Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mella Veesum Vasanthangal
Mella Veesum Vasanthangal
Mella Veesum Vasanthangal
Ebook159 pages46 minutes

Mella Veesum Vasanthangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802765
Mella Veesum Vasanthangal

Read more from Vimala Ramani

Related to Mella Veesum Vasanthangal

Related ebooks

Reviews for Mella Veesum Vasanthangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mella Veesum Vasanthangal - Vimala Ramani

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    மெல்ல வீசும் வசந்தங்கள்

    Mella Veesum Vasanthangal

    Author :

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அவன் ஓடிவந்து அவளைக் கட்டித் தழுவுகிறான்… மெல்ல மெல்ல முனகல் சத்தம் கேட்கிறது…

    அதைத் தொடர்ந்து…

    பின்னனி இசை. ஒற்றை வயலின் ஆரம்பிக்கும் இசை. மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து… தாரை தப்பட்டை முழக்கம்போல் பெரிதாக ஓலமிடுகிறது. தியேட்டரின் இரண்டு பக்கமும் இருந்த ஸ்பீக்கர்கள் அலறுகின்றன… அதிருகின்றன… ரசிகப் பெருமக்கள் காணாததைக் கண்டவர்கள்போல் கதாநாயகியின் மேலாடை நழுவி விழப்போகும் அந்த நேரத்திற்காகக் கண் கொட்டாமல் காத்திருக்கின்றனர்… இதோ மேலாடை நழுவ… நழுவ… காமிராவின் கோணம் மாறி கதாநாயகி இப்போது சூடிதாரில் உடம்புபூரா மறைத்தபடி நந்தவனத்தில் டூயட் பாடுகிறாள்.

    மலர்ந்த பூக்களின் நடுவே அவள் முகம்… நந்தவனத்தின் வசந்தங்கள் அவள் முகத்தில் வீசுகின்றன. ஓ! வசந்தங்கள்… மெல்ல வீசும் வசந்தங்கள்…

    திரையில் தன் வாழ்வென்னும் படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள் பூமா.

    சித்தார்த் அண்ட் அசோசியேட்ஸ்… ஆர்க்கிடெக்ட்ஸ் அண்ட் சிவில் இன்ஜினியர்ஸ்.

    அழகான பளபளப்பான போர்ட்… கட்டிடத்தின் எலிவேஷனே அழகாக இருந்தது. ஒரு திறமையான ஆர்க்கிடெக்ட் உள்ளே இருக்கிறார் என்று கூறாமல் கூறியது. அழகான டெக்ரேஷன்ஸ், முன்புற லான், போர்டிகோவில் நிற்கும் பச்சைநிற அம்பாஸிடர் அந்த சூழ்நிலையின் இதத்தை அதிகப்படுத்தியது.

    இந்த இடம்தான், இதே இடம்தான், அப்பாவின் நண்பர் ராமசாமி கூறிய அதே இடம்தான்…

    ஒருதடவை தன் கையிலிருந்த அட்ரஸையும், அங்கே எழுதி இருக்கும் இந்த அட்ரஸையும் பூமா சரி பார்த்துக் கொண்டாள். இத்தனை தூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பு, வியர்வையாக முத்து அலங்காரம் பண்ணி இருந்தது. கர்ச்சீப்பால் வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். நெஞ்சின் படபடப்பை அடக்கியபடி உள்ளே நுழைந்தாள் பூமா.

    உள்ளே…

    நீளநீளமான ஹால்கள்… காத்திருக்கிறவர்கள் சிலர், போன் பேசும் பிசியான ஆபரேட் கம் ரிசப்சனிஸ்ட், பெரிய பெரிய நீளநீளமான டெஸ்குகளில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு, ஸ்கேலை வைத்துக்கொண்டு மும்முரமாக ‘டிரா’ பண்ணும் டிராப்ட்ஸ்மென்.

    சுருள் சுருளாக ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ப்ளான்கள்…

    கண்ணாடி அறைக்கு உள்ளே முதுகைக் காட்டியபடி போன் பேசிக் கொண்டிருக்கும்… இவர்தான் சித்தார்த்! ஆர்க்கிடெக்ட்… இந்த இடத்தின் சொந்தக்காரன். இந்தத் தொழிலின் காரணகர்த்தா. இந்த ஊரின் அழகான கட்டிடங்களின் எழுச்சியில் பாதிக்குமேல் இவனுக்கும் பங்கு உண்டு! பெருமை உண்டு.

