Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4
Ebook216 pages1 hour

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111002411
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4

Read more from Arnika Nasser

Related to Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4

Related ebooks

Reviews for Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4 - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் - தொகுதி 4

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author//arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கத்துக்குட்டி

    2. காஃபிர்

    3. செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

    4. குழந்தைப்பேறு

    5. ஷைத்தானின் டைரிக் குறிப்பு

    6. கராள்

    7. பாகப்பிரிவினை

    8. நடைபாதை

    9. பறக்காத கிளிக்கூட்டம்

    10. அடமானம்

    11. தவ்பா

    12. பகதூர் (எ) பதுகுர் ரப்பானி

    13. ஹிஜ்ரத்

    14. சத்தியம் சர்க்கரைப் பொங்கல்

    15. பார்த்தசாரதி சிகைத் திருத்தகம்

    16. தலித் தாயார்

    17. ஜும்ஆத் தொழுகை

    18. கோபக்கார மனுஷன்

    19. ரமலானில் திருமணம்

    20. பசுமைப்பூங்கா உறைவிடப்பள்ளி

    21. சங்கரன் குடும்பத்தார்

    22. திமிங்கலமும் அயிரை மீனும்

    23. அம்மாவின் தோழி

    24. யாரோ ஒருவர்

    25. ஜிஹாத்

    முன்னுரை

    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    உங்களின் கரங்களில் தவழும் திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் - தொகுதி 4-ல் இருபத்தியைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. இச்சிறுகதைகளில் திருமறை கருத்துகள் நபிமொழி கருத்துகள் மட்டுமின்றி இஸ்லாமிய விழுமியங்களும் கோட்பாடுகளும் கூட காணக் கிடைக்கும்.

    யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் இஸ்லாமிய கலைக் களஞ்சியம் 4 தொகுதிகளையும் அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை 3 தொகுதிகளையும் வாசித்து அயர்ந்திருக்கிறேன். பிரமாதமான அச்சு நேர்த்தி. கருத்துப் பிழைகளோ எழுத்துப் பிழைகளோ இல்லாத பரிபூர்ணவத்துவம் அவற்றில் காணக் கிடைத்தேன். இஸ்லாமிய எழுத்தாளர்களின் பொற்கிரீடம் அப்துற்-ற ஹீம் ஆவார். அவர்களின் அன்பு மருமகன் ஷாஜஹான். அவர்தான் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மற்றும் நேஷனல் பப்ளிஷர்ஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மாமனாரின் கனவுகளை நிறைவேற்றித் தரும் அன்பு மருமகன்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பர்?

    நேஷனல் பப்ளிஷர்ஸ் இத் தொகுப்பை பிரசுரிப்பது எனது எழுத்துகளுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். இத்தொகுப்பிலுள்ள கதைகளை இஸ்லாமிய சகோதரத்துவக் குரல், நமது முற்றம், வளர்பிறை, முஸ்லிம் முரசு போன்ற இதழ்கள் தனித்தனி சிறு கதைகளாக பிரசுரித்துள்ளன. தொகுப்பாக்கும் சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி உரித்தாகட்டும்.

    இத்தொகுப்பை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

    தொகுப்பில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் - திருத்திக் கொள்கிறேன்.

    இறைவனின் அருளிருந்தால் தொகுப்புகள் தொடரும்.

    என்றென்றும் அன்புடன்,

    ஆர்னிகாநாசர்

    அண்ணாமலைநகர்

    23.09.2009

    ***

    1. கத்துக்குட்டி

    முத்தவல்லியின் எதிரே மூவர் நின்றிருந்தனர்.

    நல்ல முகமது. 2007ல் எம்டி கார்டியாலஜி முடித்துவிட்டு பிரதான கடைவீதியில் கிளினிக் வைத்திருப்பவன். வயது 29. உயரம் 175செ.மீ.

    ஹிமானா ஸையத். 1977ல் எம்டி கார்டியாலாஜி முடித்து விட்டு நல்லமுகமது கிளினிக்கிலிருந்து நாலாவது தெருவில் வீட்டோடு கிளினிக் வைத்திருப்பவர். வயது 60. உயரம் 165செ.மீ

    திருமேனி. வயது 40. உயரம் 160செ.மீ சேரியில் வசிப்பவன். மீன் வளத்துறையில் அடிமட்ட ஊழியனாக பணிபுரிபவன்.

    திருமேனி! இப்ப உங்க புகாரை சொல்லலாம்! என்றார் முத்தவல்லி.

