Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anuradha Ramananin Sirukathaigal Part - 2
Anuradha Ramananin Sirukathaigal Part - 2
Anuradha Ramananin Sirukathaigal Part - 2
Ebook226 pages2 hours

Anuradha Ramananin Sirukathaigal Part - 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Classic collection of short stories written by famous Anuradha Ramanan.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002011
Anuradha Ramananin Sirukathaigal Part - 2

Read more from Anuradha Ramanan

Related to Anuradha Ramananin Sirukathaigal Part - 2

Related ebooks

Reviews for Anuradha Ramananin Sirukathaigal Part - 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anuradha Ramananin Sirukathaigal Part - 2 - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    அனுராதா ரமணனின் சிறுகதைகள்

    பாகம் - 2

    Anuradha Ramananin Sirukathaigal

    Part - 2

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கன்னிகாதானம்

    2. உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது

    3. ஜன்னல்

    4. பிரார்த்தனை

    5. இங்கே ஒரு தியாகி

    6. கல்

    7. மேடை ராஜாக்கள்

    8. இளமைக் கிறுக்கல்கள்

    9. ஒரு குழந்தை வேணுங்க.

    10. மறுபடியும் வாழச் சொன்னால்…

    11. அம்மாவுக்கு மருந்து...

    12. இழப்பில்லாத விபத்துகள்

    13. வெளியே இருக்குது சுதந்திரம்

    14. கணக்கு

    15. ஆராதனை

    அனுராதா ரமணனின்

    சிறுகதைகள்

    பாகம் - 2

    அனுராதா ரமணன்

    1

    கன்னிகாதானம்

    பெரியவர் விஜயராகவாச்சாரியாரின் வீட்டுத் திண்ணை ஒரு சிறிய கோர்ட்டாக மாறியிருந்தது. உடம்பில் பன்னிரு திருமண் துலங்க - முற்றிய பறங்கிப் பழம் போல் விஜயராகவாச்சாரியார் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்திருந்தார். அவர் முன் மீனு - சிறிய உருவமாக, அழுவதைத் தவிர வேறெதுவும் தெரியாதவளாக நின்று கொண்டிருந்தாள்.

    அம்மா மீனு... நீ புருஷனோடப் போய் வாழ மாட்டேங்கிறே... பிடிக்கலைங்கறே... சரி, ஏன் பிடிக்கலை? பிடிக்காததுக்கு என்ன காரணம்னு சொல்லு. நான் ஒத்துக்கறேன். நான் உன் தோப்பனார் மாதிரி. அழாதே. அழுதாப்பல சரியாப் போச்சா?

    பெரியவர், அவளிடம் நயமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    எல்லாம் நான் செய்த பாவங்க தலைதலையா அடிச்சுக் கிட்டேன். பொட்டப் புள்ளைக்குப் படிப்பு வேணாம், வேணாம்னு முட்டிக்கிட்டேன். அழுது அடம் புடிச்சுப் படிச்சுது. எங்க சாதிக்காரங்க எல்லாரும் தாயில்லாப் பொண்ணுன்னு செல்லம் குடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டான்னு என்னைப் புடிச்சுத் திட்டறாங்க எசமான்...

    மீனுவின் தந்தை பெரியவரின் வீட்டில் காலம் காலமாக வேலை பார்த்து - அவரின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் வேலுச்சாமி. தன் ஒரே மகளால் தனது மானமே பறி போய் விட்டாற் போல் பதறிக் கொண்டு நிற்கிறான்.