    ஓட்டல் ஸ்வர்ணாவைப் புதிது பண்ணினார்களே, சித்தார்த்தான் அதற்கு ஆர்க்கிடெக்ட்! கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜில் ஒரு புதிய ஆடிடோரியம் கட்டினார்களே… அங்கும் சித்தார்த்தின் மூளைதான் வேலை செய்திருந்தது. பெரிய பெரிய பாங்குகள், பல லட்சங்களை விழுங்கிய பெரிய பெரிய ப்ளான்கள், ரீமாடல் பண்ணப்பட்ட பெயர்பெற்ற ஆஸ்பத்திரிகள் எங்கும் சித்தார்த்… சித்தார்த்… சித்தார்த் மயம்தான்!

    பூமா அவனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள். இன்றுதான் நேரில் பார்க்கப் போகிறாள்.

    பி.எஸ்.சி (அக்ரி) முடித்துவிட்டு டெல்லியில் ஸ்கூல் ஆப் ப்ளானிங் அண் ஆர்கிடெக்சரில் மூன்று வருட டிப்ளமா கோர்ஸ். லேண்ட் ஸ்லாப் ஆர்க்கிடெக்சரில் கோர்ஸ் முடித்துவிட்டு வேலைக்கு வந்திருக்கிறாள். இந்த வேலை கிடைக்க வேண்டும். கிடைக்கும். படுக்கையோடு படுக்கையாகக் கிடக்கும் அப்பாவிற்காகவாவது இந்த வேலை கிடைக்க வேண்டும். போலியோ அட்டாக்கால் காலை இழுத்து இழுத்து நடந்து, எந்த வேலைக்கும் பயனற்ற பதினைந்து வயது தம்பி முரளிக்காகவாவது இந்த வேலை கிடைக்க வேண்டும். ப்ளஸ்டூவில் படித்துக் கொண்டிருக்கும் தங்கை ரேகாவுக்காகவாவது இந்த வேலை கிடைக்க வேண்டும்.

    கிடைக்கும். கட்டாயம் கிடைக்கும்…

    ஒழுகுகின்ற ஓட்டை வீட்டில், ஒண்டுக் குடித்தனம் இருந்துக்கொண்டு, பூமா புதிய புதிய வீடுகளுக்குப் ப்ளான் போடப் போகிறாள்! நடக்க முடியாத தம்பியை நடக்க வைக்க என்ன செய்வது என்று, தன் எதிர்காலத்தை ப்ளான் போட்டபடி இருக்கும் அவள் இங்கு வந்து வீடுகளுக்கும் ப்ளான் போடப் போகிறாள்! பூப்போன்ற புத்தம் புதிய நினைவுகளுடன் வளைய வரும் தங்கைக்காக கார்டன்லே அவுட் போட்டு புதுப்புது தோட்டங்கள் அமைக்கத் திட்டம் போடப் போகிறாள்!

    மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்?

    ரிசப்ஷனிஸ்ட் கேட்டதும் பூமா சுயஉணர்வு பெற்றாள். அவள் நீட்டிய சிறு பேப்பரில் தன் பெயரை எழுதித் தந்தாள்.

    சற்று நேரத்தில்…

    இன்ஜினியர் கூப்பிடுகிறார் என்று அவள் சொன்னதும், படபடக்கும் இதயத்துடன் பூமா அந்தக் கண்ணாடி அறைக்குள் நுழைந்தாள். நல்ல சகுனமாக போன் அலறியது.

    ப்ளீஸ் பி சீடட் என்றவன் ‘எக்ஸ்க்யூஸ்மீ’ என்றபடி போன் பேச ஆரம்பித்தபோது அவனைப் பார்த்தாள் பூமா முழுமையாக… முதுகை மட்டுமே பார்த்த அவள், அவன் முகத்தையும், முழு உருவத்தையும் முழுமையாகப் பார்த்தாள்.

    இவனா சித்தார்த்? இந்தச் சின்னவனா? இந்த இளமைக்கும், அழகுக்குமா இப்படி ஒரு பெயர், புகழ் எல்லாம்! இவ்வளவு பெரிய எஸ்டாபிலிஷ்மெண்டை இந்தச் சிறுவயதிற்குள் இவனால் எப்படி உருவாக்க முடிந்தது? ஊர் முழுக்க சித்தார்த், சித்தார்த் என்றபோது அந்தப் புகழுக்கும் பெயருக்கும் சேர்த்து நிறையவே வயதைப் போட்டிருந்தாள் பூமா. முப்பது… முப்பதிற்குள்தான் இருக்கும்! அதுவே அதிகம். இந்த வயதிலா இத்தனை பெருமைகள்? அதிசயம்!

    ‘சித்தார்த்’ அழகான பெயருக்கு ஏற்ற அழகு!