    சாப்! மாரியப்பன் என்னுடைய மைத்துனன். அவருக்கு வயது 35. டென்னிஸ் கோர்ட்டுகளில் பந்து பொறுக்கி போடுபவராக பணிபுரிந்து வந்தார். போனவாரம் நானும் அவரும் வாய்க்காலில் மீன் பிடித்தோம். பிடித்த மீனை இருவரும் சமைத்து உண்டோம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் மாரியப்பனுக்கு கடும் அலர்ஜியாகிவிட்டது. மாரியப்பன் உடல் முழுக்க முகம் உட்பட கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் வீக்கம். என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் முழித்தேன். அனுபவ டாக்டர் ஹிமானா ஸையத்திடம் கொண்டு போவோமா, கத்துக்குட்டி டாக்டர் நல்ல முகமதுவிடம் கொண்டு செல்லலாமா என யோசித்தேன். எளிமையை படாடோபம் வென்றது. மாரியப்பனை நல்ல முகமதிடம் கொண்டு சென்றோம். மாரியப்பனுக்கு சிகிட்சையளிப்பதில் முதலில் இருந்தே தடுமாறினார் நல்லமுகமது. அதைவிட கொடுமை… சிகிட்சைக்கு நடுவே மெடிக்கல்புக்கை எடுத்து பார்த்துக்கொண்டார். ஒரு மணிநேரத்தில் நல்லமுகமதுவின் சிகிட்சை பலனளிக்காமல் மாரியப்பன் இறந்து போனார். விஷயத்தை பெருசு பண்ணாம பாடிய எடுத்துட்டு போய் எரியுங்கய்யான்னு சொல்லி ஆயிரம் ரூபாய் கொடுத்தார் நல்லமுகமது.

    மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் திருமேனி?

    கத்துக்குட்டி மருத்துவர் நல்லமுகமது தவறான சிகிட்சையளித்து மாரியப்பனை கொன்றுவிட்டார் என்கிறேன்.

    காவல்துறையிடம் புகார் அளிக்காமல் எங்களிடம் ஏன் வந்தீர்கள் திருமேனி?

    போனமாதம் நிலா டிவியில் ஒரு இஸ்லாமிய மதபிரசங்கி பேசினார். முழுவதும் கேட்டேன். ஒருவர் மருத்துவத்தில் கை தேர்ந்தவர் என்று பிரபல்யம் அடையாதிருக்கும் நிலையில் எவருக்கேனும் மருத்துவம் செய்வாராயின் (அவரின் உயிருக்கு மருத்துவம் செய்யும்) மருத்துவரே பொறுப்பாளியாவார்னு உங்க நபிகள் நாயகம் சொன்னதாக மதபிரசங்கி சொன்னார். அதன்படி பார்த்தா மாரியப்பன் மரணத்துக்கு நல்லமுகமது பொறுப்பாளி ஆகிறார். அவருக்கான தண்டனையை அவர் சார்ந்திருக்கும் மத தலைவரே தரட்டும் என்றுதான் உங்களிடம் புகார் அளித்தேன்!

    முத்தவல்லி முறுவலித்தார். நல்லமுகமது! எம்பிபிஎஸ் எங்கே படித்தீர்கள்?

    மருதமலை மருத்துவக் கல்லூரியில்!

    அது மிகமிகமோசமான மருத்துவக் கல்லூரியாச்சே!

    நல்லமுகமது பதில் பேசவில்லை.

    ப்ளஸ்டூவில் என்ன மார்க் எடுத்தீர்கள்?

    718!

    பிஸிக்ஸ் கெமிஸ்டரி பயாலஜி அக்ரிகேட் என்ன?

    பார்டர்லைன் எல்ஜிபிலிட்டிதான்!

    எவ்ளவு பணம் கொடுத்து எம்பிபிஎஸ் சீட் பெற்றீர்கள்?

    முப்பது லட்சம்!

    எம்பிபிஎஸ் படிப்பை ஒழுங்காக படித்தீர்களா?

    இல்லை!

    கடைசி செமஸ்டரில் எல்லா அரியர்ஸையும் பாஸ் பண்ண பணம் குடுத்தீர்கள் அல்லவா?

    ஆம்!

    எம்டி சீட்டு வாங்க எவ்ளவு பணம் குடுத்தீர்கள்?

    நாற்பது லட்சம்!

    எம்டி படிப்பையாவது ஒழுங்காக படித்தீர்களா?

