Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veli Manithan
Veli Manithan
Veli Manithan
Ebook215 pages1 hour

Veli Manithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தும் சித்திரமும் விட்டல்ராவுக்குக் கைவந்த கலைகள். இவர் நிறைய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

சித்திரக் காட்சிகளில் இவருடைய ஓவியங்கள் பாராட்டுப் பெற்றுள்ளன. எழுத்தில் இவருக்குள்ள தாகம்தான் வெற்றி பெற்றது. தூரிகையின் லாவகம் எழுத்தில் சங்கமித்து விட்டது.

1941-இல் ஓசூரில் பிறந்த இவர், 1967 முதல் எழுதி வருகிறார். இவருடைய 'போக்கிடம்' நாவலுக்கு இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கியது.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580121502422
Veli Manithan

Read more from Vittal Rao

Related to Veli Manithan

Related ebooks

Reviews for Veli Manithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veli Manithan - Vittal Rao

    http://www.pustaka.co.in

    வெளி மனிதன்

    Veli Manithan

    Author:

    விட்டல் ராவ்

    Vittal Rao

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vittal-rao

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    வெளி மனிதன்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    புளி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    இன்னொருத்தி

    அத்தியாயம் 1

    மிக அருகில் ஒரு பாலம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    ***

    முன்னுரை

    எனது இருபது ஆண்டு எழுத்து வாழ்க்கையில் பத்திரிகையிலும் சரி, தனியாக புத்தகமாக வெளிவந்த எழுத்திலும் சரி நான் பார்த்த என்னைப் பாதித்த வாழ்க்கையையே எழுதி வருகிறேன்.

    நதி மூலம் என்ற நாவலில் ஒரு ஐம்பது ஆண்டுகளின் தென்னக சமூக அரசியல் பொருளாதார மத பின்னணியில் ஒரு குடும்ப வாழ்க்கையின் சரிதம் பரிவுடன் எழுதப் பட்டிருக்கிறது." என்றும் தமிழில் இது ஒரு புதிய முயற்சி என்றும் விமர்சகர்கள் சொல்லக் கேட்ட பிறகு நான் எழுத நினைத்திருக்கும் மனக் குறிப்புகளை எழுதுவதற்கு ஒரு உந்து சக்தி கிடைத்திருக்கிறது.

    இந்நூலில் இடம்பெற்றுள்ள குறுநாவல்கள் பத்திரிகைகளில் வெளிவந்தவை. ஒரு வகையில் இந்தக் குறுநாவல்களை எழுதும்படி உற்சாக மூட்டி வளர்த்தவை பத்திரிகைகள்தான். செகாவ், துர்கனேவ், தோல்ஸ்தோய் போன்றோர் காலத்திலிருந்தே குறுநாவல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் நாம் இங்கே இதிலும் காலம் கழித்தே விழித்திருக்கிறோம். குறுநாவல் என்பது நாவலின் சுருக்கம் அல்ல என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது.

    வெளி மனிதனில் வரும் பாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் என்னோடு பழகியவர்கள். அவர்களின் உறவுகளில் நான் விசேஷ கவனம் செலுத்தியவன். மனிதனை மனிதன் தனிப்பட்ட வழியிலோ அல்லது பொதுவாகவோ எதன் பலத்தைக் கொண்டேனும் சுரண்டி வருவதைக் கண்டு சும்மாயிருக்க முடியவில்லை. இடம் பெற்றுள்ள இந்த எல்லா கதைகளிலுமே மனிதன் மனிதனைச் சுரண்டும் விஷயம் பொதுவாக அடி நாதமாக இருக்கும்.

