Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaana Oonjal
Vaana Oonjal
Vaana Oonjal
Ebook159 pages1 hour

Vaana Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580115702391
Vaana Oonjal

Read more from Lakshmi Rajarathnam

Related to Vaana Oonjal

Related ebooks

Reviews for Vaana Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaana Oonjal - Lakshmi Rajarathnam

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வான ஊஞ்சல்

    Vaana Oonjal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    முன்னுரை என்னுரையாக வரும்பொழுது, நாவலின் மொத்தப் பாத்திரப் படைப்புக்களும் நினைவில் நீந்தி வருகிறார்கள். நாவல் என்று வரும்பொழுது ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் உலவி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் கதாநாயகன் - கதாநாயகிதான் கருத்தைக் கவருகிறார்கள். இவர்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள். ஒன்று சேர முடியாமல் தவிப்பார்கள். இவர்களின் பரிதாபம்தான் கதைக்கு ஜீவநாடி.

    இவர்கள்தான் எழுத்தாளர்களுக்கு பெயரைத் தேடித் தருகிறார்கள். ஆனால் இந்த வான ஊஞ்சல் நாவலில் வரும் கதாநாயகி நளினா - கதாநாயகன் அரவிந்தன் இவர்களுக்குள் இடையே வரும் சிறுபெண்ணின் ஆசையை உள்ளே அடக்கிக்கொண்டு, அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டு தன் ஆசையை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கும் துடிப்புத்தான் இந்த நாவலுக்கு சுவை கூட்டுகிறது.

    அதனால் இந்தச் சிறு பெண்தான் கதாநாயகியோ என்ற எண்ணத்தைக் கொடுக்க வைக்கிறது.

    இதில் யார் கதாநாயகி என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    ஆசை என்பது ஊஞ்சல், இதை வானில் கட்டி ஆட முடியுமோ? பிடிப்பு இருக்க வேண்டுமே?

    இளைஞர்களுக்குரிய ஆசைகள்…

    வயதுக்குரிய இச்சைகள்…

    தவறு என்று தெரியாத மெத்தனம்…

    இவைகள் எங்கே கொண்டுபோகும் என்பதுதான் இன்றைய கேள்விகள்…

    நாவலைப் படித்தபின் கதாபாத்திரங்கள் மனத்தில் நிற்க வேண்டும். அதுதான் படைப்பாளியின் வெற்றி.

    அந்த வெற்றியை நான் பெற்றிருக்கேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் - வான ஊஞ்சலைப் படித்துவிட்டு!

    என் வாசகர்களாகிய நீங்கள் இந்நாவலைப் படித்து ஆதரவு தர வேண்டுமாறு வேண்டுகிறேன்.

    அன்புடன்

    லட்சுமி ராஜரத்னம்

    15-10-94

    1

    அழகான நந்தவனம். பெரிய ஒற்றை ரோஜாவை கையில் வைத்துக்கொண்டு நளினாவின் காதருகில் தடவுகிறான் அந்த இளைஞன். நளினா கண்கள் சொக்க அவனைப் பார்க்கிறாள்.

    ஐ லவ் யூ நளின்.

    இடையைப் பற்றி அணைத்துக்கொள்கிறான். சந்திரனில் ஊஞ்சலாமா? தென்றல் தாலாட்டுகிறதா? இதுதான் சொர்க்கமா? புரியவில்லையே?

    ஐ லவ் யூ டியர் இளைஞனின் தோளில் அவள் சாய்ந்து கொள்கிறாள்.

    ‘பனியில் மலர்ந்த பன்னீர் புஷ்பமே – என்

    பார்வையில் பட்ட சந்தன முல்லையே

    சங்கீதத் தென்றலே சதிராட வா… வா… வா’

    நளினா கலகலவென்று நகைக்கிறாள்.

    நளீ… நளீ… என்னடா தூக்கத்துல சிரிக்கறே? மகளின் தோளைப் பற்றி உலுக்கினார் யோகீஸ்வரன்.

    நளினாவின் கனவு கலைந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு எதிரே இருந்த அப்பாவைப் பார்த்துச் சிரிக்க முயன்றாள்.