    ஜானகி - அந்த வீட்டின் எஜமானி விஜயராகவாச்சாரியாரின் தர்மபத்தினி, நிலைப்படிக்கு உட்புறமாக நின்றபடி, பிழியப் பிழிய அழும் மீனுவையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

    ‘நான் பார்க்க வளர்ந்த பொண். இவ அம்மா போனப்போ பரக்கப் பரக்க முழிச்சுண்டு - எல்லாக் காரியத்தையும் ஒரு விளையாட்டை வேடிக்கை பார்க்கிற மாதிரி பார்த்துண்டிருந்த பொண் - இப்ப அகத்துக்காரனோடப் போய் குடித்தனம் பண்ண மாட்டேன்னு ஆகாத்தியம் பண்ணிண்டு நிக்கறாளே. காரணத்தைச் சொல்லேண்டி தரித்திரமே’ - ஜானகி மனசுக்குள்ளேயே மீனுவை சபித்துக் கொண்டு அவளுடைய பதிலை எதிர்நோக்குகிறாள்.

    இத்தனை அமர்க்களத்துக்கும் காரணகர்த்தாவான அவள் - மீனு - குனிந்த தலை நிமிராமல் பெரியவர் முகத்தையும் ஜானகியின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க தைரியமில்லாமல் - கன்னத்திலிருந்து உருளும் நீர் முத்துக்கள், மார்புச் சேலையில் உதிர்ந்து - படிந்து - பரவுவதையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

    ஏ புள்ளே, பெரியவரு கேட்கறாரு… பதில் சொல்லணும்கற மரியாதை கூட மறந்து போச்சா?

    அதட்டுகிற தந்தையை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள் அவள் தாள முடியாத துக்கத்தில் உதடுகள் துடித்தன.

    ‘சொல்லிவிடலாமா… எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்வது? இத்தனை பெரிய மனிதரிடம் அந்தக் கேவலமான விசயத்தை எப்படிச் சொல்வது? ஒரு பொண்ணு வாயை விட்டு, மனசை விட்டு, வெட்கத்தை விட்டு, சொல்லக் கூடிய விசயமா இது? அம்மா.. என்னைப் பெத்த அம்மா... நீ இந்த சமயத்துலே இல்லாமப் போனாயே? இவங்க கேட்கறாங்க, 'ஏன் புருஷனோடு போய் வாழ மாட்டேங்கிறே-ன்னு… என் புருஷன்... ஒரு ஒரு அ... சீ... மனசுக்குள்ளே நினைக்கவே கஷ்டமா இருக்கே. மீனு குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். கடைசியில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெல்லிய குரலில் பெரியவரிடம் கூறுகிறாள்.

    நான் அவரோடு வாழ முடியாதுங்க. நான் மாத்திரமில்லே, எந்தப் பொண்ணுமே அவரோட வாழ முடியாதுங்க... நீங்களும் அம்மாவும் நான் எவ்வளவோ நல்லா இருக்கணும்னுதான் இத்தனை செலவழிச்சுக் கட்டிக் கொடுத்தீங்க. என்னைப் பெத்த தாய் இல்லாத குறையை நான் இப்பத்தாங்க உணர்றேன்... எப்படியாவது எனக்கு இந்த ஆளுகிட்டயிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்திடுங்க இதைச் சொல்லி முடிக்கும் முன்பே அவளுக்கு அழுகை பிரவாகமெடுக்கிறது. இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகக் குவித்து வைத்துக் கொண்டு பரிதாபமாகக் கெஞ்சுகிறாள்.

    ஜானகிக்கு இவள் கூறுகிற காரணங்கள் புரியாவிட்டாலும் இவளின் அழுகை மனத்தைத் தொடுகிறது.

    என்ன இருந்தாலும் சிறிசுதானே? அவன் என்ன கொடுமைப்படுத்தினானோ என்னமோ. விட்டுத்தான் பிடிக்கணும்... தன் கணவரிடம் மெள்ளக் கூறினாள். பெரியவர் எத்தனையோ வழக்கு விவகாரங்களைத் தீர்த்து வைத்திருக்கிறார் தானென்றாலும் ஒரு பெண்ணின் அழுகை அவரையுமே கலங்க அடித்தது.

    வேலு, ரெண்டு நாள் அவளை நிம்மதியா இருக்க விடு. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கட்டும். மெதுவா விசாரிக்கலாம்... அவர் சொல்லுக்கு கீழ்ப்படிகிறான் வேலு.