    விட்டல் ராவ்

    ***

    வெளி மனிதன்

    1

    அருணாசலத்துக்கு வெடரன்ஸ் லேன் புதிதல்ல. கவுல் பஜாருக்குப் போவது வருவதெல்லாம் இதன் வழியாகத் தான். என்றாலும் வெடரன்ஸ் லேனில் இதுவரை யாரையும் பரிச்சயமில்லை. எந்த வீட்டுக்கும் போனதில்லை. பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்களும் ராணுவ அதிகாரிகளுமாய்க் குடியிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்க் காலிபண்ணி வரும் பகுதி அது. ஒரு அசாதாரண அமைதி. இன்று ஒரு வீட்டை தேடி ஒரு நண்பனைத் தேடி சமீபத்தில்தான் சினேகமான அவனுடைய தயக்கம் நிறைந்த அழைப்பின் பேரில் இந்த வெடரன்ஸ் லேன் பகுதியில் அருணாசலம் நுழைந்திருந்தான்.

    ஒரு ஆறு மாத காலமாய் ரங்கராஜை இவனுக்குத் தெரியும். முதன் முதலில் சந்திக்கையில் நான்கைந்து ஓவியர்களின் மத்தியில் அவன் ஒதுங்கி நின்றிருந்தான், மியூசியம் செண்டினரி ஹாலில் அமைந்திருந்த ஓவியக் கண்காட்சியின் திறப்பு விழாவின்போது அது. ஒல்லியும் உயரமுமாய்ச் சற்றே கூன் விழுந்த வாகு. மனம் விட்டுச் சிரிக்கும்போது பக்கத்துக்கொன்றாகச் சிங்கப் பற்கள். அவனுடைய ஓவியம் எதாவது அந்தக் காட்சியில் இடம் பெற்றிருக்கிறதாவென நினைத்து காட்லக்கைப் புரட்டும்போது, நான் இதிலே எதையும் வைக்கல்லே, என்று அவன் சொல்லிவிட்டான். அப்போது அங்கிருந்த ஓவியர் ஒருவர் அருணாசலத்தைக் கேட்டார்.

    நீங்க Buchner - வுடைய Woyzeck நாடகத்துக்கு வந்திருந்தீங்களோ?

    ஆமா, மியூசியம் தியேட்டர்லே.

    அதேதான். அந்த நாடகத்துக்குப் பண்ணியிருந்த போஸ்டர்களை ஞாபகமிருக்கா?

    மறந்துடுமா என்ன? ப்பா! என்ன மாதிரி போஸ்டர்ஸ், வைஜக் நாடகத்தைவிட அதுக்குப் பண்ணியிருந்த போஸ்டர்கள்தான் மனசை விட்டே போகல்லே.

    இவர்தான் சார், அந்தப் போஸ்டர்களைத் தீட்டின ஆர்டிஸ்ட், மிஸ்டர் ரங்கராஜ்.

    அருணாசலம் நெகிழ்வோடு அவனுடைய மெலிந்த கைகளைப் பற்றிக் கொண்டு கூறினான்.

    லவ்லி... லவ்லி... சிம்ப்ளி மார்வெலஸ். அந்த நாடகத்துக்குச் சனிக்கிழமை பக்கத்திலே வந்த விமர்சனத்தைப் பார்த்திருப்பீங்களே, மிஸ்டர் ரங்கராஜ்?

    இல்லே சார், நானிருக்கிற இடத்துக்கு வர்ர பேப்பர் வெள்ளிக்கிழமை தான் கலை விமர்சனம் பண்ணுது.

    அருணாசலத்துக்குச் சற்று ஏமாற்றமாயிருந்தது. இதற்குள் இன்னொரு ஓவியர் பேசினார்.

    ரங்கராஜ், மிஸ்டர் அருணாசலம் ஒரு கிரிடிக், ரசிகர். இவர்தான் நம்ம வைஜக் பத்தி அதிலே அப்போ எழுதியிருந்தாரு.

    உங்க போஸ்டர்களைப் பற்றி ஒரு பத்தி தனியா எழுதியிருந்தேனே. அஃப் கோர்ஸ் நீங்க பார்க்கத் தவறிட்டீங்க. இண்டர்நாஷ்னல் ஸ்டாண்டாடு இருக்கு உங்க போஸ்டர்லே. போலந்திலே கிராகோ நகரத்திலே Groteska-னு ஒரு தியேட்டர் இருக்கு. பொம்மலாட்ட தியேட்டர். அதனோட நிகழ்ச்சிகளுக்குப் போஸ்டர் பண்ணியிருக்கும் Adam Hoffmann- பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்களோ? பொம்மைக்குப் போஸ்டர்லே உயிர் குடுப்பான். ஒவ்வொரு எழுத்தும்கூட அசையும். அந்த ஹாஃப்மன் டச் இருக்குனு சொல்லியிருந்தேன்...

