Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vallalar Pillaithamizh
Vallalar Pillaithamizh
Vallalar Pillaithamizh
Ebook97 pages20 minutes

Vallalar Pillaithamizh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mr. C. Seganathan born in 1948 has written almost 30 books on various topics like Tamil Literature, Spiritual topics etc. He has got many many recognitions like “Arutkavi Arasu”, “Akaval Arasu”, “Varakavi” etc and many awards/prizes for his writings. His books like “Manamey Iraivan”, “Thirukkural Gnana Urai”, “Vinayakar Akaval” are very famous amongst his books. He is still writing many books like “Ovvai Kural”, “Gnana Kural” etc.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123002601
Vallalar Pillaithamizh

Read more from C. Seganathan

Related to Vallalar Pillaithamizh

Related ebooks

Reviews for Vallalar Pillaithamizh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vallalar Pillaithamizh - C. Seganathan

    http://www.pustaka.co.in

    வள்ளலார் பிள்ளைத்தமிழ்

    Vallalar Pillaithamizh

    Author:

    சி. செகநாதன்

    C. Seganathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/c-seganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.காப்புப் பருவம்

    2. செங்கீரைப் பருவம்

    3.தாலப் பருவம்

    4. சப்பாணிப் பருவம்

    5.முத்தப்பருவம்

    6. வருகைப் பருவம்

    7. அம்புலிப் பருவம்

    8. சிற்றில் பருவம்

    9. சிறுபறைப் பருவம்

    10. சிறுதேர்ப் பருவம்

    ***

    வள்ளலார் பிள்ளைத்தமிழ்

    ஆசிரியர்

    அருட்கவி அரசு, அருட்பா அவதானி

    சி. செகநாதன்

    அருட் பெருஞ்சோதி

    அருட் பெருஞ்சோதி

    அருட் பெருஞ்சோதி

    தனிப்பெருங் கருணை

    சுப.அண்ணாமலை

    தமிழ் துறை தலைவர்

    காமராஜர் பல்கலைக் கழகம்

    மதுரை.

    ***

    முன்னுரை

    திருத்தொண்டர் புராணம் அருளிய சேக்கிழார் பெருமானுக்கு மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பிள்ளைத்தமிழ் பாடியதே போல, அருட்சோதி ஆட்சி நடத்தி எங்கும் அன்பையும், அருளையும் பரப்பி வரும் திருவருட் பிரகாசர் வள்ளலாருக்குத் திருச்சிராப்பள்ளி வரகவி செகநாதன் அவர்கள் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். நன்றுடையானைத் தீயதில்லானை என திருநாவுக்கரசர், பாடிய திருசிரபுரமே இவ்விரு புலவர்களுக்கும் இடமாய் அமைந்தது திருவருட் செயல்.

    யாப்பே இன்றிக் கவிதைகள் பாடிவரும் இந்நாளில், ஆசிரிய விருத்தத்தில் 101 பாடல்கள் பிள்ளைத்தமிழ் மாலையாய் இயற்றி வள்ளற் பெருமானின் புகழ் பரப்பியுள்ளமை பெரிதும் பாராட்டத் தக்கது. அருட்பா அன்பர் திரு. செகநாதன் அவர்கள் வள்ளற் பெருமானின் வரலாற்றிலும், அருட்பாவிலும் நன்கு தோய்ந்து செஞ்சொற் புலமையும் திருவருள் அனுபவமும் மிளிர, இந்நூலைப் பாடியுள்ளார். இவர் நடை தங்கு தடையின்றி கடல்மடை திறந்தது போலப் பெருகி நிற்பதைக் கண்டு மகிழ்கின்றேன்.

    "எந்நாட்டம் தன்னுள்ளும் உண்ணாட்டம் கொண்டிங்கு

    எதிர்நாட்டம் ஏதுமின்றி

    எழில்நாட்டம் இடுகின்ற பொழிமன்றில் செழிநாட்டம்

    ஏற்றுமொரு வித்தகத்தின்"

    என்றவாறு சொற்பின் வருநிலையணி கொண்டு அமையும் பாடல்கள் பலவும் இந்நூலில் உள்ளமை கற்போர்க்கு மொழி இன்பம் தருகின்றது.

    வள்ளற் பெருமான் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே தனிப்பெருங் கடவுள் என்ற கொள்கையை உடையவர். அவருக்குப் பிள்ளைத் தமிழ் பாடுங்கால், காப்புப்பருவத்தில் பற்பல தெய்வங்களை அழைத்து அவரைக் காக்குமாறு வேண்டுதல் பொருத்தமற்றதாகும். ஆதலால் இந்நூலாசிரியர், அருளாற்றல், சித்தாற்றல், பதியாற்றல், முதலிய ஆற்றல்களையே அழைத்துப் பிள்ளைப் பெருமானைக்காக்குமாறு வேண்டுகின்றார்.

    "செம்புலத்தைப் பொன்புலமாய்ச் செய்வித்தை கற்றிட்ட

    செப்பமிகு ஒப்பற்றதோர்

    செம்மாந்த அறிவுநலம் செறிவார்ந்த அருட்டிறத்துச்

    செம்மலவன் இராமலிங்க

    அம்பலத்தைக் காக்கவென எம்பலத்தை அழைக்கவோ"

    என்று கேட்டு

    அவனுற்ற நுண்ணாற்றலை அழைக்காமல் எதை அழைப்பேன் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1