Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkkai
Vazhkkai
Vazhkkai
Ebook310 pages2 hours

Vazhkkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன் குலேந்திரன் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St Johns College)) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, அதன் பின் தொலை தொடர்பபில் பொறியியல் பட்டம் பெற்று, சந்தை படுத்தலில் (Chartered Institute of Marketing) பிரித்தானியாவில் பட்டம் பெற்றவர்.

பத்து வயதில் சிறு கதைகள் எழுதத் தொடங்கி, அதன் பின் பல கலாச்சர மக்களோடு பழகியதால் இவரது கதைகள் பல பரிமாணத்தில் உருவாக்கப் பட்டவை. அறிவியல் கதைகளும் உருவகக் கதைகளும், மனித உரிமை மீறளோடு தொடர்புள்ள பல சிறுகதைகள் பொன், நல்லூரான். விஷ்வா ஆகிய புனை பெயர்களில் எழுதி வருகிறார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார்; ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களும் மின் நூல்களும் வெளியிட்டுள்ளார். பல இணயத்தளங்களுக்கும் எழுதி வரும் இவர் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பகுதி தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Vazhkkai

Read more from Pon Kulendiren

Related to Vazhkkai

Related ebooks

Reviews for Vazhkkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkkai - Pon Kulendiren

    http://www.pustaka.co.in

    வாழ்க்கை

    சிறுகதை தொகுப்பு

    Vazhkkai

    Sirukathai Thoguppu

    Author:

    பொன் குலேந்திரன்

    Pon Kulendiren

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pon-kulendiren

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. துணை

    2. பாக்கியலஷ்மி

    3. உக்குணா

    4. கேப்ரியல்

    5. ஓடிப்போனவள்

    6. போஸ்ட் மாஸ்டர் பொன்னையா

    7. வாரிசு

    8. சின்ன வீடு

    9. மலடி

    10. வடு

    11. தனிமை

    12. விவாகரத்து

    13. முரண்பாடு

    14. வீட்டுக்கு வீடு வாசல் படி

    15. வேலி

    16. மெலனி டீச்சர்

    17. உயிருக்கு உயிர்

    18. சிவகுருநாதனின் இறுதிப் பயணம்

    19. நன்கொடை

    20. பங்குக் கிணறு

    21. பெட்டிசன் பெரியதம்பி

    22. வீடு

    ******

    ஆசிரியர் பேனாவில் இருந்து

    திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றும் ஒருவனுக்கு ஒருத்தி என்றும் முன்னோர் சொல்லிய பொன் வாக்குகளாகும். மனிதர்களின் சிந்தனைகள் குடும்பத்தில் சில சமயங்களில் ஒத்துப் போவதில்லை அதனால் தினமும் குடும்பங்களில் பல பிரச்சனைகள் தொன்றுவதுண்டு. குடும்பத்தில் ஒவ்வொருவரும் வேறுபட்ட குணமுள்ளவர்கள். சிலரின் பிறவிக் குணம் மாறுவது கடினம். புலம் பெயர்ந்து வாழும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் போக்கு வேறுபட்டது. காரணம் வேறு பட்ட காலச்சாரத்தை சந்திப்பதால் தாய் மண்ணின் கலாச்சாரத்தில் இருந்து மாறுபடுவதுண்டு. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவது சகஜம். விவாகரத்து பல குடும்பங்களில் சர்வசாதாரணமாகி விட்டது. நீண்ட கால தாம்பத்திய வாழ்வு வாழ்ந்தவர்கள் மிக சிலரே.

    குடும்பத்தில் உள்ள பெண்பிள்ளையை வேறு படுத்தி வேறுப்பாக பெற்றோர் நடத்துவது உண்டு தமிழ் நாட்டில் உசிலம்பட்டி கிராமத்தில் பெண் பிறந்தால் ஒரு காலத்தில் கள்ளி பால் கொடுத்து அழித்து விடும் பழக்கம் இருந்து வந்தது. சில குடும்பகளில் பிள்ளைகள் மந்த புத்தி உள்ள்வர்கலானால் அவர்களை புறகணித்து பெற்றோர் நடத்துவதுண்டு. அதுவும் பெண்பிள்ளைக்கு குறை ஏதும் இருப்பின் அது போதும் புறகணித்து நடத்துவதற்கு. மகளின் திருமணத்தின் போது மாப்பிள்ளையின் பெற்றோருக்கு சீதனத்தோடு நன்கொடைப் பணமும் சில சமயம் கொடுக்க வேண்டி வரும்.

