Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kan Kavarum Kalai Koyilgal
Kan Kavarum Kalai Koyilgal
Kan Kavarum Kalai Koyilgal
Ebook193 pages1 hour

Kan Kavarum Kalai Koyilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"Jeya Venkatraman" has written many books about temples in India and America. He has translated a famous Kannada book-"Aavarana", written by S.L.Bhyrappa.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851560
Kan Kavarum Kalai Koyilgal

Read more from Jaya Venkatraman

Related to Kan Kavarum Kalai Koyilgal

Related ebooks

Related categories

Reviews for Kan Kavarum Kalai Koyilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kan Kavarum Kalai Koyilgal - Jaya Venkatraman

    http://www.pustaka.co.in

    கண் கவரும் கலைக் கோயில்கள்

    Kan Kavarum Kalai Koyilgal

    Author:

    ஜெயா வெங்கட்ராமன்

    Jaya Venkatraman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அஜந்தா குகை ஓவியங்கள்

    2. ஏல்லோரா சிற்பங்கள்

    3. ப்ரயாகை மூன்றடுக்குத் திருக்கோயில்

    4. புதுதில்லி சுவாமி

    5. கவின்மிகு ‘கஜுரஹோ’

    6. திருமயம் சத்யகிரீஸ்வரர்-

    7. சிந்தை கவரும் சித்தன்னவாசல்

    8. திரிவேணி சங்கமம் - பாதாள

    9. லாண்டூர் முதல் ரிஷிகேஷ் வரை

    10. கத்ரி மஞ்சுநாதர் திருக்கோயில்

    11. மதுரா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்

    12. மறக்கப்பட்ட சாம்ராஜ்யமும்

    13. சிவகெங்கை மலைக்கோயில்கள

    14. ஆடிப்பூரத்தில் அவதரித்தவள

    15. மீராவும் சூடிக்கொடுத்த நாச்சியாரும்

    1

    அஜந்தா குகை ஓவியங்கள்

    அஜந்தா – எல்லோரா குகைகள் சிற்பங்களுக்கும் சித்திரங்களுக்கும் பெயர் போனவை. அஜந்தா – எல்லோரா என்று இணைத்தே சொல்லப்பட்டாலும். இவை இரண்டும் வெவ்வேறு இடங்களில் உள்ளன. மஹாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் உள்ள இந்தக் கலைப் பொக்கிஷங்கள் உலகப் புகழ்பெற்றவை.

    சென்னை பெங்களுர் மற்றும் மும்பையிலிருந்து தில்லி செல்லும் ‘மன்மாட்’ சந்திப்பின் வழியாகத்தான் செல்லுகின்றன. மன்மாட் ரயில் நிலையத்தியிலிருந்து ஒளரங்காபாத்திற்கு ரயில்கள், பேருந்துகள் நிறையச் செல்கின்றன. ஒளரங்காபாத்திலிருந்து 109 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சரித்திரப் புகழ் பெற்ற அஜந்தா!

    அஜந்தாவில் சித்திரங்கள் மட்டுமல்லாமல் குடைவரைக் கோயில்களும் உள்ளன. எல்லோராவில் குடைவரைக் கோயில்களும், சிற்பங்களும் மட்டுமே! இங்கு முழுவதும் புத்தமத சம்பந்தப்பட்ட சித்திரங்கள் சிற்பங்கள் உள்ளன.

    மஹாராஷ்டிர அரசு இயக்கும் சுற்றுலாப் பேருந்து ஒளரங்காபாத் ஸ்டேஷன் சாலையிலிருந்து (அலுவலகம்) காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்புகிறது. மாலை 6 மணிக்குத் திரும்பவும் ஒளரங்காபாத் வந்துவிட்டால் மறுநாள் திரும்பவும் அதே நேரத்தில் எல்லோரா குகைக் கோயில்களையும் பார்த்துவிட்டுத் திரும்பலாம்.

