Punnagai!

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    தினமலர் - வாரமலர் ஆசிரியர் திரு S. ரமேஷ் அவர்கள் காரைக்காலிலுள்ள ஒரு குடும்பநல ஆலோசனை மையத்தின் முகவரியை அளித்தார். மையத்தின் ஆலோசகராகப் பணிபுரியும் செல்வி. லதா மூலம் கணவன் – மனைவி பிரச்சனைகளை முழுமையாக ஆராயச் சொன்னார். நானும் காரைக்கால் போய் லதாவைச் சந்தித்தேன். ஏராளமான கேஸ்களை அலசினேன். எத்தனை மோசமான கணவன்மார்கள்?

    வாரமலரில் உண்மைக் கதைத் தொடர் பண்ண எண்ணியிருந்தபோது திரு. லேனா கல்கண்டில் ஒரு தொடர் பண்ணச் சொன்னார். வெறும் க்ரைம் வேண்டாம். 90 சதவீதக் குடும்பத் தொடர் வேண்டும் என்றார். வாரமலருக்குத் தயாரித்தது கல்கண்டுக்குத் தொடராயிற்று. பயந்து கொண்டே நான் எழுதினேன். தொடர் பெண்களிடையே மிகப் பெரிய வெற்றி பெற்றது.

    "புயலாய் ஒரு புன்னகை தொடரை வெளியிட்ட லேனா சாருக்கும், தொடருக்கு ஒவியம் வரைந்த ராமு சாருக்கும், தொகுப்பாக்கும் 'வானதி' திருநாவுக்கரசு சாருக்கும், இந்நூலை வெளியிடும் கங்கை புத்தக நிலையத்தாருக்கும் நன்றி.

    இந்தத் தொகுப்பு செல்வி லதாவுக்கு சமர்ப்பணம்.

    என்றென்றும் அன்புடன்

    ஆர்னிகா நாசர்

    1

    இலட்சம் மிஸ். ஆப்பிரிக்காக்களின் கூட்டணியாய்ப் பளபளத்தது விடியல் வானம். இரவுப் பெண் பகல் சமுத்திரத்திற்குள் தலைகீழாய்க் குதித்திருந்தாள். கணுக்கால் மட்டும் தெரிந்தது. ஒலி அசுத்தமில்லாத நிர்மா சுத்தக் காற்று மண்டலம் உடலில் தத்தித் தவழ்ந்தது. குயில் புல்லாங்குழல் வாசித்தது போலக் காற்று இனித்து இழைந்தது. கிழக்கு வானில் ரத்த ரகளை வெடிக்க நாலு நிமிடங்கள் பாக்கியிருந்தன. பால் பூத் தேடிப் பெண்கள் நடக்க ஆரம்பித்திருந்தனர். பேப்பர் போடும் மொபெட் பையன்களின் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. ஐந்து சதவீத வீடுகளில் வாசல் கூட்டும் பெண்கள் துடைப்பத்தை வைத்துக்கொண்டு 'ஸ்யாம்' தனமான தூரிகைச் சாகசம் நிகழ்த்தினர். நீர் தெளிப்பில் ஜலதரங்க ஜாலம் தெறித்தது.

    படுத்திருந்த ஸ்நேகிதா மனோரஞ்சித மலர்ச்சியாய் எழுந்தாள்.

    ஸ்நேகிதா!

    ஸ்நேகிதா இருபத்து மூன்று வயது முடிந்த ஒரு மங்கோலிய நிலவு.

    சராசரி உயரம் மீறிய ஒரு கிரானைட் கனவு.

    அவளின் சீர்ப்படுத்திய தலைக்கேசம் நடுமுதுகுடன் முடிந்திருந்தது.

    முகத்தின் இரு பக்கமும் நயாகரா செய்த போனஸ் கொத்து கேசங்கள் காற்றில் நர்த்தனமாடின.

    காம்பஸ் வைத்து வரைந்தாற் போன்ற வட்ட முகம்.

    இரு அழகிய அகலக் கண்களில் பாரதி பாரதி.

    இடைவிடாத தியான உபயத்தில் நுனி பளபளக்கும் கச்சித மூக்கு.

    மேற் வரிசைப் பற்களின் நடுவே சிறு இடைவெளி, வாய்ப் பகுதிக்கு வினோத அழகு கூட்டியது. மேல் உதடு மெலிந்தும் கீழ் உதடு தடித்து நாவல் நிறத்திலும் ஈரம் பளபளத்தது. சங்குக் கழுத்தில் அழகிய மச்சம்.