    பொறாமையின் காரனத்தால் ஒரு குடும்பம் தாம் விரும்பாத குடும்பத்துக்கு எதிராகப் பெட்டிசன் போடுவதுண்டு. கணவன் மனைவிக்கு இடையே நல்ல உறவு இல்லாது இருப்பின் கணவன் இனோருத்தியை நாடிச் செல்வதுண்டு. சந்தேகம் கணவன் மனைவிக்கு இடையே பிரிவை கொண்டு வருவதுண்டு. ஒரு மணமான பெண் குழந்தைகள் பெறமுடியாவிடில் சமூகத்தால் மலடி என்று பட்டம் சூட்டி ஒதிக்கி வைக்கப்படுகிறாள். பல குடும்பங்களில் மருமகளுக்கும் மாமிக்கும் இடைய உறவு நல்லதாக இருப்பத்தில்லை. மரபு வழிவந்த பழக்கத்தில் இருந்து காலத்துக்கு ஏற்ப தம்மை மாற்ற சில குடும்பங்கள் விரும்புவதில்லை. அனேக குடும்பங்களில் வெலி சண்டை. பங்குக் கிணற்றுச் சண்டை சொத்து சண்டை போன்றவைக்கு குறைவில்லை. இது போன்ற குடும்பங்களில் ஏற்றப்படும் பிரச்னைகளை உள்ளடக்கியது இந்த வாழ்க்கை என்ற தலைப்பில் 22 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு. வாசியுங்கள். இக்கதைகளில் எது உங்களுக்கு பொருத்தமானது என்பதை நீங்களே முடிவெடுங்கள். கதைகள் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து கற்பனையும் கலந்து எழுதப் பட்டவை.

    (பொன் குலெந்திரன் - கனடா)

    1. துணை

    அன்று தபாலில் வந்த என் நண்பன் ராஜேந்திரனின் திருமணமாகி அறுபது ஆண்டுகளாக ஒற்றுமையான கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் குடும்ப வாழ்வை சிறப்பிக்கும் வைரவிழாக் கொண்டாடத்துக்கு எனக்கு வந்த அழைப்பிதழ் என் நினைவுகளை பல தசாப்தங்களுக்குப் பின்னோக்கி அழைத்துச் சென்றது

    விவாகரத்து பிரபல்யமாக இருந்து வரும் இக் காலக் கட்டத்தில் எனது நண்பன் ராஜேந்திரன் திருமணமாகி அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது அதை சிந்தித்து பார்க்கும் போது அறுபது ஆண்டுகள் இணைபிரியா தம்பதிகளாக வாழும் ராஜேந்திரனையும் வாசுகியையும் இட்டு பெருமைப் பட்டேன். இளம் சமூதாயத்துக்கு அவர்கள் ஒரு உதாரணம்.

    ராஜேந்திரனின் காதல் திருமணம் எதோ நேற்று நடந்த மாதிரி எனக்கு இருந்தது. ராஜேந்திரனும் நானும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக அறிவியல் துறையில் படித்தவர்கள். ராஜேந்திரனுக்கு மெல்லிய உடம்பு. எபோதும் கலகலப்பாக பேசுவான். சிரித்த முகம். யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே 22 கிமீ தூரத்தில் உள்ள இடைக்காடு கிராமம் அவனின் பிறப்பிடம். இவ்வூர் கல்விமான்களுக்கு பெயர் பெற்றது. ராஜேந்திரனின் தாயும் தந்தையும் அருகில் உள்ள அச்சுவேலியில் ஒரு கல்லூரியில் ஆசிரியர்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பிள்ளைகளில் ராஜேந்திரன் மூத்தவன். அவனுக்கு அடுத்தது மாதவி. கடைக்குட்டி மகேந்திரன்.