    ஒரு குறிப்பிட்ட தூரம் வரையில்தான் சுற்றுலாப் பயணிகளின் பேருந்தும் மற்றவைகளும் செல்கின்றன. அங்கிருந்து குளிர்சாதன வசதி அமைக்கப்பட்ட பேருந்தில் 4 கி.மீ. தூரம் 10 ரூபாய் கட்டணத்தில் பயணிக்க வேண்டும். குகைகளின் முகப்பு வரை பேருந்தும் செல்கிறது. அங்கிருந்து 26 குகைக் கோயில்களையும் நடந்துசென்றுதான் பார்க்க வேண்டும். நடக்க இயலாதவர்களுக்கு ‘டோலி’ வசதியும் இருக்கிறது. நுழைவு வாயிலின் பாலத்தின் கீழே ‘வஹோரா’ நதி ஓடுகிறது. நதியின் மேற்புறம் ‘சையாத்ரி’ மலை. இந்த மலையில்தான் அஜந்தா கலைக்கூடம் அமைந்துள்ளது.

    இங்குள்ள சித்திரங்கள், சிற்பங்கள் அனைத்தையும் புத்தசன்யாசிகளே வடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 7-ஆவது நூற்றாண்டின் இறுதியில் புத்தமதம் பிறந்த மண்ணிலேயே மறையத் தொடங்கியதால் இந்தக் குடைவரை விகாரைகள், சித்திரங்கள், சிற்பங்கள் கவனிப்பாரற்றுக் கானகத்திற்குள் மறைந்துபோயின. புலிவேட்டைக்கு வந்த மேஐர் ஜான் ஸ்மித்தும் அவரது கூட்டாளிகளும்தான் இக்கலைப் பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தனர்.

    இவை அனைத்தையும் வடிவமைத்த புத்த சன்யாசிகள் ஒருபுறம் பெண்களின் அழகையும் இன்னொருபுறம் போதிசத்துவரின் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் சித்திரமாக வரைந்திருக்கும் நேர்த்தியை எப்படிப் பாராட்டுவது?

    குகைகள் 1இ2, 16, 17, 19-இல் அற்புதமான சித்திரங்களும், 1இ4, 17, 19, 24, 26- ஆவது குகைகளில் மனம் கவரும் சிற்பங்களும் நம்மை திக்குமுக்காடச் செய்கின்றன.

    குகைகள் 9, 10, 19, 26, 29 ஆகியவை புத்த சன்யாசிகளின் ‘சைத்யா’ எனப்படும் தங்குமிடங்கள். இந்த அறைகளில்தான் புத்த சன்யாசிகள் தங்கி வழிபாட்டுடன் சிற்ப சித்திரவேலைகளையும் செய்திருக்க முடியும். ‘சைத்யா கூடங்கள்’ கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. எஞ்சிய வழிபாட்டுத்தலங்கள் எனும் ‘விகாரைகள்’ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 5-ஆவது, 6-ஆவது நூற்றாண்டில் ‘மஹாயான’ வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    சித்திரங்கள் உள்ள குகைகளில் புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. ஓரளவுக்கு இயற்கையாக வெளிச்சம் இருந்தாலும் வழிகாட்டியின் கையில் உள்ள ‘டார்ச்’ விளக்கின் உதவியினால்தான் சித்திரங்களைக் காண முடிகிறது. 1, 2, 16, 17, 20 குகைகளின் உள்ளே பிரத்யேக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. விளக்குகளை இயக்கத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    ஒழுங்கற்ற கருங்கல் சுவர்மீது முதலில் களிமண் சாணம் நெல் உமி போன்றவைகள் கலந்த கலவையைப் பூசி ஒழுங்கான சமதளமாக்கயுள்ளனர். 11ஃ2 செ.மீ. கனத்திற்குக் கலவை பூசப்பட்ட சுவரின் மீது மீண்டும் சுண்ணாம்பைப் பூசி வழுவழுப்பான சுவர் மீது தூரிகை கொண்டு கோட்டோவியங்கள் வரைந்து பின்னர் அதில் வண்ணம் தீட்டியுள்ளனர். இதில் உபயோகப்படுத்தப்பட்ட அத்தனை வண்ணங்களும் இயற்கைப் பொருள்களே!

    ஒவ்வொரு குகையின் சுவரிலும் புத்தர் பிரானின் பிறப்பிலிருந்து தொடங்கி, ‘ஜாதகக்’ கதைகள், சாதாரண மனிதர்கள், அரசர்கள், விலங்குகள் ஆகியவற்றின் சித்திரங்களட அமைந்துள்ளன.