    என்ன டாட், இத்தனை சீக்கரமா எழுப்பிட்டு.

    செல்ல மகளின் சிரிப்பைப் பார்த்து அப்பா சிரித்தார். சீக்கிரமாவா? எந்திரி… மணி என்ன தெரியுமா? எட்டு.

    அவள் திடுக்கிட்டுப்போனாள். ஏழு மணிவரை தூங்குவாளே தவிர இத்தனை நாழி தூங்கும் வழக்கம் இல்லை. வெடுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

    ஸாரி டாட், ரொம்ப நேரம் தூங்கிட்டேன் என்றாள் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு.

    ஆல்ரைட், ஆல்ரைட்… எந்திரிச்சு வா. உனக்காக நானும், அம்மாவும் டைனிங் ஹால்ல காத்துட்டு இருக்கோம். இன்னிக்கு நாங்க திருச்சி கிளம்பரோம்ங்கறதை மறந்துட்டே இல்ல…

    ஆமாம் டாட்… எனக்கு என்ன வாங்கிட்டு வரீங்க?

    என்னடா வேணும்?

    ஏதாவது வாங்கிட்டு வாங்க… பட் காஸ்ட்லியா இருக்கட்டும்.

    படுக்கை விரிப்பை நேர் பண்ணிவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தாள். கண்ணாடி அவள் முகமலர்ச்சியைக் காட்டியது. எப்படி இப்படி ஒரு கனவு வந்தது? அந்த வாலிபன் யார்? கம்பீரமாக ஆணழகுப் போட்டியில் வெற்றி பெறும் ஆணழகனாக அல்லவா தோற்றம் கொடுத்தான்?

    அவன்… அவன்… பெயர்?

    மனத்திற்குள் உல்லாச ஊஞ்சல் ஆடியது.

    முந்திய நாள் பார்த்த வாலிபனாக இருக்குமா? இத்தனை நெருக்கமாக அவளால் அளவெடுக்க முடிந்ததா? மனம் கம்ப்யூட்டரைஸ் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் உருவம் இத்தனை தெளிவாக இருக்கிறது.

    நினைவுகளை உதறிவிட்டுப் பல் விளக்கி, முகம் கழுவினாள்.

    முதல் நாள் மாலை தோழி கலா தனக்கு பர்த்டே என்று நளின் உட்பட ஐந்தாறு பேர்களை ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைத்துப்போனாள். சளசளவென்ற அரட்டைக் கச்சேரி.

    ஒருத்தியால எத்தனை ஐஸ்க்ரீம் சாப்பிட முடியும் என்று ஒரு கேள்வியை எழுப்பினாள் வித்யா.

    ஐந்து என்றாள் ஒருத்தி.

    ஏழு என்றாள் இன்னொருத்தி.

    பத்து என்றாள் வசந்தி.

    இதுவே அதிகம்ப்பா என்றாள் மீனா.

    இவர்களுடைய பேச்சை அடுத்த மேஜையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த இளைஞன் எழுந்து வந்தான்.

    இப்படி எதுக்காக ஒரு சர்ச்சை? நான் எத்தனை சாப்பிட்டாலும் வாங்கித் தருவீங்களா?

    வென்ற கூச்சலை அந்தப் பெண்கள் எழுப்பினார்கள்.

    கொண்டு வரச் சொல்லுங்க… நடுநாயகமாக அந்த இளைஞன் அமர்ந்து கொண்டான்.

    வரிசையாக ஐஸ்க்ரீம் கப்புகள் வந்துகொண்டிருந்தன. கணக்கு இருபதை எட்டியதும் நளினிதான் கவனத்தைத் திருப்பினாள்.

    ஏய்… கைல பணம் இருக்குதான்னு பாருங்கடி…

    பெண்கள் கைப் பையைத் துழாவினார்கள். அந்த இளைஞனோ கப் ஐஸ்க்ரீமைத் தாண்டி - ஃப்ரூட் சாலட், சாகோ பார் என்று விலை ஏற்றமான வகைகளைத் தொடத் தொடங்கி இருந்தான். பெண்கள் தங்கள் கையிருப்பு கவலையளிப்பதாக இருக்கவே, அவனையே சரணடைந்தார்கள்.