    ராஜேந்திரனை நான் முதலில் சந்தித்தது கொழும்பு பல்கலைகழகத்தில் முதலாம் நாள் சீனியர்கள் நடத்திய ராகிங் என்ற பகிடிவதையின் போது. பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவரின் அறிமுக உரையைக் கேட்க புதிய மாணவர்கள் எல்லோரும் கிங் ஜோர்ஜ் அரங்குக்கு முன்னால் உள்ள வெளியில் கூடி இருந்தார்கள். உரை முடிந்ததும் சீனியர்கள் வீசிய அழுகிய தக்காளி,. வாழை பழம், சேறு ஆகியவை பல திசைகளில் இருந்து கூடியிருந்த புதிய மாணவர்களை நோக்கி வந்தது. அச்சமயம் என்னருகே திரு திரு வென்று முழித்துவாரே இருந்த மாணவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. அந்த மாணவனைக் காப்பாற்ற அவனது உடலை மறைத்தவாரே அவன் முன்னால் நின்று பழங்களும் சேறும் அவன் மேல் விழாமல் அவனைக் காப்பாற்றினேன். ராகிங் முடிந்ததும் அந்த மாணவன் என்னிடம் வந்து என்னை கட்டி அணைத்துவாரே

    நண்பா. நீர் செய்த உதவிக்கு நன்றி. என் பெயர் ராஜேந்திரன். உமது பெயர் என்ன? நீர் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து வந்தவரா? அந்த மாணவன் என்னைக் கேட்டான்

    இல்லை. எதற்காக அப்படி கேட்கிறீர்? நான் கேட்டேன்

    கொழும்பில் படித்து, பல்கலைகழத்துக்கு வந்த மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மாணவர்களைக் குறைவாக மதிப்பவர்கள். ராகிங் செய்யும் போது அவர்களைக் குறிவைத்து தாக்குவார்கள் என்று என்னோடு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்து பல்கலைகழத்துக்கு வந்த நண்பர்கள் சொன்னார்கள். நீர் எந்த கல்லூரியில் இருந்து வந்தனீர்? உமது பெயர் என்ன ராஜேந்திரன் என்னைக் கேட்டான்.

    அப்படி ஒரு போதும் நீர் கருதக் கூடாது. என் பெயர் முகுந்தன். இலங்கையின் பல கிராமப் பகுதிகளில் இருந்து வந்த புதிய மானவர்கள் இந்த கூட்டத்தில் இருகிறார்கள். நான் படித்தது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில். கொழும்பு பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என்று பாகுபாடு இருக்க கூடாது என்றேன் நான்.

    அந்த சம்பவத்தின் பின் எனக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே ஆரம்பித்த நட்பானது அவன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானம் படித்த வாசுகியை காதலித்து பதிவு திருமணம் செய்த போது சாட்சியாக இருந்ததை நான் மறக்வில்லை.

    ராஜேந்திரன் கணக்கில் புலி. ஆங்கிலம் பேச கூச்சப்படுவான். ப்ரிட்ஜ் என்ற காரட் விளையாட்டில் சூரன். ராஜேந்திரன் படித்து முதலாம் வகுப்பில் சித்தி பெற்று இலங்கை வருமான வரித் திணைக்களத்தில் மதிப்பீடு செய்யும் அசெசர் (Assesor) வேலை] கிடைத்து கொழும்பில் வேலை செய்ய ஆரம்பித்தான். நான் தொலைத் தொடர்பு திணைக்களத்தில் பொறியியலாளனாக வேலை செய்ய ஆரம்பித்தேன். அரசில் வேலை செய்யும் எட்டு பேர் வெள்ளவத்தையில் ஒன்றாக வசிக்கும் சம்மரி (Chummery) என்ற வீடு ஒன்றில் நாம் இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து எமது நட்பை வளர்த்தோம்.