    பை த பை மிஸ்டர் ரங்கராஜ், ஒரு அனிமேட்டர்... என்று இன்னொருவர் எடுத்துச்சொன்னார்.

    அதற்கப்புறம் மூன்று மாதம் கழித்து மவுண்ட் ரோடு நடைபாதைப் பழைய புத்தகக் கடையில் வைத்துப் பார்த்ததுதான். ரங்கராஜை சாவகாசமாய்க் கவனித்து வைத்ததும் அப்போதுதான். சற்றுச் சாயம் மங்கின கால் சட்டையிலிருந்தான். அது தைக்கப்பட்டிருந்த விதமும் கொஞ்சம் பழைய பாணிதான். இப்போது அந்தப் பாணியைப் பின்பற்றுவது வேகமாய்க் குறைந்து வருகிறது. ரங்கராஜ் அதை விடாமல் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அந்தப் பாணி முற்றிலும் மறைந்து போய்விட்ட பின்னும் கூட அவனிடம் அது இருக்கும் போலிருந்தது. மேல் சட்டைக்கு இந்தக் காலப் பொருத்தம் அவ்வளவு தேவையில்லை. பாணி மாற்றம் அங்கேயும் ஏற்பட்டாலும் அந்த மாற்றம் சட்டென மனத்தில் படுவதில்லை. கால் சட்டையிலேற்படும் பாணி மாற்றமே உடை நாகரிகத்தை சட்டென உணர்த்துவ தாயிருக்கிறது. இந்த வகையில் ரங்கராஜ் சற்றுப் பின்தங்கி நின்றிருப்பதாய் பட்டது அருணாசலத்துக்கு ஒரு நிர்ப்பந்தமும் காரணமாயிருக்கலாம் பாவம், என்றும் நினைத்தான்.

    உங்க ஃபீல்டு என்ன, மிஸ்டர் ரங்கராஜ்? என்று கேட்டுக் கொண்டான்.

    எஜூகேஷன் ஃபிலிம்ஸ், அப்புறம் எப்பவாச்சும் சினிமாவுக்கு டைட்டில்ஸ், ட்ரயலர் எல்லாம் பண்ணித்தரச் சொல்லி வேலை வரும்.

    நீங்க ஃப்ரீ லான்ஸ்ஸரா?

    இல்லே, ஒரு யூனிட்லே இருக்கேன்.

    அவன் செய்யும் தொழிலை வைத்துப் பார்த்தால் நல்ல சம்பாதனையைத் தரும் ஒன்றாகத்தான் பட்டது அருணாசலத்துக்கு. ஒரு வேளை சிக்கனமானவனோ என்று நினைத்தான். அட, இளம் வயதுக்காரன் அப்படியும் உடை விஷயத்தில் சிக்கனம் என்று இப்படியிருக்க மாட்டானே. பெரிய குடும்பப் பின்னணியாயிருக்கும் என்று ஒரு சமாதானத்தை வரவழைத்துக் கொண்டான். ஈரானியில் அழைத்துப் போய் டீக்குச் சொன்னதும் சர்வர் தட்டு நிறையப் பிஸ்கட்டுகளைக் கொண்டு வந்து வைத்தான்.

    டீ போதுமே, என்றான் அவன்.

