Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gopurathu Bommaigal
Gopurathu Bommaigal
Gopurathu Bommaigal
Ebook112 pages44 minutes

Gopurathu Bommaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852963
Gopurathu Bommaigal

Read more from Anuradha Ramanan

Related to Gopurathu Bommaigal

Related ebooks

Reviews for Gopurathu Bommaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gopurathu Bommaigal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    கோபுரத்து பொம்மைகள்

    Gopurathu Bommaigal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    எங்கிருந்தோ மீட்டுகிறாய்

    என் இதய வீணையிலே

    இங்கிருந்து நான் இசைக்கும்

    ஈன சுரம் கேளாமல்

    -'மஹி'

    மல்லாந்து படுத்திருக்கிறாள் கல்யாணி. விழிகள் மேல் விட்டத்தைப் பார்க்க- ஆடாமல் அசையாமல்… விழிக் கடையில் துளிர்த்த பனி முத்துக்கள்- சரம் சரமாய் தலையணையின் எம்பிராய்டரிப் பூக்களில் விழுகின்றன. அலையில் மிதக்கும் படகு போல் நெஞ்சம் ஏறி இறங்க- நீண்ட பெரு மூச்சுக்கள் காற்றுடன் சலக்க....

    சித்தி. சாப்பிட வரியா…

    …………………

    உன்னைத்தானே சித்தி, எத்தனை நேரமாக் கூப்பிடறேன். இப்படி வாயே திறக்காமப் படுத்துண்டிருக்கியே… நீயா என்னிக்கு எனக்குப் பசிக்கிறது. சோறு போடுன்னு கேட்கப் போறியோ...

    ...சமையலறையில் தட்டைப் போட்டுப் பரிமாறியபடி ப்ரியா இரைகிறாள்.

    அலுப்பினால் விளைந்த இரைச்சல் இல்லை அது. ஆதங்கத்தினால் தன் சித்தியின் மீது அவளுக்கிருக்கும் அபரிமிதமான பாசத்தினால், விளைந்த இரைச்சல் அது!

    எப்படி இருந்த சித்தி எப்படி மாறிட்டா? முப்பத்திரண்டு வயசுக்குள்ளே என்னமாத் தேய்ஞ்சு போயிட்டா? ஒரு காலத்துல-எத்தனை சுறுசுறுப்பா, முகம் முழுக்கச் சிரிப்பா வளைய வந்துண்டிருந்தா? அவ, வீணையை எடுத்து வச்சுண்டு உட்கார்ந்தாலே, ரவி வர்மா வரைஞ்ச சரஸ்வதி மாதிரி, கண் நிறைஞ்சு இருக்குமே.

    ப்ரியாவுக்குக் கண்ணில் குளம் கட்டுகிறது. தன் அம்மா இறந்து போன ஆறு மாதங்களுக்குள்- 'ப்ரியாவை வளர்க்க ஒருத்தி அவசியம் தேவை'- என்கிற வார்த்தை ஜாலங்களுக்குள் தனது சரீர சுகத்தை மறைத்துக் கொண்டு அப்பா- கல்யாணியை இரண்டாந்தாரமாக மணந்து வீட்டுக்கு அழைத்து வந்தது… அந்தக் காட்சி, இன்னமும் அவள் கண்ணெதிரில் பசுமையாய் விரிகிறதே…

    இதோ பாரு… ப்ரியாவுக்கு ஒன்பது மணிக்குள்ளே ஸ்கூலுக்குப் கிளம்பணும். மசமசன்னு நிக்காம அவளுக்குச் சமைச்சுப் போட்டு டிபன் பாக்சுலேயும் தயிர் சாதமாக் கட்டிக் கொடுத்து அனுப்பணும்…

    உம்... சரி

    அவ அம்மா இருந்தப்போ அவளுக்கு செவ்வாயும் வெள்ளியும் தவறாம எண்ணெய் தேய்ச்சு விடுவா.

    ஏன், இனிமே நான் தேய்ச்சு விடறேன்…

    ராத்திரிக்கு எனக்கும், பிரியாவுக்கும் சூடா ரெண்டு தம்ளர் பசும் பால் எடுத்து வச்சுடு…

    ஓ… வச்சுடறேன்…

    வாசல்லே பூத்திருக்கற பிச்சிப் பூவைத் தொடுத்து ப்ரியா தலையில் வைக்கப்படாதோ...

    தொடுத்து வச்சிருக்கேன். அவதான் இன்னும் தலை பின்னிக்க வரலை… வரட்டும். பின்னி விட்டு வச்சு விடறேன்.

    இப்படி அவள் அப்பா கேட்கிற கேள்விகளுக்கெல்லாம், பிறப்பிக்கிற ஆணைகளுக்கெல்லாம் பணிந்து பதில் சொல்லுவாள் கல்யாணி.