    1956 இல் ராஜேந்திரன் – வாசுகி திருமணம் செல்வச்சன்னதி முருகன் கோவிலில் நடந்தேறியது. ஆரம்பத்தில் வாசுகியின் தந்தை தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்பு ராஜேந்திரன் தனது தூரத்துச் சொந்தக்கரப் பையன் என்று விசாரித்து அறிந்ததாலும் அதோடு. அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாலும் தன் மகளின் திருமணத்துக்கு மனைவியோடு வந்திருந்தார்.

    ராஜேந்திரன் வாசுகி தம்பதிகளுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களுக்குள் முதலில் ஒரு ஆணும் அதை அடுத்து ஒரு பெண்ணுமாக செல்வேந்திரனும். மீராவும் பிறந்தார்கள்.. இருவரும் தந்தையைப் போல் படிப்பில் கெட்டிக்காரர்கள். இருவரும் பல்கலைக் கழகம் வழங்கிய புலமைப் பரிசு பெற்று செல்வா கனடாவுக்கும் மீரா இங்கிலாந்துக்கும் முனைவர் படிப்புக்குச் சென்றனர்.

    ஒரு நாள் என் மனைவியோடு ராஜேந்திரன் வீட்டுக்கு போன போது அத் தம்பதிகளின் ஒற்றுமையைக் கண்டு பெருமைப் பட்டேன். வாசுகி ராஜேந்திரனை பெயர் சொல்லி அழைக்காமல்அத்தான் என்று அழைத்ததில் ஒரு பரிவும் கரிசனையும் தொனித்தது. அதே மாதிரி ராஜேந்திரனும் வாசுகியைகுஞ்சு என்று அழைத்ததில் எவ்வளவுக்கு அவன் தன் மனைவி மேல் பற்றுதல் வைத்திருக்கிறான் என்பதை அறிய எனக்கும் என் மனைவிக்கும் வெகு நேரம் எடுக்கவில்லை. ராஜேந்திரனுக்கு நீரழிவு வியாதி இருப்பதால் அவனின் உணவை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது வாசுகியின் பொறுப்பு. அவனை தாய் போல் வாசுகி கவனித்தாள், அவன் அணியும் ஆடைகள் முதல் கொண்டு தெரிந்துஎடுத்துக் கொடுப்பது வாசுகியே.

    பிள்ளைகளின் பிரிவு அவர்களை எவ்வளவுக்கு வாட்டுகிறது என்பதை நான் உணர்ந்தேன். அடிக்கடி இருவரும் செல்வாவையும் மீராவையும் பற்றியே பேசுவார்கள். அவர்கள் இருவரும் படித்து முடித்து நாடு திரும்பிய பின் நல்ல இடத்தில திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எனக்கு ராஜேந்திரன் சொல்வான்

    "முகுந்தா. நீ என்குடும்பத்தில் ஒருவனாகி விட்டாய் உன்னிடம் ஓன்று கேட்கலாமா?

    தயங்காமல் கேள் ராஜேந்திரா

    "என் மகனும் மகளும் கனடாவிலும். இங்கிலாந்திலும் இருந்து படித்து முனைவர்களாகி திரும்பியவுடன் நாங்கள் இருவரும் கண் மூட முன் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து பேரப்பிள்ளைகளைக் காண ஆசை படுகிறோம்.

    எல்லோருக்கும் பேரப்பிள்ளைகளைக் காண ஆசை இருக்கும் தானே நான் சொன்னேன்.

    எங்களுக்கு வரும் மருமகளும் மருமகனும் எங்கள் குடும்பத்துக்குள் பிரச்சனைகளை உருவாக்கி பிரிவை கொண்டுவரக் கூடாது. அதனால்..

    அதனால் என்று சுற்றி வளைக்காமல் உன்விருப்பதை சொல் ராஜேந்திரா

    முகுந்தா உனது மகன் கண்ணனும், மகள் ராதாவும் எங்கள் குடும்பத்துக்குள் மருமகனாகவும். மருமகளாகவும் வரவேண்டும் என்பது எனக்கும் வாசுகிக்கும் விருப்பம். உன் விருப்பத்தைச் சொல்

    நான் சில வினாடிகள் யோசித்து விட்டு ராஜேந்திரா எதுக்கும் என் பிள்ளைகளோடு நான் பேசி அவர்கள் சம்மதம் கேட்டு உங்களுக்கு பதில் சொல்லுகிறேன். எனக்கு அவகாசம் தா என்றேன் நான்.