    கைகால் நகங்களைக் கச்சிதமாய்ச் சீர்ப்படுத்தியிருந்தாள்.

    எழுந்த படுக்கையில் அமர்ந்து முப்பது நிமிடங்கள் தியானம் செய்தாள்.

    கொல்லைக் கதவைத் திறந்து கொல்லைப் பக்கம் போனாள்.

    முருங்கை மரம் விழித்திருந்து வரவேற்றது.

    தலையைக் கவிழ்த்து வானத்தைப் பார்த்தாள்.

    இரவு வானம் எத்தனை அழகிய குடை?

    எத்தனை கோடி கோடி வைரங்கள் பதிக்கப்பட்ட ராட்சசக் குடை!

    வானப் பெண்ணுக்கு நட்சத்திரங்கள் என்ற பெயரில் இத்தனை இமைகளா?

    இடைவிடாது இவை இமைத்து நமக்குச் சொல்லும் ரகசியம் என்ன?

    பேசாமல் சூரியனை உதிர்த்துவிட்டு நிலாவோடு சந்தோஷமாய் வாழ்வோமா?

    கவிழ்த்த தலையை நோக்கி யதார்த்தத்துக்கு வந்தாள் ஸ்நேகிதா.

    போன வருடம்தான் சிறுமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் காந்தி கிராமம், கிராமியப் பல்கலைக் கழகத்தில் முதுகலை உளவியல் படித்து முடித்திருந்தாள் ஸ்நேகிதா. இளங்கலையும், முதுகலையும் சேர்த்து ஐந்து வருடம் அங்கே படித்ததில் எத்தனை எத்தனை இனிய அநுபவங்கள்!

    விஜி என்கிற விஜயலட்சுமியுடனும் சுந்து என்கிற சுந்தருடனும் அடர் நட்பாய்க் கூடிக் களித்தது ஒரு நிலாக் காலம்.

    விஜியின் ஊரான ஊத்துப்பட்டியின் திராட்சைத் தோட்டங்களில் நரிபோல் புகுந்து விளையாடியது ஞாபகமானது.

    மூவரும் பிரிந்தபோது கண்ணீர்க் கடல் கழுத்து வரை உயர்ந்ததே!

    ஒவ்வொரு லீப் வருடமும் 29-ஆம் தேதி காந்தி கிராமத்தில் சந்தித்துக் கொள்வோம் என முடிவெடுத்திருந்தனர்.

    இன்று ஸ்நேகிதாவுக்கு இரட்டை விசேஷ நாள்.

    முதலாவது, இன்று முதல் பிப்ரவரி 29. விஜியையும் சுந்துவையும் சந்திக்க வேண்டிய தங்க நாள்.

    இரண்டாவது, குடும்பநல ஆலோசகர் பதவியில் போய் அமரச் சொன்னது அரசாங்க ஆணை. பணியிடம் சென்னை குடும்பக் கோர்ட் வளாகம்.

    காந்தி கிராமம் போவதா? இல்லை, பணிக்குப் போய் 'ஜாயினிங் ரிப்போர்ட் கொடுப்பதா? பின்னதுதான் சரி எனப் பல நிமிடம் யோசித்து முடிவுக்கு வந்தாள் ஸ்நேகிதா.விஜிக்கும் சுந்தருக்கும் இயலாமையைத் தெரிவித்துக் கடிதம் போடுவோம். பின்னொரு நாளில் சந்திக்க முடிவு செய்வோம்!

    ஸ்நேகிதா குளித்துப் புத்தாடை உடுத்தித் தலை வாரித் தயாரானாள்.

    அவளது அறைச் சுவர்களில் மீசை பாரதி, லெனின், ரஜ்னீஷ், காந்திஜி, விவேகானந்தர் புகைப்படங்கள் காணப்பட்டன.

    ஸ்நேகிதாவின் அப்பா அவளது அறைக்குள் பிரவேசித்தார்.

    அவர் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர். பழமைவாதி. ஆணாதிக்க உணர்வு கொண்டவர்.

    திரும்பினாள்: என்னப்பா?

    இந்த பேமிலி கோர்ட் கவுன்ஸல்லர் பதவி உனக்குத் தேவைதானா?