    முதலாவது குகை 5-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தது. அழகாக அலங்கரிக்கப்பட்ட இந்தக் குகையின் முகப்புச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. 64 சதுர அடியில் அமைந்துள்ள இந்தக் குகையில் நடுநாயமாக பத்மாசனத்தில் அமர்ந்து உபதேசிக்கும் புத்தர் பிரானின் மிகப்பெரிய திருமேனி நம்மை மலைக்க வைக்கிறது. ஒரே தலை நான்கு உடல்களுடன் உள்ள ஒரு மானின் சித்திரம் விதவிதமான வடிவத்தில் காட்சியளிக்கிறது.

    சலபஞ்சிகா ஆம்ரபாலி ஆகியோரின் சிற்பங்கள் புத்தரின் திருமேனி அருகே காணப்படுகின்றன. தலையில் வேலைப்பாடமைந்த அழகான கிரீடம் அணிந்து கையில் தாமரை மலருடன் காணப்படும் பத்மபாணியின் ஓவியம் இங்குதான் உள்ளது. சற்றே தலை சாய்த்துக் கீழ்ப் பார்வையுடன் அரைக்கண்கள் மூடிய நிலையில் பின்புறம் அரசியுடன் காட்சியளிக்கும் சித்திரம் உலகப் புகழ்பெற்றது. இதன் வலப்புறத்தில் குரங்குகள், மயில்கள், வாத்துகள் போன்றவைகளின் சித்திரங்களுடன், காட்டெருமையின் சித்திரம் உலகப் புகழ் பெற்ற ‘மோனாலிசாவின்’ சித்திர நுட்பத்துடன் ஒப்பிடும் வகையில் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நம்மைத் தயாராக இருப்பதுபோலத் தோன்றுகிறது. மேலும் சண்டை போடும் யானைகள் சித்திரையும், இந்திய சுற்றுலாத் துறையின் இலச்சினையாக வைக்கப்பட்டுள்ள யானையின் சித்திரத்தையும் காணலாம். இந்தக் குகையில் சிற்ப வேலைப்பாடமைந்த பதினெட்டுத் தூண்கள் காணப்படுகின்றன.

    சிபிச் சக்கரவர்த்தியடம் அடைக்கலம் புகுந்த புறா, அதை விரட்டி வந்த பருந்து, புறாவைக் காக்க தனது உடலின் சதையின் ஒரு பகுதியை வெட்டிக் கொடுக்கும் மன்னரின் வலது கையில் துலாக்கோல் என்று பெரிய கதையை நேரில் பார்ப்பது போன்று சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஜாதகக் கதை நிகழ்ச்சிகள் இங்கு ஏராளம் உள்ளன. அருகில் உள்ள சுவரில் புத்தர் பிரானுக்கு ஏழு தேடல்களுக்குப் பின் ஞானம் பிறந்த காட்சி ஆகிய சித்திரங்கள் மெய்மறக்கச் செய்கின்றன.

    இரண்டாவது குகை, ஆறாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. இந்தக் குகையும் வடிவமைப்பில் முதல் குகையினை ஒத்திருக்கிறது. கூடத்தின் 3-ஆவது அறையின் நிலைப்படியின் மேற்பகுதியில் போதி சத்துவரின் திருமேனியின் அருகில் புத்தர் பிரானின் பிறப்பு சம்பங்கள் காணப்படுகின்றன.

    கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மூன்றாவது குகையின் வாசலில் ஒரு பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. இக்குகையில் குறிப்பிடும்படியாக வேறு எதுவும் இல்லை.

    நான்காவது குகையில் வேலைப்பாடமைந்த 28 தூண்கள் உள்ளன. அஜந்தாவிலேயே இதுதான் மிகப்பெரிய விகாரை. இதில் போதிசத்துவர் அவரது சிஷ்யர்களிடம் எட்டு பயங்களைப் பற்றி உபதேசிக்கிறார். ஓர் ஆணும் பெண்ணும் மதம் பிடித்த யானையின் மீது பறந்துகொண்டிருக்கும் சித்திரத்துடன் ஓர் அழகிய பெண் மரத்தின் அடியில் அணிலுடன் விளையாடிக் கொண்டிருப்பதையும் காணலாம்.

    ஐந்தாவது குகையின் வாசலின் இருபுறம் சலபஞ்சிகாவின் சிற்பங்கள் காணப்படுகின்றன. 6-ஆவது குகையில் அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் புத்தரின் விதவிதமான சிற்பங்கள் மட்டும் காணப்படுகிள்றன.

    7, 8-ஆவது குகைகளில் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.