    ******

    நாம் நினைப்பது ஓன்று நடப்பது வேறொண்டு. செல்வாவும் மீராவும் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பவில்லை. அவர்கள் இருவரும் தாய் தந்தையின் ஆசையைப் பூர்த்தி செய்யவில்லை.

    ஒரு நாள் ராஜேந்திரனை சந்தித்தபோது அவன் சொன்ன வாரத்தைகள் எனக்குப் பரிதாபமாக இருந்தது

    முகுந்தா என் பிள்ளைகள் என்னையும் வாசுகியும் ஏமாற்றி விட்டார்கள் ராஜேந்திரன் சொன்னான்.

    ஏன் என்ன நடந்தது

    என் மகன் செல்வா முனைவராகி டொரோண்டோ பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக வேலைகிடைத்து இலங்கைக்கு வராமல் அங்கேயே நின்று விட்டான்.

    அது அவனுக்கு நல்லது தானே ராஜேந்திரா

    அது மட்டுமல்ல அவன் தன்னோடு லெட்சரராக வேலை செய்யும் கனேடிய வெள்ளைக்காரி ஒருத்தியை திருமணம் செய்து விட்டான்.

    அப்போ மீராவுக்கு என்ன நடந்தது?

    அவளும் அவளோடு வேலை செய்யும் ஒரு இங்க்லீஷ்காரனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாள் இப்போ எங்களின் கடைசி காலத்தில் எங்களைக் கவனிக்க பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துணை என்ற வாழ்வுதான்" என்றான் ராஜேந்திரன் விரக்தியோடு கண் கலங்க.

    இந்தக் காலத்தில் நாங்கள் பிள்ளைகளை கட்டுபடுத்த முடியாது. அவர்களை நம்பி வாழவும் முடியாது. எதோ அவர்கள் நல்லாக அவர்கள் விருப்பப் படியே எங்கிருந்தாலும் வாழட்டும். அதை பற்றி நீயும் வாசுகியும் காவலைப்படாமல் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழுங்கள் என்று அவனையும் வாசுகியையும் தேற்றிச் சென்றேன்.

    ******

    ராஜேந்திரன்- வாசுகியின் திருமண வைர விழாவுக்கு உறவினர்களும், அவர்களோடு ஒன்றாக வேலை செய்தவர்களும் திரண்டு வந்திருந்தனர், சில அரசியல் வாதிகளும் சமுகம் தந்திருந்தனர்.

    ஐயர் ஒருவர் ஓமம் வளர்த்து திருமணத்துக்கு செய்யும் கிரிகைகள் செய்வது போன்று செய்த. பின்னர் இருவரும் மாலை மாற்றி, அதை அடுத்து ஒரு பெரிய கேக்கை அவர்கள் இருவரையும் கொண்டு வெட்டுவித்தனர்.. ஒரு சிலர் தம்பதிகளின் ஒற்றுமையான குடும்ப வாழ்வைப் பற்றி உரையாற்றினார். என்னை பேச அழைத்த போது நான் எப்படி ராஜேந்திரனோடு அறிமுகமானேன். தம்பதிகளின் காதல் எப்படி பல்கலைகழகத்தில் வளர்ந்தது என்பதை நகைச்சுவை கலந்து பேசினேன் பலரின் உரைகளுக்கு பின் ஒரு உஞ்சலில் தம்பதிகளை வைத்து மங்கள இசை முழங்க தாலாட்டு பாடி உஞ்சலை ஆட்டினார்கள்.

    அந்த வைர விழாவுக்கு செல்வனும் மீராவும் வெளிநாட்டில் இருந்து வந்திருந்து எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

    நான் செல்வாவை பார்த்து கேட்டேன் என்ன செல்வா, உமது மனைவியைக் காணோம். அவளைக் கூட்டி வரவிலலையா?