    இந்த மீனுவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்தச் சிறிய ஊரே வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தது. எல்லாம் பெரியவரின் செலவில்தான். மீனு அவள் குடும்பத்திலேயே சற்று அதிகம் படித்தவள். அதற்கேற்ற, படித்த, கைநிறையச் சம்பாதிக்கும் மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்தான் வேலு. பிள்ளையைப் பெற்றவள் கேட்ட சீர்தான் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த சம்பந்தமே வேண்டாம் என்கிற அளவுக்கு வேலு மனமொடிந்து போய்விட்டான்...

    அப்பொழுதுதான், ஜானகி... தன் கணவரிடம் சொன்னாள் : நமக்குத்தான் மூணும் பிள்ளையாப் போயிடுத்து, பொண்ணே இல்லை. ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா அவ கன்னி கழியற புண்ணியம் ரொம்ப உசந்ததுன்னு பெரியவா சொல்லியிருக்கா... இது கூட ஒரு விதத்துல கன்னிகாதானம் தான். என்ன ஜாதியா இருந்தா என்ன? தாயில்லாப் பொண் மீனுவுக்கு நம்ம செலவுலேயே கல்யாணத்தை முடிக்கலாம்... என்ன செலவானாலும் சரி. இப்போதைக்குப் பெருமாள் நமக்கு நிறையவே வசதியைக் கொடுத்திருக்கார்.

    ஜானகி அதிகம் பேசமாட்டாள். அவர்களின் முதல் இரு பிள்ளைகளும் பெற்றோரைக் கலக்காமலேயே தங்களது திருமணங்களை வெளி நாட்டிலேயே முடித்துக் கொண்டு விட்டனர். கடைசிப் பிள்ளை முகுந்தன் மாத்திரம் - வெளி நாட்டிலிருந்தாலும் அம்மாவின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு வைத்திருக்கிறான். அம்மா பார்த்துச் செய்து வைக்கும் கல்யாணத்துக்காகக் காத்திருக்கிறான். ஜானகியும் பெற்றதே இது ஒன்றுதான் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள். அவள் - தானுண்டு தன் பூஜையறை உண்டு என்று தனக்குள்ளேயே வட்டம் போட்டுக் கொண்டு, வாழப் பழகி விட்டாள்.

    அப்பேர்ப்பட்ட அவளே முன் வந்து தெரிவித்த ஆசையை அவர் ஒதுக்கவில்லை. மீனுவின் திருமணத்தைத் தானே முன்னின்று நடத்தினார்.

    அந்த மீனு - இன்று கணவனிடம் போய்க் குடித்தனம் செய்ய மறுக்கிறாள். அன்றையத் திருமணச் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அர்த்தமேயில்லாமல் செய்து விட்டாள்.

    அன்று மாலை, ஜானகி, கூடத்து ஊஞ்சலில் அமர்ந்தபடி விஷ்ணு சகஸ்ரநாமத்தில் மனமொன்றி மூழ்கியிருந்த போது, வாசற்புறம் மீனு வந்து நின்றாள்.

    ‘ஸ்ரீராம ராமேதி ரமே ராமே மனோ ரமே…’

    - மீனுவுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், இந்த வரிகள், அவள் மனதுக்குள் இதமாய்ப் புகுந்து மென்மையாய் வருடிக் கொடுத்தன.

    ஜானகி சுலோகத்தை முடித்து விட்டுக் கண்களை உயர்த்திப் பார்க்கிறாள். மீனுவைப் பார்த்ததும் அவள் முகம் கோபத்தில் சிவந்து மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது.

    அம்மா…!