    ஏன் அந்த வேலைக்கென்னப்பா?

    நீயே ஒரு கல்யாணமாகாத சின்னப் பொண்ணு. நீ போய்ப் புருஷன் பொண்டாட்டிப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கப் போறியாக்கும்? பேசாம அந்த ஆர்டரைக் கிழிச்சுப் போடு. வேற நல்ல வேலை நான் வாங்கித்தரேன்!

    எதிர்மறையாய்த் தலையாட்டினாள் ஸ்நேகிதா.

    பிரச்னைகளைத் தீர்த்துவைக்கப் புத்திக் கூர்மையான அணுகுமுறையும் மனிதநேயமும் போதும். என் கனவுப் பணி இது. எத்தனையோ வீறுநடை போடும் பெண்கள் தடுக்கி விழுவது திருமண பந்தத்தில்தான். என்னால் முடிந்த அளவு திருமண உறவுகளைச் செழிக்க வைக்கப் போகிறேன்.

    மேகங்களில் நடக்காதே. பூமியில் நட . அவமானப்படுத்தப்பட்டு இரண்டே நாளில் திரும்பி வருவாய்!

    எதிர்பார்ப்புக்கு நன்றி!

    பேச்சுக்குப் பேச்சு வாயாடுறியேம்மா… தகப்பனோட பேச்சுக் கேக்காம!

    சில சமயம் சம்பிரதாயங்களை உடைத்தால்தான் புதியவற்றைச் சாதிக்கமுடிகிறது!

    இவ்வளவு சொல்லியும் நீ கேக்கல. உன் இஷ்டம் போலப் போய்ட்டு வா!

    அப்பா வெளியேறினார். தூரத்தில் அம்மா சமிக்ஞையில் ஆசீர்வதித்தாள்.

    ஸ்நேகிதா தனது ஆடைகளைச் சூட்கேஸில் கவனமாக அடுக்கினாள். பெரிய துணிப் பையில் புத்தகங்களைத் திணித்தாள்.

    அப்பா போனவுடன் அம்மா ஓடி வந்தாள்.

    எங்கேடி தங்குவ?

    ஹாஸ்டல் கீஸ்டல் இருக்கும். பாத்துக்கிறேன்!

    சாப்பாடு?

    என்னைக்கும்மா ருசி பாத்துச் சாப்பிட்டேன்? பசிக்கு எது கிடைத்தாலும் சரி!

    இந்தாம்மா இருநூறு ரூபாய்!

    வேணாம்மா… பேங்க்ல சேத்து வைச்சிருந்த பணத்துல தேவைக்கு எடுத்துட்டேன். ஆயிரத்து ஐநூறு இருக்கு, போதும்!

    அம்மா அழுதாள். உங்கப்பாவின் சர்வாதிகாரத்துக்கு இடையே என்னோட ஒரே ஆறுதல் நீதான். நீயும் என்னை விட்டுப் போறியேம்மா!

    பேசாம என்னோட வந்திடேன்!

    உங்கப்பா விடமாட்டார். போன உடன் கடிதம் போடும்மா. உடம்பப் பத்திரமாய்ப் பாத்துக்க, தரகர்கிட்டே சொல்லிருக்கேன். நல்ல வரன் வந்தா உன் திருமணம் உடனே முடிச்சிற வேண்டியதுதான்.

    திருமணம் செஞ்சிக்க விருப்பமில்லை. இந்த மண்ணுக்கு முழுமையா ஏதாவது செஞ்சாகணும்மா.

    அம்மா மெளனித்தாள்.

    அம்மாவின் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டாள் ஸ்நேகிதா.

    ஸ்நேகிதா புறப்பட்டாள்.

    அப்பா தினசரிக்குள் தீக்கோழியானார்.

    அம்மா ஸ்டேஷன் மாஸ்டர் போல் தீவிரமாய்க் கையாட்டினாள். மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சென்னையில் காலடி வைத்தாள் ஸ்நேகிதா.

    ஒரே காம்பவுண்டுக்குள் காவல் நிலையமும் குடும்ப நீதிமன்றமும் குடும்பநல ஆலோசனை மையமும் இருந்தன.