    இல்லை அங்கிள்,. எங்களுக்குள் கருத்து வேற்றுனம அடிக்கடி ஏற்பட்டதால் நான் என் மனைவியை மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து செய்து, எங்கள் உறவுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டேன் என்றான் செல்வன்.

    நான் மீரா பக்கம் திரும்பி" என்ன மீரா உன் கணவனுக்கு என்ன நடந்தது? உன் திருமணக் காதல் திருமணம் என்று கேள்வி பட்டேன்.. அவர் உன்னோடு வரவில்லையா?

    "இல்லை மாமா. அவர ஒரு சரியான சந்தேகப் பேர்வழி. எனக்கு வேறு ஆடவர்களோடு தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார். நான் எந்த ஆடவனோடும் சிறிது பேசுவது அவருக்கு பிடியாது. சரியான பொசெசிவ் போக்கு உள்ள மனிதன். அதனால் வீட்டில் எபோதும் சண்டை. இரண்டு வருட திருமண வாழ்க்கைக்குப்பின் அவரை விவாகரத்து செய்து விட்டேன். என் படிப்புக்கு] வேறு ஒருவன் கணவனாகக் கிடைக்காமலா போவான்? என்றாள் மீரா

    நான் அவர்கள் பதில்களை கேட்டு அதிர்ந்து போனேன். திருமண வாழ்கையை எதோ ஆடை மாற்றுவது போல் என நினைத்து விட்டார்களா இவர்கள் என்றது என் மனம்..

    அது சரி மாமா எங்கைளைப் பற்றி விசாரிக்குரீர்களே உங்கள் பிள்ளைகள் கண்ணனும் ராதாவும் எப்படி இருக்குறார்கள்? செல்வன் கேட்டான்.

    கடவுளே என்று அவர்களுக்கு குறை ஒன்றுமில்லை. இருவருக்கும் திருமணமாகி பத்து வருடங்களாகி விட்டது. இருவரும் அரசாங்கத்தில் அதிகாரிகளாக இலங்கையில் வேலை செய்கிறர்கள். தனி குடித்தனம் நடதுகிறார்கள் கண்ணனுக்கு இரு மகன்கள், ராதாவுக்கு மூன்று மகள்மார் உண்டு. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், என்பதும் ஒருவன் ஒருத்திக்கு மட்டும் என்பதும் நம் முன்னோர்களின் கூற்று, உங்கள் பெற்றோர் அதன்படி வாழ்கிறர்கள். முதுமை காலத்தில் ஒரு துணை அவசியம்." என்றேன் நான் சிரித்தபடியே.

    ஊஞ்சலில் இருந்த ராஜேந்திரனும் வாசுகியும் நான் அவர்களின் பிள்ளைகளுக்குக் சொன்ன பதிலைக் கேட்டு முகத்தில் புன்முறுவளோடு இருந்தனர்.

    ******

    2. பாக்கியலஷ்மி

    பிறக்கும் முன்பே வீட்டில் அவளுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கவில்லை. காரணம் தாயின் வயற்றில் கருவாக இருக்கும் போதே ஸ்கான் செய்து பார்த்த போது பெண்குழந்தை என டாக்டர் சொன்னது அவளின் பெற்றோருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. நாலாவது பெண்ணாகப் பிறந்தால் குடும்பமே நாய்படாப் பாடுதான் படும் என்பது முதியோர் வாக்கு. இவன் முருகேசு என்ன பாடு படப் போறானோ என்று முருகேசுவின் பேத்திக்கிழவி தெய்வானைப் பெத்தாச்சியின் முணு முணுப்பு வேறு. கிழவி சொன்னபடி வாக்கு பலிக்குமோ என முருகேசு யோசித்தார். அவள் நாக்கு கருநாக்கு எண்ற பயம் அவருக்கு. டாக்டரிடம் கருவைச் சிதைக்க யோசனை கேட்டார். மாதங்கள் கூடிவிட்டபடியால் கருவைச் சிதைத்தால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்றார் டாக்டர்.