    இதோ பாரு, இனிமே என்னை அப்படிக் கூப்பிடாதே, உன் புருஷனோட நீ போய் ஒழுங்காக் குடித்தனம் நடத்தினால்தான் என்னை நீ 'அம்மா'ன்னு கூப்பிடலாம். உன்னை பெத்தவ இருந்தாலும் இந்தப் புத்திமதியைத்தான் சொல்லுவா… உங்கம்மா கல்யாணம் ஆகி வந்தப்பலேருந்து எனக்கு அவளைத் தெரியும். எத்தனை அடக்கமா, பதவிசா குடும்பம் நடத்தினா தெரியுமா அவ? மகராஜி இந்த அவலத்தையெல்லாம் பார்க்காமப் போய்ச் சேர்ந்துட்டா.

    ஜானகியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருப்புத் துண்டமாய் வந்து விழுகிறது. அடங்கியிருந்த மீனுவின் கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாய்ப் பெருகுகிறது.

    அம்மா... அம்மா... உங்களைக் கூப்பிடாம நான் யாரைம்மா இப்படிக் கூப்பிட முடியும்? எனக்கு நினைப்பு தெரிஞ்சதுலேருந்து உங்களைத்தான் பசி வந்தப்போ, அழுகை வந்தப்போ நினைச்சிருக்கேன். என்னை இப்படித் தள்ளிடாதீங்க. நீங்க செஞ்சுவச்ச கல்யாணத்துல நீங்க தந்த வாழ்க்கையில... நான் சந்தோஷத்தைக் காணலைம்மா.. என்னை மன்னிச்சுடுங்க- அவள் புலம்புகிறாள்.

    சந்தோஷமும் துக்கமும் நினைக்கிற மனசிலேதான் இருக்கு புருஷன் மனசு கோணாம நடந்துண்டா எப்படி சந்தோஷம் கிடைக்காமப் போயிடும் - ஜானகி சீறி வெடிக்கிறாள்.

    கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கம்மா… என் கல்யாணத்துக்கு முந்தி நீங்க ஐயா கிட்டச் சொல்லிட்டிருந்தீங்க. ‘ஒரு… பொண்ணுக்குச் செலவழிச்சுக் கல்யாணம் கட்டி வச்சா கன்னிகாதானம் செஞ்ச பலன்னு. எங்க அப்பா அச்சடித்த கல்யாணப் பத்திரிகையில கூட உங்க சாதி வழக்கப்படி, ‘என் மகள் மீனாம்பாளைக் கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய்ப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு’ன்னுதான் அச்சடிச்சாங்க... ஆனா, என்னைக் கட்டிக்கிட்ட மனுசனுக்கு நீங்க கொடுத்த சீரும் பணமும்தான் பிரயோசனப்பட்டது. அவருக்கு இந்த தானம் - அதான், ஒரு கன்னியைத் தானம் செய்து பிரயோசனமில்லை. அதுக்கு அர்த்தமே இல்லை - மீனு, தன் மனதின் அந்தரங்கங்களை ஜானகியின் முன் வாரியிறைக்கிறாள்.

    நீ என்ன சொல்றே மீனு?

    நான் இன்னும் கன்னிதாம்மா! அவர்... அவர்... இதற்கு மேல் சொல்ல முடியாமல் ஓவென்று அழுகிறாள் மீனு.

    எதிர்பார்க்காத இந்த அதிர்ச்சியில் ஜானகி துடித்து எழுந்து விட்டாள். சாதாரணமாய்த் தன் மடி காரணமாக, மீனு தொட்டதைக் கூடத் தொட யோசிப்பாள் - அவளை அள்ளி மடியில் போட்டுக் கொண்டு தானும் அழுகிறாள்.

    இதன் பிறகு ஜானகி, தன் கணவரிடமும், வேலுவிடமும் விவரத்தைச் சொல்லி - கோர்ட்டில் வழக்குப் போட்டு மீனுவுக்கு விடுதலை கிடைத்துவிட்டதென்றாலும் மீனுவின் வாழ்க்கையில் மறு மலர்ச்சி அத்தனை சுலபத்தில் கிடைக்கவில்லை. பெரியவரின் சிபாரிசால் மீனுவுக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கிடைத்ததென்றாலும் அவளுக்கென்று - அவளின் இருபது வயசு இளமைக்கென்று ஒரு நல்ல துணை கிடைக்கவில்லை. இந்த வருத்தம் ஜானகிக்கு உள்ளுறப் புழுவாய் அரித்துக் கொண்டுதானிருந்தது.