    நாங்கள், எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். எங்ககிட்ட பணம் இல்லை. இப்பவே ஓடி இருக்கும்போல இருக்கு என்றார்கள்.

    வெற்றிப் புன்னகையோடு எழுந்தான் அந்த இளைஞன். ரொம்ப நன்றி என்றான்.

    ஆள் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருந்தான். கைக்கு அடங்காத தலைமுடி. கருமை பாய்ந்த அடர்ந்த இமைகளைக்கொண்ட கண்கள்… கழுத்து வரை ரோமம் அடர்ந்த நெஞ்சுத் திடல்…

    மிஸ்டர் உங்க பெயர்… நளினிதான் கேட்டாள்.

    ஆங்… பதினெட்டாம் பேர் என்றவன், கைக்குட்டையால் வாயைத் துடைத்தபடி நகர்ந்தான்.

    கைக்குட்டையைப் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு, கன கம்பீரமாகச் செல்லும் அவனையே அந்தப் பெண்கள் பட்டாளம் பார்த்துக்கொண்டு நின்றது. ஆனால் அவன் இப்படித் தன் கனவில் வந்து இம்சைப்படுத்துவான் என்று அவள் எண்ணவே இல்லை. இவன் எதற்காக இப்படித் தன் கனவில் வரவேண்டும். கனவில் வந்தது இவன்தானா?

    இதை யாரிடம் போய்க் கேட்பது? குபீரென்ற சிரிப்பு பொங்கியது.

    அழுந்த முகத்தைத் துடைத்துக்கொண்டு உணவு மேஜைக்கு வந்தாள்.

    உட்காரும்மா… சீக்கிரம்… எங்களுக்கு நேரமாச்சு பார் அப்பா அவசரப்படுத்தினார்.

    எல்லாம் நீங்க கொடுக்கற இடம். நேத்து இவ என்ன பண்ணி இருக்கா பாருங்க? என்று அம்மா கொஞ்சம் கடுமையாகச் சொன்னதும், துணுக்குற்று அம்மாவையே பார்த்தாள் நளினா.

    தும்பைப் பூப்போன்ற இட்லியின் மீது சட்னியைப் போட்டு நெய்யை அபிஷேகம் செய்த அம்மா, கண்களில் கருணையைக் காட்டாமல் மகளையே பார்த்தாள்.

    சட்னியும், நெய்யும் குழப்பிய இட்லியை வாயில் போட்டுக்கொண்ட யோகீஸ்வரன் ஒரு கணம் ருசியில் தன்னை இழந்தார். மனைவியின் சொல்லைக் கேட்க வேண்டாமா? இல்லேனா வீட்டில் இருக்க முடியுமா?

    சொல்லு… அப்படி என்னதான் செய்துட்டா? ஏன் நளினி, என்னம்மா செய்தே?

    அவ எப்படிச் சொல்லுவா? நேத்து யாரு அதிகமா ஜஸ்க்ரீம் சாப்பிடுவானு பெட் கட்டி இருக்காங்க. பக்கத்து டேபிள்ல இருந்தவன் நான் சாப்பிடறேன்னு எக்கச்சக்கமா ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்காட்டி இருக்கான் என்று மனைவி கூற, யோகீஸ்வரன் குறுக்கிட்டார்.

    கைல பணம் இல்லாம மாவாட்டினீங்களாம்மா?

    க்ரெய்ண்டர் மாவு ஆட்டுது. இவளுக ஏன் மாவாட்டணும்? என்று நளினாவின் அம்மா நொடித்தாள்.

    இதப் பார் மீனா. யங் ஏஜ் சிரிப்பும், புளிப்பும் சில காலம்னு சொல்லுவாங்க. இதுல என்ன தப்பு? என் காலேஜ் டேஸ்லே எத்தனையோ இந்த மாதிரி நடந்திருக்குது. டேக் இட் ஈஸி.

    அப்படிச் சொல்லுங்க டாட். அம்மாவுக்கு எல்லாமே பயம் என்ற நளினா, சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்துபோய் அப்பாவைக்

    Enjoying the preview?
    Page 1 of 1