Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavithai Muran
Kavithai Muran
Kavithai Muran
Ebook160 pages37 minutes

Kavithai Muran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரியும் இவர் முனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 13 நூல்கள் மற்றும் மற்றும் 170 கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கண மொழி கல்வெட்டு வரலாறு, ஆண் ஆளுமையில் பெண் கற்பு, கவிதை முரண், தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும், புறநானூறு – பதிப்பு வரலாறு, சிறுபாணாற்றுப்படை – பதிப்பு வரலாறு, பொருநராற்றுப்படை – பதிப்பு வரலாறு போன்றவை இவரின் சில நூல்கள். இவர் 2007-ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’ பெற்றுள்ளார். இவரின் ஆய்வுக் களம் இலக்கியம், இலக்கணம், சமூகவியல் போன்றவைகளாகும்.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580122002457
Kavithai Muran

Read more from A. Selvaraju

Related to Kavithai Muran

Related ebooks

Reviews for Kavithai Muran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavithai Muran - A. Selvaraju

    http://www.pustaka.co.in

    கவிதை முரண்

    Kavithai Muran

    Author:

    அ. செல்வராசு

    A. Selvaraju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/a-selvaraju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கவிதை முரண்

    The task of criticism is the

    Reconstruction of the Creative Process

    -Richard Wollheim

    என் அருமை மாணாக்கர்களுக்கு

    வாசிக்க வாங்க…

    இரவும் பகலும் ஓயாமல் வந்து கொண்டே இருப்பது போல ஒவ்வொரு நாளும் கவிதை நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கவிதைகளாகச் சில. கவிதை வடிவங்களாகச் சில. முறிக்கப்பட்ட சொற்றொடர்களாகச் சில. முறிக்கப்பட்ட சொற்றொடர்களின் ஓசைகளாகச் சில. ஆனால், கவிதை பற்றிய திறனாய்வு நூல்கள் ஒரு சிலவே வந்துள்ளன. வெளிவரும் திறனாய்வுகளும் தனிமனித தாக்குதல்களாக இருக்கின்றன. இதற்குக் கவிதைகளும் ஒருவகையில் காரணமாகின்றன. இந்த நூலின் முற்பகுதியில் மேற்கோள் காட்டப்பெறும் கவிதைகளின் ஆசிரியர் பெயர் சுட்டப் பெறவில்லை. அந்தக் கவிதை இடம் பெற்றிருக்கும் தொகுப்பின் பெயரோ, கவிதை வெளி வந்த இதழ்களின் பெயரோதான் சுட்டப் பெற்றுள்ளது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று தனி மனித தாக்குதலையோ, பாராட்டையோ தவிர்ப்பதற்கு, மற்றொன்று தேடலை உருவாக்குவதற்கு.

    இந்நூலில் எது கவிதை என்று அடையாளம் காட்டப் பெற்றுள்ளதே அன்றி, எது நல்ல கவிதை, எது மோசமான கவிதை என்றெல்லாம் அடையாளம் காட்டப் பெறவில்லை. அதை வாசிப்போரே தீர்மானித்துக் கொள்ளலாம். அதே போலச் சான்று காட்டப்பெற்றுள்ள கவிதைகள் முழுமையாக எடுத்தாளப் பெற்றுள்ளன. காரணம் ஒரு கவிதைப் படைப்பில் எல்லா அடிகளும் கவிதையில்லை. ஏதோ ஒரு சொல்லோ, சொற்றொடரோதான் கவிதையாக இருக்கும் என்பதற்காக.

    திரையிசைப் பாடல்கள் எழுதுவோர்தான் சிறந்த கவிஞர்கள் என்றொரு பார்வை பெரும்பாலோருக்கு உண்டு. எனினும் அவர்களைவிடச் சிறப்பாக எழுதுவோர் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள். இவர்கள் ஒருசில வார, மாத இதழ்களோடு மட்டுமே தொடர்புடையவர்கள். அவர்களின் படைப்புகளையும் இனங்காணும் பொருட்டு இதழ்களில் வெளிவந்த கவிதைகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பெற்றுள்ளன.