    9-ஆவது குகை கி.மு. முதலாம் நூற்றாண்டினைச் சேர்ந்த சைத்யக் கூடம். இங்கு கால்நடைகள், அவற்றை நடத்திச் செல்பவர்கள் போன்ற இயல்பு வாழ்க்கைச் சித்திரங்கள் காணப்படுகின்றன.

    10-ஆவது குகை கி.மு. இரண்டாவது நூற்றாண்டினைச் சேர்ந்தது. இதை வடிவமைக்க வெறும் சுத்தியல், உளிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது தூணின் இடப்புறத்தில் உள்ள சுவரில் அணிவகுக்கும் படைவீரர்கள் நாட்டியமாடும் பெண்கள் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் ஆகிய சித்திரங்களைக் காணலாம்.

    இந்தக் குகையின் மேல் விதானம் வளைந்து யானையின் பின்புறம் போல அமைந்துள்ளது. இதில் காணப்படும் உத்திரம் போன்ற வளைவான வடிவங்களை மரத்தில் செய்யப்பட்டது போல கல்லிலே வடித்திருக்கிறார்கள். இதில் நடுநாயகமாக 45 அடி உயரமுள்ள புத்தர் பகவான் உபதேச முத்திரையுடன் மிகப் பெரிய அளவில் காணப்படுகிறார்.

    11, 12, 13- ஆது குகைகளில் கல்லால் ஆன படுக்கைகள் தலையணைகள் அமைந்துள்ளன. இது புத்த சன்யாசிகளின் உறைவிடம். இங்கிருந்து கொண்டுதான் சிற்ப சித்திர குகை வடிவமைக்கும் பணிகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

    16-ஆவது குகையின் வெளியிலிருந்து கீழே பார்த்தால் லாட வடிவில் அமைந்துள்ள ‘வஹோரா’ நதியின் முழுமையான வடிவத்தை மரம், செடிகளுக்கு நடுவே காண்பது ஓர் அற்புதமான கண்ணுக்கு இனிய காட்சி. நுழைவு வாயிலின் இருபுறமும் யானைகளின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

    இந்த 6-ஆவது நூற்றாண்டு குகையின் சுவரில் ஒரு கல்வெட்டுக் காணப்படுகிறது. இதன் விதானமும் மரவேலைப்பாட்டை ஒத்த வடிவங்களுடன் அமைந்துள்ளது. வெளிச்சம் காற்ர் வர சதுர வடிவிலான சாளரங்கள் உள்ளன. சிதைந்துள்ள சித்திரங்களின் நடுவே எஞ்சியவற்றில் கௌதமரின் வில் வித்தைப் பயிற்சி வித்யாப்யாசம் போன்ற சித்திரங்களுடன் புத்த பகவானின் மனதில் முதன்முதலில் சலனத்தை ஏற்படுத்திய சித்திரமும் காணப்படுகிறது. அரண்மனையை விட்டுத் தந்தையுடன் கிளம்புகிறார் கௌதமர். அச்சமயம் நிலத்தை உழுது கொண்டிருக்கும் கலப்பையின் கீழே உள்ள ஒரு புழுவை ஒரு பறவை கொத்திச் செல்கிறது. அப்போது அவர் மனத்திற்குள் சொல்லிக்கொள்கிறார் ‘என்னே பரிதாபம்’ உயிருள்ள ஜீவன்கள் ஒன்றை ஒன்று கொல்கின்றனவே!’ என்பது போன்ற சித்திரம். வலப்புறக்கோடியில் ‘மாயா’ உறங்கிக் கொண்டிருக்கிறாள். அதன் அருகில் உள்ள காட்சியில் விசித்திரமான கனவைப் பற்றி அரசனும் அரசியும் விவாதிக்கின்றனர்.

    இடப்புறத்தில் காணப்படும் மிகச்சிறந்த ஓவியம் ‘இறந்து கொண்டிருக்கும் இளவரசி.’ மூடிய கண்கள் உணர்விழந்த விரல்கள் போன்று இறந்துபோகும் ஒரு பெண்ணின் உடல் நிலையைத் தத்ரூபமாக வடித்திருக்கிறார் ஓவியர்.

    குகை 17- வடிவமைப்பில் 16-ஆவது குகை போல இருந்தாலும் குறிப்பிடத்தக்க ஏராளமான சித்திரங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1