    இல்லை… தட்டுத்தடுமாறினேன். அங்கும் கோர்ஸை பாஸ் பண்ண பணம் செலவழித்தேன். ஒரு விஷயம் முத்தவல்லி. எனக்கு டாக்டருக்கு படிக்க விருப்பமே இல்லை. எனக்கு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் இல்லை. எல்லாம் என் வாப்பா கட்டாயம். அவரோட கொழுந்தியா மக டாக்டருக்கு படிக்கிரான்னு வெறில என்னை டாக்டருக்கு படிக்க வச்சார். எம்டி முடிச்சதும் பெரும் செலவு பண்ணி கிளினிக்கும் வச்சுக் குடுத்திட்டார் வாப்பா.

    உங்க மருத்துவ படிப்புக்கு வாப்பா மொத்தம் எவ்ளவு செலவு பண்ணியிருப்பார்?

    மொத்தம் 90லட்சம் செலவு பண்ணிருப்பார். கண்ணை மூடித்திறந்தா எனக்கு பணம்தான் ஞாபகத்துக்கு வருது.

    டாக்டர் நல்லமுகமது! மாரியப்பனின் கேஸ் சீட்டை எடுங்க. எடுத்து டாக்டர்ஹிமானாஸையத்திடம் குடுங்க. டாக்டர் ஹிமானா ஸையத்! ட்ரீட்மென்ட் முழு விபரங்களையும் கேட்டறியுங்க. கேட்டறிந்து நல்லமுகமதுவின் கவனக்குறை வினாலும் தவறான சிகிட்சையாலும்தான் மாரியப்பன் இறந்தாரா என்பதை உறுதிசெய்து தாருங்க… விருப்பு வெறுப்பில்லாமல் நடுநிலைமையாய் இருக்கட்டும் உங்க விசாரணை!

    மாரியப்பனின் கேஸ் சீட்டை வைத்துக்கொண்டு நல்ல முகமதுவும் ஹிமானாஸையத்தும் அரைமணிநேரம் விவாதித்தனர்.

    விவாதிப்பின் பல இடங்களில் யெஸ் டாக்டர்! ஸாரி டாக்டர்! ஐ காட் டென்ஸ்டு டாக்டர்! என்றான் நல்லமுகமது.

    சொல்லுங்க டாக்டர்! மாரியப்பனுக்கு டாக்டர் நல்ல முகமது கொடுத்த சிகிட்சைசரிதானா?

    நல்லமுகமதை பார்த்தபடி தொண்டையைச் செருமினார் ஹிமானா ஸையத்.

    இல்லை!

    என்ன தவறு நேர்ந்துள்ளது?

    கார்டியாக் அரஸ்ட்டை தடுத்து நிறுத்த தவறிவிட்டார் நல்லமுகமது. பதட்டத்தில் தவறான ஊசி மருந்தை செலுத்தி விட்டார்!

    நல்லமுகமது அழுதான். இந்த விஷயம் வெளில தெரிஞ்சா என் மெடிக்கல் கேரியரே கெட்டுப் போயிடும். எங்கத்தா இடிஞ்சு போயிடுவார். அமிக்கபிளா முடிங்க முத்தவல்லி!

    நீங்க என்ன சொல்றீங்க திருமேனி?

    என் மச்சினன் மரணத்துக்கு நான் பழி வாங்க வேண்டும். தவறான ஊசி போட்டு இந்த கத்துக்குட்டி டாக்டரை கொல்ல அனுமதியுங்க!

    என்ன பேச்சு பேசுறீங்க திருமேனி?

    கண்ணுக்கு கண் கைக்கு கை பழிவாங்க உங்க இஸ்லாம் அனுமதிக்குதே முத்தவல்லி!

    மறுதலித்து தலையாட்டினார் முத்தவல்லி.

    தவறா சொல்றீங்க திருமேனி. நஷ்டஈடு அளிப்பது டாக்டர் நல்லமுகமது மீது கடமையாகும். பழிவாங்குதல் அவசியமன்று. காரணம் நோயாளி மாரியப்பன் மருத்துவத்துக்கு இணங்கியதே யாம்!

    மாரியப்பன் எங்க இணங்கினான்? அவன் மயக்கத்தில் அல்லவா கிடந்தான்?

    மாரியப்பனை நல்லமுகமதுவிடம் தூக்கிவந்தோர் இணங்கிதானே நல்லமுகமது சிகிட்சை செய்திருக்கிறார்?

    நல்லமுகமதை காப்பாத்த பார்க்கிறீர்களாமுத்தவல்லி?