    முருகேசுவின் மனைவி தனலஷ்மிக்கு பெண் குழந்தையென்றால் கொள்ள ஆசை. தான் பிறந்த பிறகு தான் தன் தகப்பனுக்கு வழக்கில் நீண்ட காலம் இழுபறிபட்டுக்கிடந்த கிளிநொச்சியில் முப்பது ஏக்கர் வயலும் யாழ்ப்பாணத்தில் வீடுவளவும் கிடைச்சது என்று அடிக்கடி சொல்லி பெருமைபட்டுக் கொள்வாள். தன் மூத்த மூன்று பெடியன்களும் வீட்டை தலைகரணமாக்குவதையும் அவர்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதையும் அவள் நினைத்து பல தடவை மனம் வருந்தியிருக்கிறாள்.

    "நீங்கள் கொடுத்த செல்லத்தில் மூன்று பெடியன்களும் என்றை சொல்லுக்கு மதிப்பு கொடுக்குதுகள் இல்லை என்று புருஷனிடம் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வாள் தனம். ஆனால் முருகேசுவின் கருத்து வேறு. ஊர் விதானையார் வினாசித்தம்பி படும் பாடு அவருக்குத் தெரியாமல் இல்லை. நாலு பெண்களுக்கு தகப்பன் வினாசி. சீதனம் கொடுக்க வசதியில்லாமல் மூத்தவளுக்கு பேசி வந்த கலியாணம் எல்லாம் தவறிப்போயிற்றுது. கடைசியில் அவரின் மூத்தவள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த கார் டிரைவருடன் ஓடிப்போனபோது அவரை ஊரே ஏளனமாகப் பார்த்தது. இரண்டாவது பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் எண்டு பேசிவந்த கலியாணங்கள் சரிவரவில்லை. அதோடு தமக்கை யாரோடையோ ஓடிப்போன கதை வேறு. மூன்றாவது படு சுட்டி. ஆனால் மேலை படிப்பிக்க வினாசிக்கு வசதியிருக்கவில்லை. நாலாவது பெண்பிறந்த காலமோ என்னவோ வினாசியின் மனைவி மார்பில் புற்றுநோய் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டாள். வினாசிக்கும் புதிய அதிகாரியால் பிரச்சனைகள் பல. அவருக்கு நடந்த மாதிரி தனக்கும் ஏதாவது நாலாவது பெண் பிறந்தால் நடக்குமோ என்று பயந்தார் முருகேசு.

    சித்திரை மாதத்தில் மூலநட்சத்திரத்தில் பாக்கியலஷ்மி பிறந்தபோது தெய்வானை பெத்தாச்சிக்கு அதிர்ச்சி. ஊர் சாஸ்திரி சதாசிவம், குழந்தையின் குறிப்பைப் பார்த்துவிட்டு மூக்கில் விரலை வைத்தபடி யோசித்தார்.

    என்ன சாத்திரியார். குறிப்பு எப்படி யிருக்கு? விசனத்தடன் கேட்டார் முருகேசு.

    பெண் மூலம் நிர்மூலம். வேறு என்ன சாஸ்திரியார் சொல்லப் போறார் என்று பக்கத்தில் இருந்து பல்லி சொன்ன மாதிரி சொன்னாள் தெய்வானைப் பெத்தாச்சி.

    எணேய். நீ வாயை வைச்சுக் கொண்டு சும்மாயிரு. உனக்குத்தான் ஜென்மத்துக்கு பொம்பிளைப் பிள்ளையள் எண்டால் பிடியாதே. என்றாள் தனம்.

    பிள்ளைக்கு என்ன பெயர் வைக்க யோசித்திருக்கிறியள்? சாஸ்திரியார் குறிப்பைப் பார்த்து விரல்களால் எண்ணியபடி கேட்டார்.

    "இவருடைய அம்மாடை பெயர் பாக்கியம். என்றை அம்மாவின்றை பெயர் லஷ்மி. இரண்டையும்

    Enjoying the preview?
    Page 1 of 1