    அதற்குள் போன் பேசி முடித்து,

    யுவர் நேம் ப்ளீஸ் என்றவன் எதிரில் இருந்த சிலிப்பை அப்போதுதான் கவனித்தவன்போல் கையிலெடுப்பதற்குள்,

    சித்தார்த் என்று தன் பெயரைச் சொல்லுவதற்கு பதிலாக அவன் பெயரைச் சொல்லவும், அதே சமயம் அவன் தன் கையிலிருந்த சிலிப்பைப் பார்த்தபடி ‘பூமா’ என்று சொல்வதற்கும் சரியாக இருந்தது.

    இருவரும் ஒருகணம் திகைத்தார்கள்.

    தட்ஸ் ஆல்ரைட்! பரஸ்பரம் அறிமுகம் ஆகிவிட்டது.

    மிஸ்டர் ராமசாமி உங்களைப்பத்தி எங்கிட்டே சொல்லி இருந்தார். ஐ யேம் சோ ஹேப்பி… இன்னிலே இருந்து நீங்க வேலையிலே ஜாயின் பண்ணினதா இருக்கட்டும். ஓகே? என்றபோது,

    மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் பூமா.

    என்னை இன்டர்வ்யூ பண்ணுவானோ? என்ன கேள்வி கேட்பானோ? எப்படிப் பதில் சொல்ல வேண்டுமோ? என்றெல்லாம் தன்னைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு கேள்வியுமே இல்லாமல் இப்படி வேலை கிடைத்தது ஆச்சர்யமாக இருந்தது.

    போகும்போது மறக்காமல் அந்த விநாயகர் கோவிலில் ஒரு தேங்காய் போட்டுவிட்டுப் போக வேண்டும்!

    இருங்க… என்னோட ஆபீஸ் ஸ்டாபை எல்லாம் உங்களுக்கு ‘இன்டர்ட்யூஸ்’ பண்றேன் என்றவன் தன் சீட்டை விட்டு எழுந்தான்.

    அவன் எழுந்து நின்றபோது அவனது எடுப்பான உயரம் அவனை இன்னும் கம்பீரமாகக் காட்டியது.

    மிடுக்காக அவன் முன்னே செல்ல, அவள் ஒரு பூனைக்குட்டி மாதிரி அவனைப் பின்தொடர்ந்தாள்.

    இவர் சூப்ரவைசர்… இவர் டிராப்ட்ஸ்மேன்… அவங்க என்னோட ஜூனியர்ஸ்… இவங்க என்னோட கோ கன்சல்டண்ட்… என்று வரிசையாக ஒவ்வொருவராகப் பொறுமையுடன் அறிமுகம் செய்து வைத்தான்.

    இடை இடையே,

    என்னப்பா, அந்த ப்ளானை முனிசிபாலிடிக்கு அனுப்பிச்சாச்சா?

    அந்த ப்ளாட் ப்ளானை ப்ளூ பிரிண்ட் போட்டாச்சா?

    இதோட ட்ரேஸ் ஷீட் எங்கே? என்று தன் தொழில் சம்பந்தமாக சில முக்கியக் கேள்விகளைக் கேட்டபடி தன் ஆபீசை அவளுக்குச் சுற்றிக் காட்டினாள்.

    இது ப்யூர்லி லேடீஸ் விங். அங்கே டி.ஸி.ஈ. படிச்சவங்க க்ரூப். ஆண்கள் பகுதி… இது டி.ஏ.ஏ. படிச்சவங்க க்ரூப்… பெண்கள் க்ரூப்… என்று அந்தப் பெண்களை அறிமுகப்படுத்தினான்.

    இவங்க மிஸ் பாமா. இவங்க மிஸஸ் கலா…

    பாமா என்ற அந்தப் பெண் ரொம்ப உரிமையுடன் சிரித்தாள்.

    நாங்க ரெண்டுபேரும் ரெண்டெழுத்து நண்பிகள்

    சித்தார்த் ‘சட்’டென்று சொன்னான். அதனால்தான் இந்த ரெண்டு எழுத்து க்ரூப்புக்கு இன்னொரு ரெண்டு எழுத்து கம்பானியனைக் கூட்டிட்டு வந்திருக்கேன். இவங்க பூமா… எக்ஸ்க்யூஸ்மி… மிஸ்சா… மிஸஸ்சா?

    பூமா முகம் சிவக்க,

    மிஸ்தான் என்றாள்.

    "இவங்க இன்னிலேயிருந்து நம்ம ஆபீஸ்லே ஜாயின் பண்றாங்க. உங்களோட கலீகா, உங்களோட ப்ரண்டா! இவங்களுக்கு ஏதாவது

    Enjoying the preview?
    Page 1 of 1