    இந்நூல் தோற்றத்திற்குக் காரணம் என் மாணாக்கர்களே. என் வகுப்பு நேரத்தை நான் மூன்று பகுதியாகப் பகுத்துக் கொள்ளுதல் உண்டு. வகுப்பின் தொடக்கத்தில் அன்றைக்கு நடந்த உலகளாவிய நிகழ்வுகள் பற்றிய விளக்கம். பிறகு பாடம். வகுப்பின் நிறைவில் ஒரு கவிதை. சில நேரங்களில் கவிதையைச் சொல்லி முடித்ததும் ஐயா, இன்று கவிதை சொல்லவில்லையே என்பார்கள். இப்படி மாணவ வாசகர்களின் பேச்சிலும், முகத்திலும் வெளிப்படும் எதிர் விளைவுகளின் பதிவுதான் இந்நூல். எனவே இந்நூலை என் மாணாக்கர்களுக்குப் படையலாக்குவதில் வபருமை கொள்கிறேன்.

    மற்றொரு வகையில் நூல் உருவாக்கத்திற்குக் காரணமானவர் பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத் துறைப் பேராசிரியர் இரா. அறவேந்தன் அவர்கள். சந்திக்கும் பொழுதெல்லாம் நூல் உருவாக்கச் சிந்தனையைத் தூண்டியவர்.

    வழக்கம்போல் நூல் அச்சாக்கம் செய்தவர் ஸ்ரீநிதி ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு.பொ.செந்தாமரைக்கண்ணன்.

    உணர்விருக்கும் வரை இவர்களது உதவியும் உள்ளத்தில்.

    - அ. செல்வராசு

    அகத்தில்

    1. கவிதை பற்றிய புரிதல்

    2. இன்றைய கவிதைப் போக்கு

    3. பெண் கவிஞர்களும் கவிப்பொருள் தேர்வும்

    4. அயலகத் தமிழ்க் கவிதைகள்: சேரன், ஆழியாள் கவிதைகளை முன்வைத்து

    5. பொருளடைவு

    1

    கவிதை பற்றிய புரிதல்

    புதினம், சிறுகதை, நாடகம், கவிதை என இலக்கிய வடிவங்கள் பற்பல. இவற்றில் பிற வடிவங்களைக் காட்டிலும் கவிதை வடிவம் கவன ஈர்ப்பைப் பெறுகிறது. பெரும்பாலோர் கையாளும் வடிவமாகவும் கவிதை வடிவம் உள்ளது. புதினம், சிறுகதை, நாடகம் என்ற வடிவங்களுக்கான வரையறை போன்று கவிதை என்பதற்கான வரையறை முழுமையாக வடித்தெடுக்கப் பெறவில்லை எனலாம். ஒரு சில வரையறைகளும் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளன. எனவே கவிதை என்பதைத் தேடிப்போய் அதனை வரையறுக்க சிரமப்படுவதை விட, அதனை விளங்கிக்கொள்ள - அதனைப் புரிந்து கொள்ள - முயல்வது நல்லது என்பர் தி.சு. நடராசன் (2002; 12).

    எனினும் ஒரு சில கவிஞர்கள் எது கவிதை என்று விவரிக்க முற்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காத உணர்ச்சிகள், அமைதியான வேறொரு சூழலில் வீரியத்தோடு வெளிப்படுவது கவிதை என்கிறார் வேட்ஸ் வொர்த்[57] (poetry is the spontaneous overflow of powerful feelings and emotions recollected in tranquility). இந்த வரையரை முரண்பாட்டைத் தோற்றுவிப்பதாக இருக்கிறது. உள்ளத்து உள்ளது கவிதை இன்ப ஊற்றெடுப்பது கவிதை என்கிறார் கவிமணி. உள்ளத்து உள்ளது கவிதை மட்டும் அல்ல, சிறுகதையும் தான், நாவலும் தான். இன்ப ஊற்றெடுப்பது கவிதை என்பதும் ஒருபக்க வரையறையாகவே இருக்கிறது. எப்பொழுதும் அல்ல, எப்பொழுதாவது எழுதுவது கவிதை நினைக்கும் பொழுது அல்ல, மனது கணக்கும் பொழுது எழுதுவது கவிதை என்கிறார் வலம்புரிஜான்[50](1998 ; 41). இதனைக் கவிதை எழுதுவதற்கான துழல் என்று கொள்ளலாமேயன்றிக் கவிதை என்பதற்கான வரையறையாகக் கொள்வதற்கில்லை . வார்த்தைகள் நடந்து வந்தால் உரைநடை, நடனமாடிவந்தால் கவிதை என்ற அலங்கார வரையறையும் பொருந்தவில்லை. நடனமாடி வருவன அனைத்தும் கவிதை இல்லை.

    இவ்வரையறைகளைக் காணும்

    Enjoying the preview?
    Page 1 of 1