    டி.எஸ்.பி. ராமையாவின் அறைக்குள் புகுந்தாள் ஸ்நேகிதா. தொப்பியைக் கழற்றி மேஜையில் வைத்திருந்தார். வகிடு இல்லாத அடர்த்தி குறைந்த நரை கேசம். கம்பளிப் பூச்சிப் புருவங்கள். ஹிட்லர் மீசை. வெற்றிலைப் பாக்கு போட்டுப் போட்டுச் சிவந்த வாய்.தெய்விகப் புன்னகை உறைந்த முகம்.

    எழுந்து வரவேற்றார். வாம்மா… நீதான் ஸ்நேகிதாவா? கிளாட்டு டூ மீட் யூ!

    கை நீட்டினார். சங்கோஜமில்லாமல் கை குலுக்கினாள்.

    சர்டிபிகேட்களையும் ஆர்டரையும் நீட்டினாள்.

    சில நிமிடங்கள் சர்டிபிகேட்டை மேய்ந்தார்.

    எத்தனையோ பேர் வந்து ஒரு வாரம் கூட வேலை பாக்க முடியாம ஓடியிருக்காங்க… நீ எப்படி?

    நான் ஓடமாட்டேன். பிரச்னைகளைத்தான் ஓட வைப்பேன்!

    ராமையா புன்னகைத்தார்.

    உன்னோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ நிச்சயம் ஜெயிப்பாய்!

    நன்றி சார்!

    என்ன சார் சார்ன்ற? நான் போலீஸ் ஜாதியிலிருந்து வெகுவா விலகின மனிதாபிமானி உனக்குப் பிடிச்ச மாதிரி எப்படி வேணாலும் கூப்பிட்டுக்க!

    ராமையாவை அழுத்தமாய்ப் பார்த்தாள்.

    அன்புக்கு ஏங்கும் மனிதர்.

    உங்களுக்கு எத்தனை பசங்க?

    நான் கல்யாணமே பண்ணிக்கல. நான் ஒரு ஆஞ்சநேய பக்தன், பறவை வளர்ப்பே என் பொழுது போக்கு. என் சம்பளப் பணம் முழுவதையும் பறவைகளுக்கே செலவு செய்றேன். ஆயிரம் விஞ்ஞான வசதிகள் பெற்றாலும் நாம் பறவைகளுக்கு ஈடாகமாட்டோம். அடுத்த பிறவியில் கடவுளிடம் வேண்டி ஒரு குருவியாகப் பிறக்க ஆசை.

    உறவு முறைகள்ல ரொம்ப ரொம்ப உரிமையானது தாத்தா உறவு. பேசாம உங்களை டி.எஸ்.பி. தாத்தான்னு கூப்பிடவா?

    ராமையா சிரித்துவிட்டார்.

    தாத்தான்ன உடனே எனக்கு எண்பது வயசான மாதிரி ஒரு ஃபீலிங். சரி, கூப்ட்டுக்க… கேஸ்களை டீல் செய்யும்போது என் உதவி தேவைப்பட்டா தயங்காம அணுகு. ஐ வில் ஹெல்ப் யூ!

    ஓகே தாத்தா!

    ஆள் அனுப்புகிறேன். உன் ஆலோசனை மையத்துக்கு நீ போகலாம் ஸ்நேக்!

    பேர்ச் சுருக்கிட்டீங்களா? இப்படித்தான் என் ப்ரண்ட்ஸ் கூப்டுவாங்க!

    புறப்பட்டாள்.

    மூன்று கட்டிடங்கள் தாண்டி ஆலோசனை மையம் இருந்தது.

    15'X10' செவ்வக அறை. பக்கத்தில் ஒரு குட்டி அறை. அதில் ஸ்நேகிதாவுக்காக ஒரு பெண் உதவியாளர் இருந்தாள். தவிர, ஒரு அட்டென்டரும் இருந்தான்.

    தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் ஸ்நேகிதா.

    உதவியாளர் ஓடிவந்தாள், வணக்கம்மா… என் பேரு வனிதா… நங்கநல்லூர் வாசி!

    புன்னகைத்தாள் ஸ்நேகிதா.

    பீரோவைத் திறந்து அனைத்து பைல்களையும் எடு!

    வனிதா எல்லாக் கோப்புகளையும் மேஜையில் இட்டாள்.

    'பெண்களுக்கு எதிரான குற்றங்கள்' புத்தகமும், 'உங்கள் உரிமைகளை

    Enjoying the preview?
    Page 1 of 1