    பரவாயில்லே... என்று இவன் சொன்னதும் பிஸ்கட்டுகளைத் தொட்டான். வேக வேகமாய்ச் சாப்பிட்டான். ரங்கராஜ் வாயில் பிஸ்கட்டை வைத்துக் கொண்டே பேசினான். வேகமாய்ப் பேச்சு. நல்ல பசி போலும். தட்டு காலியாகி விட்டது. சாதாரணமாய் இம்மாதிரிக் கொண்டு வந்து வைக்கப்படும் பிஸ்கட்டுத் தட்டை யாரும் முழுவதுமாய்க் காலி செய்வதில்லை. ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக் கொள்வதோடு சரி. சர்வர் எண்ணிப் பார்த்துச் செலவானதைக் கொண்டு பில் போடுவான். உணவைக் கண்டதும் ஒருவிதத் தாக்கும் வேகம் அவனிடமிருப்பதை அருணாசலம் உணர்ந்தான். பேசுவதிலும் ஒரு பசி. நீண்ட நாளாய்ச் சரிவரப் பேசாமலிருந்து-சரியான ஆள் கிடைக்காதவனாயிருந்து-பார்த்தவுடனே படபடப்போடு மனதில் அடக்கி வைத்திருப்பதை ஒரே சமயத்தில் வெளியிட்டுவிடத் துடிக்கும் முயற்சியில் பேச்சு திக்குகிறது. எச்சிலும் பிஸ்கட்டும் தெறித்தபோது அருணாசலம் தன் முகத்தை நாசூக்காகத் துடைத்துக் கொண்டான்.

    தன்னை அவன் வீட்டுக்கு வரச் சொல்லியழைப்பான் என்று எதிர்பார்த்தான் அருணாசலம். அவன் அதைச் செய்யவில்லை. ஒரு நண்பனைத் தன்னிருப்பிடத்திற்கு வரச் சொல்லி உபசரிக்கும் உணர்வே அவனிடமிருக்காதோ என்று நினைக்கத் தொடங்கிய அருணாசலம் அந்த உணர்வை அவனிடம் தட்டியெழுப்பும் எண்ணத்தோடு, ‘நீங்க என் வீட்டுக்கு ஒரு தடவை அவசியம் வரணும். எங்கம்மா சந்தோஷப்படுவாங்க. ஆர்ட் சம்பந்தமாய் நான் சேகரிச்சு வச்சிருக்கிற புஸ்தக கலெக்ஷனை நீங்க பாக்கணும்’ என்று சொன்னான். அவனும் கட்டாயம் வருவதாகச் சொன்னான். அவனுடைய அலுவலகத்தை, அனிமேஷன் செய்வதையெல்லாம் தனக்குப் பார்க்க மிகவும் ஆவலாயிருப்பதாய்த் திருப்பித் திருப்பிச் சொல்லியும் அவன் அருணாசலத்தைத் தன்னிடத்திற்கு வருமாறு வாய் உபசரணைக்குக்கூட அழைக்கவில்லை. அவன் தன்னைப்பற்றிப் பேசுவதில் முடிந்த வரை முன் ஜாக்கிரதைகளைக் கடைப்பிடிப்பதை இவன் கவனித்து வைத்தான். ஒரு வழியாக ரங்கராஜ் தன் முகவரியையும் அலுவலக டெலிபோன் எண்ணையும் கொடுத்தான்.

    வீட்டு விலாசம் கிடையாதா? ஆபீசு விலாசம் மட்டும் குடுத்திருக்கீங்களே... என்று கேட்டான் இவன்.

    எனக்கு வீடு, ஆபீசுனு தனித்தனியே இல்லே சார். வீடே ஆபீசு, ஆபீசே வீடு. வேலை செய்யறப்போ ஆபீசு. வேலை முடிஞ்சவுடனே, வேலையில்லாம யிருக்கப்ப அது வீடு, என்றான் ரங்கராஜ்.

    அப்போ...நீங்க...?

    பாச்சுலர்தான். இந்த புரொடக்ஷன் யூனிட்லே நான் ஒரு விஷுவலைசர் கம் காப்பிஸ்டு, அனிமேட்டர் கம் லைட் பாய், காமிரா மேன் எல்லாம்...