    அப்டியில்லை. உண்மையைத்தான் சொன்னேன். பேசி ஒரு தொகை முடிவு செய்வோம். அதனை நஷ்டஈடாய் மாரியப்பனின் வாரிசுதாரருக்கு தரச் சொல்லுவோம்!

    நஷ்டஈடு தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். இனி நல்ல முகமது இந்த ஊரில் பிராக்டிஸ் பண்ணக்கூடாது. மாரியப்பனின் கதி இனி யாருக்கும் ஏற்படக்கூடாது.

    முத்தவல்லி! பதறினான் நல்லமுகமது.

    கொஞ்சம் இறங்கி வாங்க திருமேனி மாரியப்பனின் ஒரு கேஸை வைத்து நல்லமுகமதுவின் மருத்துவ அறிவை அன்டர்எஸ்டிமேட் பண்ணக்கூடாது!

    இதோ பாருங்கள்! கைபேசியை ஆன் செய்தான் திருமேனி.

    ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்பெண் நோயாளிகள் நல்லமுகமதுவின் சிகிட்சை முறை பற்றி அதிருப்தி தெரிவித்தனர். சில இளம்பெண் நோயாளிகள் நல்லமுகமதுவின் நடத்தை சரியில்லை என்றனர்.

    இப்ப என்ன செய்யலாம்? திருமேனி! நல்ல முகமதுவின் எதிர்காலம் கெடாத ஒரு தண்டனை சொல்லுங்க… விதிப்போம்!

    திருமேனி யோசித்து சூரியனித்தான். இப்டி செய்தால் என்ன?... அஞ்சு வருஷத்துக்கு டாக்டர் நல்லமுகமது டாக்டர் ஹிமானா ஸையத்தின் கிளினிக்கில் ஜூனியர் டாக்டராக பணிபுரிய வேண்டும். ஹிமானா ஸையத் என்ன தொகை மனம் உவந்து தருகிறோரோ அதுதான் நல்லமுகமதுக்கு சம்பளம். எப்ப ஹிமானா ஸையத் நல்லமுகமது திறமையான டாக்டராகி விட்டார் என சான்றுரைக்கிறாரோ அன்றைக்கு நல்லமுகமது தனியா கிளினிக் மீண்டும் தொடங்கலாம்!

    இம்பாஸிபிள். இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன். மாரியப்பன் கேஸை கோர்ட்ல சந்திச்சிக்கிறேன்!

    நீங்கள் உண்மையான இஸ்லாமியன் என்றால் நம் மஹல்லாவுக்கு நீங்க கட்டுப்பட்டே ஆகவேண்டும்!

    அஞ்சு வருஷம் ரொம்ப அதிகம் முத்தவல்லி! அழுதான் நல்லமுகமது.

    பேசி மூன்று வருடம் என ஒருமனதாய் முடிவெடுக்கப்பட்டது. நஷ்டஈடு ஒரு இலட்சம் என தீர்மானித்தார் முத்தவல்லி. நஷ்ட ஈட்டை மாரியப்பனின் துணைவியாரிடம் கொடுக்கச் செய்தார் முத்தவல்லி.

    தலையை இரு கால்களுக்கிடையே கவிழ்த்து அமர்ந்திருந்தான் நல்லமுகமது. வாசலின் அழைப்புமணி சிணுங்கியது. கதவைத் திறந்துவிட்டாள் நல்லமுகமதுவின் தாய். ஏழெட்டு மருத்துவர்கள் நல்லமுகமதை பார்க்க வந்திருந்தனர். அனைவருமே நல்லமுகமதுவுடன் மருதமலை மருத்துவலக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர்கள். பள்ளிவாசல்ல என்னடா தீர்ப்பு குடுத்தாங்க?

    நடந்தததை விவரித்தான் நல்லமுகமது.

    "பிள்ளைகளில் நல்லபிள்ளை யார்னு கேட்டதுக்கு எரியுற கொள்ளியோட கூரைமேல நிக்ற மகன்தான்னு ஒரு அப்பன் சொன்னானாம். அதுமாதிரி நம்ம செட்லயே ஓரளவு படிச்சுவந்த டாக்டர் நீதான். நீயே கத்துக்குட்டின்னா நாங்கல்லாம் படுபயங்கர கத்துக்குட்டிகள். உனக்கு கிடைச்ச தண்டனை எங்களுக்கும் கிடைக்க ரொம்ப நாளாகாது. ஒரு லட்சம் நஷ்டஈடு குடுத்திரலாம். ஆனா நமக்கு பிடிக்காத கிழட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1