    'அப்போ எனக்கு எட்டு வயசு இருக்குமா… இருக்கும், சித்திக்கு பதினெட்டு வயசிருக்கும்…'

    ...ப்ரியா, தனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து தன்னுடன் இருந்து, தன்னைப் பாதுகாத்த கல்யாணியின் இளமைப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறாள்.

    அரக்கு நிறச் சுங்குடிப் புடவை அணிந்து, கல்யாணி, பயந்து பயந்து அந்த வீட்டில் காலடி வைத்த போது- அங்கமெல்லாம் தேன் சிந்த, அழகுக் கவிதையாக இருந்தாள். பாவாடை தாவணி உடன் வாசலில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த சிறு பெண்ணை 'தரதர'வென இழுத்து வந்து ஒரு புடவையைச் சுற்றி, கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி- ப்ரியாவின் தந்தை ரகுராமன் இழுத்து வந்து விட்டாரோ என்றுகூட நினைக்கத் தோன்றும்?

    ப்ரியா கண்கொட்டாமல், தன் சித்தியின் அழகைப் பார்த்து வியந்து நின்றிருக்கிறாள்.

    'அந்த வெள்ளைக் கழுத்துல கருகமணிச்சரம் என்னமா இருக்கும்? எத்தனை அடர்த்தியாய் நீளமான பின்னல்? நுனியிலே ரோஸ் கலர் உல்லன் நூல் வச்சுப்பா. சுவாமி படத்து மேல சார்த்தியிருக்கிற பிச்சிப்பூச்சரத்துலேருந்து விரற்கடை அளவு பூவைத் தானே கிள்ளித் தலையில் வச்சுப்பா! வீட்டுல எத்தனை பூ இருந்தாலும் அவ வச்சுக்கறது, அந்த விரற்கடை அளவு பூதான்… மீதியெல்லாம் எனக்கும் சுவாமிக்கும்தான்…

    ...ப்ரியா மனசுக்குள் ஆச்சரியப்பட்டுக் கொள்கிறாள். தன் சித்தியால் மாத்திரம் எப்படிப் பதினெட்டு வயசிலேயே இப்படிப் பெரிய மனுஷி மாதிரி தோரணையுடன் நடந்து கொள்ள முடிந்தது? சாதாரணமாய் எல்லாப் பெண்களுக்கும் எழுகிற அல்பமான ஆசைகளுக்குக் கூட வேலி போட முடிந்தது? அத்தனை பொறுப்பாய்- அத்தனை உறுதியாய்த் தன்னால் இருக்க முடியுமோ? நிச்சயமாய் முடியாது.

    பதினெட்டு வயது… தரையில் கால் பதியாத வயது எட்டாத ஆசைகளை, கனவுகளை, எட்டிப் பிடிக்க ஏங்குகிற வயது! எதையோ நினைத்து எதற்கோ ஏங்கி, எங்கெல்லாமோ மனத்தை ஒடவிட்டு, எடுத்ததெற்கெல்லாம் கோபித்து, நினைத்த போதெல்லாம் சிரித்து, ஏதோ ஒரு கற்பனையில் சுகம் காணுகிற வயது…

    ஆனால் கல்யாணி அவளது பதினெட்டில் அப்படியா இருந்தாள்? அவளுக்குத்தான் எத்தனை பொறுப்புகள்? காலையிலிருந்து மாலை வரை சமையல் வேலைகளிலும், ப்ரியாவுக்குத் தேவையான வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதிலும், அலுத்துச் சலித்துப் படுக்கும் நேரத்தில் ரகுராமனின் படுக்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், சாயந்திரம் நான் வரப்போ ஜன்னல்கிட்ட உட்கார்ந்துண்டு தெருவைப் பார்த்துண்டிருந்தியே… ஏன், ரோடுல எவன் போனான்'- இப்படி நெருப்பிலிட்ட ஊசிகளாய்க் குத்துகிற கணவனது கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலும், அவளது பதினெட்டு பறந்தோடி விட்டதே!

    எப்பொழுதாவது வீணையைத் துடைத்து எடுத்து வைத்துக் கொண்டு உட்காருவாள் கல்யாணி. அதுவும் ரகுராமன் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து, தோடியும், பைரவியும் வீடு முழுக்க தெருமுழுக்க நிரம்பி வழியும். ரகுராமனுக்குக் கல்யாணி வீணையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால் எரிச்சல் மண்டிக் கொண்டு வரும்.

    'இந்தா, கூடத்துல ஒரே புழுதியா இருக்கு. பளிச்சுனு பெருக்கித் துடைக்கமாட்டியா' -என்று கத்துவார்.

    'குழந்தையை கவனிக்காம எங்கே போயிட்டே? தேவடியா மாதிரி வீணையை வச்சுண்டு உட்கார்ந்துட்டா வீட்டு வேலையை எல்லாம் யார் கவனிப்பா?' -இப்படி உறுமுவார்.

    கல்யாணி, திருமணமான ஒரிரு மாதங்களுக்குள் ரகுவை

    Enjoying the preview?
    Page 1 of 1