    -ஒரு நாள் வந்துதான் பாருங்களேன்- என்று அவன் கடைசி வரையில் அருணாசலத்தை அழைக்கவேயில்லை. அழைக்காமல் போய் நிற்பதற்கும் இவனுக்குச் சரிப்படவில்லை. சந்தர்ப்பம் தானே வாய்த்தது. ரங்கராஜிடமிருந்து இவனுக்குத் தொலைபேசி யழைப்பு வந்தது. கார்டூன் அனிமேஷன் சம்பந்தமாக எதாவது புத்தகமிருக்குமாவென இவனிடம் கேட்டான். இவனிடம் அது சம்பந்தமாய்ப் புத்தகம் எதுவுமில்லை. ஆனால் அது பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலிருப்பதாயும், தான் அங்கு அங்கத்தினன் என்றும் கூறி வாங்கித் தருவதாய்ச் சொன்னான்.

    "ஒரு ஒர்க் வந்திருக்கு. கார்டூன் அனிமேஷன்லே ஹிந்தி கலர் படம் ஒண்ணுக்கு டைட்டில்ஸ் பண்ணணும். அதுக்குத்தான்...’’ என்றான் அவன்.

    புஸ்தகம் கிடைச்சா எடுத்துக்கிட்டு நானே ஒங்க இடத்துக்கு வரட்டுமா? இல்லே... எப்படி? என்றான் இவன்.

    டெலிபோன் சிறிது யோசித்துவிட்டுத் தயங்கினாற் போலச் சொன்னது.

    சரி... நீங்களே வர முடியுமா?

    அந்தப் பெரிய காம்பவுண்டுக்குள் பிரதானமாய் ஒரு பெரிய வீடும், சற்று தூரத்தில் ஒதுக்கப்பட்டாற்போல ஒரு அவுட் ஹவுசுமிருந்தன அருணாசலம் இப்போது பிரதான வீட்டுக்கு முன்னால் நின்றிருந்தான். உள்ளேயிருப்பவர்கள் வெளியே வருவதாய்க் காணோம். நிறையப்பேர் உள்ளேயே அங்குமிங்கும் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு அலைந்து கொண்டிருப்பது தெரிகிறது. கதவுக்குக் கதவு அழகிய திரை. காற்றுக்கு லேசாகத் தூக்கும் திரைச்சீலையின் விலகலில் அவர்களின் அசைவுகளைப் பார்த்தான் அருணாசலம். உள்ளே ரேடியோகிராமில் ஹிந்தி சினிமாப் பாட்டு அலறிக் கொண்டிருந்தது. பாட்டோடு சேர்ந்து கூடவே இரண்டு பெண்கள் அங்கிங்கே பாடினார்கள். வீட்டுக்குள்ளிருந்து நீளமாய் = குள்ளமாய்-காதுகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு சோகமாய்ப் பார்த்தவாறு டாஷண்டு-கிராஸ் ஒன்று வந்து நின்றது. சராசரி அரசாங்கச் சிப்பந்தியின் கடமையுணர்வோடு சற்றே தயங்கியே அது குரைக்கத் தொடங்கிற்று. அதைக் கண்டு பயத்திற்குப் பதிலாகச் சிரிப்பாய் வந்தது அருணாசலத்துக்கு.

    சாம். என்று நாயை அழைத்தபடி ஒரு மனிதர் வெளியில் வந்தார். ஒல்லியாய் வெள்ளை வெளேரென்று கல்கத்தா குர்த்தா அணிந்திருந்தார். என்ன சமாச்சாரமென்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    ரங்கராஜைப் பார்க்க வேண்டும். என்றான் அருணாசலம்.

    பீட்டர்! என்று கத்தினார் அந்த மனிதர். கருப்பாய் இருபது வயதில் வந்து நின்றான் பீட்டர். அவனோடு தமிழைக் கொலை புரிந்தார் அவர்.

    இவ்ரெ ரெங்கராஜ்கிட்டே கூட்டிக்கிட்டுப் போ.

    அவுட்ஹவுசைப் பார்த்துத் தன்னை யழைத்துப் போகும் பீட்டரோடு மெளன நடை. சாமும் கூடவே வந்தது. ஒரு வேதாந்தியின் முகஜாடை அந்த நாய்க்கிருந்தது. பிறகு

    Enjoying the preview?
    Page 1 of 1