    இப்போதெல்லாம் ராமனிடம் தன் பிள்ளைக்காகவும் தன் கணவருக்காகவும் வேண்டி வணங்குகிற ஜானகி - மீனுவின் எதிர்காலத்துக்கும் சேர்த்துத்தான் வேண்டிக் கொள்கிறாள்.

    வேலு, உன்னோட அக்கா மகன் - என்னமோ விவசாயத்துல ஈடுபட்டுக் கிராமத்தோடு இருக்கான்னு சொல்லுவியே. மீனுவைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு அவனைக் கேட்டுப் பார்க்கறதுதானே...? - விஜயராகவாச் சாரியார், வேலுவைக் கேட்ட போது அவன் மெளனமாய் தலை குனிந்தான்.

    அதெல்லாம் கேட்டுட்டேங்க. அவங்களுக்கு கோர்ட்டு படி ஏறின பொண்ணைக் கட்டிக்கிறதுல இஷ்டமில்லை. அந்த ராட்சஸி என் மவனை என்ன சொல்லி கோர்ட்டுக்கு இழுப்பாளோன்னு என் அக்காவே சொல்றச்சே, நான் என்ன செய்ய முடியுங்க - வேலு அலுப்புடன் கூறியபோது பெரியவர் தன் மனைவியைப் பார்த்தார். அவள் தன் பூஜையறைப் பெருமாளைப் பார்த்தாள்...

    பிரபு... ஒரு பொண்ணோட இளமை கண்ணெதிரே பொசுங்கறது. நான் கன்னிகாதானம் செய்யத்தான் ஆசைப் பட்டேன். நீ அவ கன்னியாவே நிக்கணும்னு ஆசைப்படறியா... மனதுக்குள் தன் ராமனை வேண்டினாள். வணங்கினாள். அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஜடமாய் நிற்பதாக அவனையே திட்டினாள். பிறகு திட்டியதற்கு மன்னிப்பு கேட்டாள்...

    மீனுவின் நிலைக்காக வருந்துகிற ஜானகிக்கு - தன் மகன் முகுந்தன் ஒரு மாத லீவில் ஊருக்கு வரப் போவதாக எழுதி யிருக்கிற கடிதம் கூட சந்தோஷத்தைத் தரவில்லை.

    ஜானகி மாடி ரூமை முகுந்தனுக்காக ஒழிச்சு வச்சியோ?

    உம் ஆகட்டும் ஒழிக்கிறேன்.

    அந்த ராமானுஜம் பெண் ஜாதகம், முகுந்தனோட ஜாதகத்தோட ரொம்ப நன்னாப் பொருந்தறது. நீ என்ன சொல்றே? - பரபரக்கும் கணவரின் மகிழ்ச்சியில் அவளும் பங்கு கொண்டாலும் மனம் எதிலும் ஒட்டாது தாமரை இலைத் தண்ணீராய் தளும்புகிறது.

    விஜயராகவாச்சாரியாருக்கு அவளின் மெளனம் கண்ணில் படவில்லை. மகன் வருகிற நிம்மதி அவருக்கு. திரும்பவும் மனைவியைக் கேட்டார்.

    "ஜானகி… ராமானுஜத்தோட பொண்ணையும் போய்ப் பாரு. அப்புறம் அந்த திருமலாச்சாரியோட பொண் ஜாதகமும் நன்னாப் பொருந்தறது. அவளையும் போய்ப் பாரு உன் பிள்ளைதான் அம்மா யார் கழுத்துலே தாலியைக் கட்டச் சொன்னாலும் சரிங்கறானே? உனக்கு யார் நாட்டுப் பொண்ணா வந்தா செளகரியமா இருக்கும்? எதுக்குக் கேட்கிறேன்னா அவன் ஊருலேருந்து வந்தப்புறம் அந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1